எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எவ்வளவு முதலீடு போட்டாலும், எவ்வளவு தூரம் அதை தூக்கி நிறுத்த முயற்சி செய்தாலும் இந்தியப் பொருளா தாரத்தின் வளர்ச்சி மூன்று சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பதற்குக் காரணம் வளர்ந்து வரும் இந்துமத மக்கள் தொகை தான் என்பதாக காலஞ்சென்ற பேராசிரியர் ராஜ் கிருஷ்ணா சொல்லி இருக்கிறார்.

இந்து மதத்திலுள்ள கொள்கைகள் தான், சில வழி முறைகள்தான் இந்தியப் பொரு ளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதாக அவர் சொல்லுகிறார். இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று இந்தியப் பொருளாதார நிபுணர் களைக் கேட்டால் அவர்கள், ‘முதலீடு, வருவாய்ப் பங்கீடு, விவசாயப் பொருள் களின் விலை’ போன்றவைகள்தான் காரணம் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இந்து மத சமுதாயத்திலுள்ள அமைப்புகளையே ஒதுக்கிவிட்டு தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக மத அமைப்புகளினால் மக்களிடம் ஏற்பட்டுள்ள கொள்கைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ண யிக்க முடியும் என்பது மரபாகும். மேற்கத்திய நாடுகளில் கிறித்துவ மத எதிர்ப்பாளர்கள் ஒழுக்கத்தை போதித்ததாலும், சில கொள் கைகளை  கைவிடச் சொன்னதாலும், ஜப்பான், தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா போன்ற நாடுகளில் புத்தமதக் கொள்கைகளை மக்கள் பின்பற்றியதாலும் தான் அவைகள் மிக வேகமாக முன்னேறிய தொழில்துறை நாடுகளாகி விட்டன. இதை வைத்துப் பார்த்தால் இந்தியாவின் பொருளா தார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமே இந்து மதக் கொள்கைகள்தான் என்று தோன்று கிறது.

பல வகுப்புகளை ஒன்றுசேர்த்து வைத்துக் கொண்டு இந்தியாவில் ஜன நாயகத்தையும், பொருளாதாரத்தையும் போட்டுக் குழப்புகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இப்பொழுதும் இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது, என்றாலும் மக்கள் முன்னேறத் துடிக்கிறார்கள்.

ஜாதி அடிப்படையில் சமூக, பொருளா தார வகுப்புகளே இங்கு ஏற்படுத்தப்பட்டி ருக்கின்றன. பார்ப்பனர்கள் நிர்வாகிகளா கவும், அதிகாரிகளாகவும், விஞ்ஞானி களாகவும், சத்திரியர்கள் பின்தங்கியவர்கள் வசதி படைத்த விவசாயிகளாகவும், வைஸ்யர்கள் தொழில் துறையையும் வியாபாரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டும், சூத்திரர்கள் எனப்படுபவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருந்த நிலையிலேயே இபபோதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். கான்சிராம் என்ற தலைவரின் கீழ் அவர்கள் ஒன்றுபட்டு வேலை செய்தாலும், இந்த மாதிரி ஒரு நிலை இந்தியாவில் இருப்பதால் தான் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்திருக் கின்றது.

வைஸ்யர்கள் எனப்படுபவர்களான மார்வாடிகள், பணியாக்கள், செட்டியார்கள் போன்றவர்கள் இந்திய தொழில் துறையை பாதி அளவு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், தங்கள் தொழிலை வியாபாரத்திலிருந்து உற்பத்தி பொருள்களாக பற்றிய பிறகும், அவர்கள் பழைய நிலையிலேயே இருந்து வருகிறார்கள். தொழில் முதலாளிகள் தாங்கள் லாபம் சம்பாதிக்க குறைந்த கூலி பெறும்  தொழிலாளிகளை வைத்துக் கொள்ளுதல் அல்லது உற்பத்தி பொருள்களை விலை ஏற்றுதல் போன்ற முறைகளையே பின்பற்றி  வருகிறார்கள்.

நிபுணர்கள் தற்போதுள்ள முன்னேறிய பொருளாதாரத்தில் இரண்டு முக்கிய அம்சங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்கிறார்கள். பொருள்களை உற்பத்தி செய் வதற்கு மலிவான வழிமுறைகள், பொருள்கள் தரமாக இருத்தல் போன்றவைகளாகும். தவிர விளம்பரம், உற்பத்திப் பொருளை பாக்கெட்டில் போட்டு விற்பது, மக்களிடம் இவைகளை விற்பதற்கு திறமைகள் போன்றவைகள் எல்லாம் இவ்வளவு பெரிய இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு சிறு பாகம் என்று கூட சொல்ல முடியாது.

பிரதமர் ராஜீவ் காந்தியின் தொழில் நுட்ப ஆலோசகர் சாம் பிட்ரோடா சமீபத்தில் குறிப்பிட்டதாவது, “இந்திய விஞ்ஞானம் பார்ப் பனர்கள் மாதிரி வளர்ந்திருக்கிறது. ஆனால் தேவைப்படும் சூத்திரர்கள் உழைப்பைப் போன்ற தொழில்நுட்பம் முன்னேறவில்லை” என்கிறார். உலகத்திலேயே ‘விஞ்ஞான முன் னேற்றத்தில் மூன்றாவது இடம் வகிக்கும் இந்தியா’ தொழில்துட்ப ஆராய்ச்சியில் வெளி நாட்டினரிடம் கையேந்தி நிற்க வேண்டி இருக்கிறது. ஜப்பானியர்கள் ஒரு தொழில் நுட்பத்தை மேலை நாடுகளிலிருந்து பெற்று, அதை வைத்து மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்து, பிறகு இந்த தொழில்நுட்பம் அளித்த நாடுகளையே பின்தங்கிப் போகும்படி செய்துவிடக்கூடிய திறமை இன்றும் அங்கே காணப்படுகிறது.

பார்ப்பனர்களைப் போல் உள்ள விஞ் ஞானம் சூத்திரர்களைப் போல் முன்னேற வில்லை என்றாலும், இந்தியாவில் வியா பாரமும் பார்ப்பனர்களைப் போல் முன்னேற வில்லை என்றே சொல்லலாம். ஜாதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சமு தாயத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு தொழில் நுட்பம் தெரிவில்லை,

சூத்திரர்களுக்கு அளிக்கப்படும் கல்வி யானது அவர்களை முன்னேற்ற வழி இல்லாத வகையில்தான் இன்று இருந்து வருகிறது. பார்ப்பனர்களை போல் பின்தங்கியவர் களுக்கும், இப்போது உள்ள கல்வி முறை தொழில் நுட்பத்தை போதிப்பதாக இல்லை. கல்லூரிகளிலிருந்து படித்துவிட்டு நிறைய பொறியியல் பட்டதாரிகள் வெளிவரு கிறார்களே ஒழிய தொழில் நுட்ப அடிப் படையில் அவர்கள் திறமையானவர்களாக இல்லை.

இந்தியாவில் கல்வி முறை என்பதே பார்ப்பனர்கள் முன்னேற வழி வகுக்கிறதே தவிர, சூத்திரர்கள் எனப்படும் பின் தங்கிய சமுதாயத்தினருக்கு, கல்விக் கொள்கையில் கூறியபடி அளிக்க வேண்டிய முறையில் கல்வி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

இவ்வளவு குறைகள் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் ஏதோ ஒரு வகையில் முன்னேறிக் கொண்டு வருவதற்குக் காரணம் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் பண உதவிகளைக் கொண்டு இதை சாதித்து வருகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஒதுக்கிவிட்டு தான் இவைகள் நடைபெற்று வருகிறது. விவசாயத் துறையில் ஏற்படுத்தப்பட்ட புரட்சியானது இங்கே உணவுப் பொருள்கள் அதிகமாக உற்பத்தி ஆகி, வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதை நிறுத்தி விட்டது என்றாலும் அவையும் வெளி நாடுகளிலிருந்து கிடைத்த உதவிகளைக் கொண்டே, நடைபெற்று வருகிறது, ஆனால் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்து விட்டது.

விவசாயத் துறையில் ஏற்பட்ட புரட்சியை அதிகமாக செய்தவர்கள் சீக்கியர்கள்தான்.  ஏனென்றால் அவர்களுடைய அணுகு முறையே மற்ற இந்து சமுதாய மக்களிட மிருந்து வேறுபட்டு நிற்பது முக்கிய காரண மாகும். சீக்கியர்கள் மற்ற நிலச் சுவான்தாரர்கள் போல் இல்லாமல் தாங்களே தங்கள் நிலத்தில் வேலை செய்து பாடுபடுவார்கள். நவ நாகரிகமான புதிய முறைகளைப் பின்பற்றி உற்பத்தியைப் பெருக்கினார்கள். இவர்களைப் போல் உழைக்கும் வர்க்கத்தினரை, இந்தியாவில் வேறு எந்த நிலச்சுவான்தாரிலும் பார்க்க முடியாது.

இதே மாதிரி தொழில் துறையிலும் சீக்கியர்கள் மிகப்பெரிய முன்னேற்றமடைந் துள்ளார்கள், மேலை நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருளை பார்த்தால், அப்படியே அதே மாதிரியே இங்கேயும் உற்பத்தி செய்து விடக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர் களாக இருக்கிறார்கள், ரான்பாக்சி என்ற மருந்துக் கம்பெனி உலக நாடுகளில் போட்டி போடக் கூடிய அளவுக்கு தனது பொருள் களை உற்பத்தி செய்வதற்கு காரணமே அதை நிர்வகித்து வருபவரே ஒரு சீக்கியர் என்பதால்தான், ஜப்பானில் உள்ள தொழில் துறை நுட்ப வல்லுநர்களுக்கு ஈடு இணையாக உழைக்கக் கூடிய திறமையும் அனுபவமும் சீக்கியர்களுக்கு உண்டு.

இந்தத் திறமைகள் எல்லாம் இந்து மதக்காரர்களுக்கு இல்லை.

மேல் ஜாதிக்காரர்கள் தொழிலாளிகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. மனித வள மேம்பாட்டுத்துறை என்ற புதிய வார்த்தை இப்போதேல்லாம் நமது தொழிற் சாலைகளில் ஏற்பட்டிருந்தாலும், திறமையானவர்களை விட உண்மையானவர்களுக்கே அங்கே மதிப்பு இருப்பதால், அவைகளெல்லாம் நிலச்சுவான்தார் போல் நிர்வகிக்கப்படுகிற கம்பெனிகளாகும் என்று சொல்லப்படுகிறது. இப்போதெல்லால் செய்தித்தாள்களில் வரும் வேலை வாய்ப்பு பற்றிய விளம்பரம் கொடுத்த கம்பெனிகளெல்லாம் தங்கள் கம்பெனியை தொழில்துறை ரீதியாக நடத்தப்படுகிறது என்று சொல்லிக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்பது புலனாகும்.

சில இந்துமதக் கொள்கைகள் பொருளா தாரத்துக்கு நன்மையும் செய்கிறது. தீமையும் செய்கிறது. குடும்பத்திலும் ஜாதியிலும் ஏற்பட்ட பற்று, பாசத்தினால் யாரும் பிரிந்து போகாகாமல் கூட்டுக் குடும்பமாக இருப்ப தனால் வியாபாரத்தில் பணம் அதிகமாக சேர்க்க முடிகிறது.

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலைக்குத் தக்கபடி பார்த்தால் மேற்கண்ட முறைகளினால் உறவினர்களுக்கு சலுகை செய்யும் குணமும் திறமையின்மையும் தான் வளர்ந்துக் கொண்டே போகும். மேலும் பணக்காரர்கள் எளிய வாழ்க்கை வாழ்வதனால் பணம் சேர்ந்து விடுகிறது என்பதைத் தவிர தங்கமாகவும், நிலம், வீடு போன்றவைகளாகவும் மாறி, எதிலும் முதலீடு செய்ய முடியாமல் முடக்கப்பட்டு விடுகிறது. இப்படி ஒரு பக்கம் பணம் குவிக்கப்பட்டும், எந்த தொழிலிலும் முதலீடு செய்யப்படவில்லை.

சில நேரங்களில் ஜாதியும் குடும்ப பாசமும் தொழிற்சாலைகளை முடக்கி உற்பத்தி பெருக முடியாமல் செய்து விடுகிறது. உதாரணத்திற்கு சொன்னால் தன்பாத் நகரில் உள்ள நிலக்கரி கம்பெனி (சிஷீணீறீ மிஸீபீவீணீ) யில் வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள், நில அறுவடைக் காலத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்கு போய்விடுகிறார்கள், அதே காலங்களில்தான். அவர்களின் கிராமங்களில் திருமணங்களும் நடக்குமாம். இந்த இரண்டு காரணங்களுக் காகவும் வேலை செய்யும் தொழிலாளர்கள் கம்பெனியின் உற்பத்தி வேலையை விட்டுவிட்டு குடும்ப பாசத்துக்காக கிராமங் களுக்கு சென்று விடுகிறார்கள். நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, நிரந்தர வேலை யில் உள்ளவர்கள் இப்படி கம்பெனியின் உற்பத்தி பாதிக்கும் அளவுக்கு கிராமங்களுக்கு போய் விடுகிறார்கள். மேல் நாடுகளில் எல்லாம் தொழிலாளர்கள் இப்படி நடந்து கொள்வ தில்லை. குடும்ப உறவினர்கள் மீது உள்ள அதிகமான பாசத்தினால் ஊழல் கூட ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

மழைக் காலங்கள் இந்தியப் பொருளா தாரத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நிகழ்ச்சியாகும். மழை பெய்யாத காலங்களில் விவசாயிகள் தங்கள் விதிப்பயனை எண்ணிக் கொண்டு, இந்துமத கர்மவினைப் பயனால் தான் மழை பெய்யவில்லை என்று தவறாக எண்ணிக் கொண்டு, வருமானத்துக்கு வேண்டிய மற்ற முயற்சிகளை செய்யாமலேயே இருந்துவிடுகிறார்கள். இதனால் பொருள்கள் உற்பத்தி குறைகிறது. அதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது.

இதனால் திறமையின்மை, ஒரே இடத்தில் பொருள் குவிந்து விடுதலினால் தேக்கம் முதலியவைகள் சர்வ சாதாரணமாக ஏற்பட்டு பொருளாதாரத்தையே வீணாக்கி விடுகிறது. பொதுத்துறை, தனியார் துறை, விவசாயம் ஆகியவைகள் முழு அளவில் பாதிக்கப்படுகிறது.

ஆனால் காலங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எதிர்ப்பார்த்த அளவு வேகமாகப் போகவில்லை. பார்ப்பனர்கள் தொழில்துறையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில் நுட்பமும், பொருள்களின் தரமும் இன்னும் நல்ல நிலைமைக்கு வரவில்லை. வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு உதவிகளால் நம்முடைய தொழில்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, நம்முடைய பொருளாதாரம் முன்னேற வாய்ப்பிருக்கிறது.

இறக்குமதி குறையலாம்.  பொருள்களின் தரத்தை உயர்த்தி ஏற்றுமதி அதிகமாகலாம்.

மேற்கத்திய நாடுகளில் தேவை ஏற்பட்டு புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டு தொழில் துறை முன்னேறிவிட்டது. ஜப்பானிலும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. தேவை ஏற்பட்டு அதனால் புதிய கண்டுபிடிப்புகள் உண்டாகி இந்தியாவில் தொழில்துறை முன்னேற வாய்ப்பிருக்கிறது.
- ‘வாய்ஸ் ஆஃப் தி வீக்’ (நவ. 1988

(From ‘The Times of India’)
- தமிழில் “ஏ.ஏ.ஆர்”

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner