எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  மணீஷ் திவாரி

உச்சநீதிமன்றத்தின் மூத்த நான்கு நீதிபதிகள் அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்,  நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய மிகத் துல்லியமான அறிவிப்பு ஒன்றை நீதியரசர் சலமேஸ்வரராவ் வெளியிட்டார்: "உச்சநீதிமன்றம் என்னும் இந்த அமைப்பு பாதுகாக்கப்பட்டு, அதன் நடுநிலைத் தன்மை நிலை நிறுத்தப்படாவிட்டால், இந்த நாட்டில் ஜனநாயகம் உயிர் பிழைத்திருக்காது" என்று அவர் கூறினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே தற்போது நிலவி வரும் இணக்கமின்மையைப் பற்றியதாக அந்த அறிவிப்பு இருந்த போதிலும், மிகப் பெரிய அளவிலான பாதிப்பை அது ஏற்படுத்தியுள்ளது. 'அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்' என்ற அவரது மிகமிக முக்கியமான சொற்களை நாம் கவனிக்க வேண்டும்.

ஜனநாயகம் சார்ந்துள்ள

அரசமைப்புச் சட்ட அமைப்புகள்

உச்சநீதிமன்றம் போன்ற பலம் நிறைந்த பல அமைப்பு களின் அடித்தளத்தின் மீதே எந்தவொரு, ஒவ்வொரு ஜனநாயகமும் சார்ந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகப் பிரிவு இறையாண்மையின் உறுதித்தன்மையின் களஞ்சியமாக இருப்பது அல்ல. மற்ற அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தும்தான், நாட்டின் எதிர்காலப் போக்கை முடிவு செய்யும் நடுவர்களாகவும், பணயம் வைப்பவர்களாகவும் இருக்கக் கூடியவையாகும்.

பொதுமக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக் கும் ஆட்சியில் இருக்கும்  ஓர் அரசு,  பலம் நிறைந்த, சுறுசுறுப்பு கொண்ட ஒரு சட்டமன்றம், சுதந்திரமான ஒரு நீதித்துறை, அச்சமற்ற, சுதந்திரமான, துடிப்பு நிறைந்த ஊடகத்துறை, தன்னாட்சியும், சுயசார்பும் கொண்ட அகில இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகார அமைப்பு, பாரபட்சமற்ற ஒரு தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரமான அமைப்புகளை, சுதந்திர இந்தியாவை வடி வமைத்த நமது முன்னோர்கள் மிகுந்த கவனத்துடனும், விடாமுயற்சியுடனும், கடுமையான உழைப்பாலும்  பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர். கடந்த 70 ஆண்டு காலத்தில் இந்திய நாடு செய்துள்ள மாபெரும் சாதனையே, சிவில் ராணுவப் பிரிவுகளிடையே, சிவில் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இணக்க மான உறவைப் பாதுகாத்து வந்ததுதான் என்று கூறலாம்.  இந்த ஒரு காரணத்தினாலேயே, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதலாளித்துவம் என்ற நுகத்தடியில் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக வாழும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வருகிறது என்பது மட்டுமல்லாமல், ராணுவ சர்வாதிகாரத்திற்கோ அல்லது ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சியின் கீழோ சிக்கிக் கொள்ளாமல் இருந்து வருகிறது.

சீரழிவுக்கு பலியான

முதல் அமைப்பே சட்டமன்றம்தான்

என்றாலும், இந்திய நாட்டின் ஜனநாயக அமைப்பு உண்மையிலேயே மாபெரும் ஆபத்தினால் சூழப்பட் டுள்ளது. இது ஒன்றும் ஒரு நாள் இரவிலேயே நடந்துவிடவில்லை. கடந்த 44 மாதங்களில் இந்த சீரழிவின் வேகம் அச்சந்தரும் விதத்தில் அமைந்திருந்தது. நாட்டின் அரசியல் நடைமுறைக்காகவும், அரசியல் பிரச்சாரத்திற் காகவும் முற்றிலும் மிகமிக இன்றியமையாதவர்களாக தங்களைத் தாங்களே ஆக்கிக் கொள்வதற்காக கூடுதல் நேரம் செயலாற்றும் சட்டமன்றங்களில் இருந்து இந்த அமைப்புகளின் சீரழிவு நடைமுறை தொடங்கியது. ஜனநாயகம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டான சட்டமன்றம் தங்களுடையதுதான் என்ற பெயர் பெறுவதற்கான போட்டியில் 1970 ஆண்டுகளின் தொடக்கத்தில் மாநில சட்டமன்றங்கள் ஈடுபட்டிருந்தன. இந்தப் போட்டியில் நாடாளுமன்றமும் பின்தங்கி இருந்துவிடவில்லை. ஆனால், 1990 ஆண்டு களில் குறுக்கீடுகள் இன்றி நாடாளுமன்றம்  நடைபெறுவதே ஒரு சிறப்பு செய்தி என்ற அளவில், நாடாளுமன்றத்தில்  வெளிநடப்புகளும், சபைக்குள் நடந்த ஒழுங்கீனமான கலவரங்களும் நடந்தேறி வந்துள்ளன.

அடுத்து பலியான பத்திரிகைத்துறை

இந்த சீரழிவுக்கு அடுத்து பலியானது ஊடகத் துறைதான். இந்திய ஜனநாயகம் சோதனை செய்து பார்க்கப்பட்ட தொடக்க காலத்தில், வானொலியும், பின்னர் வந்த தொலைக் காட்சியும்  அரசுடமை நிறுவனங்களாக இருந்தன. அச்சு ஊடகமான பத்திரிகைத் துறை எப்போதும் போலவே தனியார் கைகளிலேயே இருந்து வந்தது. நாட்டின் கொள்கைகளை வடிவமைக்கும் தலையங்கச் செய்திகளைமுடிவு செய்வதில்,  கார்ப்பரேட் நிறுவனங்கள் சுயநலமாக செயலாற்றின என்ற குற்றச்சாட்டுகள் அப் போதும் இருந்தன.

மிர்ரர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலம் சென்ற ஆர்.கே.மிஸ்ரா  மாநிலங்கள் அவையில் 1974 இல் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுவதற்கு இது வழி வகுத்தது.  "பத்திரிகை சுதந்திரம் பற்றி இவ்வாறு பேசுவதைப் பற்றி தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மிகுந்த உணர்ச்சி வயப்பட்டதாக இருக்கிறது என்பதை இங்கே பணிவுடன் தெரிவித்துக் கொள்ள நான் விரும்பு கிறேன்.  இப்போது, பத்திரிகை சுதந்திரம் எங்கே இருக் கிறது? நமக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது?  இந்தியாவில் நாம் பெற்றிருப்பது எல்லாம் செய்திப் பத்திரிகை முதலாளிகளின் சுதந்திரம் மட்டும்தான்.  சில நேரங்களில் இந்த சுதந்திரம் செய்தியிதழ் நிர்வாகிகள் அனுபவிக்கவும் அவ்வப்போது அவமதிக்கப்படுவது உண்டு."

என்றாலும்,  நாட்டின் மிகுந்த மரியாதைக்கு உரியவராக இருந்த இந்திய பத்திரிகையாளரின் புலம்பல்கள் ஒரு பக்கமிருக்க, சுதந்திர மனம் கொண்ட பத்திரிகை ஆசிரியர்களும், அச்சமற்று பணியாற்றிய செய்தியாளர் களும் கொண்ட ஒரு பாரம்பரியத்தை இந்திய பத்திரிகைத் துறை உருவாக்கி வளர்த்து வந்தது. செய்தி இதழ்களின் முதலாளிகளையும் எதிர்த்து நிற்பது என்ற செயற்கரிய செயலுக்கு வழிவகுப்பதற்குத்  தேவையானதுணிவும் நேர் மையும் கொண்ட மாபெரும் ஆசிரியர்கள் இந்திய பத்தி ரிகைத் துறையில் இருந்துள்ளனர் என்பதற்கான போது மான எடுத்துக்காட்டானவர்கள் இருந்து வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தொலைக்காட்சித் துறை

இவை அனைத்துமே 1980 ஆண்டுகளின் தொடக் கத்தில் மாறத் தொடங்கிவிட்டன. அதில் இருந்து ஊடகத் துறையின் செயல்பாடுகள் கீழ்நோக்கிய பயணமாகவே இருந்தன. 1990 ஆண்டுகளின் தொடக்கத்தில் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்த சீரழிவை மேலும் மேலும் அதிகப்படுத்தின.  கட்டுப்பாடு ஏதுமின்றி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு  உரிமங்கள் வழங்கப் பட்டது, ஊடகத்தின் பன்முகத் தன்மையை விரிவு படுத்துவதற்கு மாறாக, சந்தைப் போட்டி காரணமாக அவைகளிடையே பிளவு ஏற்படுவதற்கே  வழி வகுத்தது. என்றாலும், கடந்த 44 மாதங்களில் நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் எல்லாமே, எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்பதை எடுத்துக் காட்டுபவையாகயே இருந்துள்ளன. ஊடகத் துறையினரிடையே, குறிப்பாக தொலைக்காட்சி நிறுவனங்களிடையே பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் திட்டமிட்டு வேண்டுமென்றே 'நமது ஊடகம்'  'அவர்களது ஊடகம்' என்று பிளவை ஏற்படுத்தி யுள்ளன. ஒன்று அரசுக்கு துதி பாடு அல்லது அரசின் தாக்குதலுக்கு இலக்காக ஆவதற்குத் தயார் படுத்திக் கொள். அரசின் அதிகாரத்துக்கு முன் உண்மையைப் பேசத் துணிந்த என்டிடிவி. (ழிஞிஜிக்ஷி) வையர், டிரிபியூன் மற்றும் இவை போன்ற எண்ணற்ற அமைப்புகள், அரசின் கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் மதிப்பு மிகுந்த பாரம்பரியத்தைக் காலம் காலமாக கடை பிடித்து வந்ததற்கான விலையை ஏற்கெனவே கொடுத்து விட்டன.

ஒரு தலை சார்பாக செயல்பட்ட இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர்

தன்னைத் தானே அழித்துக் கொண்ட அடுத்த அமைப்பு  இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கட்டுப் பாட்டு அலுவலரான வினோத் ராய்தான். அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு கொண்ட இந்த உயர்ந்த தன்னாட்சி அமைப்பு, மிகுந்த பொறுப்புடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகும். ஆனால், அகில இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், அவர் பதவியில் இருந்த 6 ஆண்டு காலத்தில்,  தனது அனைத்து கட்டுப்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு எச்சரிக்கையுடன் செயல்படத் தவறி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான மக்களின்  நம்பகத்தன்மையை தூள்தூளாக ஆக்குவதற்கு  முன்வந்ததன் காரணம் என்ன என்பது இதுவரை புரிந்து கொள்ள இயலாத மர்மமாகவே இருக்கிறது.   சரிபார்க்க முடியாத  அளவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை, எவ்வித கவனமோ அக்கறையே இன்றி அரசின் மீது பொதுமக்களிடையே   உருவாக்கி வளர்த்து விட்டார். அந்தப் பொய் மூட்டைகள் எல்லாம் இப்போது நீதிமன்றத்தின் முன் தவிடு பொடியாக ஆகிவிட்டன. ஆனாலும், இந்தக் கதை முழுவதுமே, ஓர் அரசமைப்பு சட்டப்படியான ஒரு அமைப்பு மட்டுமே, ஜனநாயக பாரம்பரியங்கள் பற்றி கடுமையாக நடந்து கொள்வதற்கு முடிவு எடுத்துவிட்டால், எத்தகைய சீரழிவை ஏற்படுத்த இயலும் என்பதை எடுத்துக் காட்டு பவைகளாகவே உள்ளது.

நடுநிலை தவறி செயல்பட்ட தேர்தல் ஆணையம்

தான் செய்த தவறை மறைத்துக் கொள்ள இயலாதபடி, தனது முந்தைய நற்பெயரையும் புகழையும் இழந்த மற்றொரு நிறுவனம் இந்திய தேர்தல் ஆணையமாகும். இமாசல பிரதேச, குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை ஒரே நேரத்தில் அறிவிக்காமல் இருந்தது முற்றிலும் தேவையற்ற ஒரு செயலாகும். தற்போதைய தேர்தல் ஆணையர் ஓய்வு பெறுவதற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், டில்லி சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின்  உறுப்பினர்கள் 20 பேரின் பதவி பறிப்பதற்கு பரிந்துரைப்பது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவு மற்றொரு ஜனநாயக விரோதமான முடிவாகும். இந்தப் பரிந்துரையில் ஏதேனும் நியாயம் இருக்கிறதோ இல் லையோ, அந்த முடிவிற்கு எதிராக போர்க்கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

மக்களின் இறுதிப் புகலிடம்தான் நீதித்துறை

இறுதியாக, இத்தகைய அனைத்து தார்மீக, ஓழுக்க சீர்கேடு, அமைப்புகளின் தரச் சீரழிவுகளுக்குமிடையேயும்,  100 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களின் நம்பிக்கை ஒளியாக, கலங்கரை விளக்கமாக உறுதியாக  விளங்கியது இந்திய நீதித்துறை. மட்டுமே. சிடுமூஞ்சித்தனமாக, அகம் பாவம் கொண்ட அரசின் செயல்பாடுகளால் சோர்வடைந்து போன மக்கள் தங்களுக்கு முடிவில் எப்படியும் நீதி கிடைக்கும் என்று  எதிர்பார்த்துக் காத்துடக் கிடப்பதே இந்த நீதித்துறையை நம்பித்தான். அதற்கேற்றவாறு, நீதித் துறையும் கடந்த காலத்தில் மக்களுக்கு ஆதரவாக, நமது தேசிய வாழ்க்கை வழியை வழிவகுத்து, எல்லை வகுத்துத் தந்த வரலாற்று சிறப்பு மிகுந்த பல தீர்ப்புகளை அளித் துள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதி களிடையே தற்போது  எழுந்துள்ள கருத்து வேறுபாடு மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. தங்களது முடிவு களை, உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் தார்மீக அதிகா ரத்தை மட்டுமே சட்ட நீதி மன்றங்கள் கொண்டுள்ளன. அந்த அதிகாரமும் அதனிடமிருந்து பறிக்கப்பட்டு விட் டால், நீதித்துறை அமைப்பு தன்னைத் தானே கேள்விக்கு உட்படுத்திக் கொள்வதற்கான வழி திறந்து விடப்பட்டு விடும். அதுவே விரைவில் திட்டமிடப்பட்ட ஒரு பிரேதப் பரிசோதனையாகவே மாறிவிடும்.

நன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 21-01-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner