எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  முனைவர் மறைமலை இலக்குவனார்

27.1.2018 நாளிட்ட விடுதலை இதழில் ஒளிவண்ணன் அவர்களின்  "அய்.அய்.டி.யும், ஹார்வர்ட் இருக்கையும்" என்னும் கட்டுரை வெளிவந்துள்ளது. மறைமலை இலக் குவனார் என்கிறவர் கிறித்துவர்களில் ஒரு பிரிவான  மார்மன் சமயத்தின் பைபிள் தமிழரின் திருவாசகத்தை நினைவுப்படுத்துவ'தாகப் பேசினார். தமிழ் என்கிற பெயரில் கிறித்துவத்தைப் பரப்ப பெர்கிலி இருக்கை மறைமலை இலக்குவனார் போன்றவர்களைப் பயன் படுத்திக் கொண்டது' என்று உரத்த குரலில் பேசினார் என்னும் இராசீவ் மல்கோத்திரா குற்றச்சாற்றை ஒளி வண்ணன் நமக்குத் தெரியப்படுத்தியுள்ளமைக்கு நன்றி.

இந்தத் தவறான பரப்புரையைப் பல்லாண்டுகளாக இராசீவ் மல்கோத்திரா தமது நூலின் மூலமும் கட்டுரை, பொழிவுகள் மூலமும் பரப்பிவருகிறார்.அவரது உடையும் இந்தியா என்னும் நூலில் இக்கருத்தை அவர் குறிப்பிட்டபோது அதனை மறுத்து அவரது வலைத் தளத்தில் பதியவிட்டிருந்தேன்.எனினும் இதனை மீண்டும் மீண்டும் கூறிவருவதன் காரணம் புரியவில்லை.

அமெரிக்காவின் மிகத் தொன்மைவாய்ந்த பல் கலைக் கழகங்களுள் ஒன்றாகிய கலிபோர்னியா பல் கலைக்கழகம் மிகவும் முற்போக்கான சிந்தனையாளர் களின் பாசறையாக நெடுங்காலம் திகழ்ந்துவருவது. வியட்நாமில். அமெரிக்கப் படையெடுப்பைக் கண்டித்து முதல் முழக்கம் எழுப்பிய பல்கலைக்கழகம், பொது வுடைமைச் சிந்தனையாளர்களுக்கு கருத்துக்களமாய் அமைந்த பல்கலைக்கழகம்,மனித உரிமைகளுக்குக் கேடயமாய்த் திகழும்  பல்கலைக்கழகம், ஓரினச் சேர்க் கையாளர்களுக்கும் அடிப்படை உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் முதன்முதலாகப் போராடிப் பெற்ற பல்கலைக்கழகம் என்று இதன் தனித்தன்மையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.அமெரிக்கா, நாளை நினைப்பதை கலிபோர்னியா பல்கலைக் கழகம் இன்றே நினைக்கும் எனச் சுருக்கமாக இதன் தொலைநோக் குணர்வைக் குறிப்பிடுவர்.

இத்தகைய முற்போக்குப் பல்கலைக்கழகத்தில் சமயப் பரப்புரைக்கோ குறுகிய சமயப்பிரிவினை களுக்கோ எஞ்ஞான்றும் இடம் இருந்ததில்லை. பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை பட்டங் களுக்கும், ஆய்வுகளுக்கும் ஆயத்தம் செய்ய வேண்டிய பல்கலைக்கழகத்தில், நான் போய் சமயப் பரப்புரை நிகழ்த்தவேண்டிய தேவையோ, சூழலோ கிடையாது.எனினும் சிறுபிள்ளைத்தனமான இந்தக் கூற்றை (குற்றச்சாற்றை) என் மீதும் சார்சு கார்ட்டு அவர்களின் மீதும் சுமத்தவேண்டிய தேவை என்ன எனப் புரியவில்லை.

வேதங்களும் வேதாந்தமும் உலகெங்கும் பரவ வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுப் பல்லாண்டு களாக உழைத்து வரும் இராசீவ் மல்கோத்திரா, தமது கொள்கைக்கு மாறுபட்டவர்கள் இந்திய இறையாண் மைக்கே ஊறு விளைப்பவர்கள் என்றும் பிரிவினை வாதிகள் என்றும் கருதுகிறார் உலகெங்கும் அவர் பயணம் செய்து நிகழ்த்தி வரும் பரப்புரை வேதத்தைப் பரப்புவதைக் காட்டிலும் இத்தகைய பிரிவினைவாதிகள் செயலால் இந்தியா சிதறுண்டு போகக் கூடாது என எச்ச ரிப்பதையே  முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவைப் பாழ்படுத்திவரும் சமயவெறியுணர் வையும் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வெறித்தனமான தாக்குதல்களையும் குறித்து நான் 2004-ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும்  கிssஷீநீவீணீtமீபீ என்னும் வலைத்தளத்தில் வெளியாகிக் கொண்டிருந்தன.அவற்றை அவர் படித்துள்ளார். கிறித் துவத் துறவிகளை, சகோதரிகளைக் கொன்றுகுவித்த வன் செயல்களைக் கண்டித்து நான் எழுதிய கவிதைகள் அவர் கண்களை உறுத்தியுள்ளன.

அந்த வலைத்தளத்தில் 1987ஆம் ஆண்டு முதல் 1998 வரையிலான என் அமெரிக்கப்பயணங்களைப் பற்றிய கட்டுரையும் வெளிவந்திருந்தது. அதன் முதல் பகுதியில் 1987-ஆம் ஆண்டு அமெரிக்காவின் யூட்டா மநிலத்தில் உள்ள பிரிகாம் யுங் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மாநாட்டுக்கு நான் சென்றுவந்த விவரங் களைத் தொகுத்தளித்திருந்தேன்.அந்த மாநிலத்தில் மட்டுமே காணப்படும் மார்மன் கிறித்துவ மரபைக் குறித்தும் அதன் பண்பமைவுகள் பற்றியும் எழுதி யிருந்தேன். இல்லறத்தை நல்லறமாய்ப் போற்ற வேண்டு மெனவும் மனைவிக்கு முதன்மை வழங்க வேண்டு மெனவும் வலியுறுத்தும் அந்தச் சமயப் பிரிவின் மறை யாகத் திகழும் மார்மன் மறை பற்றிய என் விளக்கத்தை நான் ஏதோ பொழிவில் நிகழ்த்தியதாகப் பிறழவுணர்ந் ததுடன் வேறெந்த மாநிலத்திலும் காணவியலாத மார்மன் பிரிவு பற்றி நான் கலிபோர்னியாவில் பொழிவு நிகழ்த்தியதாகவும் அடிப்படையே இல்லாத கருத்தைக் கொண்டு அதற்கும் அறிஞர் சார்சு கார்ட்டு அவர்களுக் கும் முடிச்சுப் போட்டுவிட்டார் இராசீவ் மல்கோத்திரா,

"நீசபாசையாக"ப் புறக்கணித்து ஒதுக்கப்பட வேண்டிய(?) தமிழுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இடம் வழங்கப் படுவது இராசீவ் மல்கோத்திராவுக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. எனினும் இந்தத் தவறான பரப்புரையைத் தொடர்வாரெனில் இழப்பீட்டு வழக்கை அவர் சந்திக்க நேரிடும் என இதன் மூலம் எச்சரிக்கை செய்ய விழைகிறேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner