எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கப்படும் போர்விமானத்தின் விலை கூட நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முடியாத பரம ராணுவ ரகசியமாம்!

அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமாளிப்பு

 

(போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்சுடன்  மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றிய ரகசியங்களைக் காப்பாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள்,  கேள்விகளுக்கான விடைகளை விட அதிக அளவிலான கேள்விகளை எழுப்புவ தாகவே உள்ளன.)

நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் அரசு கையெழுத்திட்டுள்ள பல உயர் அளவிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களிலேயே, ஊழல் பற்றிய தொடர்ந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் ஒரே ஒப்பந்தம்  இந்த ராஃபெல் போர்விமான பேரம் மட்டுமே. இந்த உயர்மட்ட ஒப்பந்தம் தொடர்பாக கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நடந்தேறிய நிகழ்ச்சிகளை நெருக் கமாகப் பார்க்கும்போது, எதனால், எவ்வாறு இந்த ஒப்பந்தம் பற்றிய முரண்பாடுகள் படிப்படியாக அதி கரித்து வந்திருக்கின்றன என்பது வெளிப்படுவதைக் காணலாம். இந்திய விமானப் படையின்  உடனடியான தேவை காரணமாக, 36 பறக்கும் நிலையில் உள்ள  ரேஃபெல் போர் விமானங்களை இந்தியா வாங்கும் என்று  2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, இச்செய்தி மக்களின் கவனத்துக்குச் சென்றடைந்தது.  பிரஞ்சு அதிபர் பிராங்கோயஸ் ஹாலண்டேயுடன் பாரிஸ் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த எதிர்பாராத முடிவு அறிவிக்கப்பட்டது. இந்திய விமானப் படையின் 15 ஆண்டு கால தேவையை நிறைவேற்றும் முடிவை மேற்கொள்வதில் பிரதமர் நரேந்திர மோடி காட்டிய அவசரத்துக்குப் பாராட்டு கிடைத்தது. அதே நேரத்தில், பறக்கும் நிலையில் உள்ள 18 ரேஃபெல் போர் விமானங்களை வாங்குவது மற்றும் பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தம் மூலம் இந்தியாவி லேயே 105 விமானங்கள் தயாரிப்பது என்ற முந்தைய ஏற்பாடு இப்போது மாற்றம் பெற்றுள்ளது பற்றிய வியப்பும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து, இந்த ஒப்பந்தம் பற்றிய சில கேள்விகளையும், விமர்சனங்களையும் காங்கிரசு கட்சி முதன் முறையாக எழுப்பியது. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு விஷயங்களைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டார். கடந்த காலத்தில் இந்த ஒப்பந்தத்துக்கு ஆட்சேபணை தெரிவித்து வந்த நிதி அமைச்சகம் இந்த விஷயம் பற்றி கலந்தாலோசிக் கப்பட்டதா? பாதுகாப்பு தளவாடங்கள் வாங்கும் நடை முறைகள் இதில் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பதே அந்த இரு கேள்விகள். அதற்கு ஒரு நாள் கழித்து, மாநிலங்களவையில் காங்கிரசு கட்சி உறுப்பினர்களின் துணைத் தலைவரும், முன்னாள் வர்த்தக அமைச்சரு மான ஆனந்த் சர்மா இந்தப் பிரச்சினையை எழுப்பி னார். பிரெஞ்ச் ஜெட் விமானங்களை உற்பத்தி செய்வ தில் நீண்ட கால அனுபவம் பெற்றிருக்கும் பொதுத் துறை நிறுவனமான, இந்துஸ்தான் ஏரோநாடிக் நிறு வனம் (எச்.ஏ.எல்) இந்த ஒப்பந்தத்தில் ஏன் சேர்க்கப்ப டவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். போர்விமா னங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும், பிரான்ஸ் நாட்டு டஸ்ஸால்டு விமான நிறுவனத்திடமிருந்து Dassault Aviation), , தொழில் நுட்பத்தைப் பெற்று பெங்களூருவில் 108 ரேஃபெல் விமானங்கள் தயாரிப் பதற்கு தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த எச்.ஏ. எல். நிறுவனத்தின் இடத்தில் எந்த இந்திய தனியார் நிறுவனம் இப்போது மாற்றி நியமிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போதுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டு காலமே கடந்திருந்த மோடி அரசு மிகப் பெரிய அள விலான மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றிருந்தபடி யால்,  காங்கிரசு கட்சியின் கேள்விகள் பரவலான கவ னத்தை ஈர்க்கவில்லை. இந்த போர்விமானத்தை விரை வில் வாங்குவதற்கு  முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இயலாத தன்மை பற்றிய மோடியின் அரசியல் பிரச்சாரம் முன்னிலை பெற்றிருந்த நேரமது.

2015 மே மாதத்தில் டிரிபியூனுக்கு அளித்த நேர் காணல் ஒன்றில், விமானப்படையின் அவசரத் தேவைக் காக  36 ரேஃபெல் விமானங்களை வாங்க மேற்கொள் ளப்பட்ட தனது முடிவைப் பற்றி எவ்வாறு கேள்வி கேட்கலாம் என்று அவர் கேட்டிருந்தார். முந்தைய அரசிடமிருந்து பெற்ற தடைகளை உடைத்தெறிய சில முடிவுகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டி யிருந்தது. அது பற்றி அனைவரையும் கலந்தாலோசித்த பிறகு, இரு அரசுகளுக்கிடையே மட்டும்தான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்பதால், இந்த முடிவுக்கு வந்தோம். எவரும் எந்த கேள்வியையும் எழுப்ப முடியாத அளவில் இந்த பேரம் இருக்கும் என் றும் அவர் தெரிவித்திருந்தார். என்றாலும், தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டே வந்தன. ஒப்பந்தம் கையெ ழுத்தாகும் வரை காத்திருக்கும்படி விமர்சகர்களைக் கேட்டுக் கொண்ட மோடி அரசு , அதன் பிறகு இந்த பேரம் பற்றிய மேற்கொண்ட விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

2016 செப்டம்பர் மாதத்தில், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் 36 ராஃபெல் போர் விமானங்களை வாங்குவதற்கான பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். முதல் போர் விமானம் மூன்று ஆண்டுகளுக்குள்ளும், மொத்த 36 விமானங்களும் 67 மாதங்களுக்குள்ளும் செயல்பாட் டுக்கு வந்துவிடும் என்றும் அதிகாரிகள் கூறினர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாங்க உத்தேசிக்கப்பட்டிருந்த விமானங்களின் எண்ணிக்கை 126 லிருந்து 36 ஆக மாற்றம் பெற்றது.

2017 அக்டோபரின் இறுதியில்,  டஸ்ஸால்டு ரிலை யன்ஸ் ஏவியேஷன் லிமிடெட் (Dassault  Reliance Aviation Ltd) 
என்ற ஒரு புதிய  தனியார் கூட்டு நிறு வனம் ஒன்றுக்கு நாக்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தப் பெயரே தெரிவிப்பது போல,  அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனமான ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்திற்கும்,  எரிக் டிராபிய ரின் தலைமையிலான டஸ்ஸால்டு ஏவியேஷன் நிறு வனத்துக்கும்  இடையேயான ஒரு பங்குதாரர் வியாபார ஒப்பந்தமே இது. இந்த கூட்டு நிறுவனத்தின் 51 சதவிகித  பங்குகள் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சரிடமும் 49 சத விகித பங்குகள் டஸ்ஸால்டு அவியேஷன் நிறுவனத்திட மும் இருக்கும். அதற்கு 15 நாட்கள் கழிந்த பிறகு, குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கிய போது, இந்த ஒப்பந்தம் பற்றிய சிக்கல் மிகுந்த கேள்விகள் எழத் தொடங்கின. காங்கிரசு கட்சி யின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூரஜ் வாலா ஒரு மாபெரும் ஊழல் உருவாகி வருகிறது என்று  பத்திரி கையாளர்களிடம் பேசும்போது கூறினார். அந்த ஒப் பந்தம் பற்றி, குறிப்பாக விமானங்களின் விலை பற்றிய விவரங்களைக் காங்கிரசு கட்சி தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்தது. முதலில் கேட்டபோது, ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு விவரங்கள் பகிர்ந்து கொள்ளப் படும் என்று அரசு கூறியது. ஆனால், 2016 செப்டம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் இந்த விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

காங்கிரசு சார்பாக பிரதமர் மோடியிடம் சூரஜ்வாலா அய்ந்து கேள்விகளைக் கேட்டார். "முந்தைய அரசு தொழில் நுட்ப மாற்ற ஒப்பந்தத்தில் பேரம் பேசிய விலையை விட தற்போதைய ஒப்பந்தத்தில் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ள விமானத்தின் விலை மிக அதிகமானது" என்பது அதில் ஒரு குற்றச்சாட்டு.  "பொதுத் துறை நிறுவனமான எச்ஏ.எல். நிறுவனத்தின் நலன்களைப் புறந்தள்ளி,  30,000 கோடி ரூபாய் முதலீடு அடங்கிய இந்த கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் ரிலை யன்ஸ்  டிபன்ஸ் லிமிடெட் நிறுவனத்தினை இணைத்து அதன்  நலன்களை வளர்க்க பிரதமர் நரேந்திர மோடி ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்" என்பது  மற்றொரு கேள்வி. இக்குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. செய் தித் தொடர்பாளர்களும், ரிலையன்ஸ் நிறுவனத்தினரும் கடுமையாக மறுத்தனர். டஸ்ஸால்டு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டதில் பிரதமர் மோடிக்கு எந்த விதப் பங்கும் இல்லை என்று கூறப்பட்டது. பிரதமர் மீதும், நிறுவனத்தின் மீதும் அவதூறு பரப்புபவர்கள் மீது மானஇழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் மிரட்டியும் பார்த்தனர்.

என்றாலும் காங்கிரசு கட்சி பின்வாங்கிவிடவில்லை. கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, அப்போது கட்சியின் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி மறுபடியும் இந்த ரேஃபெல் ஒப்பந்தம் பற்றிய கேள்விகளை எழுப்பினார். "எனக்கு ஒன்று சொல்லுங்கள். நீங்கள் என்னை பல கேள்வி களைக் கேட்கிறீர்கள். நானும் அவைகளுக்கு வெளிப் படையாக பதில் கூறுகிறேன். ரேஃபேல் ஒப்பந்தம் பற்றி மோடியிடம் நீங்கள் ஏன் கேட்கக்கூடாது?  அமித் ஷாவின் மகனைப் பற்றிய கேள்விகளை நீங்கள் ஏன் கேட்கக்கூடாது? நாட்டில் என்னதான் நடக்கிறது?  நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் அவற்றுக்கு நான் மகிழ்ச்சியுடன் பதில் அளிக்கிறேன். ஆனால், ஒரு வியா பாரிக்கு உதவி செய்வதற்காக ஒரு முழு ஒப்பந்தத்தையே பிரதமர் மாற்றி அமைத்திருக்கிறார். அதனைப் பற்றி நீங்கள் ஏன் அவரிடம் கேட்கக்கூடாது. அவ்வாறு நீங்கள் அவரைக் கேள்வி கேட்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார். அதன்பிறகு அவர் தனது டிவிட்டரில், "இந்த ரேஃபெல் ஒப்பந்தத்தில் விமான உற்பத்தியில் எந்த அனுபவமே இல்லாத ஒரு நிறுவத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை பற்றி நீங்கள் விளக்குவீர்களா? மேக் இன் இந்தியாவின் முக்கியமான அம்சமே சுய சார்பு (செல்ப் ரிலையன்ஸ்) அல்லவா?" என்று பதிவிட்டார்.

நன்றி: "தி ஃப்ரண்ட் லைன்" 16-3-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner