எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டின் நிதி ஆதாரங்களை ஒன்று திரட்டி தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளும் ஏற்பாடுகளை உலகில் உள்ள பெரும்பாலான கூட்டமைப்பு நாடுகள் தங்களுக்குள் செய்து கொண்டிருக்கின்றன. நிதி ஆதாரங்கள், குறிப்பாக மாநில அரசுகளின் நிதி ஆதாரங்கள் நன்றாக பாதுகாக்கும் அளவில்,  நாட்டில் திரட்டப்படும்  ஒட்டு மொத்த நிதி ஆதாரங்களையும் மத்திய, மாநில அரசுகளிடையே பகிர்ந்தளிக்கும் நடைமுறையை பரிந்துரைப்பதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நிதி ஆணையத்தை நியமனம் செய்வதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ளது. அதனால்,  மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுவதற்காக திரட்டப்படும் நிதி ஆதாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு,  இந்த நிதி ஆணையம் என்னென்ன விஷயங்களைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அளிக்கும் குறிப்பு மிகமிக முக்கியமானதாக ஆகிவிடுகிறது. மேம்பாட்டுக்கான பொது நிதி இவ்வாறாக மாநிலங்களுக்கிடையே நியாயமாகவும், சமமான முறையிலும் பகிர்ந்தளிக்கப்படுமா என்ற சந்தேகத்தை மத்திய அரசு அளித்துள்ள இந்த குறிப்பு உருவாக்கியுள்ளது. இது பற்றிய சில பொது விவரங்களை எடுத்துக் காட்டும் நோக்கத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

 

பினராயி விஜயன்

முதல் அமைச்சர், கேரளா

நாட்டின் ஒற்றுமைக்கு மிகமிக இன்றியமையாதது

முதலாவதாக,   இந்தியா ஒரு மாநிலங்களின் கூட் டாட்சி  நடைமுறையைப் பின்பற்றும் நாடு என்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது.  மாநில அரசுகளுக்கு அதிகாரங்களையும், நிதி ஆதாரங்களையும் பிரித்தளிப்பதில் உண்மையிலேயே நியாயத் தன்மையை யும், சமனத் தன்மையையும் மத்திய அரசு பின்பற்றினால் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமை காப்பாற்றப்படும்.  இந்த நிதி ஆணையத்தின் முக்கியமானதும், முதன்மையானது மான  நோக்கமே,  கூட்டமைப்பு நாட்டின் இரு பிரிவு களுக்கிடையே நிதி ஆதாரங்களை சமமான முறையில் பகிர்ந்து அளிப்பதுதான்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது இணைப்பில் கண்டுள்ள மாநில அரசுகளின் கடமைகள் என்ற பட்டியலை சாதாரணமாகப் பார்த்தாலேயே, மத்திய - மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட் டுள்ள கடமைகளில்,  மனித வள மேம்பாடு,  வருவாய் வளர்ச்சி, குடிமக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத் துதல்,  சுற்றுச்சூழல் கெட்டுப் போகாமல் பாதுகாப்பது போன்ற  அடிப்படையான கடமைகள் எல்லாம் மாநில அரசுகளுக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளதைக் காணலாம். அவ்வாறு, நாட்டின் கட்டமைப்புப் பணிகளில் மிகமிக முக்கியமான பெரும்பணிகள் மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும்,  அக்கடமைகளை நிறை வேற்றுவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வது என்பது மத்திய அரசின் ஒட்டு மொத்தக் கட்டுப்பாட்டில் மட்டுமே அமைந்துள்ளது.

கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள எனது கருத்தை வலி யுறுத்திக் கூற நான் விரும்புகிறேன். அரசமைப்புச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள பணிகளை செய்து முடிப்பதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை இந்தியா வில் உள்ள மாநில அரசுகள் பெற்றிருக்கவில்லை என்பதுடன், அத்தகைய நிதி ஆதாரங்களைத் திரட்டு வதற்கான உரிமையும் அவற்றிடம் இல்லை. இவ்வாறு இருக்கும் தற்போதைய சூழ்நிலை,  மாநில அரசுகள் செயல்படும் அல்லது செயல் படாத தன்மையின் காரணங்களால் உருவானவை அல்ல; மத்திய அரசின் கொள்கைகளின் நேரடி விளைவே இது.

இவ்வாறாக, இந்தியாவின் மாநிலக் கூட்டாட்சி தத்துவத்தின் வடிவிலும், அளவிலும் ஒரு மாபெரும் முரண்பாடு உள்ளது. நிதி ஆதாரங்களைத் திரட்டும் மத்திய அரசின் ஆற்றல் மாநில அரசுகளின் ஆற்றலை விட மிகப் பெரிய அளவில் இருக்கும் நிலையில்,  நிதிவருவாய் ஆதாரங்களைத் திரட்டும் தங்களின் ஆற்றல்களை விட மிக அதிக அளவிலான நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட செலவினங்களின் பெரும் பகுதியை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. இந்த முரண்பாட்டை சரி செய்வதற்கான பொறுப்பினை அரசமைப்புச் சட்டம் நிதி ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது.

எனவே, கூடுதலான குறிப்பிட்ட மான்யங்களுடன், பொருத்தமான அளவில் நிதி ஆதாரங்களை எந்த வித நிபந்தனையுமின்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங் குவதை உறுதிப்படுத்திக் கொள்வதே நிதி ஆணையத் தின் அடிப்படைக் கடமை என்று பார்க்கப்படவேண்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு திட்ட நடைமுறை என்ற இரு மாபெரும் பேரிடிகளால்  மாநில அரசுகளின் நிதிநிலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள தற்போதைய சூழ் நிலையில்,  15 ஆவது நிதி ஆணையத்தின் நிதி ஆதாரங்கள் பகிர்தலுக்கான பரிந்துரை கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதால், நிதிவருவாய் ஆதாரங்களை உருவாக்கிக் கொள்ளும் மாநில அரசுகளின் சுதந்திரமும், எல்லையும் கட்டுப்படுத் தப்பட்டுவிட்டது. மாநிலத்துக்கு கூடுதல் வருவாய் அளிப் பதற்காக வரி விதிக்கப்பட இயன்ற எந்த ஒரு முக்கியமான துறையும் மாநில அரசுகளுக்கு விட்டு வைக்கப்பட வில்லை.

மக்கள் தொகை வேறுபாடுகள்

இரண்டாவதாக, தங்கள் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சியை  வெற்றிகரமாகக் குறைத்த மாநி லங்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளிப்பதில்,  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பே கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும் என்பது. குறைந்த அளவு மக்கள் தொகை வளர்ச்சியை ஏற்படுத்தி, ஆரோக்கியமான மக்கள் நலனைப் பேணுவதற்காக இந்த மாநிலங்கள் பெரும் அளவு நிதியை செலவழித்துள்ளன. கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்கள் ஆகிய துறைகளில் இம்மாநிலங்கள் பெரும் அளவில் நிதியை முதலீடு செய்துள்ளன. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைப்பது என்பதால், மாநிலங்களின் செலவு குறையும் என்பதாகக் கருதமுடியாது. அதற்கு மாறாக, தொழிலாளர் நலத் துறை மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு போன்ற துறைகளில் மாநில அரசுகளின் செலவுகள் இதனால் கூடவே செய்யும்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இன்று மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட் டுள்ளதுடன்,  சில மாநிலங்களில் குறைக்கப்பட்டும்  இருக்கின்றன. இதன் உடனடி பாதிப்பு என்னவென்றால், மக்கள் தொகையில் முதியோரின் எண்ணிக்கை கணிச மாக உயர்ந்து உள்ளதுதான். முதியோர் நலம் பேணுதல், மாநில அரசுகளின் பொறுப்பும் கடமையும் ஆகும். மக்கள் தொகையைக் கணக்கிடும்போதும், நிதி ஆதா ரங்களைப் பகிர்ந்தளிப்பதிலும் இத்தகைய முதியோர் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அதிகப்படி செல வுகளை நிதி ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, தற்போது 15 ஆவது நிதி ஆணையம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அளித்துள்ள  குறிப்புகள்  அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியிருப்பவையாகும். நாட்டின் நிதி ஆதாரங்களை ஒன்று திரட்டுவதற்கும், தங்களது கோட்பாட்டு, பொருளாதார செயல்திட்டங்களை மத்திய அரசு மாநிலங்களின் மீது திணிப்பதற்கும் நிதி ஆணையத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள் ளும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப் படுத்துகிறது. நிதியாதார நிர்வாகத்திற்கான பயண வரைபடத்தை பரிந்துரைப்பதோ அல்லது  எத்தகைய கொள்கைகள்  மாநில மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தைத் திணிப்பதோ  நிதி ஆணையத்தின் வேலையல்ல. அது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு முடிவு செய்ய வேண்டியதாகும்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner