எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ராஜ்யசபா தொலைக்காட்சி மக்களவை நிகழ்ச்சிகளைத்தவிர இதர நேரங்களில் அரசியல், சமூகம் பொருளா தாரம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் நடுநிலையாக நின்று ஊடகப்பணியாற்றிய ஒரு தொலைக்காட்சி ஆகும்.

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது 2016- ஏப்ரல் மாதம் தமிழக அரசியல் களம்பற்றி இந்தியில் ஒரு நிகழ்ச்சியை வழங்கியது. நேரடி ஒளிபரப் பாகையால் இந்தியில் பேசுபவர்களை அழைத்தது. திராவிட கட்சிகளின் சார்பில் யாரும் செல்லாத நிலையில் நக்கீரன் பத்திரிகையின் கோ.வி.லெனின் மூலம் நான் இந்தியில் தமிழக அரசியல் களத்தைப் பற்றி பேசச்சென்றேன்,

கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் டில்லி பல்கலைக்கழக பொருளாதாரப் பேரா சிரியர் ஒருவரும், தமிழகக் கள நிலவரம் குறித்து பேச சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் பீகாரைச்சேர்ந்த பேராசிரியர் ஒருவரும், மும்பையைச்சேர்ந்த ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர் ஒருவரையும் வரவழைத்து இருந்தனர்.

அனைத்துத் தரப்பு வாதத்தையும் எவ்வித பாரபட்சமின்றி எடுத்து வைக்க வாய்ப்பு அளித்தது. அப்போது மத்திய அரசின் இந்துத்துவ கொள்கையைக் குறித்து இந்தியில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தேன்.

அதே போல் இந்தத் தொலைக்காட்சி அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர் களையும் அழைத்து அவர்களின் கருத்தை பொதுவில் வழங்கி அதை வைத்து நிறைந்த விவாதங்களை வழங்கி வந்த ராஜ்ய சபா டிவி மூடப்பட உள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றில் ராஜ்யசபா தொலைகாட்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட விருப்பதாகவும், இதற்கான முதல் அறிகுறியாக அதனுடைய தலைமை அதிகாரியாகவும், ஆசிரியராகவும் இருந்த குர்ப்ரீத் சிங் சப்பாலை பதவிவிலக வற்புறுத்தப்பட்டதன் பேரில் அவர் பதவி விலகியுள்ளார்.

ராஜ்ய சபா டிவி 2011ஆம் ஆண்டு அப் போதைய குடியரசு துணைத் தலைவரும், ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்த ஹமீத் அன்சாரியால் துவக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் செய்திகள் மட்டுமின்றி, தரமான விவாதங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்கால அரசியல் நடப்புகள்,

பொருளா தாரம், விஞ்ஞானம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் விருப்பு, வெறுப் பின்றி எல்லா தரப்பினரின் கருத்துக்களும் இடம் பெற்றன.

டில்லி மற்றும் மும்பையிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் ஆங்கில மற்றும் இந்தி செய்தி சேனல்களின் தரத்தை விட, அதிகமான தரம் கொண்ட தாக இருந்த ராஜ்ய சபா டிவி-யில் தற்கால நடப்புகள் மற்றும் அனைத்து முக்கியமான துறைகள் சார்ந்த விவாதங்களும் நடத்தப் பட்டன.

இத்தொலைக்காட்சி முழுக்க முழுக்க அரசியல் பாகுபாடு இன்றி நடத்தப்பட்டது. விவாதங்களில் காங்கிரசு பிரமுகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவும் ஆர்எஸ் எஸ் பிரமுகருக்கும் கொடுக்கப்படும்.

2013ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று நடந்த விவாதம். அதுவும் நேரடி ஒளிபரப்பு. அதில் அய்தராபாத்தில் வசித்து வரும் தலித் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் காஞ்சா அய்லையா காந்திஜிக்கு எதிராக பல குற்றச் சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்தார்.

அவருக்கு அந்த விவாதத்தில் பங்கேற்ற காங்கிரசு பிரமுகர் திக் விஜய் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னணி தலைவர் சீதாராம் யெச்சூரி உள் ளிட்டோர் தங்களுடைய பதில்களை முன் வைத்தனர். “காந்திஜி அடிப்படையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்” என்று நான் பகிரங்கமாக குற்றஞ் சாட்டுகிறேன்' என்று காஞ்சா அய்லையா, அதுவும் காந்தி ஜெயந்தி அன்று, மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு தொலைக் காட்சியில், அதனுடைய நேரடி ஒளி பரப்பில் கூறியது எந்தளவுக்கு கருத்துரி மைக்கு ராஜ்ய சபா டிவியில் இடங் கொடுக்கப்பட்டது என்பதற்கு சரியான எடுத்துக் காட்டு'.

வெங்கையா நாயுடு கட்டுப்பாட்டில் ராஜ்ய சபா டிவி என்பது குடியரசு துணைத் தலைவரின் நேரடி கட்டுப் பாட்டில் இயங்கும் டிவி யாகும். தற்போதய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சமீபத்தில் ராஜ்ய சபா தலைமையகத்தின் மூத்த நிருவாகிகள் கூட்டத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார்; ‘எதற்காக ராஜ்ய சபா டிவியில் செய்திகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்? ஏற்கெனவே பல தனியார் தொலைக் காட்சி அதிபர்கள் இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றனர். இதற்காக ஏராளமான பணத்தை அரசு செலவழித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இது தேவையற்ற ஒன்று'' என்று பேசியி ருக்கிறார்.

“ராஜ்ய சபா நடக்கும் போது அதில் நிகழும் விவாதங்களை மட்டும் இனிமேல் ராஜ்ய சபா டிவி காட்டினால் போதும்'' என்று வெங்கய்யா நாயுடு பேசியி ருக்கிறார். “இது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தெளிவு படுத்தி விட்டது'' என ராஜ்ய சபா டிவியில் செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நபர் கூறியுள்ளார்.

ராஜ்ய சபா டிவி யின் புதிய தலைமை அதிகாரியாக பிரசார் பாரதியின் தலைவர் சூர்ய பிரகாஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராஜ்யசபா டிவிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஒரு குழு நியமிக்கப்படும், அந்த குழுவின் தலைவராக சூர்ய பிரகாஷ் இருப்பார் என்று அதிகார பூர்வமாக ராஜ்ய சபா வின் தலைமைச் செயலகம் அறிவித்து விட்டது. ராஜ்ய சபா டிவி முழுக்க, முழுக்க ராஜ்ய சபா தலைமைச் செயலகத்தின் கீழ் (ஸிணீழீஹ்ணீ ஷிணீதீலீணீ ஷிமீநீக்ஷீமீtணீக்ஷீவீணீt)  செயற்படும் ஒரு அமைப்பாகும். ஆகவே குடியரசு துணைத் தலைவரும், ராஜ்யசபாவின் தலைவருமாக இருப்பவர்தான் இதனது தலைமை அதிகாரி என்றே நாம் கூறலாம்.

அதனால்தான் வெங்கய்யா நாயுடுவே நேரில் இந்த மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறார். ஏராளமான பணம் தேவையின்றி ராஜ்ய சபா டிவிக்காக ஏன் செலவிடப்பட வேண்டும் என்பதுதான் வெங்கய்யா நாயுடு சொல்லும் காரண மாகும்.

“ராஜ்ய சபா டிவி ஆரம்பத்தில் டில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் இருந்து தான் செயல்பட்டு வந்தது. பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டில்லி டல்கோடோரா மைதானத்தின் அருகில் உள்ள டில்லி மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு இடத்திலிருந்து இயங்க ஆரம்பித்தது. இதற்காக டில்லி மாநகராட்சிக்கு மாதந்தோறும் 2 கோடி ரூபாய்களை வாடகையாக ராஜ்ய சபா தலைமையகம் கொடுத்து கொண்டிருக்கிறது.
இந்த தொலைக்காட்சி மற்ற தொலைக் காட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட இந்திய மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. மணிப்பூர் தேர்தலின் போது அனைத்துப் பகுதிக்கும் சென்று செய்திகளைச் சேகரித் தார்கள் - மக்களின் கருத்தைக் கேட்டுப் பெற்றார்கள்.

அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநிலத் திலும் மூலை, முடுக்கெல்லாம் சென்று செய்தி சேகரித்தார்கள். மணிப்பூர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் விவகாரங்களில் செய்தி சேகரிக்க செல்லும் போது எல்லா தரப்பு மக்களின் குரல்களுக்கும், தனி நாடு கோருபவர்களின் கருத்துக்களை தவிர, ஆயுதந் தாங்கிய கும்பல்களின் கருத்துக் களை தவிர, மற்ற எல்லா தரப்பு மக்களின், அரசியல் கட்சிகளின், இந்த இரண்டு மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பல தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நபர்களின் கருத்துக் களையும் நாங்கள் ராஜ்ய டிவியில் ஒளி பரப்பினோம்.

மோடி அரசுடன் மட்டுமல்ல, காங்கிரசு ஆட்சிக் காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்திலும் அன்றைய மத்திய அரசுக்கு எதிராக பல விவாதங்கள் ராஜ்யசபா டிவியில் நடத்தப்பட்டன. குறிப்பாக 2010 - 2011ஆம் ஆண்டுகளில் 2ஜி ஊழல் வழக்கு பற்றி எரிந்த போது, பல தனியார் தொலைக் காட்சிகளிலும் கூட இடம் பெறாத விவாதங்கள் ராஜ்ய சபா டிவியில் நடத்தப்பட்டன.

ஒரு கட்டத்தில் இது அன்றைய மன்மோகன் சிங் அரசுக்கும், குடியரசு துணை தலைவருக்கும் இடையிலான மோதலாக மாறத் துவங்கியது. ஆனாலும் ஒரு போதும் ராஜ்ய சபா டிவி தன்னுடைய தொழில் முறை தர்மத்தை, அதாவது ஆங்கிலத்தில் சொன்னால், Professional Ethics”விட்டுக் கொடுக்கவே இல்லை.

மோடி அரசு வந்த பின்னர் ஹமீத் அன்சாரி மீதான பாஜக அரசின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆனால் மோடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் இந்திய அரசியல் சாசனம் குடியரசு துணைத் தலைவருக்கு வழங்கியிருக்கும் அதிகா ரங்கள்தான். ராஜ்ய சபா டிவியில் 67 ஊழியர்கள் முழு நேர பணியாளர்கள். 487 நபர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் குடியரசுதுணைத் தலைவராக பாஜக-தலைவர்களில் ஒரு வரும்  தீவிர ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரு மான வெங்கையா நாயுடு தேர்வு செய் யப்பட்ட பிறகு சிக்கனம் என்ற பெயரில் அனைவருக்கும் பொதுவான ஒரு ராஜ்ய சபா தொலைக்காட்சி மீது கைவைத் துள்ளது - இந்த ஆட்சியில் ஊடகச் சுதந்திரத்திற்கு எந்த அளவு அழுத்தம் உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
- சரவணா ராஜேந்திரன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner