எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- கவுதம் பாடியா

சொராபுதின் ஷெயிக்,  துளசிராம் பிரஜாபதி ஆகியோ ரின் போலி என்கவுன்ட்டர் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த புதன் கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது, நீதி மன்ற நடவடிக்கைகளை பத்திரிகைகளில் வெளியிடுவதற்குத் தடை விதித்து ஓர் ஆணை நீதி மன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களது வழக்குரைஞர்களின் வேண்டு கோளின்படி பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான்,  தற்போதைய உத்தரப்பிரதேச முதல்வராக உள்ள யோகி ஆதித்தியாநாத், 2017 ஆம் ஆண்டில் கோரக்பூர் தொகுதி மக்களவை  உறுப்பினராக இருந்தபோது, பிற மதத்தினர் மீதான வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசியது பற்றிய குற்றச்சாட்டு தொடர்பாக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில், நீதிமன்ற நடவடிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுவதற்கான இது போன்ற தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வளர்ந்து வரும் போக்கு

இந்த இரு நிகழ்ச்சிகளும், பரந்த எல்லைகளில், பேரச்சத்தை விளைவிக்க இயன்ற இத்தகைய நீதிமன்ற தணிக்கை விதிக்கும் போக்கு வளர்ந்து வருவதையே காட்டுகின்றன. தேசத் துரோக குற்றச்சாட்டு அரசமைப்பு சட்டப்படி செல்லத் தக்கது என்று 1962 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது முதற்கொண்டு,  மான இழப்பீட்டு குற்றவியல் வழக்குக்கு 2016 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது வரை, பேச்சு சுதந்திரத்தின் மீது இந்திய நீதித்துறை ஒரு வரலாற்று ரீதியான எதிர்மறை உணர்வையே பிரதிபலித்து வருகிறது. பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்  அரசுகளின் சட் டங்கள் அரசமைப்பு சட்ட உரிமைகளை மீறுவதாக உள்ளன என்று அறிவிக்கக் கோரப்பட்ட மனுக்களை நிராகரிப்பதுடன் நில்லாமல்,  நீதித் துறை அண்மைக் கால மாக அதையும் தாண்டி செயல்படுவதற்குத் தொடங்கி யுள்ளது.  அரசமைப்பு சட்ட எல்லைகளைத் தாண்டிச் சென்றும் கூட, அது தீவிரமான தணிக்கை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது; ஒரு பொருள் பற்றி எந்த ஒரு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமும் இல்லாத நிலையிலும்கூட,  தன்னிச்சையாக பேச்சு சுதந்திரத்தை அது தடை செய்யத் தொடங்கியுள்ளது. ‘ஜாலி எல்எல்பி 2' என்ற விமர்சனத் திரைப்படத்தில் காட்சிகள் வெட்டப் படுவதைப் பரிந்துரைக்கவென்றே ஒரு குழுவை மும்பை உயர்நீதிமன்றம் அண்மையில் அமைத்தது, இந்திய  விளம்பரத் தரக் கவுன்சிலால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விளக்கங்களையே ஆண்கள் கருத்தடை உரைப் பெட்டிகள் மீது அச்சிடவேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது, எந்த ஒரு திரைப்படத்தையும் துவங்கும் முன் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது போன்ற எண்ணற்ற அண்மைக்கால எடுத்துக் காட்டுகள் இதற்கு உள்ளன.

என்றாலும், ஜனநாயக அரசாட்சி நடைமுறையின் இதயத்தை அவை தாக்குவதாக இருப்பதால்,   மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற  மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத் தடை ஆணைகள் குறிப்பிடத்தக்க அளவில் தீவிரமும், முக்கியத்துவமும் வாய்ந்தவை.  அரசமைப்பு சட்டப்படி அமைக்கப்படும் நீதிமன்றங்களின் வேலை நீதி வழங்குவதுதான். வெளிப்படையானதாக, ஒளிவு மறைவு  அற்றதாக, திறந்ததாக, அனைத்துக்கும் மேலாக பொதுமக்கள் அறியத் தக்கதாக ஒரு நீதித் துறை நடைமுறை  இருக்க வேண்டும் என்று மக்களாட்சி செயல்பாட்டு நடைமுறை ஒன்றுக்கு விளக்கம் அளிக் கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரங்கள், அவ்வப்போது நடைபெறும் தேர்தல் முடிவுகளில் இருந்தோ அல்லது பொது மக்களின் ஒப்புதலில் இருந்தோ பெறப்படுபவை அல்ல; அரசமைப்பு சட்டம் மற்றும் இதர சட்டங்களின் பால் அவர்கள் காட்டும் நேர்மை, உண்மை மற்றும் விசுவாசத்தில் இருந்தும்,   நியாயத்துக்கு சட்டப்படியான விளக்கம் அளிக்க இயன்ற அவர்களது ஆற்றல் மற்றும் தரத்தில்  இருந்தும்  பெறப்படுபவையாகும் இவை. இக்காரணங்களால்தான் ‘‘ரகசியமான நீதித்துறை விசாரணை’’ என்பது மத்திய கால இங்கிலாந்து நாட்டின் நட்சத்திர வளாகத்தில் நடைபெற்ற  பழிசேர்த்த வழக்குகளை நமது நினைவுக்குக் கொண்டு வருகின்றன. மாபெரும் ஆங்கிலேய நீதிபதியான டிப்லாக் பிரபு அப்போது கூறியதாவது:

‘‘நீதிமன்றங்கள் எத்தகைய வழிகளில் நடந்து கொள்கின்றன என்பது பொதுமக்களின் கண்கள், காது களில் இருந்து மறைக்கப்பட இயலாமல் போவது  என்பது,  நீதிமன்ற யதேச்சதிகாரத்துக்கு எதிராகவோ அல்லது  வழக்கமாக இல்லாத தனித்தன்மை கொண்ட பண்புக்கோ  பாதுகாப்பு அளிப்பதாக இருப்பதுடன், நீதி பரிபாலனத் துறையின் மீதான மக்களின் நம்பிக்கையையும் நிலை நிறுத்துகிறது.’’

எவ்வாறாயினும், மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்றமும் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றமும் இவ்வாறு  தடை ஆணைகளைப் பிறப்பிப்பதற்கே உச்ச நீதிமன்றமும் ஒரு காரணமாக, தூண்டுதலாக இருந்துள்ளது என்பதே இழப்புக் கேடானதாகும். (இத்தகைய தடை ஆணையைப் பிறப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்றத்திற்கு உள்ளதா என்பதே கேள்விக்கு உட்பட்டதாக இருந்தாலும், அதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை வாதத்துக்கேனும் நாம் ஒப்புக் கொள்வோம்.) சில குறிப்பிட்ட வழக்குகளில், நீதிமன்ற நடவடிக்கைகளை பத்திரிகைச் செய்தியாக வெளியிடுவதற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே 2012 இல் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. பேச்சு சுதந்திரம், நியாயமான விசாரணை நடத்தப்படுவது என்ற இரு உரிமைகளுக்கு இடையேயான சமனத்தன்மையை உருவாக்குவது என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சினையை உச்சநீதி மன்றம் வடிவமைத்துவிட்டது. மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம் சில நேரங்களில் நியாயமான விசாரணை நடத்தப்படுவதைத்தடுத்துவிடும்என்பதைக்கண்டு,  நியாயமான கால அளவுக்கும், தேவையான அளவுக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் வெளியிடப் படுவதற்கு முன் கட்டுப்பாடுகளை நீதிமன்றங்கள் விதிக் கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

என்றாலும், இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன.   ஜூரி நடைமுறை உள்ள காலங்களில், போதுமான சட்டப் பயிற்சி பெற்றிராத ஜூரிகளிடையே, ஒருவர் குற்றவாளியா அல்லவா என்பதை முடிவு செய்வதில் இத்தகைய வழக்குகள் பற்றிய ஊடக விசாரணைகள், செய்திகள் ஒரு தலைசார்பான எண்ணத்தை ஏற் படுத்திவிடும் என்பதால், தேவையற்ற செய்திகள் அவர்களது முடிவு மீது செல்வாக்கு செலுத்தி விடாமல் தடுப்பது அவசியம் என்பது முதலாவது. இந்த ஜூரிகள் நீதிவிசாரணை நடைமுறை நமது நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே ஒழிக்கப்பட்டு விடப்பட்டதால், இப்போதெல்லாம் நீதிபதிகளே வழக் குகளைவிசாரித்துதீர்ப்புஅளித்துவிடுகின்றனர்.நீதிபதிகள் அந்தப் பெயருக்கான விளக்கத்துக்கு ஏற்றபடி, வழக்கு விசாரணையில் சட்டத்தைப் பயன் படுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது மட்டுமல் லாமல்,  நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்து  எத்தகைய பொதுமக்களின் கூச்சல் வந்தாலும், அவற்றைக் கருத்தில் கொள்ளாமல், சட்டத்தை நியாயாமாக பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சியும், மனநிலையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்,  முரண்பட்ட பிரச்சினைகளை ஆக்கபூர்வ மாக அணுகி முடிவு  எடுப்பதற்குத் தேவையான நீதித்துறை ஆற்றலே அதனிடம் இல்லை என்பதை, நியாயமான விசாரணை தேவை என்ற வாதம், காட்டிக் கொடுத்து விடுகிறது.

இரண்டாவதாகவும், முக்கியமானதாகவும் இருப்பது, இத்தகைய வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை வெளியிடுவதன்மீது நீதிமன்றங்கள் விதிக்க இயன்ற தடை எத்தகைய வழக்குகளில், எவ்வளவு கால அளவுக்கு விதிக்கப்படலாம் என்று வரையறைப்படுத்த உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது; ‘‘தேவையான அளவுக்கு’’ ‘‘போதுமான காலத்துக்கு’’ என்ற பொதுவான சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.  யதேச்சதிகாரமான முறையில், ஒட்டு மொத்தமாக செய்தி வெளியிடுவதைத் தடை செய்வதற்கான வாய்ப்புகளை நீதிமன்றங்களுக்கு இது வழங்கிவிடுவதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொதுமக்கள் அறிந்து கொண்டு, அவைபற்றி செய் யும் விமர்சனங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் உதவுகிறது. ஊடக மற்றும் சிவில் உரிமை வழக்குரைஞர் அபர் குப்தா அந்த நேரத்தில்  ‘‘மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய அளவில் குழப்பம் கொண்டதாகவும்,  சட்டத்தையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துவதாகவும் இந்த தீர்ப்பு இருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல, இத்தகைய தடை விதிக்க வேண்டும் என்று ரிட் மனு தாக்கல் செய்யும் அளவுக்கு இந்த தடை செய்யும் நடைமுறை சென்றுவிடும்’’ என்று கூறினார். இவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது என்பதை, அண்மைக் கால மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற  மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத் தடை ஆணைகள் சுட்டிக் காட்டுகின்றன.

நீதிமன்ற நடவடிக்கைகளை ஊடகச் செய்திகள் தவறாகவே வெளியிடுகின்றன என்ற வாதமும், நல்ல தலைப்புச் செய்தி தரவேண்டும் என்பதற்காக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் துண்டு துண்டாக எடுத்து பொருத்தமற்ற  இடங்களில் பயன் படுத்தப்படுகின்றன என்ற வாதமும், சில நேரங்களில் ஒட்டு மொத்த செய்திகளுமே தவறாக அளிக்கப்படுகின்றன என்ற வாதமும் பெரும்பாலான நேரங்களில் முன் வைக்கப்படுகிறது. இந்தக் காரணத்தைத்தான் அலகா பாத் உயர்நீதிமன்றம் தனது தடை ஆணையை நியா யப்படுத்துவதற்குக் கூறியது என்றாலும்,  அவ்வாறு தவறாக செய்திகள் வெளியிடப்பட்டது பற்றிய எந்த ஒரு எடுத்துக் காட்டையும்  நீதிமன்றம் சுட்டிக் காட்டவில்லை. எவ்வாறாயினும், தவறாக செய்திகள் வெளியிடப்படுவதைக் கையாள்வதற்கு  பல சட்டங்களும், குறிப்பாக நீதிமன்றங்கள் பயன்படுத்துவதற்கு சற்றும் கூச்சப்படாத  நீதிமன்ற அவமதிப்பு சட்டமும் உள்ளன. தவறாக செய்தி வெளியிடப்படும் பிரச்சினையைக் கையாள்வதற்கு மற்றொரு நேரடியான வழியும் உள்ளது என்பது மிகமிக முக்கியமானது. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய வீடியோ, ஆடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தகடுகள், எழுத்து வடிவிலான செய்தி கள் ஆகியவற்றை பொது மக்களுக்குக் கிடைக்கச் செய்வதுதான் அந்த வழி. அது வரையில், தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன என்ற சாக்கினை வைத்துக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி செய்தி வெளியிடுவதைத் தடை செய்வது, மக்களுக்குக் கவலை தரும் பிரச்சினையே ஆகும்.

தவறாக செய்தி வெளியிடுவது மாபெரும் பேரழிவு களை  விளைவிக்கும் சில சூழ்நிலைகளையும் ஏற்படுத்தக் கூடும். எடுத்துக் காட்டாக, ஏற்கெனவே மக்கள் உணர்ச்சி வசப்பட்டுள்ள நிலையில்,  மதக் கலவரத்தைத் தூண்டியதாககுற்றம்சாட்டப்பட்டமுதன்மைக்குற்ற வாளியை குறுக்கு விசாரணை செய்வதைக் குறிப்பிட லாம். தேசிய பாதுகாப்பு தொடர்பான வாதங்கள் சில நேரங்களில் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். இவற்றையெல்லாம் பொதுமக்கள் அறியும்படியாக வெளியிடப்பட இயலாது. அந்த சூழ்நிலையில், செய்தி வெளியிடுவதற்கு ஒரு தற்காலிக தடை விதிக்கப்படலாம். இத்தகைய சூழ்நிலைகளின் இயல்பான தன்மையே, மிகமிக தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில், இந்தத் தடை ஒரு தனிப்பட்ட விசாரணைக்கானது என்று வரையறை செய்யப்பட வேண்டியதாக இருப்பதாகும். மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற  மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத் தடை ஆணைகள் அத்தகைய எந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு நெருக்கமாகவும் கூட வரவில்லை

இதன் விளைவாக, விசாரணை நீதிமன்றங்களும், உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றத்தின் ஆணை களில் இருந்து தங்களது வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்பவர்களாக விளங்குகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் தானாகவே ஒட்டு மொத்தமான எதேச்சதிகாரமான தடை ஒன்றை பிறப் பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்புக்காக உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்த 7 மூத்த நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு ‘‘இதன் பின் நீதிபதி கர்ணனால் வெளியிடப்படும் எந்த ஓர் அறிக்கையும் பிரசுரிக்கப்படக் கூடாது’’ என்று தடை ஆணை பிறப்பித்திருந்தது. அந்த வழக்கின் சிறப்பு சூழ்நிலைகள் எவையாக இருந்த போதிலும், அது போன்ற ஒட்டு மொத்த தடை உத்தரவு தேவையானது என்று நீதிமன்றம் உணரும்போது மட்டுமே அதன் பொருத்தத்தைப் பற்றிய ஒரு தெளிவான செய்தியை அது தெரிவிக்கிறது என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது.

நீதித்துறை தானாகவே உணர்ந்து, தங்களது செயல்பாடுகளில் சில  திருத்தங்களை, மாற்றங்களை செய்து கொள்ள வேண்டிய அவசரமான தேவையை மத்திய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற  மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத் தடை ஆணைகள்  எடுத்துக் காட்டுகின்றன. அவர்களால் தர முடியாத ஒரு மிகமிக உயர்ந்த அளவு விலை தரவேண்டிய ஜனநாயகத்துடன் அவை வருகின்றன; தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் மிகச்சிறந்த தடுப்பு  சூரிய ஒளியே என்று அவர்கள் கூறுகின்றனர்;  பல நேரங்களில் அது ஒன்றே தடுப்பாக இருக்கிறது.

நன்றி: ‘தி இந்து’, 04.12.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner