எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- ஆனந்த் கே. சஹாய்

 

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவர் வழிகாட்டி நடத்திச் செல்லும் பா.ஜ.க. வின் ஆட்சி அமைப்புக்கும், இந்தப் புத்தாண்டு சிறுமைப்படுத்தும் வழியிலேயே பிறந்துள்ளது. கடந்த ஆண்டின் முடிவில்  குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடி பெற்ற வெற்றி, அவரது கட்சியால் கொண்டாடப்பட முடியாததாக உள்ளது; இதன் காரணம், அந்த வெற்றியே கேலிக்கு உள்ளான தன்மையில் இருப்பது என்பதுதான்.

இந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் தலைமையில் இந்தியா இதுவரை கண்டிராத மிகமிகக் குறைந்த பொரு ளாதார வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை  புதிய ஆண்டு பிறந்தவுடன்,வெளிவந்துள்ள அதிகார பூர்வமான அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மோடி தொட்டதெல்லாம் மண்ணாகிக் கொண்டே போயுள்ளது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகவே ஆகிக் கொண்டு வருகிறது. இந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் நற்பேறான பிறப்பைப் பெற்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவரே நமக்குத் தெரிவித்துள்ளபடி, முதன் முதலாக குஜராத் சட்டமன்ற உறுப்பினராக நுழைந்தபோதே முதல்வராகவும், மக்களவையில் முதன் முதலாக நுழைந்தபோதே பிரதமராகவும் நுழைவதற்கான நற்பேற்றினை அவர் பெற்றிருந்தார்.

ஆனால், அவர் மேற்கொண்ட ஆழ்ந்த, நற்சிந்தனை யற்ற செயல்பாடுகள் காரணமாக, இத்தகைய அவரது தனிப்பட்ட நற்பேறு, நாட்டிற்கான நற்பேறாக மாறவில்லை. அவரது பணமதிப்பிழப்பு நடவடிக்கை இதற்கு ஒரு சரியான எடுத்துக் காட்டாகும். மக்கள் மீது பொருளாதாரப் பெரும் சுமைகளும், கடும் துன்பங்களும் சுமத்தப்பட்ட ஒரு பிரதமரின் ஆட்சிக் காலம் என்பதற்காகவே மோடி வரலாற்றில் நினைவு கூறப்படுவார். சட்டத்தின் கரங்களால் கட்டுப்படுத்த முடியாத கலவர கும்பல்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக,  சமூகத்தின் பல்வேறு பகுதிகளை இணைத்திருந்த சமூக, கலாச்சார ஒட்டுறவுகள் சிதைந்து போயின.

மோடியின் மக்களவைத் தொகுதியான காசி விசுவ நாதரிடம்  செய்து கொள்ளும் பிரார்த்தனைகளால்  கூட மோடியைக் காப்பாற்ற முடியாது. மோடியின் ஆட்சியில் இந்தியாவில் நடைபெற்று வரும் புனிதமற்ற செயல்களால் போலே பாபாவை மனநிறைவடையச் செய்ய இயலாது. கடவுளுக்குக்கூட அவருக்கென்ற ஒரு தனி மனம் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில கோரக்நாத் மடத் தலைவரின் அல்லது   குஜராத்திலோ அல்லது வேறு இடங்களிலோ நீதித்துறை, அமித்ஷாவின்  கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருப்பது பற்றி இந்திய தலைமை நீதிபதி என்ன நினைத்தாலும் சரி, உண்மையான மாஸ்டர் ரோலராக இருக்கும்  அமித் ஷா ஆகியோரின் அச்சுறுத்தல்களாலோ அல்லது புகழ்ச்சியுரைகளாலோ கடவுளின் மனத்தை  வளைக்க முடியாது.

மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி அறுதிப் பெரும் பான்மை பெறுவது என்பது எப்போதோ ஒருமுறை அரிதாக நடக்கும் நிகழ்வாகும். அத்தகைய வாய்ப்பு மோடியின் கைகளில் 2014 இல் கிடைத்துவிட்டது. அத னைக் கொண்டு, அவர் விரும்பும் எந்த மக்கள் எதிரியை வேண்டுமானாலும் அவரால் தோற்கடித்திருக்க முடியும்.

அதற்கு மாறாக அவர் சில்லறை விஷயங்களில், இல் லாத நிழல் மனிதர்களைத் தேடி அவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.சின் எதிரிகள் என்று புனைந்துரைத்து,  முத்திரை குத்துவதில் மோடி, கவனம் செலுத்தினார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம், வறுமை, விவசாயிகளின் துன்பங்கள், சிறு தொழில் அதிபர்களின் இன்னல்கள் போன்ற உண்மையான மக்கள் பகைவர்கள் எவரும் தொடப்படவே இல்லை.

இதன் காரணம்,  21 ஆவது நூற்றாண்டு பற்றிய நிதர்சனமான உண்மையைக் கற்பனை செய்து பார்க்க இயலாதவர் என்று மோடி மெய்ப்பித்துவிட்டதுதான். பெரிய அளவில் அவரால் சிந்தித்துப் பார்க்க இயல வில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலி பரப்பப்படும் வானொலி உரைகளில், தனது எதிரிகளை அழித்து விடுவது பற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டு,  சிறுசிறு விஷயங்களைப் பற்றி உரத்த குரலில், பேசுவதிலேயே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அவரது கருத்து வறுமை இருந்து வருகிறது.  பாகிஸ்தானின் உதவியுடன் குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரசு சதிசெய்தது பற்றி அவர் குற்றம் சாட்டியபோது , இது நன்றாக வெளிப்பட்டது. மிக உயர்ந்த சர்தார் வல்லபாய் படேலின் சிலையை உருவாக்குவது போன்ற  சில்லறை விஷயங்களில் மோடி அதிக கவனம் செலுத்துகிறார். இது கூட குஜராத் வாக்காளர்களிடையே செல்லுபடியாகவில்லை.

நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களை அன்னியப் படுத்திவிட்டது. இந்து மதத்தின் மத அடையாளங்கள் மற்றும் பெரும்பாலான மக்களின் நம்பிக்கை என்ற  திரை மறைவுகளின் கீழ் அவர் செயல்பட்டதால்,  அந்த உண்மை உடனடியாக வெளிப்படவில்லை. எளிய மக்கள் இவற்றையெல்லாம் நம்பிவிட்டனர். ஆனால், அழுகிப் போகும் அளவுக்கு அந்த செயல்பாடுகள் பரவத் தொடங்கிவிட்டன.

ஆண்டுக்கு எட்டு சதவிகித பொருளாதார வளர்ச்சியை பத்தாண்டு காலமாக அளித்து வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தொடர்ந்து மோடி ஆட்சிக்கு வந்தார். என்றாலும் அதன் இறுதிக் காலத்தில் இந்த வளர்ச்சி குறையத் தொடங்கியது தெரிய வந்தது.

எப்போதும் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக, உலக அளவிலான பொருளாதார கண்ணோட்டமும் இந்தியாவில் மோடி அரசுக்கு ஆதரவாகவே இருந்தது. இந்த ஆதரவு முந்தைய ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கவில்லை.  வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறந்தவர்  என்ற அரசியல் பெருமை மோடிக்குக் கிடைத்தும், அவர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், அந்த நல்வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டார்.

மோடிபதவியேற்ற 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வணிகம் வளர்ச்சி அடையவில்லை.  தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் குறைந்து போனது. நிலைமை சீரடைந்துவிட்டது என்பது பற்றி எப்போதாவது தோன்றும் நம்பிக்கையும், இப்போது உள்ளது போல, பகல் மாறி இரவு வரும் நேரத்தில் சிதைந்து போகிறது.

பல மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல்கள் 2018 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.கட்சியின் முக்கிய ஆதரவாளர்களாக உள்ள நகர்ப்புற நடுத்தரப் பிரிவு மக்களுக்கு வர உள்ள மத்திய வரவு - செலவு திட்டத்தில் ஏதேனும் சில சலுகைகள் அறிவிக்கப்படலாம்.  நாட்டின் பொருளாதாரம்  தொடர்ந்து வளர்ச்சி பெறத்  தவறி  வருவதும், பெரும் அளவு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருவதும், அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதும் பா.ஜ.க.ட்சியின் பால் அவர்களுக்கு உள்ள பாசத்தைத் தக்க வைத்துக் கொள்ள அச் சலுகைகளால் முடியுமா என்பது சந்தேகத்திற்கு இடம் அளிப்பதாகவே இருக்கிறது.

இசுலாமியநம்பிக்கைகளுக்குஎதிரானதுஎன்று கருதப்படும், இந்து இதிகாச புராணங்களைப் பயன் படுத்துவது,  இந்துக்களின் பெருமையை மீட்டெடுப்பது என்ற இந்தக் கழைக் கூத்து எவ்வளவு காலத்துக்கு எடுபடும்?  இந்திய ஆடிட்டர் அன்ட் அக்கவுண்டன்ட் ஜெனரல் திட்டமிட்டு எதிர்கட்சிகளுக்கு எதிரான ஒரு நோக்கத்துடன் உருவாக்கிய 2ஜி ஊழல் குற்றச்சாட்டு முழுவதுமாக நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால், எதிர்கட்சியினரை ஊழல்வாதிகள் என்று  குற்றம் சாட்டும் அவர்களின் தந்திரமும் பலிக்கவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான துணிவும் அற்றதாக மத்திய புலனாய்வுத் துறை ஆக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவின் கிராமப்புற சமூகமோ, தலைகீழான மாற்றத்தில்சிக்கியுள்ளது.சிலஆண்டுகளுக்குப்பிறகு, 2016 இல் நமக்கு நல்ல மழை கிடைத்தது. ஆனால், முட்டாள்தனமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப் பிழப்பு நடவடிக்கை பருவ மழையால் விவசாயிகள் நன்மை பெறும் வாய்ப்பை அடியோடு அழித்துவிட்டது.

மிக மோசமான அளவில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரித்திட்டம்,  சரியான திட்டமிடப்படாமல் அவசரம் அவசரமாக அள்ளித் தெளித்த கோலத்தில் நடைமுறைப் படுத்தியதும், பெரும் அளவிலான வேலை வாய்ப்புகளையும்,  ஏற்றுமதி வருவாயையும் ஈட்டித் தரும் விவசாயம் மற்றும் முறைசாராத் துறை ஆகியவை எதிர்மறை எதிர்பார்ப்புகளோடு போராடி வருகின்றன. 1947 ஆகஸ்ட் 14 அன்று இரவு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடு சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக தேசியக் கொடியை ஏற்றி, இங்கிலாந்து நாட்டின் கொடியை இறக்கிய விழாவில் முன்னாள் பிரதமர் நேரு பேசியதைப் போல, மிகுந்த ஆடம்பரத்துடன் இந்த சரக்கு மற்றும் சேவை வரி திட்ட அறிமுக விழாவை நாடாளுமன்றத்தில் 2017 ஜூலை மாதத்தில் நடத்தி மோடி உரையாற்றியது, முன் எப்போதும் வரலாற்றில் காண முடியாத ஒருகேலிக் கூத்தாகவே அமைந்தது.

மோடி குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் இந்திய நாடு நோய்வாய்ப் படுக்கையில் தள்ளப் பட்டுள்ளது. வளமான எதிர்காலம் என்ற உறுதிமொழி நிறை வேற்றப்படும் நோக்கமற்ற ஒப்பந்தம் என்று தோன்றுவதால்,  அது இன்று வெற்றுக் கூச்சலாகக் கருதப்படுகிறது.

ஒப்பிட்டுக் காண இயலாத அமித்ஷாவின் தந்திரமான சொற்களை நாம் நினைவு படுத்திப் பார்த்தோமானால், தேர்தல் நேரத்தில் வீசப்படும் வாக்குறுதிகளில் ஒன்றுதான் அது என்றும், உண்மையாக நிறைவேற்றும் நோக்கம் கொண்டவை அல்ல என்பதும் நன்றாகவே தெரிய வரும்.

நமது சமூகம் ஒரு மாபெரும் குழப்பத்திலும், சிக்கலிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.  நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஆனால் மேலும் பல விவகாரங்கள் இன்னமும் மிக மோசமான நிலையில் உள்ளன. ஏழைகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் வெளிப்படையாக, துணிவுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தங்களது வாழ்வாதாரத்திற்காக வளைகுடா செல்லும் இந்திய தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் கடவுச் சீட்டில், மற்றவர்களுக்கு அளிக்கும்  வண்ணத்தில் இருந்து மாறுபட்ட ஒரு வண்ணத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசமைப்பு சட்டப்படியான நிறுவனங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. குஜராத் தேர்தலுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் பற்றி செய்தி வெளிவந்தது. தேர்தல் ஆணையம் செய்த தந்திரங்கள் எவரையும் முட்டாள்களாக ஆக்கிவிடவில்லை. இந்தி யாவின் மக்களாட்சி என்பது நீண்ட நெடுஞ்சுவருக்கு முன்னதாக நிறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 16.01.2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner