எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பைக்கும்,அகமதாபாத்திற்கும் இடையில்  புல்லட் ரயிலை இயக்க மோடி முடிவுசெய்து ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்தார். இதற்காக ஜப்பான் நாட்டுப் பிரதமரை வரவழைத்து மக்களிடையே ஷோ காட்டினார் இதற்காக 1.10 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் மும்பை - அகமதாபாத் ரயில் வழித்தடம் நீண்ட காலமாகவே லாபமற்ற ஒன்றாக உள்ளதாக மேற்கு ரயில்வே கூறியுள்ளது. இதன் மூலம் புல்லட் ரயில் திட்டம் என்பது குஜராத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் அரங்கேற்றப்பட்ட நவீன ஏமாற்று வேலை என்று தெரியவந்துள்ளது.

மேற்குமண்டல ரயில்வே தலை மையகத்தில் தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அகமதா பாத்தைச்சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரால் சில கேள்விகள் கேட்கப் பட்டன.

அதில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே உள்ள ரயில் வழித்தடத்தின் மூலம் எவ்வளவு வருவாய் வரு கிறது. இதன் மூலம் எவ்வளவு மக்கள் பயனடைகின்றனர் என்று கேட்கப்பட்ட அந்தக் கேள்விகளுக்கு மேற்கு ரயில்வே பதிலளித்துள்ளது.

அதில் அகமதாபாத்துக்கும், மும்பைக்கும் இடையில் ஓடும் ரயில்கள் பெரும்பாலும் காலியாகவே செல்வதாகவும் இதன்காரணமாக ரயில்வே துறைக்கு நிறைய இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஓடும் ரயில்கள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் இழப்பில் ஓடுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிலில் "ஒவ் வோராண்டும் ரூ30 கோடி  வரை வீணாவதாகவும். அந்த வழித் தடங்களில் செல்லும் ரயில்களில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் "பாதிப் பேர் முன்பதிவு இருக்கையில் செல்வதில்லை'' என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சாதாரண ரயிலே அங்கு காலியாக செல்வதால், புல்லட் ரயிலில் எப்படி மக்கள் செல்வார்கள் என்று நிறைய பேர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

மும்பைக்கும், அகமதாபாத்துக்கும் இடையில் 2023ஆம் ஆண்டிற்குள் புல்லட் ரயில்விட  ஜப்பான் நிறு வனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு மோடி வெளி யிட்டார். மேலும் இதற்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த திட்டத்தை அறிவித்த போது "இது தன்னுடைய பல ஆண்டு கனவு'' என்று மோடி கூறியிருந்தார். மின்னல் வேகத்தில் செல்லும் இந்த புல்லட் ரயில் அதிகபட்சமாக 350கிமீ வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது வேகமாக செல்லும் ரயில்களைவிட இரண்டு மடங்கு அதிக வேகம் ஆகும். மேலும் தற்போது அகமதாபாத் - மும்பை இடையிலான 500 கிமீ தூரத்தை ரயிலில் கடக்க   10 மணி நேரம் ஆகிறது. ஆனால் புல்லட் ரயில் மூலம் மூன்றே மணி நேரத்தில் இந்த தூரத்தைக் கடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது மோடி அரசு, ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்த தொகையை சீன புல்லட் ரயில் திட்டத்திற்கான தொகையுடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகமாகும். புல்லட் ரயில் ஓடும் போது மேலும் பல நவீன தொழில் நுட்பங்கள் வந்துவிடும். அப்போது இந்தியாவிலேயே புல்லட் ரயில் தயாரிக்கும் நிலை கூட உருவாகிவிடும். அப்படி இருக்கும் போது கோடிக்கணக்கான மக்கள் வரி பணத்தை ஜப்பானுக்கு அள்ளிக்கொடுத்து புல்லட் ரயிலை ஓட்டவேண்டும் என்ற அவசியமில்லை.

அப்படியே ஓட்டினாலும் மேற்கு ரயில்வேயின் பதிலின்படி இழப்பில் இயங்கும் வழித்தடத்தில் புல்லட் ரயில் ஓட்டுவதால் லாபம் இல்லை என்று தெரிகிறது.

இந்தியாவிலேயே அதிக வருவாய் தரும் ரயில் வழித்தடமாக மும்பை - சென்னை, மும்பை - பெங்களூரு, மும்பை - எர்ணாகுளம் போன்ற தென் மாநில ரயில் வழித்தடங்கள் ஆகும். இங்கு புதிய திட்டங்களை அறிவித்தால் ரயில்வே வருவாய் அதிகம் பெறலாம். இது குறித்து

2010-ஆம் ஆண்டே மத்திய அரசிடம் திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் மோடியும், ரயில்வே அமைச்சரும் இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் புல்லட் ரயில் விடுவோம் என்று கூறுகிறார்கள். மோடி 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற போலிவாக்குறுதிகளைக் கொடுத்தார். குஜராத் தேர்தலில் வெற்றிபெற போலிதிட்டங்களையும் அறிவித்து வருகிறார்.

- சரவணா ராசேந்திரன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner