எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்துத்துவாக்களின் அகண்ட பாரதம் போல்

இஸ்ரேலின் அகண்ட இஸ்ரேல் கனவிற்காக பலியாகும் சிரியா (2)

9.3.2018 அன்றைய தொடர்ச்சி...

சவுதி அரேபியாவிற்கு என்ன இலாபம்?

அய்.எஸ்.அய்.எஸ்.சுக்கு நேரடியாகவும், மறைமுக மாகவும் உதவிவருவது சவுதி அரேபியாதான் என்பது உலகறிந்த இரகசியம். சவுதி அரேபியாவிலிருந்து அய்ரோப்பாவிற்கு பூமிக்கடியே குழாய்கள் அமைத்து பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை எடுத்துச்சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு சிரியாதான் மிகமுக்கியமான பகுதியாகும். சிரியாவின் தற்போதைய ஆட்சி கவிழ்க்கப் பட்டாலோ, சிரியாவை உடைத்து அதன் ஒரு பகுதியில் தனக்குச் சாதகமான ஓராட்சி அமைந்தாலோ தான் தன் னுடைய விருப்பம் நிறைவேறும் என்பதை சவுதிஅரேபியா நன்கு உணர்ந்திருக்கிறது.

அதுதவிர மத்தியகிழக்கின் ஒரே ரவுடியாகவும், அமெரிக்காவின் ஆத்மார்த்த அடியாளாகவும் இருப்பது யார் என்கிற போட்டியில் மற்ற எல்லோரையும்விட முன் னணியில் இருப்பதும், எப்போதும் இருக்க விரும்புவதும் சவுதிஅரேபியாதான். ஜனநாயகத்தின் எந்தக்கூறுகளும் இல்லாத சவுதிஅரேபியா, அமெரிக்காவின் நட்புப்பட்டி யலில் இருந்துகொண்டேயிருக்கவே விரும்புகிறது.

சிரியாவின் பிரச்சினை மட்டுமா இது?

சிரியா தகர்க்கப்பட்டால், ரஷியாவின் எதிர்காலம் கேள்விக்குறியே. இந்நிலையில் சிரியாவில் நடக்கும் போர் என்பது ரஷியாவுக்கு வாழ்வா சாவா போராட்டமே. ரஷியாவில் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்கிறார்கள். சிரியாவை ஆக்கிரமித்த பின்னர், அதேபோன்றதொரு ஆக்கிரமிப்பும் பயங்கரவாத ஊடுருவல்களும் ரஷியா வுக்குள்ளும் நடத்துவதற்கான திட்டமும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தான் மட்டுமே உலகை ஆளவேண்டும் என்கிற அமெரிக்காவின் பேரரசுக் கனவு மெல்லமெல்ல தகர்ந்து வருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பு, அவர் களுக்கென தனியான வங்கியினை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கும் திட்டம், ரஷியா-சீனாவின் ஷாங்காய் கார்ப்பரேசன், சீனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி, கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக இருந்தாலும் சீனாவும், ரஷியாவும் சமீப காலத்தில் அய்.நா.சபையில் செலுத்தி வரும் ஆதிக்கம், அய்.நா.சபையில் சில முக்கியமான நேரங்களில் சீனாவும், ரஷியாவும் தங்களது வீட்டோவைப் பயன்படுத்தி அமெரிக்காவை முறியடிப்பது, அய்ரோப்பாவில் ஜெர்மனியின் மேலாதிக்கம், மத்தியதரைகடல் நாடு களோடு தன்னுடைய உறவினை பலப்படுத்திவரும் பிரான்ஸ், தென்னமெரிக்காவில் பலவிதங்களில் வளர்ந்து வரும் அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள்  இவையெல்லாமுமாக சேர்ந்து அமெரிக்காவை அச்சம் கொள்ள வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

உலகின் ஒரே ஏகாதிபத்தியமாக வளர்ந்து விடவேண்டும் என்கிற அமெரிக்காவின் இலட்சியத்தை அசைத்துப்பார்க்கும் சக்திகள் உலகெங்கிலும் வளர்ந்து வருவதை அமெரிக்கா சற்று தாமதமாகவே உணர்ந் திருக்கிறது. நேட்டோ, அய்.நா.சபை, இஸ்லாமிய பயங்கர வாதம் என பலவற்றின் உதவியோடு தனது கனவினை நினைவாக்கப் புறப்பட்டிருக்கிறது அமெரிக்கா. நேட்டோ வின் செலவுகளில் 75விழுக்காடு அமெரிக்காதானே ஏற்றுக்கொள்கிறது. அதனால் அமெரிக்கா வைத்ததுதானே நேட்டோவில் சட்டம்.

லிபியாவை போல சிரியாவையும் எளிதில் தகர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டப்பட்டது. சிரியாவில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடிந்திருக்கிறது; இலட்சக்கணக்கானோரை அகதிகளாக்க முடிந்திருக்கிறது. ஆனால், சிரியாவை இன்னமும் ஏகாதிபத்திய அமெரிக் காவினால் ஆக்கிரமிக்கமுடியவில்லை. சிறுபான்மை அலவித்களால் ஆளப்படும் சிரியாவினை கைப்பற்றுவது அத்தனை கடினமாக இருக்காது என்றே அமெரிக்கா தப்புக்கணக்கு போட்டது.

ஆனால், சிரியாவின் உயர் அரசு அதிகாரிகள், ஆட்சியதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், இராணுவ ஜெனரல்கள், இராணுவப் படையினர் என எல்லா மட்டத்திலும் பொறுப்பிலிருப்பவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். அதனால், அமெரிக்கா நினைத்ததைப் போல சிரியாவில் சிறுபான்மையினத்தவரின் ஆட்சிக்கு எதிரான பெரும்பான்மை மக்களை கிளர்ந்தெழ வைக்கமுடியவில்லை.

சிரியாவின் இராணுவத்தை இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோகூட வெல்லமுடியவில்லை. அய்.எஸ்.அய்.எஸ். ஆக இருந்தாலும் இன்னபிற அமெரிக்க ஆதரவு பயங்கரவாத குழுக்களாக இருந்தாலும், சிரியாவின் இராணுவத்தை வீழ்த்தாமல் சிரியாவை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்கவே முடியாது. ரஷியாவும் தன்னுடைய வாழ்வா சாவா போராட்டத்தில் சிரியாவுக்கு துணையாக போராடிக் கொண்டிருக்கிறது.

ஹிஸ்புல்லாவும் சிரியா இராணுவத்தோடு இணைந் திருக்கிறார்கள். போரின் உக்கிரத்தைப் பொருத்தவரையில் ஈரானும் சிரியாவுக்கு ஆதரவளிக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நிகழ்வின் சாட்சியங்கள்:

1.            2011 ஆம் ஆண்டில் மார்ச் 18 ஆம் தேதி துவங்கப்பட்ட உள்நாட்டு புரட்சியில் கொல்லப்பட்ட மக்கள் எண் ணிக்கை 2,40,381 ஆகும்.

2.            கொல்லப்பட்ட பொது மக்கள் எண்ணிக்கை 1,11,624 ஆகும்.

3.            கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11,964 ஆகும்

4.            கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 7,719 ஆகும்.

5.            போரில் காணமல் போனவர்கள் எண்ணிக்கை 30,000 ஆகும்

6.            போரில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஆகும்

7.            ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000ஆகும் .

8.            போரினால் காயமுற்று நிரந்தரமாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர்; அதாவது 2 மில்லியன் மக்கள் ஆவர்.

9.            போரினால் அருகே புலம் பெயர்ந்தவர்களின் எண் ணிக்கை 70 லட்சம் பேர்; அதாவது 7 மில்லியன் மக்கள் ஆவர்.

10.          அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பித்து ஓடி வந்து பிற நாடுகளில் அகதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சம் பேர்; அதாவது 4 மில்லியன் என்பது மிடில் ஈஸ்ட் மானிட்டர் வெளியிட்ட செய் திகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

உணவிற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான அகதிகள்:

1. அகதிகளுக்கு உணவு வழங்கும் நிலைமைகள் நாளடையில் குறைந்து வருகின்றது . நிதிப்பற்றாக்குறையின் காரணமாக உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க பணம் இல்லாமையால் முகாம்களுக்கு வெளியே உள்ள 2,29,000 அகதிகள் உணவின்றி தவித்து வருகின்றனர் .

2.இதன் விளைவாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீட்கப்பட்டு வேலைக்கு செல்வதும், பணங்களை வசூலிக்க வெளியே செல்வதும் அதிகரித்து வருகின்றது.

3. இதன்படி, ஜோர்டான் நாட்டின் அரசாங்கத்தின் கூற்று படி முகாம்களில் தங்க வைக்கபட்டிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 2,10,000 ஆவர்.

4. முகாம்களுக்கு வெளியே உள்ள அகதிகள் எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆவர். இது வரை 17,72,535 சிரியா அகதிகளை துருக்கி வரவேற்று உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.

ஸ்வீடன் செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமைக் குள்ளாகும் குழந்தை அகதிகள் :

1. தஞ்சம் புகுவதற்கு ஆதரவு தேடும் சிறுவர் - சிறுமிகள் 92% சதவிகிதம் பேர். அவர்கள் 13 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் ஆவர் .

2. பெற்றோர்கள் இன்றி அகதிகளாக ஸ்வீடன் வரும் குழந்தைகள் வாரம் தோறும் சுமார் 700 பேர் வருகை தருகின்றனர். அகதிகளாக வரும் குழந்தைகள் கடத்தல் காரர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு தாக்கப் பட்டும், உடல் ரீதியான மற்றும் மனம் ரீதியான காயங் களுக்கும் ஆளாகின்றனர்.

3. அகதிகளாக வரும் குழந்தைகள் பலரும் எலும்புகள் முறிந்த நிலையிலும், தலையில் தாக்கப்பட்டு காயங்களு டனும் வருகின்றனர். நாடு கடத்தப்படும் குழந்தைகள் பண்டமாற்றுவண்டிகளில் அழைத்து வரும் போது விழுவதாகவும் , குழந்தைகள் கன்னத்தில் அறைந்து காது கேட்கும் தன்மை இழப்பதாகவும் செய்திக் குழுக்கள் தகவல் அழிப்பது வேதனையாக இருக்கின்றன .

சிரியாவில் நடக்கிற போரானது, இரண்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான போரல்ல. உலகில் தன்னுடைய அதிகாரத்தை இழந்துகொண்டிருக்கிற அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய நாட்டிற்கும், தேசியவாத சக்தி களுக்கும் இடையிலான போர்.

உலகை தனது காலனியாக்கத்துடிக்கும் அமெரிக்கா விற்கும், சொந்த நிலத்தை பாதுகாக்கப் போராடும் சிரியாவின் மக்களுக்கும் இடையிலான போர். 1917ஆம் ஆண்டில் துவங்கிய மக்கள் புரட்சியின்மூலம் மக்களின் சொத்தாக உருவாகிக்கொண்டிருந்த ரஷியாவை 1990களில் தகர்த்து, சூறையாடிய வரலாறு, மீண்டும் நடந்து விடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிற ரஷியா வின் வாழ்க்கைப் போராட்டம்தான் இப்போர்.

ஆதாரம்: 'மிடில் ஈஸ்ட் மானிட்டர்'

தமிழில்: இரா. சரவணா ராசேந்திரன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner