எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சுமிதா குப்தா

வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கட்சி தோற்கடிக்கப்பட்டு பதவி இழக்கும் என்று அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அண்மையில் நான் பயணம் செய்த வாடகை மகிழுந்தின் ஓட்டுநர் என்னிடம் கூறினார். மாற்றத்துக்கான நேரம் இது என்று கூறிய அவர் "பா.ஜ.க. குஜராத்தில் ஆட்சி செய்தது போன்று நீண்டதொரு காலத்துக்கு எந்த ஒரு கட்சியும் ஆட்சி செய்யக்கூடாது. குஜராத் பா.ஜ.க. ஆட்சியில் லஞ்ச ஊழல் பலமானதாக ஆகிவிட்டது. அத்துடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு நடைமுறையும் சேர்ந்து கொண்டு மக்களின் துயரங்களை அதிகப்படுத்தி விட்டுள்ளன. எனவே பா.ஜ.கட்சிக்கு பாடம் கற்பிப்ப தற்காக காங்கிரசு கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். என்னைக் கேட்டால், இம்முறை காங்கிரசிற்கு வாக்களித்துவிட்டு, அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ. கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவோம் என்றுதான் நான் கூறுவேன். அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆளும் கட்சியை நாம் மாற்ற வேண்டியது அவசியம். அவ்வாறு செய்வது ஆளும் கட்சியை எச்சரிக்கையுடன் செயல்படச் செய்யும்" என்று அவர் கூறினார்.

மதக் காரணங்களுக்காக மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதாக எவர் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம் என்று கூறிய அவர் "நான் ஒரு முசுலீம், இந்துவல்ல" என்று கேட்பதற்கு முன்னாலேயே கூறினார்.

ஒன்றரை ஆண்டு குறுகிய கால ராஷ்டிரிய ஜனதா கட்சி ஆட்சிக்காலம் நீங்கலாக தொடர்ந்த 22 ஆண்டு கால காங்கிரசு அல்லாத கட்சிகளின் ஆட்சியில் பா.ஜ. கட்சியே ஆளும்கட்சியாக இருந்து வந்துள்ளது. அதனால் குஜராத் மாநில மக்களின் மனங்களில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.

தனது 12 ஆண்டு கால குஜராத் முதல்வர் பொறுப்பில் நரேந்திரமோடி கட்டி வைத்திருந்த மாயக் கவர்ச்சியினால் குஜராத் சிதைந்து போனது. மகிழுந்து ஓட்டுநர் குறிப்பிட்ட படி, சாதாரணமான இந்துக்களும் கூட மோடியின் சாதனைகள் பற்றி கேள்விகளைக் கேட்கவும், அவர் அளித்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதைப் பரிசீலனை செய்யவும் தொடங்கி விடடனர்.

இந்த மாற்றம் எவ்வாறு நேர்ந்தது? மாநில மக்களின் நல்வாழ்வு மோசமான நிலையில் இருப்பதுடன், விவசாயிகளின் துயரங்கள், இழப்புகளை சந்தித்து வரும் வணிக சமூகம், வேலையில்லா திண்டாட்டத்தின் வளர்ச்சி, சீரழிந்து கிடக்கும் கல்வி நடைமுறை, தலித்துகளின் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது, பெரு ஊழல் ஆகியவை மலிந்து விட்டது ஆகியவையே இதன் காரணம். தேசிய நெடுஞ்சாலைகள் தவிர மற்ற சாலைகள் அனைத்தும் குண்டும் குழிகளுமாகவும் இருப்பதைக் காணலாம்.

கல்வியாளர்கள், அரசுப் பணியாளர்கள், கிராம மக்கள், கடைக்காரர்கள் என்று எவரை வேண்டுமானாலும் நீங்கள் கேட்டுப் பாருங்கள். முற்றிலும் மாறுபட்ட மூன்று சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களால்தான், மாநிலத்தில் பா.ஜ.கட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த மன நிறைவின்மையையும், வெறுப்பையும் ஒன்றிணைக்க முடிந்துள்ளது என்று அவர்கள் உங்களுக்குக் கூறுவார்கள்.

உண்மையில் இப்போது குஜராத்தில் நடந்து கொண் டிருப்பது, 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரசு தலைமையினலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக மக்களின் மனநிலையை உருவாக்கிய காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்திய லஞ்ச ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தைப் போலவே பல வழிகளிலும் இருக்கிறது.

ஹர்திக், அப்லேஷ், மேவானி

படிதார் அனாமத் அந்தோலன் சமிதி தலைவரான ஹர்திக் படேல், படிதார் என்னும் படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தைத் தொடங்கியதன் மூலம் 2015ஆம் ஆண்டின் இடையில் பா.ஜ.க. ஆட்சியின் மீதான முதல் கல்லை எறிந்தார். அதன் பின்னர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் அமைப்பான குஜராத் சத்திரிய சேனா அமைப்பின் 41 வயது தோற்றுநரான அப்லேஷ் தாகூர், தங்களுக்குரிய ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எதிர்ப்புக் கொடியை உடனே ஏற்றினார். ஒரு மாத காலத்துக்குப் பின்னர் அவர் அதிகார பூர்வமாக காங்கிரசு கட்சியில் இணைந்தார். மதுவிலக்கை வலியுறுத்தும் அவரது இயக்கத்துக்கு கிராமப்புறப் பெண்களிடையே நல்லாதரவு கிடைத்து உள்ளது.

2016ஆம் ஆண்டின் இடையில் கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனாவில் நான்கு தலித் இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதையடுத்து, 36 வயதான வழக்குரைஞரும், சமூகத் தொண்டருமான ஜிக்னேஷ் மேவானி தலித்துகள் தாக்கப்படுவதற்கு எதிராக குஜராத் தலித்துகளை ஒன்று திரட்டினார்.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த படேல், தாகூர், மேவானி ஆகிய  மூன்று சமூகங்களிடையே ஆழ்ந்த சமூக வேறுபாடுகள் நிலவுகின்றன என்பது உண்மையாகத் தோன்றக் கூடும். ஆனாலும் களநிலையில் நிலவும் அழுத்தம் அவர்கள் மூவரையும் ஒருவருடன் மற்றொருவர். நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி வைத்துக் கொள்ளச் செய்கிறது.

அகமதாபாதில் உள்ள தனது இல்லத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் படத்திற்குக் கீழே உட்கார்ந்து இருக்கும் மேவானி, "ஆமாம் எங்களிடையே பொரு ளாதார சமூக முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் படிதார்கள், ஓ.பி.சிக்கள், தலித்துகளின் மிகப்பெரிய முக்கியமான எதிரியாக இன்று விளங்குவது பா.ஜ.கட்சிதான். எங்களிடையே உள்ள முரண்பாடுகள் என்றாவது எழக்கூடும்.ஆனால் முதலில் பாசிசத்திற்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்" என்கிறார்.

இது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே என்பதை ஒப்புக் கொள்ளும் அவர், "தேர்தல் வெற்றிகளால் மட்டுமே பாசிசத்தை வெற்றி கொள்ள முடியாது. அதற்கு ஒரு நீண்ட மிகப்பெரிய போராட்டம் தேவை" என்று கூறுகிறார்.

அதற்கு அடுத்த நாள், பவநகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது இதுபோன்றதொரு கேள்விக்கு ஹர்திக் படேல் பதிலளித்தார். "நாங்கள் அனைவரும் ஒரு பொது மேடையின் கீழ் கூடி இருக்கவில்லை. ஆனாலும் நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கும் பிரச்சினை களின் அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். மாநில அரசின் அடக்கு முறையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அப்லேஷ் தாகூர் மதுவிலக்கு பற்றி பேசுகிறார். இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பு பெறுவது பற்றி நாங்கள் பேசுகிறோம். தரமான நல்ல கல்வி அளிக்கப்பட வேண்டியது முக்கியமானது என்று அவர்கள் பேசு கிறார்கள். இதில் முரண்பாடுகளுக்கு எங்கே இடம் உள்ளது? ஓபிசி இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, அரசமைப்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வழி களில் இதனை எந்த அரசிடம் இருந்தும் பெற முடியும். "பா.ஜ.கட்சிக்கு எதிராகவும், தங்களது கவுரவத்துக்காகவும், உரிமைகளுக்காகவும், குஜராத்தின் எதிர்கால வளத் திற்கும், மகிழ்ச்சிக்காகவும், தாகூர் மற்றும் மேவானியின் ஆதரவாளர்கள் வாக்களிப்பதை இத்தலைவர்கள் உறுதிப் படுத்திக் கொண்டுள்ளனர்" என்று படேல் கூறினார்.

என்.டி.தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் தாகூர் இது போன்றதொரு கருத்தை வெளியிட்டார். "இடஒதுக்கீடு பற்றி படேல்களுக்கு ஏதேனும் குறை பாடுகள் இருந்தால் அது பற்றிய ஆய்வு ஒன்றை மேற் கொண்டு, அது பற்றி நிவாரணம் அளிப்பதற்கு சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ முன்மொழிவுகளை வைக்கலாம். அவர்களுக்கு உரியதை அவர்கள் பெற்றுக்கொள்ளட்டும். நாம் ஏன் அதனை எதிர்க்க வேண்டும்?" படேலைப்போல தானும் ஏழைகளுக்காகப் போராடுவதாகவும், இது தங்களை இயல்பான கூட்டாளி களாக ஆக்குகிறது என்றும் அவர் கூறினார்.

தேர்தல் களத்திலும் கூட ஆதரவு திரட்டுவதற்கான அவர்களது முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது வெளிப் படையாகத் தெரிகிறது. பவநகர் பேரணிக்கு வருவதற்கு படேல் இரண்டு மணி நேரம் தாமதமானபோதும் கூட பெரும்பாலான இளைஞர்களால் அவர்களது ஆதர வாளர்களின் உணர்வுகளும், ஆர்வமும், ஆதரவும் குறைந்து விடவில்லை.

மேவானியுடன் பணியாற்றும் மேகசோனா தொண் டர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு பணியாற்றுகிறார்கள். தங்களிடம் உள்ள பட்டாக்களுக்கு உரிய நிலங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்கத்திருக்க தாழ்த்தப் பட்டவர்களால் முடியாமல் போய்விடுகிறது. அவமானத் துக்கும், அவமரியாதைக்கும் அன்றாடம் இலக்காகும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான வழிகளே இருக்கவில்லை.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க அரசு மீதான மக்களின் மனநிறைவின்மையை ஒன்று திரட்டுவதற்கான முயற்சி களில் இந்த மூன்று இளம் தலைவர்கள் பெற்றுள்ள வெற்றி, அவர்கள் வழி நடத்தும் இயக்கங்களின் தன்மை, ஆகியவை இந்துத்துவாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு திடீரென ஜாதி அமைப்பை முன்னிலைப்படுத்தியுள்ளது. 2002, 2007, 2012 ஆண்டுகளில் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தல்களின்போது மோடியின்   தோற்றமும், குஜராத் மாதிரியிலான முன்னேற்றம், பல்வேறு வடிவங் களிலான இந்து பெரும்பான்மையினரின் கண்ணோட்டம் ஆகிய விசயங்களையே சுற்றி சுற்றி வந்துள்ளன.

விவாதங்களில் ஜாதி ஆதிக்கம் செலுத்தியபோதும், இந்து - முசுலீம்களிடையேயான பதட்டம் எங்கும் காணப்படவில்லை.

கடந்த நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு நடைமுறையும் இம்மாநிலத்தின் நடுத்தர, சிறு வணிகர்களை பேரழிவுக்கு உள்ளாக்கிவிட்டன என்பதை ஒரு சில தீவிர மோடி ஆதரவாளர்களைத் தவிர மற்ற அனைத்து மக்களும் ஒப்புக்கொள்கின்றனர். பணம் ஈட்டும் வழிகளையே அடைத்து விடுவது போன்ற இந்த நடவடிக்கைகள் வணிகர்களாகிய குஜராத்திகளை மிகமிக மோசமாகப் பாதித்துள்ளன.

மக்களிடையே சுழன்று வரும் மனநிறைவு இன்மை என்ற பெரு நெருப்பு பற்றி பா.ஜ.க. நன்கு உணர்ந்தே உள்ளது. இத்தகைய உள்ளூர் பிரச்சினைகளில் இருந்து தீவிரவாதம், நாட்டுப்பற்று போன்ற தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு மக்களின் கவனத்தை மாற்றாமல் போனால், தேர்தல் களத்தில் பா.ஜ.க.கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை அது நன்றாகவே அறிந்துள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு தலைவர் இல்லாத நிலையிலும் கூட காங்கிரசுக்கு திடீரென மக்கள் ஆதரவு பெருகுவதற்கும், ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்க பெருந்திரளாக மக்கள் கூடுவதற்கும் இவையெல்லாம்தான் காரணங்களாகும். குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா தனது ஆதரவாளர்களுடன் சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசை விட்டு விலகிச் சென்றவர். பா.ஜ. கட்சிக்கு எதிராக போட்டியிடுவதற்காக தற்போது காங்கிரசுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

குஜராத் மாநில வாக்காளர்களின் கவனத்தை உள்ளூர் பிரச்சினைகளில் இருந்து தேசிய பிரச்சினைகளுக்கு திசை திருப்புவதற்கான கடுமையான முயற்சிகளை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தனது கட்சி அமைப்பு இயந்திரத்தையும் அது முடுக்கி விட்டுள்ளது. காங்கிரசு கட்சியின் தேர்தல் இயந்திரத்தை விட பா.ஜ.கட்சியின் இயந்திரம் சிறப்பானது என்பது அனைவரும் அறிந்ததேயாகும். ஒரு பள்ளி வளாகத்தில் அமையவுள்ள நான்கு அல்லது அய்ந்து வாக்குச் சாவடிகளுக்கு ஒரு சக்தி மய்யமும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பானவர்களும் 800 - 1000 வாக்காளர்களைப் பார்த்துக் கொள்வர். இதுமட்டுமல்ல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்சிப் பணியாளர்கள் வாக்காளர் பட்டியல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படு கின்றனர். வாக்காளர் பட்டியலின் ஒவ்வொரு பக்கத் திற்கும் ஒருவர் பொறுப்பாக இருப்பார். அந்தப் பக்கத்தில் உள்ள வாக்காளர்களை வாக்குசாவடிக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது அவர்களது பொறுப்பாகும்.

இதற்கு மாறாக பா.ஜ.கட்சியின் பிரச்சாரத்திற்கு அடிப்படையாக விளங்குவதில் 70% மோடி மேஜிக் என்னும் மக்களின் மனமயக்கம்; 20% சுயபுராணம்; 10% மட்டுமே நிர்வாகம் மற்றும் சாதனையைப் பற்றி பேசுபவை. மோடியின் உள்வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பா.ஜ.க அரசினால் பயனடைந்துள்ளனர். மக்கள் பலரையும் மோடி பல நேரங்களிலும் முட்டாள்களாக ஆக்கி உள்ளார். ஆனால் காங்கிரசு கட்சியோ பொரு ளாதாரப் பிரச்சினைகள், கல்வி நடைமுறை சீராக்கப் படவேண்டிய தேவை, மருத்துவ வசதிகள், வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை பற்றி கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்வதுடன், குஜராத் மாதிரியிலான முன்னேற்றம் என்ற பொய் மூட்டையை பொத்தலிட்டும் வருகிறது.

தேர்தல்கள் நடைபெற இன்னமும் ஒரு மாத காலத்துக்கு மேல் உள்ள நிலையில், இதுவரை தான் சந்தித்திராத கடுமையான எதிர்ப்பை இந்த குஜராத் தேர்தலில் பா.ஜ.க எதிர் கொண்டிருக்கிறது என்பதற்கும் மேலாக எதனையும் கூற எவரும் விரும்பிவில்லை. கடந்த ஆண்டு சூரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தன் மீது நாற்காலிகள் எடுத்து வீசப்பட்டது முதல், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குஜராத் பேரணிகளில் பங்கு கொள் வதையே விரும்பவில்லை என்பது போல தோன்றுகிறது.

நன்றி: "தி இந்து", 4.11.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner