எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- முக்தா தபோல்கர்

 

(பில்லி, சூனியம், மந்திர தந்திரம் போன்ற  மூடநம்பிக்கைள் தொடர்பான குற்றங்களைக் கையாளும் அளவுக்கு இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கவில்லை.)

மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு சட்டம் இந்தி யாவுக்குத் தேவை என்பதுடன், அந்தச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய விரிவான விவாதம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். எல்லா மூடநம்பிக்கைகளையும் சட்டத்தின் கட்டாயத்தினால் போக்கிவிட முடி யாது. அதற்கு மக்களிடையே மனமாற்றம் ஏற்படவேண்டும். என்றாலும், முற்றிலும் மனிதாபி மானமற்ற, மிகுந்த கொடூரமான, மக்களை ஏமாற் றிப் பணம் பறிக்கும் மூடநம்பிக்கைப் பழக்க வழக்கங்களைக் குறிப்பாகக் கையாள்வதற்கான ஒரு சட்டம் நமக்குத் தேவைதான்.

மனித உயிரை பலியிடுவது, இதர மனித நேயமற்ற, கேடு பயக்கும், பில்லி சூனிய, மந்திர தந்திரங்களைத் தடை செய்து அழிப்பதற்கான ஒரு சட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு நடை முறைப்படுத்தியுள்ளது. அதிலிருந்து நாட்டின் பிற மாநில அரசுகள் பாடம் கற்றுக் கொள்ளலாம். மகாராஷ்டிராவின்  அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியும், எனது தந்தை நரேந்திர தபோல்கரும் இத்தகைய சட்டம் ஒன்று உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று 18 ஆண்டு காலமாகப் போராடினார்கள். அத்தகைய ஒரு சட்டத்தை மதநம்பிக்கைக்கு எதிரான ஒரு சட்டம் என்று காட்டி அதனை எதிர்த்து பல குழுக்கள் வாதாடி வந்துள்ளன. அவர்களுக்கு எதிரான, சோர்விலாத ஒரு போராட்டத்தை தபோல்கர் மேற்கொள்ள வேண் டியிருந்தது.

மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிச் சுரண் டுவதற்கு எதிரான சட்டம்தான் இது  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்து மத பழக்கவழக்கங்களுக்கு எதிரான இந்தச் சட்டம் இந்து மதத்திற்கு எதிரானது என்று இந்த சட்டத்தை எதிர்த்தவர்கள் வாதாடி வந்தனர். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, இந்த சட்டத்திற்கு எதிரான இந்தக் கருத்துகள் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல் லாதவை என்று தெரிய வந்தது. அவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதை அந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

மதத்தின் பெயரால் கடைப்பிடிக்கப்படும் மனிதநேயமற்ற சில பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்ட நான் விரும்புகிறேன். எடுத்துக் காட்டாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்களது குடும்பங்களில் ஏற்பட்ட சில மரணங்களைக் கொண்டு, வெறும் சந்தேகத்தின் பெயராலேயே பல வழக்குகளில் மக்கள் கொடூரமாகத் தாக்கப் பட்டு  மற்றும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முன்னேற்றம் அடைந்தவர்கள் என்று நம்மை நாமேஅழைத்துக்கொண்டுஇத்தகையகொடூ ரமான நிகழ்ச்சிகளை நாம் மறைத்து விடு கிறோம். மகாராஷ்டிரா மாநிலமும் தன்னை ஒரு முன்னேறிய மாநிலம் என்று கூறி பெரு மைப்பட்டுக் கொள்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்ததடைச்சட்டம்நிறைவேற்றப்பட்டபிறகு,  மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்ட ஏழு நிகழ்ச்சிகள்நடந்தேறியுள்ளனஎன்றுஅறிக் கைகள்தெரிவிக்கின்றன.அவற்றில்இரண்டு நிகழ்ச்சிகளை, தக்க சமயத்தில் குறுக்கிட்டி ருந்தால், தடுத்திருக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் மனித உயிர்கள் பலியிடப்படுவது முன்ன தாகவே தடுத்து நிறுத்த முடியாது. உயிர்ப்பலி அளிப்பதற்கு முன் நடத்தப் படும் பூஜைகள், சடங்குகள் செய்வதை, எந்த ஒரு சட்டத்தினாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே இதன் காரணம்.  இப்போது அந்த பூஜைகள், சடங்குகள் எல்லாம் இந்த சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. மனித உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட பிறகுதான், இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் அது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனால், இந்த தடைச் சட்டம் மனித உயிர்கள் பலி கொடுப்பதைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் இந்த சட்டத்தினால் அந்த மாநிலத்தில் உயிர் பலி கொடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பில்லி சூனியம், மந்திர தந்திரம் மற்றும் இதரமூடநம்பிக்கைபழக்கவழக்கங்களால் இழைக்கப்படும் குற்றங்களின் மீது கவனம் எடுத்துக்கொள்ளும்அளவுக்குஇந்தியகுற்ற வியல் தண்டனைச் சட்டம் ஆற்றல் பெற்றதாக இருக்கவில்லை. பக்தனுக்கும், பூஜாரிக்கும் இடையே உள்ள உறவு ஒரு விசித்திரமான இயல்பினைக் கொண்டதாக இருப்பதாலும், பெரும்பாலும் வன்முறை கொண்டதாக இருப்ப தாலும், மனித உயிர்ப்பலியைத் தடுப்பதற்கு தனியாக ஒரு சட்டம் தேவைப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வன்முறைச் செயல்களுக்கு தண்டனை வழங்க இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் இடம் உள்ளது; ஆனால், பெண்கள் அவர்களது குடும்பத்திற்குள்ளே இருந்தே எதிர்கொள்ளும் வன்முறைச் செயல்களின் விசித்திரமான இயல்பு காரணமாக, அதற்கு தனியான சட்டம் ஒன்று தேவைப்பட்டது.

கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாத அளவுக்கு அவர்கள் ஆற் றல்மிகுந்தவர்களாகஆகிவிடுவதற்குமுன்பே அவர்களது செயல்பாடுகளை இந்த மூடநம் பிக்கை ஒழிப்புச் சட்டத்தின்மூலம் தடை செய் வது இயலக் கூடியதாக இருக்கிறது. தன்னை கடவுளின் அவதாரம் என்று அழைத்துக் கொண்ட படீல் பாபா என்ற ஒருவன் மகா ராஷ்டிரா மாநில காவல்துறையினரால் அண் மையில் கைது செய்யப்பட்டுள்ளான். சீடர்களைத் தவறாக பாலியல் ரீதியில் பயன்படுத்திய இந்த பாபா, அவ்வாறு செய்வதே அவர்களுக்கு அளிக்கப்படும் ஆசீர்வாதம் என்று  கூறினான். மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக அவர்கள் செல்வதையும் அவன் தடுத்தான். அவனைப் பின்பற்றுவதற்கான ஒரு பெரிய பக்தர்கள் கூட்டமே இருந்தது. இந்தச் சட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால், அவனைத் தடுத்துநிறுத்தியேஇருக்கமுடியாது.தங் களுக்கு அதீத ஆற்றல்கள் இருப்பதாகக் கூறிக்கொள்ளும்சாமியார்களைப்பற்றிவிசா ரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வ தற்கென்றே மகாராஷ்டிரா மாநிலத்தின் இந் தச் சட்டத்தில் ஒரு தனிப் பிரிவே உள்ளது. சட்டத்தின் கண்களுக்கு முன்னால் ஒருமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்று காட்டப்பட்டு விட்டால், போலிச் சாமியார்களை வெளிப் படையாக ஆதரிப்பதற்கு எவராலும் இயலாமல் போய்விடும்.

நன்றி: ‘தி இந்து', 24.11.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner