எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ரொமிலா தாபர்

நேர்காணல்

(கடினமான அல்லது சிக்கல் நிறைந்த கருத்துகளையும், விஷயங்களையும் புரிந்து கொண்டு, அவற்றைப் பற்றி ஓர் அறிவார்ந்த வழியில் சிந்திக்கும் ஆற்றல் தான் நுண்ணறிவு என்பது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஓர் அரசினை, அதன் செயல்களுக்குப் பொறுப்பேற்று பதில் சொல்ல வைக்கும் அத் தகைய ஒரு பொது நுண்ணறிவாளரின் பணி,  மிக எளிதானதல்ல.  இன்றைய இந்தியாவில் ஒரு பொது நுண்ணறிவாளரின் பங்களிப்புதான் என்ன?  இந்தியாவின் தலை சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும், டில்லி ஜவஹர்லால் நேரு பல் கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியருமான ரொமிலா தாபர் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன்,  இந்தியாவில் மதச் சார்பின்மைக் கோட்பாட்டின் மீது மேற்கொள் ளப்பட்டு வரும் தாக்குதல்களைப் பற்றியும் பேசுகிறார்.  இந்து வேத இதிகாச புராணங்கள் வெறும் கட்டுக் கதைகள் அல்ல என்பதை மெய்ப்பிப்பதற்காக ஒரு குழுவை அரசு அமைத்தது பற்றிய விஷயத்திலாகட்டும் அல்லது இடைக்கால இந்து ராணியின் வரலாற்றை பத்மாவதி திரைப்படம்  தவறான வழியில் சித்தரித் துள்ளது என்று கடந்த ஆண்டு சில மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தது பற்றிய விஷயமாகட்டும், பண்டைக் காலம் முதல் வழிவழியாக நம்பப்பட்டு வரும் புராணக் கதைகளையும், மரபுகளையும்,  வரலாற்றிலிருந்து தெளிவாகப் பிரித்தறிவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைப் பற்றியும் அவர் பேசுகிறார். ஆனால், அறிவைத் திரட்டிப் பெறுவதன் மூலம் மட்டுமே, வரலாறும், வேத, புராண, இதிகாசங்களும் வரலாற்றாசிரியர்களுக்கு பல்வேறுபட்ட வழிகளில் அளிக்கும் செய்திகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார்)

 

கேள்வி: பண்டைய இந்திய வரலாற்றுக்கும், இரா மாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதை மெய்ப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறி மத்திய கலாச்சாரத் துறை அதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளதே;  இந்த முயற்சி பயனுள்ளது என நீங்கள் காண்கிறீர்களா? அல்லது பிரச்சினைகளை உரு வாக்கும் என்று காண்கிறீர்களா?

ரொமிலா தாபர்: வரலாறு என்பது பொதுவாகவே குழுக்களால் எழுதப்படுவதல்ல.  தனிப்பட்ட வரலாற்றா சிரியர்களால் எழுதப்படுவதே வரலாறு ஆகும்.  ஒரு வரலாற்றாசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என்று மதிப்பிட்டுப் பார்க்கும்படி ஒரு குழுவைக் கேட்கலாம். மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற இதிகாச நூல்களை குறிப் பிட்ட கால கட்டத்துடன் பொருத்திப் பார்ப்பது எப்போதுமே சிக்கல் நிறைந்தது என்பதாலும்,  முரண் பாடுகள்  மிகுந்தவையாக அவை ஆகிவிடுகின்றன.   ஓரு குறிப்பிட்ட காலத்தில் எழுதப்பட்டவைகளாக அவை இருப்பதில்லை என்பதுடன் அவற்றின் தோற்றம் முதற்கொண்டு வெவ்வேறு கால கட்டங்களில் அவற்றில் இடைச் செருகல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால்தான், சிக்கல் நிறைந்த மகாபாரத இதி காசத்தை பண்டர்கர் ஓரியண்டல் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியர் பதிப்பித்தபோது, அது எழுதப்பட்ட காலமும், இடைச் செருகல்கள் சேர்க்கப்பட்ட காலமும் கி.மு. 400 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 400 ஆம் நூற்றாண்டு வரை இருக்கலாம் என்று  அவர் குறிப்பிட்டிருக்கிறார்.       கேள்வி: இந்தியாவில் உள்ள நுண்ணறிவாளர்கள் இதழில் வெளியான ஒரு கட்டுரை பற்றி நீங்கள் வெளியிட்ட கருத்து "நாம் வாழும் சமூகத்தைப் போன்ற ஒரு சமூகத்திற்கு , மிகச் சரியான நேரத்தில் சரியான கேள்விகளைக் கேட்க இயன்ற  நுண்ணறிவாளர்கள் தேவை" என்று குறிப்பிட்டுள்ளீர்கள், நாம் வாழ்வது போன்ற ஒரு சமூகத்துக்கு என்று கூறவதன் மூலம் நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன?

ரொமிலா தாபர்:    ஒரு பொதுவான வழியில்,  கடந்த கால் நூற்றாண்டைப் பற்றியும், குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகள் பற்றியும்  நான் உத்தேசமாகக் குறிப்பிடு கிறேன். குறிப்பாக கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பற்றி நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,  அப்போதுதான் கேள்விகள் கேட்கப்படுவதற்கு அதிக அளிவிலான தடைகளும், எதிர்ப்பும் வெளிக்காட்டப் பட்டன. எது சரி, எது தவறு என்று நமது அரசாலும்,  அந்தஸ்தும் அதிகாரமும் பெற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் பல்வேறுபட்ட அமைப்புகளாலும்  நமக்குக் இவ்வாறு கூறப்படுவது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. அவர்களிடம் கேள்விகள் கேட்கும்போது, அவர்கள் வன்முறையின் மூலமாக மட்டுமே பதில் அளிக்கின்றனர். எனவே, அவர்களது கண்ணோட்டங்களைப் பற்றி கேள்வி கேட்பவர்கள் கொல்லப்படுகிறார்கள்;  அவர்களது கட்டளைகளுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற சந்தேகம் ஏற்பட் டாலே போதும் அவர்களும் வெட்டிக் கொல்லப் பட்டுவிடுவார்கள்..

கேள்வி: அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை என்பது பற்றி ஒரு விவாதம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களின் பிரதி நிதிகளில் சிலர் இன்று கேட்கின்றனரே. அத்தகைய ஒரு விவாதம் தேவையா?

ரொமிலா தாபர்:  இது ஒரு பெரிய கேள்வி. மதச்சார் பின்மை என்பது,  நாம் விரும்பும்போது கைவிட்டுவிடக் கூடிய,  ஏதோ நமது வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் ஒன்று அல்ல.   மற்ற மக்கள் பற்றி நாம் கொண்டிருக்கும் மனப்பான்மை, அணுகுமுறை அது. சாதாரணமாக அது ஒரு நல்ல மனப்பான்மையாகவே கருதப்படுகிறது. எனவே,  மதச்சார்பின்மை பற்றி மக்கள் கேள்வி கேட்கும்போது, முக்கியமாக, மற்றவர்களுடன் கலந்துறவாடும் ஆக்கபூர்வமான அம்சத்தில் மற்ற மக்களைப் பற்றிய அவர்களது மனப்பான்மையில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் அவர்களைக் கேட்கவேண்டும்.   ஒரு நிலையில், மதங்கள்  அவரவர் வழிகளில் தனித் தனியாக  அமைதியாக  செயல்படுவதே மதச்சார்பின்மைக்குத் தேவையானது. அனைத்து மதங் களுக்கும் சம அந்தஸ்து அளிக்கப்படுவதும் அதற்கான தேவையாகும்.

தங்களது மதம் மற்ற மதங்களை விட உயர்ந்தது என்றோ - அதனால்  சலுகைகள், அணுகூலங்கள், ஆதாயங்கள் கிடைக்கும்   என்றோ  கருதி , ஒரு மதத் தினைப் பின்பற்றும் பெரும்பான்மையிலான மக்களை இந்த மதச்சார்பின்மை கோட்பாடு நிலைதடுமாறச் செய்துவிடுகிறது. ஆனால், மதச் சார்பின்மை என்பது, அனைத்து மதங்களைக் கடந்து செல்வதும், அனைத்து குடிமக்களும் சம உரிமைகளைப் பெற்றவர்கள் என் பதைக் காட்டும்  ஒரு சமூகத்தை அறிந்து கொள்வது மாகும். இந்து மத மக்கள் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டு, சலுகைகள் அளிக்கப்படும் ஒரு இந்து ராஷ்டிதத்தை அதனால் ஆதரிக்க முடியாது. குடியுரிமை என்பது சமமான உரிமைகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டியவையாகும்.

மதச்சார்பற்ற ஒரு சமூகத்தில், ஜாதி, மதம், மொழி போன்ற அடையாளங்கள் ஒன்றில் இருந்து மற்றொன் றுக்கு மேற்கொள்ளப்படும் அடையாள மாற்றம் நாட் டின் குடிமக்கள் என்ற அடையாளமாக இருப்பதாகும்.  போதுமான அளவு விவாதிக்கப்படாமல் உள்ள ஒரு பெரிய மாற்றம் இது.  மதவாதம் பெரும்பாலும் தேசியத் துடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டு  வருகிறது. தேசியம் என்பது வெறும் முழக்கங்களை முழங்குவது மட்டுமல்ல;  குறைந்த அளவு மனித உரிமைகளை ஒவ்வொரு குடிமகனும் பெற்றிருக்கும் ஒரு புதிய மாதிரியான சமூகத்தைக் கட்டமைப்பதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்வதுதான் தேசியம்.

கேள்வி: பேசும் வரலாறு என்னும் தங்கள் நூலில், வரலாறுகள் எவ்வாறு எழுதப் படுகின்றன என்பதைப் பற்றி நீங்கள் பேசியிருந்தீர்கள். ஆனால், இந்துத்துவா அல்லது தலித் இயக்கம் போன்ற  நவீன இயக்கங்களைச் சுற்றியிருக்கும் பொதுமக்களிடையே பரவலான நம்பிக்கையை  உருவாக்கி, அவர்களைக் கவர்ந்திழுத்து ஊக்கமளிக்கும் கட்டுக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. ஒரு வரலாற்றாசிரியராக,  பொதுமக்களிடையே பரவ லாக நம்பப்படும் கட்டுக் கதைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ரொமிலா தாபர்:  கட்டுக்கதைகள் என்பவற்றை நாம் எப்போதுமே நம்பி வந்திருக்கிறோம். இதில் உள்ள ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், மேலும் மேலும் நீங்கள் அறிவைத் திரட்டிப் பெறும்போது,  கட்டுக் கதைகளுக்கும், உண்மையான அறிவிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை காணத் தொடங்கிவிடுகிறீர்கள். கட்டுக் கதைகளும் அதனதன் சொந்த வழிகளில் அறிவு வடிவமான ஒன்றுதான். வரலாற்றுடன் தொடர்புடைய கட்டுக் கதைகள் வரலாற்றாசிரியர்களிடமிருந்து சில விமர்சனங்களைப் ஏற்றுக் கொள்ள வேண் டும். கட்டுக் கதையின் அடிப்படையிலான நிகழ்ச்சிகளையும், வரலாற்றின் அடிப்படை யிலான நிகழ்ச்சிகளையும் வரலாற்றாசிரியர் வேறுபடுத்திக் காண வேண்டும். உண்மை எது என்பதை நாம் அறியாத காரணத்தினால்,  அந்த உண்மையை மறுகட்டமைப்பு செய் வதே வரலாறு என்று கூறும் 19 ஆம் நூற் றாண்டு காலத்துக்கு நான் திரும்பிச் செல்லப் போவதில்லை. உண்மை கடந்த காலத்தில் பொதிந்திருக்கிறது. எனவே, அது அறிவி யலைப் போன்றதல்ல. அது நிகழ்ந்தது என்றோ அல்லது நிகழவில்லை என்றோ ஒரு சோதனை செய்து காட்டி நம்மால் அந்த உண்மையை மெய்ப்பிக்க முடியாது. அத னால்தான்,  உண்மையைத் தேடி வரலாற்றா சிரியர் செல்லவில்லை, என்றும்,  கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருக்க முடியும் என்பதை அறிந்து விளக்கவே தாங்கள்  விரும்புவதாகவும், வரலாற்றாசிரியர்கள் இப்போதெல்லாம் மிகுந்த அடக்கத்துடன் கூறிக் கொள்கின்றனர். புராண இலக்கியமும் கூட ஒரு வகை யிலான விளக்கம்தான்.  ஆனால் இந்த புராண இலக்கிய விளக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது வரலாற்றா சிரியரின் விளக்கம். புராண இலக்கியக் கற்பனைகளின் அடிப்படையில் அமைந்தது அல்ல இந்த வரலாற்றா சிரியரின் விளக்கம் என்பதும்,  நம்மால் நம்பத் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது என்பதும் தான் இதன் காரணம். இதிகாசக் கதைகளிடம் இருக்கும் ஆர்வமளிக்கும் விஷயம் என்னவென்றால்,  ஒரு சமூகத்தின் ஊகங்களைப் பற்றிய விவரங்களை அது உங்களுக்கு அளிக்கிறது என்பதுதான். தாங்கள் என்னவாக இருந்தோம் என்றோ, தாங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்றோ மக்கள் கற்பனை செய்தது பற்றிய செய்திகளை அவை நமக்குத் தெரிவிப்பவையாக உள்ளன என்ற உணர்வு அதனால் நமக்கு ஏற்படுகிறது. எனவே, அவர்களைப் பற்றி மிகத் தீவிரமாக நீங்கள் ஆராய்ச்சி செய்யத் தொடங்குகிறீர்கள். ஆனால், அந்தக் கட்டுக் கதைகளை உருவாக்கியவர்களுக்கு அதில் என்ன இருக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே அந்த ஆராய்ச்சியை நீங்கள் மேற்கொள்கிறீர்கள்.

(தொடரும்)

நன்றி: "தி ஹிந்து" 28-03-02018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்         கேள்வி: பத்மாவதி கதையைப் பற்றிய வரலாற்றாசிரியர்களின் கருத்து என்ன?

ரொமிலா தாபர்:  இந்தக் காவியத்தை  எழுதியதன் மூலம் தனது கலையுணர்வுகளை வெளிப்படுத்து வதற்காக கற்றறிந்த ஒரு முசுலிம் பெருந்தகையாளர் எழுதிய ஒரு கற்பனைக் காவியம் இது என்பதுதான் இந்தக் கதையின் தொடக்கமாகும். கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரத்தைப் பற்றிய அழகு நிறைந்த காவியம் அது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. ஒரு வகையில் இது எனக்கு வியப்பளிப்பதாக இல்லை. ஏனென்றால்,   ஆட்சிக்கு  வந்த  சிலரது  பாரம்பரியத்தைப் பற்றிய பழைய  மரபு வழிகளை பெருமளவில் நான் ஆராய்ந்திருக்கிறேன் என்பதுதான் இதன் காரணம். சமூகத்தின் மேல்தட்டுகளில் உள்ள சமூகத்தினர் மிகமிக அரிதாகவே ஆட்சிக்கு வந்துள்ளனர். அதிகாரத்துக்கு போட்டியிடும் தீரமும் வீரமும் மிகுந்தவர்களாகவே பெரும்பாலும்  அவர்கள் இருந்தனர். இத்தகைய புதிய வம்சத்தினர் ஆட்சிக்கு வரும்போது, தங்களுக்கு பழமையான வம்சாவளி ஒன்று வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே, அத்தகைய புகழ் பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டவர்களை  அவர்கள் அழைத்து தங்களுடன் வைத்துக் கொண்டார்கள்.  பண்டைய நாட்களில் அவ்வாறு வந்தவர்கள் பார்டுகள். பிற்காலத்தில் வந்தவர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு பாரம்பரியத்தையே கற்பனையில் உருவாக்கிக் கொண்டனர். ஒரு சிறு வரலாற்றை அதில் அவர்கள் கண்டு பிடித்துவிட்டால் போதும்,  அதுவும் அவர்களது காலத்துடன் தொடர்புடையதாக அது இருந்துவிட்டால், அதுவே மேலும் மேலும் வெறும் வரலாறாக ஆகிவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட மூதாதையர் அந்த கால கட்டத்தில் இருக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? அது தற்போதைய அரசியல் மற்றும் சமூகத்துடன் தொடர்புடையதாகும். தொடர்ந்து ஏற்பட்டு வரும் சமூக மாற்றங்கள் காரணமாக, ஒரு காலத்தில் சமூகத்தில் மற்றவர்களால் தங்களுக்கு மிக உயர்ந்த நிலை  வழங்கப்பட்டவர்கள் அந்த உயர்நிலையிலேயே இன்றில்லை. எனவே, இவ்வாறு அரசியல் மற்றும் சமூக பாதுகாப்பின்மை நிலவுகிறது. எனவே ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி, உந்துதலை அளித்து, தன்னால் எவ்வளவு பேரைத் திரட்ட முடியுமோ அவ்வளவு பேரை ஒருவர் திரட்டுகிறார். அவ்வாறு மக்களைத் திரட்டுவதற்கான ஒரு காரண காரியமாகவே அது ஆகிவிடுகிறது என்று நான் கருதுகிறேன்.

கேள்வி:  பாரம்பரியமாகவே இந்துத்துவா என்பது பார்ப்பனர்களின் கோட்பாடு என்று முத்திரை குத்தப் பட்டுள்ளதாகும். நரேந்திர மோடி, சிவராஜ்சிங் சவுஹான் போன்ற  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள்  வளர்ச்சி பெற்று வருவதில் இருந்து, இந்துத்துவா சமூக அடித்தளத்தில் குறிப்பிடத்  தக்க ஆழத்துக்கு ஊடுருவியுள்ளது என்று கருதுகிறீர்களா?

ரொமிலா தாபர்:  பார்ப்பனீயக் கோட்பாடுகளே அதிக அளவில் செல்வாக்கு பெற்றிருந்த அசல் இந்துத்துவாதான்  தொடக்கத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது.. அதுதான் கோட்பாடு. தற்போது அவர்கள் ஒரு அரசியல் கட்சியாக ஆகிவிட்டார்கள். வளமான எதிர்காலம் கொண்டுள்ள அவர்கள் மற்ற மக்களையும் அணுக வேண்டியதாயிற்று. இவ்வாறு மற்றவர்களை அணுகுவதற்கான பல எளிய வழிகளில் ஒன்று, ஒடுக்கப்பட்ட மக்களிடம் சென்று,  எங்களுடன் சேர்ந்தால் உங்களுக்கு ஒரு மேலான வாழ்க்கையை அளிக்கிறோம், எனவே எங்களுடன் வந்து சேர்ந்துவிடுங்கள் என்று அழைத்தால் போதும். அதுதான் அப்படியே நடந்து வருகிறது.  பார்ப்பனர் அல்லாத மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் ஆதரவு அவர்களுக்கு பெருகி வரவேண்டுமானால், தங்களது இந்துத்துவக் கோட்பாட்டில் ஒரு சிறிது சமரசமும் செய்து கொள்ள வேண்டும்.  பிற்போக்கு மனம் கொண்ட இந்துத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றாத மக்களையும் உள்ளடக்கியதுதான் இந்துத்துவக் கோட்பாடு என்று கூற விரும்பினால் போதும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களை எளிதாகச் சென்றடைந்து விடலாம். அத்தகைய சலுகையை அவர்கள் அளிக்கத் தயாராக இருப்பதாகவே தோன்றுகிறது.

கேள்வி:  அதிக அதிகாரங்களும், ஆதாயங்களும் பெறும் ஒரு சிறு மேல்தட்டு  குழுவினரின் தில்லு முல்லுகள்  பற்றிய  ஒரு புதிய வகையிலான பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறதே.  மேதைமை என்பது, அதிக அணுகூலங்களும், ஆதாயங்களும் கொண்ட ஒரு சிறு குழுவினரே அதிக அதிகாரமும் செல்வாக்கும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அவர்களது  செயல்பாட்டின் இடத்தில் நுழைவதோ அல்லது அச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஒருவர் இருப்பதோ கட்டாயமாகத் தடுக்கப்பட வேண்டும் என்றும் பார்க்கப்படுகிறதே. ஒரு பொது நுண்ணறிவாளராக இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ரொமிலா தாபர்:   அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஓர் உரையாற்ற நான் கேட்டுக் கொள்ளப்பட்டபோது இதனை நானே எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அம்பேத்கர்பற்றி உரையாற்ற தலித் அல்லாத ஒருவர் அழைக்கப்படக் கூடாது என்று கூறும் பல்வேறு தலித் குழுக்கள் நான் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும் மட்டுமே உள்ள சென்று உரையாற்ற  அனுமதிக்கப்பட  வேண்டிய சில குறிப்பிட்ட  இடங்கள் இருக்கின்றன என்று இம் மக்களால் புறக்கணிக்கப்படுவதை  பல பத்தாண்டு காலமாகவே நாம் சந்தித்து வருகிறோம். எனவே, அது இரண்டு வழிகளையும் அடைத்து விடுகிறது. பல்வேறுபட்ட நிலைகளில் சமூகம் திறந்திருப்பது போன்ற உணர்வை நீங்கள் பெறும் தற்கால அரசியல் காட்சியின் பிரதிபலிப்பே அது. ஆனால், தேவைப்படுவதெல்லாம் மேதைமையும், தரமும்தான் என்று கூறுவதற்கு நீங்கள் உங்கள் மனதைத் திறக்கவில்லை. ஆனால், நீங்கள் மனம் திறந்து சொல்லி வருவதெல்லாம்   ஜாதி, மதம், பணம் உள்ளிட்ட உங்களது சமூக அங்கீகாரம்தான் முக்கியம் என்பதைத்தான். இந்த மனப்பான்மை பற்றி எனக்கு அதிக கவலை தருவதெல்லாம், கல்வியின் உள்ளடக்கத்தை அழிக்கும் முயற்சிகளையே இக்குழுக்கள் தொடர்ந்து செய்து வருகின்றன என்பதுதான்.   அது மேல்தட்டு வசதி படைத்தவர்களிடமிருந்து வருகிறதா அல்லது கீழ்த்தட்டு தொண்டர்களிடமிருந்து வருகிறதா என்பது தெரியவில்லை. கல்வியைச் சார்ந்துதான் சமூகத்தின் முதுகுத் தண்டே அமைந்திருக்கிறது. செயல்படுவதற்கு  மாணவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல்,  அத்துடன் மதிப்பீடுகள் பற்றியும், அவர்களது சமூகத்தைப் பற்றிய அனைத்தையும் கூட நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்கள். எனவே, உங்களது சமூக உறவுகள் கல்வியின் மூலமே இடம் பெறுவதுடன், உங்களது திறமைகளும் கல்வியின் மூலமே பெறப்படுகின்றன. இறுதியாக, வேலைவாய்ப்பு அக் கல்வி மூலம் வருகிறது. உங்கள் கோட்பாடு தவறானது, உங்கள் ஜாதி தவறானது, உங்களது மனப்பான்மை தவறானது என்றும் இன்னும் பலப்பல தவறுகளைக் கூறும் இந்த அனைத்துத் தாக்குதல்களால் சீரழிக்கப்பட்டு வரும் ஒரு பெரும் பகுதி அது.

கேள்வி: ஆனால், தரமான கல்வி மறுக்கப்படும் பெரும் பிரிவுகளைச் சார்ந்த மக்கள்  இருக்கின்றனர். எனவே இது ஒரு கடுமையான எதிர்வினையாகும்.

பதில்:   இந்த இடத்தில்தான் வரலாற்றுக் கல்வி உள்ளே வருகிறது. பழைமைவாத சமூகங்கள் ஒரு சிறு மேல்தட்டு  குழுவினருக்கு  அதிக அதிகாரங்களையும், ஆதாயங்களையும் பெற்றுத் தருவதாக இருப்பவையாகும். அவர்களை எதிர்ப்பது அல்லது கேள்வி கேட்பது என்ற முழுமையான கேள்வி, குறிப்பாக, அதிக அதிகாரங்களையும், ஆதாயங்களையும் பெற்று வரும் ஒரு சிறு மேல்தட்டு  குழுவினரைப் பொறுத்தவரையில்,  அவர்கள் அறிவுடன் தொடர்பு கொண்டிருப்பது என்பது ஒரு அண்மைக் கால காரண காரியமற்ற புலன்களால்; அறியப்பட இயன்ற நிகழ்வேயாகும். இந்தக் கேள்வி கேட்கும் நடைமுறை உள்ளே வந்திருப்பதே ஒரு நல்ல விஷயம் என்று நான் கருதுகிறேன். ஆனால், கேள்வி கேட்கப்படும் செயலே, எதனைப் பற்றி கேள்வி கேட்பது என்பதை விட முக்கியமானதாக ஆகிவிடக்கூடாது.

நன்றி: "தி ஹிந்து" 28-03-02018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner