எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரா.இரத்தினகிரி

தந்தை பெரியார் அவர்கள் உல கிற்கு வழங்கிய ஒப்பற்ற தத்துவங்களில் பெரும்பாலானவை அவர் தனக்கு வந்த கடிதங்களின் உறைகளைப் பிரித்து அதனுடைய விலாசம் எழுதாத வெற்றுப் பக்கங்களில் எழுதித்தந்தவை - அவரது ‘குடிஅரசு’ கட்டுரைகள் எல்லாம் கூட சுருக்கெழுத்தாளர் வைத்துக் குறிப் பெடுத்து அல்லது "டேப் ரிக்கார்டரில்” பதிவு செய்து பின்னர் எழுதப்பட்டவை அல்ல. அவரே கூட்டம் பேசிவிட்டு அவரே இப்படிப்பட்ட தாள்களை எடுத்து அவரது கைகளினாலேயே எழுதி, சில நேரம் தமது அச்சகத்துக்கு போய் எழுத்துக்களைப் பொறுக்கி கம்போஸ் செய்து, சில நேரம், அவரே ‘டிரெடில் மிஷின்’ ஏறி மூச்சு இறைக்க இறைக்க மிதித்து அச்சடித்து வெளியானவை யாகும். அந்த மாபெரும் உழைப்புக்குப் பின்னர் ‘விடுதலை’ இன்றும் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

தத்துவமேதை ‘சாக்ரட்டீஸ்’ ஒரு நாள் தமது ஊரின் சந்தைக்கு சென்று கடை தவறாமல் ஏறி இறங்கி அதன் விலை விபரங்களை விசாரித்துக் கொண்டி ருந்தார். காலையிலிருந்து மாலைவரை இதைக் கவனித்துக் கொண்டே வந்த அவரின் நண்பர் ‘கிரீட்டோ’ அவரிடம் கேட்டார். "என்ன சாக்ரட்டீஸ் இவ்வளவு கடைகளிலும் உன்னிப்பாக விசாரித்து வருகிறாயே ஒரு பொருளும் வாங்க வில்லையே?” என்று. அதற்கு சாக்ரட்டீஸ் சொன்னபதில் இவ்வளவு பொருள்களில் ஒன்றுகூட இல்லாமல், என்னால் எப்படி எப்பொழுதும் மகிழ்ச்சிகரமாகவே இருக்க முடிகிறது, என்பதை நினைக்கிறபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றார். நாம் எவ்வளவுக் எவ்வளவு தேவைகளைக் குறைத்துக் கொள்கிறமோ, அவ்வளவுக் அவ்வளவு நாம் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். மகிழ்ச்சி என்பது நாம் பயன்படுத்தும் பொருள்களில் இல்லை. அது நம்மிடம் இருப்பதைக் கொண்டுநிறைவு பெறும் மனநிம்மதியிலேதான் இருக்கிறது.

அன்றைக்கு அன்றாடம் நொடிக்கு நொடி உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்துக்கு ஏற்ப நாம் நம்மையும் மாற்றி வளர்ச்சிக்கு ஏற்ப திருப்திபடுத்திக் கொள்ளவேண்டும். காரல்மார்க்ஸ் சொன்னார் “மாற்றம் என்பதே மாறாத சொல்” என்றும் அதுபோலவே தந்தை பெரியார் “மாறுதலுக்கு உட்படாதவன் மனிதனாக மாட்டான்” என்றும், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்வார் “மாற்றம் என்பது சொல் அல்ல செயல்” என்றும். அந்த மாற்றங்கள் மனித வாழ்வின் ஏற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப அதுவும் சிக்கனமாக இருக்க வேண்டும். சிறப்பாகவும் இருக்க வேண்டும்.

உதாரணம் : ஆங்கில எழுத்துக்களில் ‘R’ என்பதை நான்கு முறை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். Reuse,

Recycle, Reduce, அதன்பின் Refuse (அதற்கு எடுத்துக்காட்டாக பவுத்த பிட்சுவின் கதை ஒன்றைச்சொல்வார்கள்).

பவுத்த மடாலயத்தில் அதிகாலையில் புத்தபிட்சு மடாலயத்தை விட்டு வெளியே வந்தார். வெளி வாயிற்படியில் காவலில் இருந்த அனந்தரின் உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அதைக்கண்ட குரு, அனந்தரிடம் கேட்டார். “ஏன் இப்படி உங்கள் உடல் நடுங்கிக் கொண்டிருக்கிறது?” என்று என்னுடைய போர்வை கிழிந்திருக்கிறது. அதனால்தான் குளிர்தாங்க முடியாமல் உடல் நடுங்குகிறது. என்று பதில் சொன்னார்.

ஏன் இதை முன்னதாகவே என்னிடம் சொல்லியிருக்கக்கூடாதா? உங்களுக்கு நல்ல புதிய போர்வை கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேனே என்று சொல்லிவிட்டு சென்றார். அன்று மாலையே அனந்தருக்கு புதிய போர்வை வந்துவிட்டது:

அடுத்த வாரம் ஒரு நாள் காலை பிட்சு மடாலயத்தை விட்டு வெளியே வரும் போது வாயில்படியில் காவலில் இருந்த அனந்தரைப் பார்த்தார். அப்போது அவர் மிகுந்த நன்றியுணர்வோடு குருவை வணங்கினார். குரு கேட்டார். “இப்போது முன்பு போல் குளிரவில்லையே!” என்று. இல்லை குருவே நல்ல அழுத்தமான போர்வையை எனக்கு கொடுத்துள்ளீர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. இப்போது எனக்குக் குளிரவில்லை” என்றார். குரு சிரித்துக் கொண்டே அனந்தரை இதற்கு முன் போர்த்தியிருந்தீரே அந்த பழைய போர்வை என்னவாயிற்று? என்று கேட்டார். “அதை நான் துவைத்துக் காயவைத்து படுக்கை விரிப்பாகப் பயன் படுத்திக்கொள்கிறேன்” என்று பதில் சொன்னார். அப்படித்தான் இருக்க வேண் டும் எதையும் வீணடித்து விடக்கூடாது என்று சொல்லி விட்டு அதற்கு முன்பு ஒரு படுக்கை விரிப்பு இருந்திருக்குமே! அதை என்ன செய்தீர்கள்? என்றார். அதற்கு அனந்தர் “அவற்றைச் சுத்தப்படுத்தி தலையணை உறைகளாக்கி விட்டேன் என்றவுடன் குருநாதர் மிகவும் நன்று அப்படித்தான் செய்யவேண்டும். என்று அவரைப் பாராட்டி விட்டு அந்த பழைய தலையணை உரைகளை என்ன செய்தீர்கள்? என்று கேட்டார்.

குருவே, அந்த தலையணை உரைதான் தாங்கள் இந்த வாயிற்படியில் நுழையும் முன்பு கால்களைத் துடைத்து விட்டு வந்தீர்களே!"கால்மிதி அதை இந்த தலையணை உரையைக் கொண்டுதான் தயாரித்தேன் என்றார். குருநாதன் மிகவும் மகிழ்ந்து அனந்தரைக் கனிவுடன் நோக்கி கால்மிதியை காட்டி" இந்த இடத்தில் இதற்கு முன்பு ஒரு கால்மிதி இருந்ததே அதை என்னசெய்தீர்கள்? என்று கேட்டார்.

அந்தக் கால்மிதியை நன்றாகத் துவைத்துக் காயவைத்து இழை இழை யாகப் பிரித்து விளக்குத்திரியாகச் செய்து மடாலயத்தில் புத்தபகவான் படத்தின் முன்னால் விளக்கில் எண்ணை ஊற்றி எரிந்து கொண்டிருக்கிறதே அது தான் என்றார் அனந்தர். இது குருவுக்கும் சீடருக்கும் இடையில் நடந்த உரையாடல் மட்டும் அல்ல. நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியையும் பயனுடையதாக பொருள் உடையதாக மதிப்பு மிகுந்ததாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் கருத்து மட்டுமல்ல ஒவ்வொரு வரும் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க் கையை கடன் இல்லாமல் களிப்போடு நடத்தலாம்.

அண்ணல் காந்தியார் சபர்மதி ஆசிர மத்தில் ஒரு நாள் காலை குளித்துவிட்டு தமது உடைகளை துவைத்துத் தோளில் போட்டுக் கொண்டு வாளியில் மீதம் இருந்த அரை வாளித் தண்ணிரை அங்கிருந்த பூச்செடிகளுக்கு ஊற்றுவதற்காகத் தூக்கிக் கொண்டு வந்தார். அப்போது தான் அங்கே இருந்த ஜெ.சி.குமரப்பா (இலண்டனில் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு சேவை செய்வதற்காக சபர்மதி ஆசிரமத்துக்கு வந்தவர்) காந்தியிடம் "சபர்மதி ஆற்றங் கரையில் தானே நாம் வாழ்கிறோம்; ஆற்று நீர் இவ்வளவு வெள்ளப் பிரவாகம் எடுத்து ஓடுகிறது அரைவாளித் தண்ணீரில் குளித்து விட்டு, மீதி அரைவாளி தண்ணீரையும் தூக்கிக் கொண்டு வருகிறீர்களே ஏன்?" என்றார். நம்மிடம் தண்ணீர் தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்பதற்காக அதை நாம் தேவைக்கு மேல் வீண் செலவு செய் யக் கூடாது! என்றார் அண்ணல் காந்தி!

சிக்கன வாழ்வே! சீரான வாழ்வு! சிறப்பான வாழ்வு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner