எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற இதழிலிருந்து....

ஹிந்துக்கள் எப்படி ஹிந்துக்களாக மாறினார்கள்?

- தேவ்தன் சௌத்ரி

இந்தியாவில் தோன்றிய பல்வேறு மத நம்பிக் கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிய அனைவரையும், பாரசீகர்கள் உருவாக்கிய புதிய வார்த்தை மூலம் ஹிந்து என்று அழைத்து, சிந்து நதி அல்லது இண்டஸ் நதிக்கு அப்பால் இருந்த நிலத்தை இந்தியா என்று பெயரிட்டு அழைத்து வந்த நிலையில், அவர்களை மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிரித்து வைத்த காரியத்தை பிரிட்டானிய ஏகாபத் தியமே மேற்கொண்டது.இந்தியாவைக் குறிப்பதற்கு இண்டிகா என்ற பெயர் ஹெரொடோட்டஸ், மெகஸ் தனீஷ் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது. இண்டிகா என்ற அதே தலைப்புடனேயே, இந்தியத் துணைக் கண்டத்தை விவரிக்கும் வகையில் மெகஸ்தனீஷ், அரியன் ஆகியோரால் இருவேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்தியா என்கிற பெயர் இண்டஸ் நதியோடு தொடர்புடையதாகவே அப்போது இருந்தது. கிரேக் கர்களைப் பின்தொடர்ந்து, நதியின் பெயரை வைத்தே பாரசீகர்களும் இந்தியாவிற்குப் பெயரிட்டனர். அவ் வாறு பெயரிடும் போது இண்டஸ் என்பதற்கு சமஸ் கிருதத்தில் பயன்படுத்தப்படும் சிந்து என்ற வார்த் தையை அவர்கள் பயன்படுத்தியதன் மூலமாக ஹிந்து என்ற வார்த்தைக்கு வந்த டைந்தனர். பண்டைய பாரசீக மொழியில் ஷி என்பது பி என்பதாகவே உச் சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாரசீகக் கண் ணோட்டத்தில் இருந்து பார்த்தால், ஹிந்து என்பது புவியியல் ரீதியிலான வார்த்தையாக, சிந்து நதிக்கு அப்பால் இருந்த நிலத்தைக் குறிக்கும் சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்பட்டதே தவிர, எந்த மத அர்த்தத்தையும் குறிக்குமாறு அந்த வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பது புரியும். ‘ஸ்தான்’ என்ற பின்னொட்டுச் சொல் புவியியல் இடத்தைக் குறிக்கும் வகையில் ஹிந்து என்ற சொல்லிற்குப் பின்சேர்க்கப்பட்டு ஹிந்துஸ்தான் என்ற சொல் உருவாக்கப் பட்டது. சமஸ்கிருதத்தில் சிந்து என்ற சொல்லுக்கு நதி என்ற பொருளும் உண்டு. ஏறத்தாழ 5,500 ஆண்டுகளுக்கு மேலாக, 2016ஆம் ஆண்டு கிடைத்த தொல்பொருள் ஆராய்ச்சியின் முடிவுகளின் படி 8,000 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த சிந்து நதி பாயும் இடமாக இந்தியா என்பது இருந்து வந்திருக் கிறது.

ஒருபோதும்...

நான்கு வேதங்களிலும், உபநிஷதங்களிலும், பௌத்த சமய நூல்களிலும் ஹிந்து என்ற வார்த்தை எங்குமே காணப்படவில்லை. பௌத்த மதத்திற்குப் பிறகு, பல நூற்றாண்டுகள் கழித்து, ஹிந்துக் கொள்கை களுக்கு புத்துயிர் கொடுத்ததாக அறியப்படுகின்ற, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியாரும்கூட அவரது நினைவிலிருந்தோ அல்லது அவரது சொற்களஞ்சியத்திலோ ஹிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

கற்றறிந்தவர்கள் மட்டும் என்று குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அத்வைத தத்துவத்தை அவர் அறிமுகப்படுத்திய அதே வேளையில், சாதாரண மக்கள் வழிபடுவதற்காக கடவுளையும், பெண் கட வுளர்களையும் உருவாக்கினார். சிருங்கேரி (தெற்கு), ஜோஷிமத் (வடக்கு), பூரி (கிழக்கு), துவாரகா (மேற்கு) ஆகிய இடங்களில் நான்கு பீடங்களை நிறுவிய ஆதி சங்கரர், தனது தத்துவப் படைப்புகளிலோ, வர்ணனை களிலோ, ஆன்மீகக் கவிதைகளிலோ ஒருபோதும் ஹிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.பௌத்த மதம் இந்தியாவில் இருந்து முற்றிலுமாக மறைந்து விடவில்லை. பாலா வம்சத்தைச் சேர்ந்த பௌத்தர்கள் வங்கா என்கிற பகுதி உட்பட கிழக்கிந் தியாவை ஆண்டு வந்தார்கள். கி.மு. 750 முதல் 1174 வரையிலான காலகட்டத்தில், பண்டைய பெங்காலி மொழியோடு கூடிய ஆரம்பகால வங்கக் கலாச்சாரம் அங்கே அவர்களால் உருவாக்கப்பட்டது. பன்னிரெண் டாம் நூற்றாண்டில் சில சமஸ்கிருத நூல்களில் ஹிந்து என்ற அந்த வார்த்தை பயன்படுத்தப்படத் தொடங் கியது வரையிலும், அதற்கு முன்பாக வேறு எந்த இணை மதம் அல்லது இணைக் கலாச்சாரத்திலும், சனாதன தர்மத்தை விளக்கும் வகையில் இருக்கின்ற எந்தப் பண்டைய நூலிலும் ஹிந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை. பல்வேறு தத்துவ, ஆன்மீகப் பழக்கங்களை மேற்கொண்ட பல்வேறு பாரம்பரிய மரபுகளும் தங்களை வைஷ்ணவம், ஷக்தா, மஹாயானம், வஜ்ரயானம், அத்வைதம் போன்ற சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிட்டுக் கொண்டாலும், அவர்கள் யாரும் தங்களை ஹிந் துக்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள வில்லை. வேதங்களில் கூறப்பட்டிருக்கும் ஏழு நதிகளைக் கொண்ட சப்த சிந்தாவா எனும் பஞ்சாப் பகுதி, ஹாப்டா ஹிந்து என்றே பாரசீக வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரசீக மன்னரான முதலாம் தரியுஸின் கிமு ஆறாம் நூற்றாண்டுக் கல்வெட்டில், வடமேற்கு இந்தியா ஹிந்துஷ் என்பதாகக் குறிப் பிடப்பட்டிருக்கிறது.

இந்தியர்களை ஹிந்துவான் எனவும், ஹிந்தாவி எனவும், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக நூலான சச்னாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற் றில் எல்லாம், ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, ஹிந்து என்ற வார்த்தை ஒரு புவியியல் சார்ந்த வார்த்தையாக இருக்கிறதே தவிர அது எந்த மதத்தையும் குறிப்பதாக இருக்கவில்லை. பதினொன்றாம் நூற்றாண்டில் அல்-பிருனி எழுதிய தாரிக் அல்-ஹிந்த் என்ற நூலிலும், தில்லி சுல்தானகத்தின் நூல்கள் பலவற்றிலும் ஹிந்து என்ற வார்த்தை இஸ்லாமியர்கள் அல்லாதவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதால், ஹிந்து என்ற வார்த்தை ஒரு பிராந்தியத்தைக் குறிக்கிறதா அல்லது மதத்தைக் குறிக்கிறதா என்பது பற்றி தெளிவற்ற தன்மையுடனே இருக்கின்றன.

புவியியல் சார்ந்த பொருளில்...

பிருத்விராஜ் சௌகான் முகமது கோரியால் தோற் கடிக்கப்பட்டதாக, பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சந்தா பர்தாய் என்பவரால் பிரித்விராஜ் ரசோ என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலில் ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நூல் 1192க்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதாகச் சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த நூல் முழுவதிலும் ஹிந்துக்கள், துருக்கியர்கள் என்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நூலிலும் ஹிந்து என்ற வார்த்தை புவியியல் சார்ந்த பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களிருவருக்கி டையே நடந்த போர், ஹிந்துக்கள்,  துருக்கியர் களிடையேயான போர் என்றுதான் குறிப்பிடப்பட் டிருக்கிறதே ஒழிய எந்த இடத்திலும் ஹிந்துக்கள்  முஸ்லிம்களுக்கிடையிலான போர் என்பதாகக் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவிற்குள் நுழைந்தவர் கள் இஸ்லாமியக் கலாச்சாரத்தின் உயர்பீடமாக இருக்கும் தற்போதைய ஈரான் பகுதியைக் குறிக்கின்ற பாரசீகத்தில் இருந்து வரவில்லை.

அவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்த வர்களாக, பெரும்பாலும் துருக்கியர்களாகவே இருந் தனர். பண்டைய பாரசீகத்தின் பிரதான மதமாக ஜோரோ ஸ்ட்ரியம் இருந்தது. கி.மு. 651 இல் பாரசீகத்தை அரபு வெற்றி கொண்ட போது அது மாற்றப்பட்டு, இஸ்லாமியக்கலிபா விரிவாக்கம் செய்யப்பட்டது. கி.மு. 515இல் பாரசீக மன்னர் முதலாம் தரியுஸ் இண்டஸ் பள்ளத்தாக்கின் சில பகுதிகளை வடக்கில் இணைத் தார்.  அந்த காலகட்டத்தில், கிழக்கே குப்தப் பேரரசுகள் உருவாகி, அதன் மூலமாகப் பரவிய மகதத்தை உள்ளடக்கிய பதினாறு மகாஜனபாதாக்களின் (சமஸ் கிருதத்தில் பெரும் நாடுகள் என்றழைக்கப்படுவது) ஆதிக்கத்தில் பண்டைய இந்தியா இருந்து வந்தது.பாரசீகர்கள் உருவாக்கிய ஹிந்து என்ற அந்த வார்த்தை மெதுவாக இந்திய மக்களிடையே பிடிபடத் துவங்கியது. தங்களுக்கும், துருக்கியர்களுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தைக் குறிப்பதற்காக அவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர். யவனர்களிடம் (வெளிநாட்டவர்கள்) இருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காக ஹிந்து என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கியதாக 16 - 18 ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த குறிப்பிட்ட சில வங்க கௌடிய வைணவ நூல்கள் குறிப்பிடுகின்றன. வங்க மொழியில் எழுதப்பட சைதன்ய சரித்ரமிருத (16 ஆம் நூற்றாண்டு), பக்தமாலா (17 ஆம் நூற்றாண்டு) ஆகிய நூல்களில் ஹிந்து தர்மம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட் டுள்ளது. இவ்வாறு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. ஆனால் பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகு, பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே, இந்திய மக்கள் மெதுவாக ஹிந்துக்கள் என்று தங்களைத் தாங்களே கருதத் துவங்கினர்.

மத்திய ஆசிய ஆக்கிரமிப்புக்கள் நடந்த பிறகே, மக்களிடையே அந்தப் பாரசீக வார்த்தை மெதுவாக பிரபலமடையத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத் தில், தனது பிரித்தாளுகின்ற சூழ்ச்சியை நிறை வேற்றுகிற வகையில், இசம் என்பதை ஹிந்து என்ற வார்த்தையுடன், பின்னொட்டாக இணைத்து ஹிந்துத் தத்துவம் என்ற ஹிந்துயிசத்தை உருவாக்கியது. பன் னிரெண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர், ஹிந்து, ஹிந்துஸ்தான், ஹிந்து தத்துவம் என்ற மூன்று வார்த்தைகளுக்கும் பண்டைய இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஒரு பெரிய மக்கள்தொகை அந்த வார்த்தை களைப் படிப்படியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது.சமீபத்திய டிஎன்ஏ மரபுவழி ஆய்வுகள், முக்கியமான மூன்று பழங்குடியேற்றங்களின் மூலம் இந்திய மக்கள் தொகை உருவானதாக பல ஆதாரங்களின் மூலம் சுட்டிக் காட்டுகின்றன. ஹிந்து மக்கள் தொகை அடிப்படையிலான தற்போதைய இந்தியா பிறப்பதற்கு, 12,000 - 15,000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசி யாவில் இருந்தும், 3,500- 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் காகஸ் பிராந்தியம் மற்றும் தெற்கு சைபீரியா வில் இருந்தும் நடந்த இரண்டு குடியேற்றங்கள் வழி வகுத்துக் கொடுத்தன. இங்கே உள்ள ஹிந்துக்களும், இந்தியாவிற்குள் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்களின் வம்சாவளியினர்தான். இந்த உலகம் முழுமையுமே மனிதர்கள் புலம் பெயர்வதாலேயே உருவானது. அத் தகைய புலம் பெயர்தல்கள் மூலமாகத் தொடர்ந்துஅது உருவாகிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் ஹிந்துத்துவா சித்தாந்தமோ, இந்தியாவை ஹிந்துக்களுக்கு மட்டுமேயான நிலமாகக் கருதுகிறது. இந்தச் சித்தாந்தம் பாரசீகர்களால் உருவாக்கப்பட்ட ஹிந்து,ஹிந்துஸ்தான் என்ற வார்த்தைகளோடு, பிரிட் டானியர் களால் உருவாக்கப்பட்ட ஹிந்துத் தத்துவம் என்ற வார்த்தையையும் சேர்த்து மூன்று முக்கியமான வார்த்தைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அவற்றை தன்னுடைய தேசியவாதச் சொல்லாடல் மற்றும் உலகக் கண்ணோட்டத்திற்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆக்கிரமிப்பா ளர்கள் என்று ஹிந்துத்துவா சித்தாந்தம் அடையாளம் காட்டுகின்ற முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற வர்களாலேயே ஹிந்து, ஹிந்துஸ்தான், ஹிந்துத்தத் துவம் ஆகிய மூன்று வார்த்தைகளும் உருவாக்கப் பட்டு பிரபலப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த உண்மையில் உள்ள முரண்பாடு மிகுந்த ஆச்சரிய மளிப்பதாக இருக்கிறது.

(தொடரும்)

நன்றி: ‘தீக்கதிர்’, 13.11.2017

பக்கம் 4

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner