எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டின் பொருளாதார முன்னேற்றமோ, வேலை வாய்ப்பு உருவாக்கமோ மோடியின் செயல்திட்டம் அல்ல -

மக்களின் மனதில் இருந்து நேருவை அகற்றுவது ஒன்றே அவரது செயல்திட்டம்

- ஆனந்த் கே. சஹாய்

‘புதிய இந்தியா’ என்பது பிரதமர் நரேந்திர மோடி யின் பதிவு செய்யப்பட்ட உரிமைக் காப்பீடு பெற்ற தலைப்பாகும். இளைஞர்களின் ஆற்றல்களைத் தொகுத்துப் பயன்படுத்த இயன்ற ஆற்றல் நிறைந்த இந்த முழக்கம் 2014 பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கவில்லை.

அய்ந்து ஆண்டு கால ஆட்சியில் நான்கு ஆண்டு கள் கழிந்துள்ள நிலையில், அனைத்துப் பிரிவு மக்களி டையேயும் வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் பிரச்சினை கட்டுக்குள் அடங்காத அதிக அளவில் நிலவும் போது, மோடியின் பா.ஜ.க.வினால் செய்ய இயன்ற மிகச் சிறந்த செயல் என்னவென்றால், முட்டாள் தனமான பகோடா வளர்ச்சி மற்றும் பகோடா அரசியல் என்ற கருத்துகளுக்கு இந்திய இளைஞர்களை ஈர்த்துக் கொண்டு வந்திருப்பதை வேண்டுமானால் கூறலாம். ஆசிய நாடுகளில் குறிப்பிடத்தக்க ஒரு பங்கினை ஆற்ற இயன்றது இந்தியா என்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கான அடையாளமாக இந்த பக்கோடா நிச்சயமாக இருக்க முடியாது. புது யுக இந்தியாவைப் பற்றிய உண்மையான அர்த்தத்தை இந்த பக்கோடா வியாபாரம் அளிப்பதாகவும் நிச்சயமாகக் கூறமுடியாது.

ஆனால், வியப்பளிக்கும் வகையில், இனை அனைத்தும் முடியும் என்று மோடி நம்புகிறார். வேலையில்லாத் திண்டாட்டம் வளர்ந்து வருவது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்ட பொழுது, மோடி இந்த நிலைக்குக் காரணங்களைக் கூறி,  தான் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு, பதில் அளிப்பதற்கான எந்த  வித முயற்சியையும் மேற் கொள்ளாமல், உணர்ச்சி வயப்பட்டவராக, உடனடியாக, இரக்கம் அற்ற முறையில்  பகோடா தயாரிப்பதும் ஒரு தொழில்தான் என்று பதில் அளித்தார்.

பிரெஞ்சுப் புரட்சியின் போது புரட்சியாளர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட அரசி மேரி ஆன்ட்வாய்னெட் ‘‘உண்பதற்கு ரொட்டி இல்லை என்றால் கேக் சாப் பிடட்டுமே’’ என்று கூறியதை இது நமக்கு நினைவு படுத்துவதாக இருக்கிறது.

இளைஞர்களுக்கு பயன் தரும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் மோடி அரசின் சாதனை குறிப்பிடத் தக்க அளவிலோ, பாராட்டும் அளவிலோ இல்லை. மிகவும் பெருமை பாராட்டிக் கொண்ட, பிரதமர் வாய் கிழிய உரத்த குரலில் பிரச்சாரம்  செய்து வந்த ‘ஸ்கில் இந்தியா’,  ‘ஸ்டேன்ட் அப் இந்தியா’,  ‘பீம் வேலை வாய்ப்பு’ போன்ற திட்டங்களால் நமது இக்கால வாழ்வில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள பயன் நிறைந்த வேலை வாய்ப்புகளைச் சுட்டிக் காட்ட பிரதமரால் இயலவில்லை என்று கூறுவதே நேர்மையானதாக இருக்கும்.

மோடி அரசினால் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பற்றிய புள்ளி விவரங்கள் எவையும் பெருமையுடன் பேசத் தக்கவையாக இல்லை. இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. பொருளாதார வளர்ச் சிக்கான முதலீடுகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் மிகமிகக் குறைந்த அளவிலேயே மோடி அரசில் இருந்துள்ளன. பகோடா விற்பது போன்ற சேவைத் துறையும் கூட மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றதாகத் தோன்றவில்லை. மேலும் , எந்தவித மதிப்பும் மரியாதையும் அற்ற  இது போன்ற வேலைகளில்   கிடைக்க இயன்ற வருவாய் மிகக் மிகக் குறைவாகவே இருக்கும்; இந்தியா பெரிய அளவில் முன்னேற்றமும் வளர்ச்சியும் அடையும் என்று மோடி அரசினால் தந்திரமாக வடிவமைக்கப்பட்ட முழக்கங்களைப் பற்றி விளம்பரம்  செய்யக்கூடப் போதுமானது அல்ல அது.

மோடியின் நம்பிக்கைக்குரிய சீடரான பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தனது ஆசானின் வழித் தடங்களை மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றியே நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை பேசினார்.  பகோடா என்ற சொல்லை மோடி உச்சரித்த உடனேயே, அமித்ஷா அக்கருத்தை ஏற்றுக் கொண்டு அர்த்தமுள்ள ஒரு பொருளாதார நடவடிக்கையே பகோடா விற்பதும் என்று கூறப்பட்டதை எள்ளி நகையாடிய எதிர்கட்சிகள் மீது தாக்குதல் தொடுத்தார்.

ஒரு தேசிய கட்சி, அதுவும் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஒரு கட்சி, இந்த வழியில் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கி முன்னேற்றம் அடையச் செய்வோம் என்றும், இந்திய இளைஞர்களுக்கு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கித் தருவோம் என்றும் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மோடியின் அரசு தவறிவிட்டது.

மோடிக்கு மாபெரும் உலகத் தலைவர் என்ற பட்டம் சூட்டுவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டிருக்கும் நேரத்தில், பா.ஜ.கட்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த இந்தியாவைப் பற்றியும், மிகவும் இழிவான ஒரு கருத்தையும், எண்ணத்தையும் உலக மக்களின் மனங்களில் உருவாக்கும் செயலாகும் இது.

என்ன செய்துவிட்டார் என்பதற்காக மோடிக்கு மாபெரும் உலகத் தலைவர் என்ற பட்டம் ஏன் சூட்டவேண்டும்? யாருக்குத் தெரியும்? ஒரு வேளை,  காவிக்கட்சியை நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் பெரும்பான்மை பெறச் செய்து ஆட்சியைக் கைப் பற்றியதற்காக வேண்டுமானால், இருக்கலாம். உலக அரங்கில் இந்த இந்திய பிரதமர் ஏற்படுத்தியுள்ள எந்தவிதமானமிகச்சிறியஅடையாளம்கூடகாணக் கிடைக்கவில்லை. இந்தியாவின் அண்டை நாடுகளு டனான உறவு பாராட்டி சொல்லிக் கொள்கிற அளவில் இல்லை. அமெரிக்காவினனுடனான உறவோ, இந்தி யாவை ஒரு வணிகச் சந்தையாகவும்,  ராணுவ தள மாகவுமே அமெரிக்கா கருதும் நிலையிலேயே உள்ளது.

மோடியைப் போற்றித் துதி பாடும் சொல்லாடல்களை எப்போதுமே தேடிக் கொண்டிருக்கும் பா.ஜ. கட்சியி னருக்கு,  மோடி  ஒரு புதிய நேருவாகவும், ஒரு புதிய காந்தியாகவும், ஒரு புதிய மாசேதுங்காகவும், ஒரு புதிய தலாய் லாமாவாகவும், ஏன் ஒரு புதிய மார்லின் மன்றோவாகவும் கூட - அனைவரும் ஒன்று கலந்த கலவையாகவும் தோன்றலாம். என்றாலும், பிரச் சாரத்தின் ஒளி மங்க மங்க, அதில் இருந்த பொய்மை  அனைத்தும் வெளிப்பட்டு உண்மைகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

கடந்த முறை கேள்விப்பட்டபோது, பா.ஜ.க. பக்கோடா விருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்யவும், பகோடா விற்பனை நிலையங்களைத் திறந்து வைக்க வும் முயற்சிப்பதாகத் தெரிய வந்துள்ளது. கீழான வேலையை செய்வதற்காக எதிர்கட்சிகள் செய்யும் கிண்டலுக்கு எதிராக  நேரடியாகத் தாக்குதல் நடத்தவும், மறைமுகமாக மக்களுக்குத் தெரிவிப்பதாகவும் அமைந் துள்ளது இது. இதுதான் மோடி யுகத்தின் ‘‘தொழில்நுட்ப மேம்பாடு’’ ஆகும்.

சாய்வாலா அரசியல் காலம் கடந்ததாக ஆகி விட்டது. நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதேனும் நம்பிக்கை தரவேண்டும் என்று பிரதமர் விரும்பினால்,  புதிய புதிய சொல்லாடல்களையும், தந்திரங்களையும் அவர் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அனல் கக் கும் உரத்த குரலில், எதிர்கட்சிகளை கடுமையாகச் சாடிக்கொண்டுபொதுமக்களுக்காகமோடிநிகழ்த் தும் பிரசங்கங்கள்மூலம் ஓரளவு புகழின் உச்சிக்கு செல்லத் தொடங்கினார் என்று கூறலாம். அவை யெல்லாம் தற்பெருமைக்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டும், மற்றவர்களை இழிவு படுத்தும் மொழியிலேயே இருப்பவையாகும். இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும், பொய்மைகளை முழுங்கி செரித்துக் கொண்டும் இருந்த மக்கள் தற் போது விழிப்புணர்வு பெற்றவர்களாக தாங்கள் முட் டாள்களாக்கப்பட்டதை உணர்ந்து கொண்டுள்ளனர். மேற்கொண்டு மக்கள் செயல்பட வேண்டிய நேரமிது.

இந்த பிரசங்கங்கள் எல்லாம் பெரும்பாலும் அண்மைய புள்ளிவிவரங்களின்படி அல்லது ஊகத் தினால் பெறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்படு கின்றன. இந்தியர்கள் பலரும் தங்களுக்குத் தேவையான தகவல்களை, எல்லையற்ற ஊகங்கள் மலிந்து கிடக்கும் வாட்ஸ்அப் செய்திகளை அப்படியே உண்மை என்று தேடி எடுத்துக் கொள்ளஇயன்ற  ஒரு காலத்தில், சந் தேகம் அற்ற பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவே தயாரிக்கப்படும் பிரசங்கங்கள் ஆகும் இவை.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி செலுத்தும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, அவரது தரத்தை வைத்துப் பார்த்தாலும் கூட, மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது. பிரதமரின் முக்கிய செயல்திட்டமே நேருவினை நாட்டு மக்களின் நினைவில் இருந்தும் கூட வெளியேற்றுவதாகவே அமைந்திருந்தது என்பது நன்றாகவே வெளிப்பட்டது. அவரது செயல் திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவோ, அறிவியல் கல்வி வளர்ச்சியோ அல்லது இந்தியமக்களுக்கு மேம்பட்ட வாழ்வினை அளிப்பதாகவோ அது இருக்கவில்லை.

மோடியின் செயல்திட்டமே, ஆர்.எஸ்.எஸ்.சின் கற்பனையிலான புதிய இந்தியாவை ஒன்றிணைத்துக் கட்டமைப்பதுதான். சுருக்கமாகச் சொன்னால், நாம் அறிந்திருக்கும் அனைத்து அறிவியல் தகவல்களுமே  வேதங்களில் இருக்கின்றன என்பதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதும், இந்திய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்துக்கு இந்துக்கள் அல்லாத இந்தியர்கள் அளித்த  பங்களிப்பை மறுப்பதும்தான்.

காந்தியையும், அவரது நூல்களையும் சாடும் ஆர்.எஸ்.எஸ்.சின்அடிப்படைக்கோட்பாட்டுஆசா னான,  ஆதரவாளரான பெரும் பேச்சாளர் தீனதயாள் உபாத்யாயாதான் இவர்களது ‘புதியஇந் தியாவில்’,  புதிய காந்தி ஆவார். இந்த செயல் திட்டத்தை நிறைவேற்றும் வழியில் தடையாக நிற்பது நேரு என்பவரின் மாபெரும் தோற்றம்தான். வரலாற்றைப் புதிதாகக் கண்டுபிடித் தேனும், மோடி நாடாளுமன்றத்தில் செய்ததுபோல, நேரு காட்டமாக இழிவுபடுத்தப்படவே வேண்டும்.

நேரு இல்லாத இந்திய மக்களாட்சியைப் பற்றி நினைத்தும் கூட பார்க்கமுடியாது என்ற நிலையில்,  இந்தியாவில் லிச்சாவி காலத்திலும் கூட மக்களாட்சி நடைமுறை இருந்து வந்துள்ளது என்ற ஒரு கோட் பாட்டை மோடி கண்டு பிடித்துப் பேசினார்.

அதன் பின் வழக்கம் போல வல்லபாய் படேல் கதைதான். வல்லபாய் படேல் மட்டும் சுதந்திர இந்தி யாவின் முதல் பிரதமராக இருந்திருந்தால்,  காஷ்மீர் பிரச்சினையே எழுந்திருக்காது என்று மோடி பேசி யுள்ளார்.

பாகிஸ்தானுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இணைப்பதற்கான சட்டம் ஒன்று மன்னரால் இயற் றப்பட்ட போதிலும், அது இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதப்படாது என்றும், ஆனால் பாகிஸ் தானுடன் இணைய அவர் விரும்பினாலும், சுதந்திர தினத்துக்கு முன்பு அதுபற்றி முடிவு எடுக்கவேண்டும் என்றும்,   நேருவும், படேலும் ஒன்று சேர்ந்துதான் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்குக்குக் கூறினார்கள் என் பதை எவருமே பிரதமர் மோடியிடம் கூறவில்லை என்றே  தோன்றுகிறது.

நேருவை காந்திதான் பிரதமராக ஆக்கினார் என்பதையும், பிரதமர் பதவியை எவரிடமிருந்தும் நேரு பறித்துக் கொள்ளவில்லை என்பதையும் எவரும் மோடியிடம் கூறவில்லை என்றே தெரிகிறது. ஆனால் இப்போது அதனை மோடி மாற்றுவதற்கான காலம் கடந்துவிட்டது. வேண்டுமானால், மக்கள் பிரதமர் பதவியிலிருந்து மோடியை மாற்ற முடியும்.

நன்றி: ‘‘டெக்கான் கிரானிகிள்’’, 12.02.2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner