எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

நேற்றையத் தொடர்ச்சி...

“மதங்கள் மக்களைப் பிரிக்கின்றன. கடவுள்கள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய சச்சரவுகளையும், கலவரங்களையும் இடிபாடுகளையும், இடிப்புகளையும் உருவாக்குகின்றன. இணைப்புகளை உருவாக்குபவை நாத்திகம்தான், பகுத்தறிவு தான் என்பதற்காக கிtலீமீவீsனீ வீs tலீமீ தீமீst லீஷீஜீமீ ஷீயீ லீuனீணீஸீவீtஹ் - மனித குலத்தினுடைய முழுநம்பிக்கை என்பது இருக்கிறதே - நாத்திகத்தின் மூலம் தான் பரவ முடியும். நாத்திகம் ஒரு நன்னெறி - நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு மட்டுமல்ல, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விகள் கேட்டு அறிவியல் சிந்தனையை உருவாக்குவதுதான் நாத்திகம் என்ற கருத்தை வலி யுறுத்தும் பேராளர்கள் மூன்று நாள்கள்  நடைபெறும் மாநாட்டிற்கு உலகத்தின் பல பகுதிகளில் இருக்கக் கூடிய வர்களும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கக் கூடியவர்களும், வந்துள்ளனர்” என்று குறிப்பிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் 5-1-2018 அன்று காலை திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உலக நாத்திகர் மாநாட்டுத் தொடக்க விழாவினைத் தொடங்கி வைத்துத் தலைமை உரை ஆற்றிய மாண்புறு சிறப்பினைக் கண்டோம்.

அந்த மிகப்பெரிய சிறப்பு, மாட்சிமைப்பட்ட நிகழ்வுகள் திருச்சியோடு நின்று விடவில்லை. திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகமதிலிருந்து 6-1-2018 சனிக் கிழமையன்று தஞ்சையில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப  (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம் வளாகத்திற்கு அதே உத் வேகம்  - உயர் சிறப்புடன் இடம் பெயர்ந்தது. பேராளர்கள் எல்லாம் தனித் தனிப் பேருந்துகளில் வந்து குவிந்து விட்டனர்.

இன்னும் சொல்லப் போனால் திருச்சியில் பங்கேற்ற அத்தனைப் பேராளர்களும், பார்வையாளர்களும் மட்டுமின்றித் திருச்சியில் 500 பேர் என்றால் அதைவிட, அதைவிட என்று சொல்லுமாறு மாநாடு ஒளிர் விட்டது, பிரகாசித்தது என்பது உண்மை.

தமிழர் தலைவர், ஆசிரியர் வந்து சேர்ந்தவுடன் தஞ்சை வல்லம் மாநாட்டு அரங்கிற்கு பன்னாட்டு அறி ஞர்கள், பார்வையாளர்கள் ஊர்வலமாகச் சென்ற காட்சி இருக்கிறதே அது கண்கொள்ளாக் காட்சி. பதாகைகள் இல்லை. ஆனால் முழக்கங்கள் உண்டு. அதைவிடப் பேராளர்கள், உலகெங்கிலும் இருந்து வந்தவர்கள் ‘வாவ்,  அச்சா, பகுத்  அச்சா’ என்று வாய்விட்டுச் சொல்லும்படியாக இளம்பெண்கள், இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரியச் சிறப்புமிக்க வீர விளையாட்டுக்களான சிலம்பாட்டம், கத்தி வீச்சு, இரும்புப்பட்டை வீச்சு என்று சுற்றிச் சுழன்று ஆடி முன் சென்றது மெய்சிலிர்க்க வைத்தது. ஆர்வத்துடன் பேராளர்கள் அதிலும் குறிப்பாக பஞ்சாப், மராட்டியம் ஆகிய இந்திய மண்ணிலிருந்து வந்தவர்கள் புகைப் படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர்.

அதிலும் ஆசிரியருடன் நின்று சிலம்பு, வீர விளை யாட்டுப் பின்னணியில் படம் எடுத்துக் கொள்ள விரும்பிய பிறமண் பேராளர்கள் ஆசிரியர் அருகே நம்மவர் நெருங்கக் கூட இயலாமல் அன்பு வெள்ளத்தில், ஆர்வப் பெருக்கில், மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது இருக்கிறதே அது வார்த்தைக்கட்டுக்குள் அடங்காது.  இதுவும்கூட நேரில் பார்த்து நெகிழ்வுற வேண்டியதுதான்.

ஊர்வலமாகச் சென்றனர்

புராண, ஆன்மிக அரசியல் என்ற பெயரில் மிகப் பெருமளவில் ஒரு பழமையை உருவாக்கிக் கொண்டிருக் கும் இந்தக் காலகட்டத்தில் தெள்ளத் தெளிவாகத் தந்தை பெரியாரின் கருத்து உலகம்முழுவதும் ஏற்படைந்து உள்ளதன் அடையாளமாக 2011இல் உலக நாத்திகர் மாநாட்டில் பங்குபெற்ற உலகநாட்டுப் பேராளர்கள் வைத்த செடிகளெல்லாம் மரங்களாக வளர்ந்திருப்பது போல், இம் மாநாட்டிலும் பெரியார் மணியம்மை கல்வி வளாகத்தில் எலிசபெத் ஓ’காசே, கேரி மெக்கலாண்ட், ரஸ்டம் சிங், டாக்டர் கோ.விஜயம், டாக்டர் இலக்குவன் தமிழ், அவி னாஷ் பட்டீல் உள்ளிட்ட வெளி மண்ணின் பேராளர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

இவை வளர்ந்து மரமாகும்போது பெரியாரின் கருத்து உலகம் முழுவதும் ஏற்கப்பட்டிருப்பதை மீண்டும் மெய்ப்பிக்கும். மரக்கன்றுகளை நட்ட பின்னர் மாநாடு வெறும் கூடிக்கலைந்த வெற்று கோஷ பொதுக்கூட்டம் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 5-1-2018 மாலை கருத்தரங்கு நாத்திக அறிஞர்கள். மனித நேயர்கள், பகுத்தறிவாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வு மாணவர்கள் பலரும் மாநாட்டின் அடிப்படை நோக்கமான மனித குலத்தின் நம்பிக்கை எனும் தலைப்பினை ஒட்டித் தங்கள் கட்டுரைகளை வாசித்து உரையாடியது  போல் இரண்டாம் நாளிலும் தஞ்சையில் தொடர்ந்தது.

கருத்தரங்கு திருச்சியில் மூன்று அமர்வுகளாகவும், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ஒரு சிறப்பு அமர்வாகவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் திருச்சி மாலைக் கருத்தரங்கைக் கூறி விட்டுத் தஞ்சை வருவோம்.

முதல் நாள் மாலை திருச்சியில் இரண்டு அமர்வுகள் 5-1-2018இல் பிற்பகலில் நடைபெற்றன.

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கில் முதல் நாள் பிற்பகல் நடைபெற்ற அரங்கில் மூவர் உரையாற்றினர்.

5-1-2018 பிற்பகல் முதல் ஆய்வு அமர்வில்மகாராஷ்டிரா அந்த ராஷ்டிரதா நிர்மூலன் சமிதியின் முனைவர் சுடேஷ் கோடேராவ் ‘மனித குலத்தின் முன்னேற்றத்திற்குரியது நாத்திகம்‘ எனும் தலைப்பில் தம் ஆய்வினையும், மும்பையிலிருந்து வெளிவரும் ‘தமிழ் லெமூரியா’ ஏட்டின் முதன்மை ஆசிரியர் சு.குமணராஜன் ‘மத அடிப்படை வாதத்தின் அச்சுறுத்தல்கள், இன்னல்கள்ஆகியவற்றிற்கான  தீர்வுகள்’ எனும் தலைப்பிலும், பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் ‘மருந்தும் நாத்திகமும்’  எனும் தலைப்பிலும் அறிவார்ந்த ஆய்வுரை அளித்தனர்.

முதல் அமர்விற்கு பஞ்சாப் - தர்க்க சீல சங்கத் தலைவர் பல் வீந்தர் பர்னாலா தலைமை ஏற்க, விஜயவாடா நாத்திகர் மய்யப் பொறுப்பாளர் டாக்டர் சமரம் நடுவராக விளங் கினார்.

இரண்டாம் ஆய்வு அமர்வில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மேனாள் பேராசிரியர் சாம் ஜார்ஜ் ‘நாத்திகம் ஒரு வாழ்க்கை முறை’ எனும் தலைப்பிலும், மலேசியா கோலாலம்பூரிலிருந்து வருகை புரிந்த மலேசிய திராவிட சங்கத்தின் எம்.கோவிந்தசாமி ‘மலேசியாவில் திராவிடச் சங்கம்‘ எனும் தலைப்பிலும் ஆய்வுத் தகவல்களை அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் தலைமையில் தெலங்கானா - அய்தராபாத் மாணவி விகாசவேதிகா அமைப்பின் பொருளாளர் பி. சாம்பசிவராவ் நடுவராய் இருந்து நடத்திட வழங்கினர்.

எம். கோவிந்தசாமி மலேயாவிலிருந்து வந்த பேராளர், கட்டுரை வாசித்ததோடு அமையாது மூன்று நாள் நிகழ்ச் சிகள் அத்தனையிலும் முழுமையாகப் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தஞ்சையில் தமிழர் தலைவர் தலைமையில்...

இந்த ஆய்வுக் கருத்தரங்குகளின் தொடர்ச்சியாக நடைபெற்றதுதான் இரண்டாம் நாள் 6.1.2018 தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கில் முற்பகலில் நடைபெற்ற சிறப்பு அரங்காகும். இச்சிறப்பு நிகழ்வு பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை தாங்கி பெரியார்  இயக்கம் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு பகுதியில்  எப்படித் தோன்றி   கல்விப் பணியைத் தொடங்கி எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக விளக்கமாக எடுத்துக் காட்டினார். மிகக் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கி 10,000க்கும் மேற்பட்ட பொறியிய லாளரை அதுவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறந்து ஓங்கி உயர்ந்து பெரிய மரமாகத் தழைத்திருக்கிறது என் பதை எடுத்துரைத்தபோது தந்தை பெரியா ருக்குப் பின் திராவிடர் கழகம் என்னும் இயக்கத்தை கட்டிக்காத்திடுவதோடு, அறி வுக்கண் திறக்கும் ஆக்கப்பணி நிறைவேறி யதைக் கண்முன்னே கண்டு பேராளர்கள் போற் றினர். ஆசிரியர் வீரமணி எதிர்ப்பு அரசியலாளர் அல்லர். ஆக்கப் பணி, அதுவும் ஆழமான பணி, ஆயிரங் காலப் பயிர் வளர்க் கும் பண்பாளர் எனக் கண்ணாரக் கண்டனர்.

இங்கே ஆசிரியரின் நன்றி உணர் வையும், அறிவு நாணயத்தையும் குறிப்பிட வேண்டும். கீதையின் மறுபக்கம் என்ற பெயரில் தமிழில் ஆசிரியர் எழுதி 28 பதிப்புகள் ஏறக்குறைய ஒரு லட்சம் பிரதிகள் விற்ற நூலின் ஆங்கிலமொழி பெயர்ப்புத்தான் ஙிலீணீரீணீஸ்ணீபீ நிவீtணீ - விஹ்tலீ ஷீக்ஷீ விவீக்ஷீணீரீமீ? இம்மொழிபெயர்ப்பினைச் செய்த ஆங்கில மொழிப் பேராசிரியர் பழனி அரங்க சாமியை மாநாட்டு மேடையில் சிறப்புச் செய்தது பாராட் டுக்குரியதாக அமைந்திருந்தது.

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.தேவதாசின் வரவேற்புரை, பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசக இயக்குநர் எலிசபெத் ஓ’காசேவின் சிறப்புரையின் பின் சிறப்பு ஆய்வு, இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவராக பேராசிரியர் நாயக் தலைவர் - நடுவராக விளங்கிட நடைபெற்றது.

ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் தத்துவப் பேராசிரியர் தானேசுவர் சாகு “அறிவியலும் அறிவியல் மனப்போக்கும் ஒருகண்ணோட்டம்” எனும் தலைப்பிலும், பகுத்தறிவு ஆசிரியர் அணியின் கே.ராஜா கென்னடி “சிறுவர்களிடம் அறிவியல் மனப்போக்கினை வளர்த்தல் எனும் தலைப்பிலும், மதுரைப் பேராசிரியர் முனைவர் இ.கி.இராமசாமி “நாத்திக மனித நேய இயக்கப் போராளிகள் - பெரியாரும் கோராவும்” எனும் தலைப்பிலும் அறிவார்ந்த ஆய்வுரை வழங்கினர்.

இவ்வமர்வுகளில் மாநாட்டுப் பேராளர்கள், பார்வையா ளர்கள், கருத்துரைகள் குறித்த வினாக்களுக்கு ஆய்வு அமர்வர்கள் தக்க விடையளித்திடவும் செய்தனர்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner