எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- சுமிதா குப்தா

கடந்த மாதத்தில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகளை, உத்தரப் பிரதேசமம் மற்றும் பிகாரில் நடை பெற்ற மக்களவை இடைத் தேர்தல் முடிவு களுடன் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது,  எதிர்காலத்துக்கான ஓர் எடுத்துக் காட்டாக அவை விளங்குவதை பா.ஜ. கட்சியினால் அலட்சியப்படுத்த இயலாது. தனது கள நிலையை மத்தியிலும், மாநிலங் களிலும் ஆட்சி செய்து வரும் பா.ஜ. கட்சி ஆட்சியினர் பின்பற்றி வரும் கொள் கைகளின் பாதிப்பை  மறுமதிப் பீடு செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அகங்காரம் கொண்ட வர்களாக இருக்க இயலாது என்று பா.ஜ. கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ள கருத் தையும் பா.ஜ.க. தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும்.

2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற 282 தொகுதி களில் 93 தொகுதிகள் உத்திரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் இருந்து கிடைத் தவையாகும். பிகாரில் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கும் பின், நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சியை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்ப வைப்பதற்கான செயல்பாடுகளில் தீவிரமாக பா.ஜ.க. ஈடுபட்டதற்கான முக்கியமான காரணமே இதுதான். எனவே, 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பா.ஜ.க. விரும்புமேயானால், இத்தகைய பின்னடைவுகளுக்கு இடம் கொடுக்க பா.ஜ.கட்சியினால் இயலாது.

எதிர்கட்சிகள் இன்னமும் பிளவு பட்ட நிலையிலேயே இருந்த போதிலும்,  சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு புரிதலின் அடிப்படையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின், அவரது கோட்டை போன்ற  கோரக்பூர் மக்களவை தொகுதியிலும், துணை முதல்வர் கேசவபிரசாத் மயூராவின் பூல்பூர் மக்களவைத் தொகுதியிலும் பெற் றுள்ள வெற்றி,  வாய்ப்பு உள்ள எத்தனை தொகுதிகளில் முடியுமோ அத்தனை தொகுதிகளிலும்  பா.ஜ. கட்சிக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை 2019 மக்கள வைத் தேர்தலில் நிறுத்துவதற்கான ஒரு முன்மாதிரியை உருவாக்கித் தந்துள்ளது. இத்தகைய புரிந்துணர்வின் ஆற்றல் 2015 பிகார் சட்டமன்றத் தேர்தல்களின்போது சோதனை செய்து பார்க்கப்பட்ட போது,  2014 ஆம் ஆண்டு மக்கள வைத் தேர் தலில் மும்முனைப் போட்டியில் வெற்றி பெற்றுவிட்ட பா.ஜ.கட்சியினால், ராஷ் டிரிய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், காங் கிரஸ் கட்சியின் கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற முடியவில்லை.

இப்போதும் பிகாரில் எதிர்பார்க்கப் பட்டது போல அய்க்கிய ஜனதா தளம் - பா.ஜ.கட்சி தோற்கடிக்க இயலாத அளவுக்கு பலம் பெற்றிருக்கவில்லை என்பதையே அரேரியா மக்களவை தொகுதியிலும்,  ஜெகனாபாத் சட்ட மன்றத் தொகுதியிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது காட்டுகிறது. நிதிஷ்குமாரின் அணி மாற்றம், 2015 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்று  மக்கள் கருதியதால்,  லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பதனால் ராஷ்டிர ஜனதா தளக் கட்சிக்கு எந்த இழப்பும் ஏற்பட்டு விடவில்லை என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது. ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் லாலு பிரசாதின் மகனான தேஜேஸ்வர் யாதவ் தேர்தல் பிர சாரத்தை வெற்றி கரமாகக் கையாண்டதும்,  முஷராஸ் என்னும் ஏழ்மையான தலித் சமூகத் தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி கடைசி நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதும்தான்.

2014 இல் பெற்ற வியத்தகு வெற்றிக்குப் பிறகும் பா.ஜ.க. தனது அரசியல் அடையாளத்தை பிகாரில் வளர்த்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை. பா.ஜ. கட்சி தன்னந் தனியாகவோ அல்லது ஒரு கூட்டணி யிலோ இந்தியாவின் 21 மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளது. என்றாலும், வரி சையாக மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் களில்,  வெற்றி பெற்ற வேட்பாளருட னான நேரடிப் போட்டியில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்வி அடைந்து வந்துள்ளனர்.

உத்திரபிரதேச மக்களை இடைத் தேர்தல் தோல்விக்கு முதல்வர் யோகி ஆதித்தியானந்தே பொறுப்பு என்றும், எந்த விதத்திலும் அதற்கு மோடி அரசின் செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடு காரணம் அல்ல என்றும் பா.ஜ. கட்சியினரும் அவர் களது ஆதரவாளர்களும் சமாதானம் கூறிக் கொள்கின்றனர். பொதுத் தேர் தலின் போது செய்தது போல, இந்த இடைத் தேர்தல்களின்போது மோடியோ, அமீத் ஷாவோ பிரச்சாரம் மேற் கொள்ள வில்லை. லாலு பிரசாத்துக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபத் தினால்தான் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது என்று அவர்கள் விளக் கம் அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், கோரக்பூர் மற்றும் பூல்பூர் மக்களைத் தொகுதிகளில் நிலவும் கள நிலை அறிக்கைகள் வேறு விதமாகக் கூறுகின்றன. தலித்து களுக்கு எதிரான வன்முறை நிகழ்ச்சி கள் அதிகரித்து வரும் நிலையில், உத்திரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் உள்ள தலித்மக்கள் பா.ஜ.கட்சிக்கு எதிரான மாற்று ஒன்று தேவை என்று விரும்பி வாக்களித் துள்ளனர் என்று தெரிகிறது. இத்தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எவரும் இல்லாத தால், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு அளிக் கும்படி மாயாவதிக்கு தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, பா.ஜ.கட்சியைத் தோற்கடிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டதையடுத்து அவரது தொண்டர்கள் அதனை மிகுந்த ஆர்வத் துடன் செய்து முடித்தனர். உண்மையில், பா.ஜ.கட்சிக்கு எதிரான உணர்வு பல்வேறுபட்ட வாக்காளர் பிரிவுளால் வெளிப்படுத்தப்பட்டது. பா.ஜ.கட்சி யின் ஆதரவாளர்களாக இருந்த மத்திய வர்க்கத்தினர், நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியின் சீர்கேட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். யோகி ஆதித்தியநாத் அரசில் தாகூர் களுக்கு அதிக அதி காரங்கள் கொண்ட பதவிகள்  அளிக்கப்படுவதை உத்தரப் பிரதேச பார்ப்பனர்கள் விரும்பவில்லை. அனைத்து வகையான வணிகர்களும் முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை யாலும், பின்னர் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அனைத்தையும் விட முக்கியமாக, 2014 மற்றும் 2017 பொதுத் தேர்தலின் போது மிகுந்த கவனத்துடன் பா.ஜ.க. உருவாக்கியிருந்த ஜாதிக் கூட்டணி இப்போது உடைந்து போனது. குர்மி கட்சியான அப்னாதளத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தது. என்றாலும் பூர்பூரில் போட்டியிட்ட பா.ஜ.கட்சியின் குர்மி வேட்பாளர், சமாஜ்வாடி கட்சி யின் குர்மி வேட்பாளரால் தோற்கடிக்கப் பட்டார். கோரக்பூர் தொகுதியில் பரவலாக ஆதரவு பெற்றிருந்த நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத்தின் மகனான பர்வின் நிஷாதை வேட்பாளராக நிறுத்தி சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க. வேட் பாளரை தோற்கடித்துவிட்டது. சுருங்கச் சொல் வதானால், சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடையே முன்பு கடைபிடித்த அதே அணுகு முறையை இப்போதும்  வெற்றிகரமாக மீண்டும் ஒருமுறை பின் பற்றியுள்ளனர் என்றுதான் கூறவேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் கட்சி யாக துவக்கத்தில் இருந்த சமாஜ்வாடி கட்சி வரவர யாதவர்களின் கட்சியாகவே சுருங்கிப்போனது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியும் பெரும்பான்மையான  தனது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர்களை 2017 ஆம் ஆண்டு தேர்தலின் போது  இழந்து விட்டது. இப்போது அந்த கட்சி மாயாவதி சார்ந்துள்ள ஜாதவ்களின் கட்சியாகவே இருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண் டியிருக்கிறது. வாக்காளர்கள் வெளிப் படுத்தியுள்ள செய்தியை பா.ஜ.கட்சியினர் காது கொடுத்து கேட்டு, தக்கபடி நிச்சயமாக செயல்படுவார்கள். ஆனால் எதிர்கட்சிகளின் நிலை என்ன? தங்களது தன்உணர்வுகளைக் கைவிட்டுவிட்டு, தங்களுக்குள் இருக்கும் வேறுபாடு களையும் கடந்து, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கி வைத்த விட்டுக் கொடுக்கும் பண்பின் அடிப்படையில்,  பா.ஜ.கட்சிக்கு எதிராக ஓர் அணியை உருவாக்குவதற்கு உண்டான அரசியல்  உறுதிப்பாட்டினையும், முதிர்வையும்  எதிர்கட்சி தலைவர்கள்  வெளிப்படுத்து வார்களா? 2019 மக்களவைத் தேர்தலில், வலிமை மிகுந்த  பா.ஜ. கட்சியினை, ஒரு மாபெரும் கூட்டணியினால் மட்டுமே எதிர்கொண்டு வீழ்த்த முடியும்.

நன்றி: 'தி இந்து' 16-03-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner