எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2 ஜி - அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு தீர்ப்பின் மீதான மேல் முறையீட்டில்,

புதிய  சாட்சியங்களை விசாரிக்கும் வாய்ப்பு இல்லை என்பதால்,

மேல்முறையீட்டினால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது (2)

உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ரெபெக்கா ஜானுடனான நேர்காணல்

- டி.கே. ராஜலட்சுமி


நேற்றைய தொடர்ச்சி....

சரியான கேள்விகளை சிறப்புப் புலனாய்வுத் துறை கேட்காதது, சாட்சியங்கள் ஏமாற்றும்படியும், தவிர்க்கும் படியும் பதில் அளித்தது,  எந்த ஒரு கேள்வியையும் கேட்பதற்கு பிராசிகியூடர் தயங்கியது போன்ற பிராசிகியூஷன் தரப்பினரின் திறமை இன்மை பற்றி பல புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு ரிட் மனுவின் மீது உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே அளிக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்துள்ள செயல், பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு தவறினால் ஏற்பட்ட சமூகப் பொறுப்பிற்கான காரணத்தை கூறுவதாகும். இந்தக் குற்றத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஓ.பி.சைனியை நியமித்த போது உச்சநீதிமன்றமே, இந்தக் குற்றச்சாட்டுகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை இப்போது கண்டுபிடியுங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறது. குற்றவாளிகள் இறுதியாக தண்டிக் கப்படுவது என்பது  குற்றவியல் தவறு இழைக்கப் பட்டுள்ளது என்ற ஒரு முடிவின் அடிப்படையில் மட்டுமே  செய்யப்பட இயன்றதாகும். இவை இரண்டுமே முற்றிலும் வேறுபட்ட இரு பகுதிகளாகும். இங்கும் அங்குமாகத் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துகளை பரிசீலித்திருக்கலாமே என்றும் வாதாடலாம். அத்தகைய கருத்துகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால், ஒரு சிவில் நீதிமன்றத்தின் முடிவு குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக ஆக்க முடியாது. நாம் ஏன் ஒரு குற்றவியல் வழக்கு விசாரணையை நடத்துகிறோம். அதுதான் விவகாரத்தின் முடிவாகும். அவ்வளவு எளிதானதாக இருந்தால்,  உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு அனைவருமே சிறைக்கு சென்றிருக்க வேண்டும். உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதுதான் விவகாரத்தின் முடிவு என்றால், குற்றப்பத்திரிகை ஒன்றை பதிவு செய்யும்படி மத்திய புலனாய்வுத் துறையை உச்ச நீதி மன்றம் கேட்பானேன்? குற்றவியல் வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? இந்த விசாரணை ஏன் ஆறாண்டு காலமாக நடத்தப்பட வேண்டும்? அது மட்டுமல்ல, ராஜாவும் மற்றவர்களும் அப்போதே வைது செய்யப் பட்டிருக்க வேண்டும். நீதிபரிபாலன நடைமுறையின் நோக்கம் அதுவல்ல. உச்சநீதிமன்றத்தால் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டவுடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று சில மூத்தவர்களால் உருவாக் கப்பட்ட ஒரு பொய்யாகும் இது. சட்டம் என்பது எப்போதுமே அப்படி இருப்பது அல்ல.

சிறப்புப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள் உச்சநீதிமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. குற்றம் இழைக்கப்பட்டதற்கான முதன்மையான ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்பதை மட்டும்தான் உச்சநீதிமன்றம் பார்த்தது. விசாரணை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட 50,000 பக்கங்கள் கொண்ட 15,000 ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. அப்போதைய நிலையில் அது தேவையும் இல்லாதது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எத்தகைய தகுதி படைத்ததாக இருந்தாலும்,  ஒரு சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படிதான் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைந்திருக்க வேண்டும் என்று கூறமுடியாது. உரிமங்களை ரத்து செய்ததின் மூலம் உச்ச நீதிமன்றம் தனது சிவில் எல்லைக்குள் செயல்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமங்களை உச்ச நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. சில நிறுவனங்களுக்கு ஆதரவாக சலுகை காட்ட அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சர் விரும்பினார் என்றும்,  முன்னதாகவே தகவல் கிடைத்துள்ள அவர்களுக்கு ஆதரவாக செயல் படவே இந்த செயல்பாடுகள் எல்லாம் நாடகத்தைப் போல மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை கடிதங்கள் அளிக்கப்பட்ட விதமே எந்த வித சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் செய்து விட்டது என்றும் உச்சநீதி மன்றம் அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அடிப்படையில் இது ஆதரவு காட்டுவதாக ஆகாதா?

சட்ட அலுவலர்களான நாங்கள்,  பிராசிகியூஷன் தரப்பின் ஆவணங்களால் அளிக்கப்படும் சாட்சியங் களின் படி நாங்கள் செயல்படுகிறோம். சதித்திட்டம் இருந்ததா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான எந்தத் தனித் திறமையும் என்னிடம் இல்லை. நீதிமன் றத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் ஒரு சதித்திட்டம் நடைபெற்றுள்ளது என்பதை மெய்ப்பிக்க சிறப்புப் புலனாய்வுத் துறை தவறிவிட்டது. சிறப்புப் புலனாய்வுத் துறையின் ஆவணங்களே, குற்றம் சாட் டப்பட்டவர்களுக்கு ஆதரவான எதிர்வாதத்தையும் உள்ளடக்கியிருந்தன.  2007ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று யுனைடெட் குழும நிறுவனங்கள் கடிதங் களுக்காக விண்ணப்பித்திருந்தன என்றும், ராஜா நிர்ணயித்திருந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 25 என்ற கட்ஆப் தேதி யுனிடெக் நிறுவனத்துக்கு சாதக மாக வடிவமைக்கப்பட்டது என்றும் சிறப்பு புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. தாங்கள் செப்டம்பர் 21 அன்று விண்ணப்பத்தை அளித்திருப்பதையும், விண்ணப்பம் செய்தவர்களில் தாங்கள்தான் இறுதிக் குழு அல்ல என்பதையும் யுனிடெக் குழுமத்தால் மெய்ப்பிக்க இயன்றுள்ளது.

இறுதியாக விண்ணப்பித்த சியாம் சக்சேனா ஏன் குற்றம் சாட்டப்படவில்லை என்பது சிறப்புப் புலனாய் வுத் துறைக்கே வெளிச்சம். யுனிடெக் நிறுவனம் விண் ணப்பம் அளித்ததற்குப் பிறகுதான் சியாம் சக்சேனாவும்,  செலின் இன்ஃப்ராஸ்ட்ரக்சரும் விண்ணப்பித்துள்ளனர். நாங்கள் எந்த ஆவணத்தையும் தயார் செய்யவில்லை. அவை அனைத்துமே தொலைத்தொடர்புத் துறை ஆவணங்களாகும். யுனிடெக் குழும நிறுவனங்களுக்கு ஆதவாகத்தான் கட்ஆப் தேதி மாற்றப்பட்டது என்ற வாதம் தவிடு பொடியாகிவிட்டது. இந்த வகையில் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், தொலைதொடர்புத் துறை ஆவணங்களிலேயே எதிர் வாதம் இருக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாக போகிற போக்கில் கூறப்படும்  குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் மக் களைக் குற்றம் இழைத்தவர்களாகக் கருத முடியாது. தொலைதொடர்புத் துறை அடுத்த ஜனவரி மாதத்தில் என்ன செய்யப்போகிறது என்பதைப் பற்றி முன்கூட்டிய தகவல் யுனிடெக் நிறுவனத்துக்கு கிடைத்ததால் முந்தைய ஆண்டு அக்டோபரிலேயே வங்கி வரைவை அந்த நிறுவனம் எடுத்து வைத்துள்ளது என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும். கடைசி நேரத்தில் ஜனவரி 8 ஆம் தேதி வங்கி வரைவை எடுக்கும் நிறுவனங் களுக்குத்தான் தொலைதொடர்புத் துறையினுள் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது என்று கூறலாமே அன்றி, முந்தைய ஆண்டு அக்டோபரிலேயே வங்கி வரைவு எடுத்து வைத்திருக்கும் நிறுவனத்துக்கு தொலை தொடர்புத் துறையினுள் இருந்து தகவல் கிடைத்தி ருக்கிறது என்று கூறமுடியாது. அதனால் அந்த நிறு வனத்துக்கு வட்டி இழப்பும் ஏற்படுகிறது. இவ்வாறு அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரம் அற்றவையாக உள்ளன.

குற்றம் சாட்டப்படவேண்டிய ஒரு நிறுவனம் இருக்குமானால், அது இந்திய  கன்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் மீதுதான் குற்றம் சாட்டப்பட வேண்டும். அரசு கடைப்பிடித்த நடைமுறையினால் மொத்தம் 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் சிறப்பு புலனாய்வுத் துறையே  22,000 கோடி ரூபாய் இழப்பு என்ற வேறுபட்ட புள்ளிவிவரத்தை அளித் துள்ளது. சிஏஜியின் தணிக்கை அறிக்கை நீதிமன்றத்தின் முன் ஆவணமாக எப்போதுமே வைக்கப்படவில்லை. ஒரே ஒரு பிராசிசியூஷன் தரப்பு சாட்சியும் கூட இந்த இழப்பு பற்றி எதுவும் பேசவில்லை. அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர்,  தொலைத்தொடர்புத் துறையின் அப்போதைய செயலாளர், ஜிக்ஷீணீவீ   அமைப்பின் தலைவர் ஆகியோர் இந்த வழக்கில் சாட்சியம் அளித்துள்ளனர். இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றி அவர்களில் எவர் ஒருவரும் நீதிமன்றத்தில் பேசவில்லை. அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்ற வாதத்தை சிறப்பு புலனாய்வுத் துறை கைவிட்டுவிட்டது. எவர் ஒருவரும் இந்த இழப்பு பற்றி சாட்சியம் கூற முன்வரவில்லை. கடுமையான காயங்களை யாரோ ஒருவர் ஏற்படுத்திவிட்டார் என்று யாராவது ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்து சொல்ல வேண்டும். குற்றவியல் வழக்குகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுபவை ஆகும். இந்திய அரசுக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று எவர் ஒருவராவது நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் சொல்ல வேண்டும்.

இந்த வழக்குதான் எதைப் பற்றியது? சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் என்று கூறப்படுபவையுடன்  அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைத் தொடர்புபடுத்திக் காட்ட  அவர்களால் இயலாமல் போனபோது,  அந்த இழப்பு உத்தேசமான இழப்பாக ஆகிவிட்டது. அதனை மெய்ப்பிப்பதற்கான வழி அவர்களுக்கு ஏதுமில்லை. அந்த வழக்கில் அர்த்தமுள்ள ஒரு விஷயம் அல்ல அது என்ற காரணத்தால் அது கைவிடப்பட்டு இருக்கலாம். இந்த ஆறு ஆண்டுகளில், பொதுமக்களின் கண்ணோட்டத்திற்கும், சிறப்புப் புலனாய்வுத் துறையின் வழக்கிற்கும்  இடையே  முற்றிலும் ஒரு எதிர்மறையான வேறுபாடு இருந்தது. எல்லா நேரங்களிலும் தவறான முடிவுகளே மேற்கொள்ளப்பட்டன. 2 ஜி விண்ணப் பங்களில் எந்த வித உச்ச வரம்பும் தேவையில்லை என்று, தொலைதொடர்புத் துறையின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது நிருபேந்திர மிஸ்ரா தலைமை யிலான  ஜிக்ஷீணீவீ அமைப்பு 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது கடிதம் ஒன்றில் பதிலளித்துள்ளது. உச்சவரம்பு தேவையில்லை என்பதன் மூலம் நாம் தெரிவிக்க விரும்பும் கருத்து என்ன? பெரும் அளவிலான விண்ணப்பங்கள் இருந்துள்ளன என்ற கருத்துதான் அது. விண்ணப்பங்கள் வெள்ளம் போல வந்து கொண்டிருப்பதால், ஒரு கட்ஆப் தேதியை ராஜா நிர்ணயிக்க வேண்டியிருந்தது. முதலில் கட்ஆப் தேதியை நிர்ணயித்த அவர், பின்னர் அவற்றை பரிசீலனை செய்யும் நடைமுறையை நிர்ணயம் செய் தார். அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று செயலாளர் டி..எஸ். மத்தூர் ராஜாவுக்கு குறிப்பு எழுதி அனுப்புகிறார். இதில் ஏதேனும் குளறுபடி நடந்திருக்குமா என்பதை என்னால் தொடர்புபடுத்திக் காண முடியவில்லை.

இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு புல னாய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு செல்லும் என்று தோன்றுகிறது. அதுபற்றி எந்தவித முடிவு பற்றிய ஊகங்களுக்கும் இடமளிக்காமல், குற்றச் சாட்டுகளை மெய்ப்பிப்பதற்கு புதிய ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்து கொடுக்க மத்திய புலனாய்வுத் துறையால் இயலுமா?

எந்த ஒரு புதிய ஆதாரத்தையும் தேடிக் கண்டு பிடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. தற்போது  ஆவணங்களில் அளிக்கப்பட்டிருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் மேல்முறையீடு விவாதிக்கப்பட இயலும்.  வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு தவறானது என்று வாதிட அதே சாட்சியங்களைத்தான் பிராசிகியூஷன் தரப்பினர் பயன்படுத்த வேண்டுமேயன்றி, எந்த விதமான புதிய சாட்சியங்களையும் அவர்களால் கொண்டு வரமுடியாது.

நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 2018 ஜனவரி 19

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner