எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விட்டால் சட்ட அங்கீகாரம் பெற்ற வாரியத்தின் கட்டுப்பாட்டில் 8 அணைகள் சென்று விடும். அப் போது தண் ணீர் கேட்டு கருநாடகா வி டம் தமிழகம் கெஞ்ச வேண்டாம் என்பதால் தான் ஒட்டு மொத்த தமிழகமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி  வருகிறது. காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படி வழங்க 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடு படாமல் அதில் விளக்கம் கேட்டு காலம் தாழ்த்தி வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுவதே கருநாடகாவின் செயல்பாடாக உள்ளது!

இதையடுத்து, மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்து மே மாதம் 3ஆம் தேதிக் குள் செயல் திட்ட வரைவை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மதிக்காமல் மீறுவதே கருநாடகாவின் செயல்பாடாக இருக் கிறது.  இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் சட்ட அதிகாரம் உள்ள காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்கப்பட வேண்டும். அப்படி வாரியம் அமைத் தால் கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளும், தமிழகத் தில் 3 அணைகளும், கேரளாவில் ஓர் அணையும் வாரியத் தின் நேரடி கட் டுப்பாட்டில் வந்து விடும். அதன் பின்னர் தீர்ப்பின் படி தண்ணீர் பங்கீடு செய்து வழங்கப்படும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல!

இந்த மேலாண்மை வாரியம் தனது பணியை நிறைவேற்ற காவிரி ஒழுங்கு முறைக் குழுவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே நடுவர் மன்றத்தின் உறுதியான தீர்ப்பு. கருநாட காவின் ஒத்துழையாமையை புள்ளி விவரங்களுடன் அறிந்துதான் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை  தெளிவாக குறிப்பிட்டுள்ளது. காவிரி எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல. அது அனைவருக்குமே சொந்தம் என் பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப் பின் மூலம் உறுதிபடுத்தியுள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எந்தவித காலதாமதமும் செய்யாமல் நியாயம் வழங்க  வேண்டும் என்று தான் தமிழகம் கொதித்து வருகிறது. அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பின ரின் கோரிக்கையும் அதுதான். மத்திய அரசு புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்காகத்தான் பிரதமர் மோடி மற்றும் மத்திய அர சுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதை விடுத்து 'ஸ்கீம்' என்றால் என்ன?  3 மாதம் அவகாசம் தேவை என்றெல்லாம் மத்திய அரசு புதுபுதுக் காரணத்தைத் தேடாமல், மத்திய அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பதே தமிழக மக்களின் ஏகோ பித்த கோரிக்கை.

நன்றி: "முரசொலி" 16.4.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner