எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- எஸ். நிஹல்சிங்

பிராந்திய வெறி என்னும் பெரும் களரியை பெரு விருப்பத்துடன் கிளறி விட்டுக் கொண்டிருப்பவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என்பதை நம்புவதற்கு உங்களை நீங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். தனது குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசியது வெடிகுண்டு போன்றிருந்தது .

நாட்டிற்குத் தலைமை தாங்கி இருக்கும் ஒரு தலைவர் என்ற மாபெரும் பொறுப்பில் அவர் இருந்த போதிலும், நாட்டின் பகுதிகளை ஒற்றுமைப்படுத்துவதற்கு முன்பாக, நாட்டின் பிரிவினைக்கு ஊக்கம் அளிப்பது விசித்திரமான ராஜதந்திரமாக இருக்கிறது. தனது பா.ஜ.க. இந்த மாநிலத் தில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றத்தின் காரணமாகவே, இத்தகைய தாழ்ந்ததொரு நிலைக்கு அவர் இறங்கி வந்துவிட்டார்.

குஜராத்தில் மோடிக்கு மிகப் பெரிய எதிரியாக விளங்குவது காங்கிரசு கட்சிதான் என்பதால், அதன் முகத்தில் அவர் கரி பூச  வேண்டும் என்றும், சர்தார் வல்ல பாய் படேல், மொரார்ஜி தேசாய் என்ற இரு மாபெரும் குஜராத் புதல்வர்களுக்கு உரிய நியாயம் சேர்ப்பதாக  நடந்து கொள்ளவில்லை என்றும், அவர் களது அருங் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அனுமதி அளிக்க மறுத்துவிட்டார் என்றும் மேனாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது குற்றம் சாட்டுவதற்கு நவீன இந்திய வரலாற்றை மோடி தோண்டிக் கொண்டு இருக்கிறார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த இந்திரா காந்தி தன்னைச் சுற்றியிருந்த கெட்ட வாடையில் இருந்து பாதுகாத்துக் கொள் வதற்காக தனது வாயையும், மூக்கையும் கைக்குட்டையால் பொத்தி மூடி வைத் திருந்தார் என்றும் மோடி பேசியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதெல் லாம் கால ஓட்டத்தில் மக்களால் மறந்து போக இயன்ற அளவுக்கு தற்காலிக மானவை என்று மோடியும், அவரது கட்சியினரும் நம்பியுள்ளனர். ஆனால், தேசிய நலன்களுக்குக் கேடு விளைவிக்கத்தக்க, மனதில் காயங்களை ஏற்படுத்தும் அறிவிப்புகளை வெளியிடும் பணியில் நாட்டின் பிரதமரே ஈடுபட்டிருக்கும்போது, அவை மக்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிடப்படு வதோ, காலப் போக்கில் மறைந்து விடுவதோ இல்லை.

ஜூர வேகத்தில் பிதற்றுவது போன்று பா.ஜ.க. மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் நோக்கம் என்ன என்பது வெளிப்படையாக நன்றாக தெரிவதாகவே உள்ளது. பா.ஜ.கட்சியின் முன்னுரிமை இருமுகம் கொண்டது. மாநிலங்களவையில் பெரும் பான்மையைப் பெற்று அரசமைப்பு சட்டத்தை, மேலும் எதேச்சதிகாரம் கொண்டதாக  திருத்துவதுதான் அவை. ஆனால், இந்த நோக்கங்களை எட்டுவதற்கான ஏணிப் படியே அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவதுதான் என்பதை பா.ஜ.க. உணர்ந்துள்ளது. அதற்கான வாய்ப்புகள் இல்லாத இடங்களில், மற்ற கட்சி களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அது முயலும்.

2014 மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக பா.ஜ.கட்சியை அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததன் மூலம் மோடி தனது ஆற்றலைக் காட்டிவிட்டார்.  ஹோலோகிராம் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு வந்தது, மாநில, மாவட்ட, நகர அளவில் தேர்தல் பிரச்சாரத்தை ஒருங் கிணைப்பதற்காக கணினி ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வெற்றி பெறப்பட்டது.

எவ்வளவு அசிங்கமான நடைமுறைகளைப் பின் பற்றியும், எந்த விதமான தந்திரத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தியும்கூட தேர்தலில் வெற்றி பெறுவது நியாய மானதே  என்பதையே தங்களது கொள்கையாக பா.ஜ.க. கொண்டுள்ளது.  மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, காங்கிரசும் மற்ற எதிர்கட்சிகளும் மோடியின் சூத்திரத்தைப் பயன்படுத்த முயன்று வரு கின்றனர். என்றாலும், எதிர்கட்சிகளிடம் இல்லாத ஒரு சொத்து பா.ஜ.க.விடம் உள்ளது. மாநில சட்டமன்றத் தேர் தல்களோ அல்லது மக்களவைத் தேர்தலோ நடைபெறும் நேரங்களில்,  நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் நுழைந்து சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய எண்ணற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படைகளுக்கு எதிர் கட்சி களால் ஈடு கொடுக்க முடியாது.

இந்திய தலைமை நீதிபதியுடன் அண்மையில் தான் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில்,  அரசமைப்பு சட்டப்படியான ஆட்சியின் பல்வேறுபட்ட துறைகளின் செயல்பாடுகளுக்கான உரிய இடம் ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும் என்று மோடி ஆலோசனை தெரிவித்துள்ளார். உண்மைதான். ஆனால், நீதித் துறையின் பல்வேறுபட்ட பணிகளுக்கு இடையே உள்ள மற்றொரு வேலை, தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை நிர்வாகம் தவ றாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும் என்பதுதான் அரசமைப்பு சட்டத்தின் நோக்கம். உச்ச நீதிமன்றம் இன்னமும் மிகமிக உயர்வாகவே மதிக்கப் பட்டு வருகிறது.

இதில் உள்ள மோசமான கதையின் ஒரு பகுதி என்ன வென்றால், தனது நியாயமான செயல்பாடுகளுக்காகப் புகழ் பெற்றிருந்த தேர்தல் ஆணையம், பா.ஜ.கட்சியை அதன் விருப்பம் போல செயல்பட அனுமதித்தது,  குஜராத் மாநிலத்திற்குத் தேவையான திட்டங்களையெல் லாம் அறிவிப்பதற்கு போதுமான கால அவகாசம் அளித்தது ஆகியவற்றின் மூலம், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திக் கொண்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் குஜராத் மாநிலத்திற்கு நியமிக்கப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரி  என்பது இந்த முடிவுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டதில் செல்வாக்கு பெற்றிருந் ததோ இல்லையோ தெரியாது; எப்படி இருந்தாலும், குஜராத் மாநிலத்திற்கு நியமிக்கப்பட்ட அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் டில்லி பிரதமர் அலுவலகத்தில் மிகமிக முக்கியமான பதவிகளை வகித்து வருகின்றனர் என்பது மட்டும் உண்மை.

புகழ் பெற்ற இந்திய தேர்தல் நடைமுறையின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் தாக்குதலே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தப்பட இயலும் என்ற உணர்வு எதிர் கட்சிகளிடம் வளர்ந்து கொண்டே வருவதுதான். இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.கட்சிக்கு ஒரு மாபெரும் பரிசு கிடைத்துள்ளது. இதுவரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதன் மூலம்,  பயன்படுத்தப் படாமல் போன மிச்சமாகி இருக்கும்  காகித மலைகளை கற்பனை செய்து பாருங்கள். எனவே, இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்த விதத்திலும் தவறாகப் பயன்படுத்த இயலாதவை, முழுக்க முழுக்க நம்பகத் தன்மை கொண்டவை என்பதை அனைத்துக் கட்சியின ருக்கும் எடுத்துக் காட்டி அவர்களை மனநிறைவடையச் செய்வது தேர்தல் ஆணையத்தின் முக்கியமான கடமையாகும்.

மதச் சார்பற்ற ஒரு நாடு என்ற நிலையில் இருந்து, இந்து மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஒரு நாடாக இந்தியா மாற்றம் பெற்று வரும் நிலையில்,  அமைதியற்ற முறையில் கிளர்ச்சிகள் நடைபெற்று வரும் ஓர் அகண்ட உலகில், கவலை தரக்கூடிய போக்குகள் பல ஒரு நாட்டில் இருக்கக்கூடும். ஒரு சில காலத்துக்கு முன்னர் உலகில் பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில்,   உலகை நவீன பொருளாதார மயமாக ஆக்கும்  செயல்பாடுகளில் சோர்வடைந்து போயிருக்கும் வளர்ந்த நாடுகள், தேசிய பிரச்சினைகளுக்கு முக்கியத் துவம் அளிக்கும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டி ருப்பதுவே, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே  வளர்ந்து வரும் ஒரு புதிய சவாலாக விளங்குகிறது. இந்த நேரம்தான் இந்தியா ஒற்றுமைப்படுத்தப்பட்டு பலப்படுத் தப்பட வேண்டிய நேரமும் ஆகும்.

தேர்தல்களில் வெற்றி பெறும் பா.ஜ.கட்சியின் ஆற்றலைக் கருத்தில் கொண்டு, சங் பரிவாரத் தலைமை யின் முதன்மையான, முக்கியமான பணியே,  அமைதி யாக உட்கார்ந்து, நாட்டு நலன்களை விட ஹிந்து இந்தியாவை கட்டமைக்கும் நோக்கம் பெரிதா என்ற பரிசீலனையை மேற்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நோக்கங்களுமே ஒன்றுதான் என்று சங் பரிவாரம் வாதாடக் கூடும். நாட்டு மக்கள் தொகையின் கலவையைப் பற்றி கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இரண்டும் ஒன்றே என்று கூறுவது ஒரு  மாபெரும் தவறாகும்.

இதனால் எழும் கேள்வியே பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான். ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஆற்றலை யும், தனது ஆற்றலையும் சோதனை செய்து பார்க்கும் நிலையிலேயே மோடி இன்னமும் இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் வளர்க்கப்பட்டவர் அவர் என்பதால்,  ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மதிப்பை நன்கு அறிந்தி ருப்பவர் ஆவார். இத்தகைய உறுதியான, துணிவான ஒரு முடிவை மேற்கொள்வ தற்கு எதிர்கட்சிகளும் உதவ இயலும்.

அகண்ட உலகுடன் ஒப்பிடும் அளவுக்கு நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும், சுதந்திரத்தை உருவாக்கு வதில் கிடைக்கும் கொடைகளில், ஒன் றாகும். தனது ராணுவ பலம் மற்றும் செல்வ வளம் ஆகியவற்றைக் கொண்டு, "அமெரிக்காவுக்கே முன்னுரிமை" என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கையால்  தன்னுள் துணிவு கொண்ட தாகத் தோன்றும் ஒரு காலகட்டத்தில் ஒரு 'சூப்பர் பவரால்' உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்க இயலலாம்.  ஆனால், பிராந்தியத்திலும், உலகிலும் வளத்தையும், நியாயமான செல்வாக்கையும் பெற விரும்பும் ஒரு நாட்டில்,  இந்தியா என்னும் கோட்பாட்டை மாற்றுவதற்கு அளிக்கப்படும் முன் னுரிமை பேரழிவை ஏற்படுத்துவதே ஆகும்.

நாட்டின் அடிப்படை அயல்நாட்டுக் கொள்கை இலக்குகளைப் பின்பற்றுவதில் மோடி தனது கற்பனைத் திறனைக் காட்டியுள்ளார்.  டிரம்புடனான உறவை மோடி மிகமிக நன்றாகவே வைத்திருக்கிறார்.  அதே அளவில் ரஷ்யாவுடனான உறவைத் தொடர்ந்து வைத்திருக்கவும் செய்கிறார். தன்னை ஒரு சூப்பர் பவர் என்று சீனா அறிவித்துக் கொள்வதற்கு எந்த விதமான பதிலை அளிக்கலாம் என்பதை புதுடில்லி சோர்வுடன் கவனித்து வருகிறது.

ராகுல் காந்தியின் கிண்டலுக்கு மாறாக, தனது வழியில் பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரீபை  சந்தித்த மோடியின் ராஜதந்திரம் சரியான பாதையில் செல்வதாக இருப்பதே என்பதை ,  தேர்தல் பிரச்சார நேரத்துக் கேள்வி ஒன்றுக்கு மோடி அளித்த  சாதுர்யமான பதில் காட்டுகிறது. தலைவர்கள் மேற்கொள்ளும் அனைத்து ராஜதந்திர முயற்சிகளுமே வெற்றி பெற்றுவிடுவதில்லை.

நன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 04-12-2017

தமிழில் : த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner