எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- நிலஞ்சன் மகாபோபாத்தியாயா

கடந்த வியாழக்கிழமை அன்று நடந்தேறிய இரு நிகழ்வுகள், குஜராத் சட்டமன்றத் தேர்தல் பற்றி  மாறுபட்ட அறிகுறிகளை சுட்டிக் காட்டின. முதலாவது நிகழ்வு அன்று மாலை  நிகழ்ந்தது. நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியின் பின்னடைவில் மீட்சியாக ஒரு சிறிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டும் புள்ளி விவரங்களை இந்தியாவின் தலை மைப் புள்ளியியலாளரும்,  புள்ளியியல் மற்றும் செயல் திட்ட நடைமுறைத் துறையின் செயலாளருமான டி.சி.ஏ. ஆனந்த் வெளியிட்டார். அண்மையில் கிடைத்த புள்ளி விவரங்கள் ஒரு திருப்பப் போக்கை சுட்டிக் காட்டுவதாக அவர் அறிவித்தார். அப்போது வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி,  ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் ஆகிய இரண்டு முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களின் பாதிப்பை நாம் கடந்து விட்டதை சுட்டிக் காட்டுவனவாக இந்த புள்ளிவிவரங்கள் இருக்கக்கூடும்’’ என்று கூறினார்.  மூத்த காங்கிரசு தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான திரு. ப.சிதம்பரமும் இந்த மீட்சியைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்திருந்த போதிலும், எச்சரிக்கையுடன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறினார். அவ்வாறு கண்காணிப்புடன் செயல்படுவது என்பது அரசியல் ரீதியாக, அதுவும் தனது முதுகுக்குப் பின்னால் ஒரு சுவர் இருக்கும்  பா.ஜ.க. போன்ற ஒரு கட்சிக்கு, பொருத்தம் இல்லாதது ஆகும்.

காக்கைகள் போல சத்தம் எழுப்பிக் கொண்டிருப்ப வர்களின் வாய்களை அண்மைக் கால ஜிடிபி புள்ளி  விவரங்கள் அடைத்துவிடும் என்று குஜராத் முதல்வர் விஜய் ருபானி கூறியுள்ளார். திரு.ஆனந்த் அளித்த புள்ளி விவரங்களை, அரசுக்கு அளிக்கப்பட்ட ஒரு நற்சான்றிதழ் போலவே, எஞ்சியுள்ள சட்ட மன்றத் தேர்தல் பிரச்சார காலம் முழுவதும் காட்டி பிரச்சாரம் செய்யும் தங்களது நோக்கத்தை மறைத்து வைக்காமல் அவர் வெளிப்படுத்தினார். தற்போதைய பொருளாதார வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுள்ள மீட்சிக்கு முன்னர் ஒன்றுக்கும் மேற்பட்ட காலாண்டுகளில் வீழ்ச்சி அடைந்திருந்த காரணத்தால், இந்த பொருளாதார நிலை உறுதியான  வளர்ச்சிப் போக்கை எட்டிவிட்டது என்ற உணர்வு மக்களிடம் ஏற்படுவதற்கு,  அடுத்த 3 அல்லது 4 காலாண்டு காலம்  தேவைப்படும் என்ற காரணத்தை ஏற்றுக் கொள்ள எந்த பா.ஜ.க. தலைவரும் விரும்பவில்லை.

மேலும் விவரமாக சுட்டிக்காட்டுவதாக இருக்கும் இரண்டாவது நிகழ்வு,  பிரதமர் மோடியால் காலையில் வெளியிடப்பட்ட அறிவிப்பாகும். ‘‘நாட்டில் நான் மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கும், நம் நாட்டை நான் விரும்பும் திசைக்குக் கொண்டு செல்வதற்கும் அரசியலில் நான் ஒரு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நான் அறிந்துதான் இருக்கிறேன்; அந்த விலையைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்’’  என்று கூறிய அவர்,  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு, அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு விட்டுச் சென்றுள்ள  நிதிச் சுமைகள் பற்றி பேசிக் கொண்டே போனார்.   தயாரிக் கப்பட்ட பேச்சை அவர் படித்து வரும் நிலையில்,  விட்டுப் போனதை எடுத்துக் கொடுப்பவர் அருகில் இருக்கும் சூழலில்,  அரைகுறையான அறிவிப்புகளை  வெளியிடுபவர் அல்ல மோடி என்பது அனைவரும் நன்றாக அறிந்த ஒன்றேயாகும். குஜராத் மாநிலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடிப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு, இவ்வாறு ‘அரசியல் விலை கொடுக்க வேண்டியிருப்பது’ பற்றி அவர் ஏன் பேசி னார்? குஜராத் தேர்தல் கள நிலவரம் தனக்கு எதிராகத் திரும்பி விட்டது என்பதையும்,  முன்பு தனக்கு இருந்தது போன்ற மக்கள் ஆதரவு இப்போது இல்லை என்பதையும் உணர்ந்துதான் அவர் அவ்வாறு பேசி இருக்கிறாரா? தான் அளித்த உறுதிமொழிகளை எல்லாம் நிறைவேற்றாமல் போனதற்காக மன்னிப்பு கேட்கும் ஓர் அரசியல் தலைவரின் வழக்கமான அறிவிப்பைப் போன்றதா அது?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மூலம் வாக்கு எண்ணும் பணி மேற்கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தேர்தல் முடிவுகள் பற்றி உறுதியாக எதனையும் கூற முடியாது என்ற போதிலும், தேர்தல் களத்து உணர்வின்படி,  பெரிய அளவில் நம்பிக்கை இழந்துள்ள நிலையையே பா.ஜ.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாத காலத்துக்கு முன்பாக, மிகமிக எளிதாக பா.ஜ.க.வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த குஜராத் சட்டமன்றத் தேர்தல் நிலவரம், தற்போது  தலை கீழாக மாறி, இத் தேர்தல் ஓர் அசாதார ணமான தேர்தலாகவே ஆகிவிட்டது. மாநிலமெங்கும் பா.ஜ.கட்சிக்கு எதிராகப் பேசுவதற்கு மக்கள் துணிந்து விட்டார்கள். 2012, 2014 தேர்தல் களின்போது, மோடி நடந்த மண்ணை வணங்குவதற்கும் கூட மக்களில் பலரும் தயாராகவே இருந்தனர். இன்றோ, அந்தக் கடவுள் பீடத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, குறிப் பிடப்பட இயலாத அளவுக்கான அடைமொழிகளை அவரது பெயருடன் சேர்த்து அளிக்க அதே மக்கள்  தயாராக ஆகிவிட்டனர். பல சமூக மற்றும் பிராந்தியக் குழுக்களின் ஒன்றிணைந்த மனநிறைவின்மை பா.ஜ. கட்சியைத் தோற்கடிக்க இன்னமும் ஒன்று திரள வில்லை. என்றாலும், பா.ஜ.கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவு, அகண்ட அரசியல் பின்விளைவுகளை ஏற்படுத்தப் போவது மட்டும் மிக நன்றாகத் தோன்றுவதாக உள்ளது.

இந்த பாதிப்பு,  2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள தேர்தல்களில் நிச்சயமாக உணரப்படும்.  இவற்றில் பா.ஜ.க.வின் கோட்டைகளாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாவட்டங்களும் அடங்கும். இம் மாநிலங்களில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி பா.ஜ.க. என்பதால், குஜராத்தில் ஏற்பட்ட அனுபவங் களைப் போன்றவை அம்மாநிலங்களிலும் கிடைக்கு மானால்,  அதனுடன் சவால் விடுபவர்களுடன் ஒப் பிட்டுப் பார்க்கும்போது,  ஒரு கோட்டையைக்கூட பாதுகாத்து தக்க வைத்துக் கொள்வது பா.ஜ.கட்சிக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.கட்சிக்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்குக் காரணமே, தாங்கள் கூறுவது எதுவாக இருந்தாலும் மக்கள் நம்பி ஏற்றுக் கொள் வார்கள் என்று கருதி ஒரு பிராந்திய மக்களின் நலன் களையே ஒட்டு மொத்தமாக உதாசீனம் செய்து விட்டதுதான்.

ஒரு நீண்ட காலத்துக்கு பத்திரிகைகளுக்கான தலைப்புச் செய்திகளை உருவாக்கிய பிறகு, பா.ஜ.க. தலைவர்கள் தங்களது சொந்த சுழல் மருத்துவர்களை நம்பத் தொடங்கிவிட்டனர். 2015 ஆம் ஆண்டின் இடைக் காலத்தில் இருந்து இந்த மாநிலத்தில் அமைதியின்மைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கிவிட்டன.  கட்சிக்குள் இருக்கும் குழுச் சண் டைகளும் இதற்கு ஒரு காரணமாக இருந்தன. பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்களின் ஆதரவு இன்றி படிதார்களின் போராட்டம் இந்த அளவுக்கு பரவ லானதாக ஆகி இருந்திருக்க முடியாது. மலை போல குவிந்து வரும் பிரச்சினைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்,  மாநிலத் தலைவர்களும், அமித் ஷாவும் கூட ஆணவம் கொண்டவர்களாக இருந் தனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மற்றவர்களை மதிக்கும் பண்பற்றவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் எப்படியிருக்கும் என்பதற்கு மிகச் சரியான எடுத்துக் காட்டாக அவர்கள் விளங்கினார்கள். நவம்பர் 27 முதல் நரேந்திர மோடி ஒரு சூறாவளி தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முன்பு எப்போதும் மேற்கொள்ளப்படாத இத்தகைய பிரச்சாரம் 33 மாவட்டங்களில் உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரை  சென்றடைவதை நோக்கமாகக் கொண்டது. தனது 35 தேர்தல் பிரச்சாரப் பேருரை ஒவ்வொன்றின் மூலமும்  அய்ந்து அல்லது ஆறு தொகுதி மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டது இந்தத் திட்டம்.  தேர்தல் தோல்வி என்ற சங்கடத்தில் இருந்து பா.ஜ.கட்சியைக் காப்பாற்ற இயன்றவர் மோடி ஒருவர்தான் என்று பா.ஜ.கட்சியினர் கருதியதுதான், மோடி இந்த அளவுக்கு அடிமட்டம் வரை இறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்ய நேர்ந்ததற்கான காரணமாகும். குறிப்பிடத்தக்க ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட் டாயத்தில் பா.ஜ.க. உள்ளது. இல்லாவிட்டால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. பெரு வெற்றி பெற்ற சில மாத காலத்திற்குள் ஏற்பட இயன்ற குஜராத் தோல்வி, மோடியின் கவர்ச்சி குறைந்துவிட்டது என்ற தோற்றத்தை  தோற்றுவித்துவிடும்.

இதுவரை கூறியது எல்லாம் பா.ஜ.க. முகாமின் பின்னடைவுகளைப் பற்றிய கதைகள்  மட்டும்தான்.  காங்கிரசு கட்சியும் அதன் தலைமையும் அமைதியான முறையில் செல்வாக்கு பெற்று வளர்ந்து வருவதை  பா.ஜ.கட்சியினர் பார்த்து வருகின்றனர். பல தேர்தல் களுக்குப் பிறகு, குறிப்பாக 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, காங்கிரசு வேட்பாளராக இடம் பெறுவதற்கு இப்போது பெருத்த போட்டி நிலவியது. உள்ளூர் காங்கிரசு தொண்டர்கள் பா.ஜ.க. தொண்டர் களுக்கு இணையான ஆர்வத்துடன் தேர்தல் பணி களை மேற்கொண்டு வருகின்றனர். 182 தொகுதி களுக்கும் காங்கிரசு கட்சி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது. கட்சி கட்டமைப்பு மற்றும் மனித ஆற்றல் என்ற அளவில் பா.ஜ. கட்சியை விட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் இயந்திரம் சிறியதாக இருந்தாலும்,  கட்சியினர் புத்துணர்வு பெற்று பணி யாற்றுவது நன்றாகவே தெரிகிறது. இக் கூட்டணியின் எதிர்கால முன்னேற்றம், தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக மக்களிடமிருந்து வரும் தீர்ப்பினை ஒட்டியே அமையும்.

நன்றி: ‘‘தி டெக்கான் கிரானிகிள்’’, 02.12.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner