எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘பாதுகாப்பாக இருக்கும். அவசரத் தேவை களுக்கு எடுத்துக்கொள்ள முடியும்' என்று நம் பித்தான் மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். ஆனால், அந்தப் பணத் துக்குப் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தும் சட்டம் ஒன்றை மத்திய அரசே கொண்டுவரப் போகிறது.

‘புதியஇந்தியா'வில்,மக்களின்கடமைகளும் பொறுப்புகளும் இன்னும் அதிகமாகியிருக்கின்றன. வங்கிகளைத் திவால் ஆகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அதில் சேர்ந்திருக்கிறது! பணமதிப்பிழப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளையே தாங்கமுடியாத மக்கள்மீது, இப்போது மீண்டும் ஒரு சட்டம் பாய இருக்கிறது. அந்தச் சட்டம், ‘உங்களுடைய பணம் உங்களுடையது அல்ல’ என்று சொல்வதுதான் பிரச்சினை. இந்தச் சட் டத்தின்படி, திவாலாகும் நிலையில் இருக்கும் வங்கிகளில் உள்ள உங்களுடைய டெபாசிட் பணத்தை நீங்கள் நினைக்கும்போதெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது.

‘வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப் பீடு’ -2017 (திவீஸீணீஸீநீவீணீறீ ஸிமீsஷீறீutவீஷீஸீ ணீஸீபீ ஞிமீஜீஷீsவீt மிஸீsuக்ஷீணீஸீநீமீஙிவீறீறீ-2017)என்றமசோதாவை,கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு நாடாளுமன் றத்தில் அறிமுகம் செய்தது. இந்த மசோதாவின்படி, திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளின் பாதுகாப்புக்காக, அதன் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலே உள்ள டெபாசிட் பணம் முடக்கப்படும்; அது, வங்கிகளை மீளச் செய்யும் மூலதனமாக மாற்றப்படும். அதற்கு ஈடாக வங்கியின் பங்கு களோ, கடன் பத்திரங்களோ தரப்படும். வாராக்கடன் சுமையினால் திவாலாகாமல் வங்கிகளைப் பாது காக்கவே இந்தச் சட்டம். வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

ஏற்கெனவே, வங்கிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மக்களின் பணம் முழுவதும் வங்கிக்கு வந்துசேர்ந்தது. பணப் பரிவர்த்தனைக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டு, அதற்குக் கட்டணங்களும் விதிக்கப்பட்டன. டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.வங்கிகளை மீட்பதற்காக அரசே சமீபத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாயை மறு மூலதனம் செய்ய முன்வந்தது. கடன் வாங்கிவிட்டுத் திருப்பித்தராமல் ஏமாற்று பவர்களின் சொத்துகளை விற்று, கடனை மீட்க நடவடிக்கை எடுத்தது. இப்படியெல்லாம் செய்தாலும்கூட, வாராக்கடனில் அதிகபட்சமாக 20 சதவிகிதம்தான் மீட்கப்படுகிறது. எனவே, இப்படியொரு சுலபமான வழியை அரசு திட்டமிடுகிறது.

``இந்தச் சட்டம் இரு கண்களையும் குரு டாக்கும் ஒரு சட்டம். கடன் வாங்கியவர்களை விட்டுவிட்டு, சேமித்தவர்களின் பணத்தை எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது’’ என்கிறார் அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் தாமஸ் ஃப்ராங்கோ.

‘‘மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரூபாய் நோட்டு களை வெளியிடும்போது, அந்த ரூபாய் நோட்டை வைத்திருப்பவருக்கு அந்த நோட்டின் முழு மதிப்புக்கான உரிமையையும், உத்தரவாதத்தையும் கொடுக்கின்றன. ஆனால், இந்தச் சட்டத்தின் மூலம் அந்த உரிமை பறிக்கப்படுகிறது.

இதன் மூலம், திவாலாகும் நிலையில் இருக்கும் வங்கியில் எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம்; எவரையும் வேலையிலிருந்து தூக்கலாம். வங்கி யின் பங்குகளை விற்பது, இன்னொரு வங்கி யுடன் இணைப்பது என எதையும் செய்யலாம். பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கு வதற்குப் புதுப்புது வழிகளைத் தேடுகிறது அரசு. இந்தச் சட்டத்துக்கு அனைத்து வங்கிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், என்ன எதிர்ப்பு வந்தாலும், நினைத்ததை நடத்தி முடிக்கும் இந்த அரசின் செயல்பாடு, அச்சத்தை ஏற்படுத்துகிறது. ‘மக்களின் பணத்தை மக்களே எடுக்க முடியாது’ என்ற சட்டம், எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்?

பணத்தை எடுக்க முடியா விட்டால், எப்படி அவர்கள் தங்களுடைய முக்கியமான செலவுகளை மேற்கொள்வார்கள்? செலவு செய்யாமல் எப்படி பிசினஸ் வளர்ந்து, பொருளாதாரம் செழிக் கும்? பணத்தை எடுக்க முடியாமல் முடக்கி, அதைக் கடனாக யாருக்கு வழங்கி, எந்த பிசி னஸை வளர்க்க முடியும்? இப்படிப் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது இந்தச் சட்டம். கஷ்டப்பட்டுச் சம்பாதித்து, தான் சேமிக்கும் பணத்தைத் தனக்குத் தேவையானபோது எடுக்க முடியாத நிலையை மக்களுக்கு ஏற்படுத்த, இந்த அரசு இரண்டாவது முறையாகத் திட்டமிடுகிறது. பணத்துக்குப் பதிலாகப் பங்குகளும் பத்திரங்களும் கொடுக்கப்படும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. அதை வைத்துக்கொண்டு அரிசி, பருப்பு வாங்க முடியுமா... அல்லது திருமணம்தான் செய்ய முடியுமா?’’ என்கிறார் ஃப்ராங்கோ ஆவேசமாக.

இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், ``ரிசர்வ் வங்கி தந்திருக்கும் விவரப்படி, வாராக் கடன் பாக்கி வைத்துள்ளவர்களில் 88.4 சத விகிதம் பேர், அய்ந்து கோடி ரூபாய்க்குமேல் வாங்கியவர்கள்தான். வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 25 சதவிகிதத்தை வெறும் 12 பேர் மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து கடனை மீட்க முடியாத அரசு, மக்களின் டெபாசிட் பணத் தில் கைவைக்கத் திட்டமிட்டிருக்கிறது. தனியார் வங்கிகளால் கடனை வசூலிக்க முடிகிறது எனில், ஏன் பொதுத்துறை வங்கிகளால் முடியாது? அரசு ஒத்துழைத்தால் வாராக்கடன்களைப் பெரு மளவு வசூலிக்க முடியும். ஏற்கெனவே, வங்கி டெபாசிட்டுகளின் வட்டி குறைந்ததால் பலரும் தங்கள் பணத்தை வேறு வகைகளில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில் இப்படிப்பட்ட சட்டம் அவசியமில்லாத ஒன்று.

மக்களின் அடிப்படை உரிமையையும், வங்கி களின் அதிகாரங்களையும் பறிக்கும் சட்டம் இது. ஏற்கெனவே நிதித் துறையைக் கண்காணிக்க ரிசர்வ் வங்கி, சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் மற்றும்சி.பி.அய்.மட்டுமல்லாமல்,தேசியக் கடன் வசூலிப்புத் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல அமைப்புகள் உள்ளன. இந்தச் சட்டம், ‘ரெஸல் யூஷன் கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பை உரு வாக்கி, அதனிடம் அதிகாரத்தைத் தருகிறது. இப்போது எதற்கு இந்த அமைப்பு? இந்தப் புதிய அமைப்பின் செயல்பாடுகளை, உச்சநீதிமன்றம்கூட கேள்விக்குட்படுத்த முடியாது என்று சொல்லப் படுகிறது. இந்த அமைப்புக்கு, வங்கியில் என்ன மாற்றங்களையும் கொண்டுவரும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது. திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளின் சொத்துகளை விற்பது, பங்குகளை விற்பது, மற்றொரு வங்கியுடன் இணைப்பது என எதையும் செய்யலாம். இப்படிப்பட்ட அதிகாரம் எதற்காகக் கொடுக்கப்பட வேண்டும்? இந்தச் சட்டம் நிறைவேறாமல் இருந்தால் மிக நல்லது’’ என்கிறார்.

இந்தியாவில் இருக்கும் 21 பொதுத்துறை வங்கி களில்தான் மக்களின் 82 சதவிகித பரிவர்த்தனை நிகழ்கிறது.பொதுத்துறைவங்கிகளுக்குஏதா வது ஆபத்து நேர்ந்தால், மத்திய அரசு காப் பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் அவற்றை நாடுகிறார்கள். புதிய சட்டப்படி, இனி வங்கிகளைக் காப்பாற்ற அரசு வராது!

வங்கிகளுக்குச்சாதகமான சட்டமாக இருந் தாலும் வங்கிகளே இதை எதிர்க்கின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் எல்லா பணத்தையும் வங்கிகளில் டெபாசிட் செய்யவைத்த மத்திய அரசு, ‘இனி வங்கிப் பக்கமே போகக்கூடாது’ என்று மக்களை நினைக்க வைத்துவிடுமோ?

ஜெ.சரவணன்

நன்றி: ‘ஜூனியர் விகடன்’, 13.12.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner