எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

(பா.ஜ.க. ஆட்சி செய்யும் வட மாநிலங்களில் எல்லாம்,  இனியும் பயன்படாதவை என்று கருதப்பட்டு உரிமையாளர்களால் கைவிடப்பட்டு விடுவதால், தெருக்களிலும், வயல்வெளிகளிலும் கட்டுப்பாடின்றி திரியும் முதிர்ந்த  மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உருவாகும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  அதிகரித்து வருகின்றன).

சாதாரணமான ஒரு விவசாயிக்கு சாதுவான ஒரு பசுவினால் எந்த அளவிலான கொடுமைகளை எல்லாம் ஏற்படுத்த இயலும் என்பதற்கு, மேற்கு உத் தரப்பிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மெஹந்தி கிராமத்தில் வாழும் 23 வயது தலித் இளைஞன் ராஜூவே ஒரு நடமாடும் எடுத்துக் காட்டாகும். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இவரால், பசுக்கள், குறிப்பாக வயது முதிர்ந்துவிட்டதால், இனி பயன்படாது என்று உரிமையாளர்களால் கைவிடப்பட்டுவிட்ட பசுக்கள்,  விவசாயத்துக்குக் கேடு விளைவிப்பதாகவும், சட்டம் ஒழுங்குக்கு ஓர் அச்சுறுத்தலாகவும், அரசியலுக்குத் தூண்டுதல் அளிப்பதாகவும், ஈடு இணையற்ற முறையில் மக் களுக்குக் கேடு விளைவிப்பதாகவும் எவ்வாறு ஆகிவிடுகின்றன என்று உங்களுக்குக் கூறமுடியும். செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து கழிந்த அவரது வாழ்க்கையே இதற்கு சரியான ஓர் எடுத்துக்காட்டாகும். இத்தகைய பல்வேறுபட்ட வேடங்களை ஒரு பசு ஏற்றுக் கொண்டதை அடுத்து இரண்டு வார காலம் அவர் சிறைவாசம் செய்ய நேர்ந்தது. ராஜூவின் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.  ஒவ்வொருவருடைய வாழ்க் கையையும், குறிப்பாக வட இந்திய கிராமப்புற மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் அளவுக்கான தீமைகளைப் புரிவதற்காக இந்த சாதுவான  பசுவைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசு இயந்திரத்திடமிருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள். இத்தகைய சூழ்நிலைகளைத் தீவிரப்படுத்தும் அர சியல், அரசு, நிர்வாக இயந்திரம் ஆற்றும் பணியைப் பற்றி ராஜூ திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். சாதுவான பசுவை இந்த அமைப்புகளின் செயல் பாடுகள்தான் மக்களுக்குப் பேரச்சுறுத்தலாக மாற்றி விடுகின்றன என்பது பற்றி அவர் மிகவும் நிச்சயமாக இருக்கிறார். பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநில மக்களெல்லாம் இவ்வாறுதான்  கருதுகின்றனர்.

தனது விவசாய வேலை தொடர்பாக ராஜூ ஒருநாள் வெளியே சென்றபோது, அவருக்குச் சொந்தமான நிலத்தில் விளைந்திருந்த பயிர்களையும்,  விதைப்பதற்காக வைத்திருந்த புதிய விதைகளையும், உரிமையாளரால் கைவிடப்பட்டுவிட்ட ஒரு வயதான பசு அழித்துக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.  இத்தகைய மாடுகளால் மற்றவர்களின் நிலங்களின் பயிர்களும் எவ்வாறு அழிக்கப்பட்டிருந்தன என் பதையும், தங்களது கால்நடைகளுக்காக வைத்திருந்த தீவனங்களையும் அவை எவ்வாறு அழித்துவிட்டன என்பதையும், மெஹந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் அவ்வாறு பயிர்களை அழிக்கும் மாடுகளை மிளகாய்பொடி தூவியோ, தடியால் அடித்தோ விரட்ட வேண்டியிருந்தது என் பதையும்  அவர் கேள்விப்பட்டிருந்தார். தங்களது நிலங்களில் விளைந்துள்ள பயிர்கள் இவ்வாறு தெரு மாடுகளால் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தனது சிறிய விவசாய நிலம் தெருமாடுகளின் கவனத்தை ஈர்க்காது என்று நம்பியிருந்த அவர், தனது நிலப் பயிர் அழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு கடுங்கோபம் கொண்டார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசும், மோடி தலை மையிலான மத்திய அரசும் பயன்பாடற்ற பசுக்களை வழக்கம் போல இறைச்சிக்காகக் கொல்வதைத் தடை செய்து ஆணை பிறப்பித்திருந்த காலம் முதற் கொண்டு, தெருவில் திரியும் இத்தகைய பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பாதிக் கப்பட்ட இந்த விவசாயி அறிந்தே இருந்தார்.

சட்டத்திற்குப் புறம்பான மாட்டிறைச்சி கடைகள் மற்றும் மாடுவெட்டும் தொட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, 2017 ஏப்ரலில் முதல்வராகப் பதவிக்கு வந்தவுடன் யோகி ஆதித்யநாத் ஆணை யிட்டதையடுத்து, தங்களது அதிகப்படியான ஆர் வத்தினால், சட்டத்திற்குப் புறம்பான இறைச்சிக் கூடங்கள் மீது மட்டுமன்றி, அனுமதி பெற்று செயல்பட்டு வந்த இயந்திர மயமாக்கப்பட்ட இறைச் சிக் கூடங்கள், இறைச்சி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றைச் செயல்படவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆடு, மாடு வளர்ப்பவர்கள் மற்றும் வியாபரிகள் இடையே இவை மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால், ஒரு மாதம் கழித்து மே 23 அன்று மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட  ஓர் ஆணை நிலைமையை மேலும் சிக்கல் நிறைந்ததாக ஆக்கிவிட்டது. விலங்கு வதைத் தடுப்பு சட்டம் (கால்நடை சந்தைகள் கட்டுப்பாட்டு) விதிகள் சட்டம் 2017 மற்றும் விலங்குகள் சந்தை விதிகள் அடிப்படையிலான இந்த ஆணை, இறைச்சிக்காக  கொல்லப் படுவதற்காக சந்தைகளில் கால்நடைகள் விற்கப்படுவதன் மீது ஒரு நிரந்தரத் தடை விதித்து விட்டது. இந்தத் தடை ஆணை, உத்தரப் பிரதேச மாநிலமெங்கும் இருக்கும் பசுப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இந்துத்துவ ஆதரவாளர்களை கட்டவிழ்த்துவிட்டது. பசுக்கள், காளைகள், கன்றுகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்படுவதை இந்த பசுப்பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் வன்முறைகளும், குழப்பங்களும் நிலவி வந்தன. அரசின் தடை மற்றும் பசுப் பாது காவலர்களின் கெடுபிடிகளை அடுத்து, அதன் ஒட்டு மொத்த பாதிப்பாக, பயன்பாடற்ற கால்நடை களை இறைச்சிக்காகக் கொல்வது பெரும் அளவில் குறைந்து போனதால், அவற்றின் உரிமையாளர்கள் அவற்றுக்குத் தீவனம் அளிக்க இயலாத காரணத்தால், கைவிட்டுவிட்டனர்; அவையும் தெருக்களிலும் ஊரில் உள்ள மற்ற விவசாயிகளின்   நிலங்களிலும்  கட்டுப்பாடற்றுத் திரிந்து பயிர்களை அழிக்கத் தொடங்கி விட்டன.

தனது நிலத்துப் பயிர் அழிக்கப்பட்டிருந்ததைக் கண்ட ராஜூ கோபம் கொண்டு தனது நிதானத்தை இழந்துவிட்டார். விவசாயக் கூலி வேலைக்காக பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு அவ்வப்போது செல் லும் அவரது விவசாயக் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த சிறிய நிலத்துப் பயிர்கள் அழிக்கப் பட்டு விட்டது ராஜூவுக்குக் கடும் கோபத்தை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டு விட்ட மாடுகள் பயிர்களுக்கு ஏற்படுத்தும் அழிவைப் பற்றியும், இதற்குக் காரணமான யோகி மற்றும் மோடி அரசின் செயல்பாடுகளைப் பற்றியும் வசைமாரி பொழிந்து தீர்த்தார். அவற்றையெல்லாம் தனது கைபேசியில் பதிவு செய்த நண்பர் ஒருவர், தனது உற்சாகத்தின் காரணமாக அதனை வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டார். செப்டம்பர் 29-30 அக்டோபர் 1 அன்று இந்த நிகழ்ச்சி நடந்தது. உட னடியாக காலதாமதமின்றி, ராஜூ மீது முதல் தக வல் அறிக்கை பதிவு செய்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சொற்களால் அவர் பிரதமரை விமர்சித்ததாக அந்த வலைதள செய்தியில் இருந்து தெரிய வருகிறது. என்றாலும் இது மானஇழப்பீட்டு வழக்கை மட்டுமே தொடர இயன்ற குற்றமாக இருந்தது. இவ்வாறு அவரது குற்றத்தின் தன்மை குறைக்கப்பட்டதால், இரண்டு வார காலத்தில் அவருக்கு பிணை கிடைத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அப்படியிருந்தாலும், இந்த தெரு மாட்டின் விவகாரத்தில் ராஜூவுக்குக் கிடைத்த அனுபவம்,  ஊடகங்கள், சமூக ஊடகங்களின் அளவில் பொது மக்கள் காணக்கூடிய, உணரக் கூடிய ஒரு கருத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. காவல்துறை நடவடிக்கை, சட்டப்படியான நடைமுறைகள் தொடர்பான ஒரு புகழ்பெற்ற வழக்காக ராஜூவின் கதை அமைந்துவிட்டது. ஆனாலும், இது போன்ற எண்ணற்ற காவல்துறை தீவிர நடவடிக்கைகள், சட்ட நடைமுறைகள், உரசல்கள் வடநாட்டின் பல் வேறுபட்ட பகுதிகளிலும் தொடர்ந்து நிகழ்ந்தே வருகின்றன. இவ்வாறு பசுக்களால் ஏற்படும் கேடுகளும், தவறான அரசியல் நிர்வாக செயல்பாடுகளும்,  உத்தரப்பிரதேச, மத்தியப் பிரதேச, அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளிடையே இத்தகைய ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற் படுத்தியுள்ளன.

தங்களது பயிர்களை அழிக்கும் கைவிடப்பட்ட தெரு மாடுகளை கோபம் கொண்ட விவசாயிகள் மிளகாய் பொடி தூவியும், தடிகளால் அடித்தும் விரட்டுவது மட்டுமன்றி, ஆசிட் தெளித்தும் விரட் டுவது பற்றிய செய்திகள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று அறிக்கைகள் வருவதாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சகம் நமக்குத் தெரிவித்துள்ளது. தங்களது பயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழி  இல்லை என்று பெரும்பாலான விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இத்தகைய ஆசிட் தாக்குதல்கள் நேர்ந்த போது, பசு பாதுகாவலர்கள் அதற்கு முசுலிம்களைக் குற்றம் சாட்டினர். ஆனால் உத்தரப்பிரதேசத்தின் மால்வா பத்தல்கண்ட் பகுதி களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந் தும், சில இடங்களில் பசு பாதுகாவலர்களும் கூட,  இவ்வாறு மாடுகள் மீது ஆசிட் தெளிப்பவர்கள் இந் துக்கள்தான் என்று கூறியிருப்பதும் தெரிய வருகிறது என்று உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

கைவிடப்பட்ட மாடுகளால் ஏற்படும் உயிரிழப்பு

கைவிடப்பட்டு திரியும் பசுக்களின் முரட்டுத் தனத்தால் மக்கள் இறந்து இருக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளதாக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கோடா நகர மகாவீர் நகரில் 60 வயது பெண்மணி ஒருவர் ஒரு தெரு மாட்டினால் முட்டப்பட்டு இறந்தார் என்று  மாநில உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இது போன்ற கூடுதலான இறப்புகள் கோடாவிலும், தவுசாவிலும்  நேர்ந்துள்ளன என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற வட மாநிலங்களைப் போலவே ராஜஸ்தான கிராமங்கள் மற்றும் நகரங்களில் விவசாய நிலங்களும், காய்கறி சந்தைகளும் இத்தகைய தெருமாடுகளின் படையெடுப்புக்கு உள்ளாகியுள்ளன என்று மகேந் திரசிங் என்ற விவசாயி கூறுகிறார். உள்ளூர் மக்கள் இத்தகைய பசுக்களை தடிகளால் அடித்து விரட்ட வேண்டியதாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.

சட்டம் -ஒழுங்கு பிரச்சினைகள்

இவ்வாறு பயன்பாடு அற்ற மாடுகள் கைவிடப் பட்டு அவை கட்டுப்பாடின்றி தெருக்களிலும், வயல்களிலும் திரிவது ஒரு மிகப் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று புலந்தர்ஷார் மாவட்டம் சிக்கந்தராபாத்தைச் சேர்ந்த விவசாயியும், ஓய்வு பெற்ற காலேனியலுமான சுபாஷ் தேஷ்வால் சுட்டிக் காட்டுகிறார். ‘‘கேரட் பண்ணை வைத்து நாடு முழுவதிலும் வியாபாரம் செய்யும் எனக்கு, அனைத்து வெளி மாநிலங்களில் இருந்து வரும், இத்தகைய தெரு பசுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றிய உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தானில்  இருந்து வரும்அறிக்கைகள், பேரதிர்ச்சி அளிப்பவை யாக இருக்கின்றன. பீகார், சத்தீஷ்கர், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்தும் இது போன்ற அறிக்கைகள் வருகின்றன’’ என்று அவர் கூறுகிறார்.

(தொடரும்)

நன்றி: ‘ஃப்ரன்ட் லைன்’, 10.11.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

‘‘அரசு தவறான கொள்கையைக் கடைபிடிப்பதும், அதை மிகத் தீவிரமாக நடைமுறைப் படுத்துவதும் தங்களுக்குப் பயன்படாத வயது முதிர்ந்த பசுக் களையும், எருதுகளையும் கைவிடுவதைத் தவிர அவற்றின் உடமையாளர்களுக்கு வேறு வழி யில்லாததால், இத்தகைய ஒரு சூழல் உருவாவதற்குக் காரணமாகியது.  இத்தகைய மாடுகளை வழக்கமாக செய்வது போல, இறைச்சி கூடங்களுக்கு அனுப்ப இயலாத நிலையில், பயன்படாத வயதை மாடுகள் நாளடைவில் எட்ட எட்ட, இன்னமும் கூடுதலான பயனற்ற மாடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் செல்லும். இந்த கைவிடப்பட்ட மாட்டுப் படை கரும்பு, தானிய பயிர்களையும் காய்கறி தோட்டங்களையும் ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும். அது மட்டுமன்றி, வடஇந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பரவலான போக்கு வரத்து நெரிசலையும்,  அதிக அளவிலான விபத்துகளையும் உண்டாவதற்கு இவை காரணமாகிவிடுகின்றன. இவ்வாறு இந்த மாடுகளால் விளைந்த விபத்துகளின் எண்ணிக்கையில் பெரும்பாலானவை உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்பட்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன’’ என்று அவர் கூறுகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மிக அதிகமாக இருப்பதால்,  கைவிடப்பட்ட மாடுகளால் இம்மாநிலத்தில் ஏற்படும் அச்சுறுத்தலும், பாதிப்பும் பெரிய அளவில் உணரப்படுகிறது என்றும், கவலை தரும் இச்சூழ்நிலையில்,  அரசியல் களத்தில் பொது மக்களின் ஆதரவு பா.ஜ. கட்சிக்கு எதிராக இருப்பதாகவே தோன்றுகிறது என்றும்  தேஸ்வால் கூறினார்.

மத்திய, கிழக்கு உத்தரப் பிரதேச மாவட்டங்களில் பயணம் செய்த நமது செய்தியாளரால், தேஸ்வாலின் கருத்தும், கணிப்பும் எவ்வளவு சரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதிலும் எங்கு பார்த்தாலும் இந்த கைவிடப்பட்ட மாடுகளால் விளையும் அச்சுறுத்தல் மற்றும் சேதம் பற்றிய கதைகளே பேசப்படுகின்றன. பசுபாதுகாப்பு குறித்து  யோகி ஆதித்யநாத் மற்றும் மோடி அரசுகள் வாய்கிழிய பேசுகின்றனவே அன்றி, அதற்காகக் கள அளவில் எதனையும் அவர்கள் செய்துவிட வில்லை என்று  பசுப்பாதுகாப்புக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தொண்டர்களே கூட எங்களிடம் புகார் கூறுகின்றனர். லட்சுமிபுரி கேரி அருகில் இருக்கும் நிகாஷன் பசு பாதுகாப்பு மய்யத்தின் பொறுப்பாளர் ராம் வாதிகா, அம்மய்யத்திற்கு வரும் கைவிடப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் பலமடங்கு பெருகிவிட்டது என்றும்,  ஆனால் அதற்கு ஏற்றவாறு அரசின் ஆதரவு கிடைக்கவில்லை என்றும்,  பசுக்களின் உண்மையான தேவைகளைப் பற்றி எவருமே அறிந்திருக்கவில்லை என்றும், அனைவரும் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே பேசி வருவதாகவும், செயலில் ஒன்றும் செய்வதில்லை என்றும்,கடந்த 2 மாதங்களாக அவர்கள் சற்று நேரம் கூட உறங்க முடியவில்லை. அறுவடை முடியும் வரை இவ்வாறுதான் இருக்கப் போகிறது என்றும் கூறுகிறார்.

தானும், தனது சக விவசாயிகளும் கைவிடப்பட்ட இத்தகைய பசுக்களின் அச்சுறுத்தலில் இருந்து தங்களது பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தங்களது வயல்களில் தொடர்ந்து 24 மணி நேரமும் காவல் காக்க வேண்டியிருக்கிறது என்றும், கடந்த இரண்டு மாதங்கள் தாங்கள் உறங்கவே முடியவில்லை என்றும், அறுவடை முடியும் வரை இவ்வாறுதான் இருக்கும் என்றும் காஜிபுரா கிராம விவசாயி முகமது ஷெரீப் நம்மிடம் கூறினார். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பயிர்களை சில விவசாயிகள் இழந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். இந்தக் கதை காஜிபுராவில் மட்டுமல்ல; உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்களின் கதையு இதுதான்! இவ்வாறு தூக்கமற்ற இரவுகளும், அமைதியற்ற நாட்களாகவும்தான் உள்ளன. தங்களின் பயிர்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பெரு முயற்சிகளுக்குப் பிறகும் இத்தகைய கைவிடப்பட்ட மாடுகளால் பெரிய அளவிலான பயிர்கள் அழிந்து போனது பற்றிய அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பஹாரியா, லட்சுமிபுரி மாவட்டங்களுக்கு இடையே உள்ள கடர்னிகட் விலங்குகளின் சரணாலயத்துக்கு வந்து சேரும் கைவிடப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு அதிகரித்து உள்ளது. சரயு நதிக் கரையில் அமைந்திருக்கும் இந்த 400 ஏக்கர் பரப்பிலான சரணாலயத்தில் தங்களால் கைவிடப்பட்ட பயன்படாத மாடுகளை அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இத்தகைய மாடுகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானவையாக உயர்ந்துவிட்டன. சரணாயலத்துக்கு உள்ளே செல்வதற்கோ அல்லது அங்கிருந்து வெளியே வருவதற்கோ இப்போதெல்லாம் இந்த மாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அவை நகர்ந்து வழிவிட்டால்தான் சாலைகளில் எவரும் செல்ல முடியும். நாள்தோறும் இரவு நேரங்களில் இத்தகைய கைவிடப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை லாரிகள், வேன்களில் கொண்டுவந்து விட்டுவிட்டு செல்வதாக அருகில் உள்ள டெடியா கிராமவிவசாயி லால்ஜி கூறுகிறார். ‘‘தினமும் நூற்றுக்கணக்கான கைவிடப்பட்ட மாடுகள் சரணாலயத்துக்கு அருகே கொண்டு வந்து விடப் படுகின்றன. மாடுகளை வண்டிகளில் கொண்டு வந்து விடுவதற்கு அனுமதிப்பதற்காக பசுபாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்களுக்கு விவசாயிகள் கையூட்டும் அளிக்கின்றனர். சரணாலய நிலங்களில் பகலில் மேயும் இந்த பசுக்கள் இரவில் அருகில் உள்ள கிராமங்களின் கோதுமை மற்றும் காய்கறி  வயல்களில் மேயப் போய் விடுகின்றன. இந்த கிராம மக்கள் இது பற்றி புகார் அளித்தாலும், இவ்வாறு மாடுகள் கொண்டு வந்து சரணாலயத்தில் விடப்படுவதைத் தடுக்கவோ அல்லது அவற்றை அப்புறப் படுத்தவோ அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை’’ என்றும் லால்ஜி கூறுகிறார்.

சுற்றுச் சூழல் பாதிப்புகள்

பெரும் அளவிலான கால்நடைகளை விலங்குகளின் சரணாலயத்தில் கைவிடுவது ஒரு பெரிய சுற்றுச் சூழல் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், சுற்றுச்சூழல் இயலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடர்னிகட் சரணாலயத்தில் தற்போது இவ்வாறு நடந்து வரும் கைவிடப்படும் மாடுகளின் குவிப்பு, மோசமான பேரழிவுகளை ஏற்படுத்த இயன்ற சுற்றுச் சூழல் மீதான படையெடுப்புக்கு தக்க ஓர் எடுத்துக் காட்டாக விளங்குவதாகும் என்று லக்னோ பல்கலைக் கழக விலங்கியல் துறை பேராசிரியரும், விவசாயிகள் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தும் கல்வியாளர் மற்றும் விவசாயிகளின்அமைப்பான கிசான் ஜக்ரிதி மஞ்ச் அமைப்பின் தலைவருமான சுதிர்குமார் பன்வார் ஃப்ரன்ட் லைனிடம் தெரிவித்தார். மான்கள் போன்ற வனவிலங்குகளின் மேய்ச்சல் நிலமான சரணாலய நிலத்தை இவ்வாறு மாடுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது இப்பகுதி விலங்குகளை பெரிதும் பாதிக்கக் கூடியதாகும்.

ஒரு பிராந்தியத்தைச் சேர்ந்த கால்நடை,  விலங்குகள் மற்றொரு பிராந்தியத்தில் மாற்றி குடியேற்றப்படுவதால்,  அப் பிராந்தியத்தின் இயல்பான மற்றும் செயற்கையான சுற்றுச் சூழல் பராமரிப்பு  மற்றும் பாதுகாப்பின் மீது ஒரு தீவிரமான பாதிப்பை அது ஏற்படுத்துகிறது  என்று விலங்கியல் துறை வல்லுநர்கள் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டியுள்ளனர். ‘‘அரசின் பசு பாதுகாப்பு முயற்சிகளால் ஏற்பட்டுள்ள விளைவுகள் பற்றி அரசுக்கு தக்க ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், இப்பகுதியில் ஒரு மாபெரும் சுற்றுச் சூழல் அழிவு ஏற்படுவதை நாம் காண நேரிடக் கூடும்’’ என்று பன்வார் எச்சரித்துள்ளார்.

மிகுதியான பிரச்சார நோக்கம் கொண்டதும், சிறிதும்நாத்£னந்த அரசுகளின் பசு பாதுகாப்பு கொள்கைகள் மிகுந்த கவலை அளிப்பவையாக உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. பசுக்களால் தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் பற்றி அரசியல் மற்றும் நிர்வாகக் கோணங்களில் பகுத்தாய்வு செய்து பார்க்கும்போது,  2014 மக்களவை தேர்தலிலும், 2017 உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இந்த பசுபாதுகாப்பு தேசியக் கொள்கை பா.ஜ. கட்சிக்கு ஒரு நல்ல அரசியல் கருவியாகப் பயன்பட்டுள்ளது என்பதை தேஸ்வால் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், இந்த பசுபாதுகாப்பு தேசியம் என்பதை கண்களை மூடிக் கொண்டு அரசின் நிர்வாகக் கொள்கையாக நடைமுறைப்படுத்த இயலாது என்பதை பா.ஜ.க.வின் தலைமை கட்டாயமாக உணர்ந்திருக்க வேண்டும். மோடி மற்றும் யோகி ஆதித்யானந்த் அரசுகள் இவ்வாறு தெளிவான பார்வையற்றவர்களாக மாறி பேரழிவைத் தரும் தவறினைப் புரிந்து இருக்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையை சீர்செய்வதற்கு ஒரு புதிய திட்டத்தை மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசு கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு ஆதார் எண் அளித்து, அதன் காதுகளில் அதன் பிறந்த தேதி, விலாசம், அது தரும் பால், அதன் இனவிருத்தி மற்றும் ஆரோக்கிய நிலை பற்றிய விவரங்கள் அடங்கிய சிப்களை மாட்டிவிடுவது என்பதுதான் அந்தத் திட்டம். மாநிலம் முழுவதிலும் மேற்கொள்ளப்படக்கூடிய ஒரு மாபெரும் திட்டமாக இது நடைமுறைப்படுத்த இருப்பதாகத் தெரிகிறது. இந்த திட்டம் எவ்வாறு செயல்படப்போகிறது என்பதையும்,  பயனற்ற வயது முதிர்ந்த மாடுகளின் பராமரிப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படப் போகிறது என்பதையும்  பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று  தேஸ்வால் கூறுகிறார்.

‘‘பயன்படாத, வயது முதிர்ந்த கால்நடைகளை இறைச்சி மற்றும் தோலுக்காக வெட்டப் படும் தொட்டிகளுக்கு அனுப்புவது தடை செய்திருப்பது  அடிப்படையிலேயே தவறாக ஆகிப் போன செயல்பாடாகும். இந்த பசுபாதுகாப்பு நடைமுறைகளை இந்த ஆதார் திட்டத்தால் சரி செய்ய இயலும் என்று தோன்றவில்லை’’ என்றும் அவர்  கூறுகிறார். இந்த கைவிடப்பட்ட, முதிர்ந்த பசுக்களினால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு உண்மையான தீர்வு இந்த அடிப்படையிலான தவறு திருத்திக் கொள்ளப்பட்டு, இவற்றை வழக்கம் போல இறைச்சி, தோலுக்காக வெட்டுவதற்கு தொட்டிகளுக்கு அனுப்ப அனுமதிப்பதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால் நீண்ட காலமாக தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த பசு தேசியத்தை அவ்வளவு சுலபமாக மோடி, யோகி ஆதித்தியநாத் அரசுகள் கைவிட்டுவிடுமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள முக்கியமான கேள்வியாகும்.

(தொடரும்)

நன்றி: ‘ஃப்ரன்ட் லைன்’, 10.11.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner