எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்தியாவின் நம்பர் ஒன் வார ஏடான எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லியின் 31-3-2018 தலையங்கம். பா.ஜ.க. ஆட்சியில் பல்கலைக் கழகங்களின் உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்படுவதோடு,  தங்களது மதவாதம், ஜாதி வாதம், காவி மயக் கொள்கைக்கு எதிர்ப்பு காட்டும்,  முற்போக்கு அறிவியல் கருத்துகளைக் கொண்ட அமைப்புகளும்,  சுதந்திர சிந்தனைகளும் துளிர்விடக் கூடாது என்ற நோக்கத்தில்,  மத்திய கல்வித் துறை எப்படி நடந்து கொள்ளுகிறது என்பதை விளக்கும் அரிய தகவல் - படித்துப் பரப்புங்கள்.  - ஆசிரியர்

 

பொது பல்கலைக் கழகங்களின் வாழ்வும் சாவும் 12 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் கிழக்கு இந்திய பகுதிகளை வென்ற பக்தியார் கில்ஜி பீகாரில் உள்ள கோட்டை ஒன்றை எவ்வாறு தாக்கினார் என் பதை இடைக்கால வரலாற்றாசிரியரான மின்ஹாஜி சிராஜ் பதிவு செய்துள்ளார். கோட்டையைக் கைப்பற் றிய அவர், கோட்டையினுள் எண்ணற்ற பார்ப்பனர்கள் வசித்து வந்தார்கள் என்பதையும்,  கோட்டையில் எண்ணற்ற நூல்கள் இருந்ததையும் கண்டு கொண்டார் என்று அக்கதை நீள்கிறது. அப்போதுதான், தான் கைப்பற்றியது வெறும் கோட்டை அல்ல என்பதையும்,  அது ஒரு பல்கலைக் கழகம் என்பதையும்  அவர் உணர்ந்தார். தபாகுல்-அய்-நஸ்லி என்ற நூலில் உள்ள  இந்த பத்தியை,  படையெடுத்து வந்த முஸ்லிம்களால் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலைக் கழகம் அழிக் கப்பட்டது பற்றிய  ஒரு அதிகார பூர்வமான வரலாறு என்று தவறாகப் படிக்கவே வலதுசாரி கோட்பாட்டா ளர்கள் விரும்பினர். எவ்வாறாயினும் இக்கதை தற் போதைய நமது மத்திய ஆட்சியாளரையும், அதன் ஆதரவாளர்களையும் கவர்ந்தது. பல்கலைக் கழகங்களை அறிவு புகட்டும் மய்யங்களாகப் பார்க்காத அவர்கள், அவற்றை  தேசிய உணர்வுக்கு எதிராக, தேசதுரோக சதி வேலைகளைச் செய்பவர்களின் கோட்டையாகவே  கருதினர். எடுத்துக் காட்டாக கடந்த ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜி.டி. பக்ஷி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைக் கைப் பற்றிவிட்ட அரசு,  அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக, ஜாதவ்பூர் பல்கலைக் கழகக் கோட்டைகளையும் அழித்துவிட முன் வரவேண்டும் என்று முழங்கினார். கடந்த வாரம், அரசு தனது நோக்கங்களை மற்றுமொரு முறை தனது செயல்கள் மூலம் மெய்ப்பித்துவிட்டது. பல்கலைக் கழக விவகாரங்களில் அழிவைத் தரும் முறையில் அரசு குறுக்கீடுகள் செய்வதற்கும்,  பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வர்களை வெட்கம் கெட்ட முறையில் பாதுகாப்பதற்கு முயற்சித்ததற்கும் எதிராகப் போராடிய மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் மீது அரசு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. அரசின் குறுக்கீடுகளைத் தாங்கியே பழக்கப்பட்டுப் போனது இந்திய பல்கலைக் கழக நடைமுறை என்றபோதிலும்,  இன்று அது எதிர்கொண்டு வரும் இடைவிடாத, சோர்விலாத தாக்குதலை இதற்கு முன் அது எப்போதுமே சந்தித்தது இல்லை.

பொது பல்கலைக் கழகங்களுக்கு, ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு முக்கியமான செயல்பாடுகள், கடமைகள் உள்ளன. முதலாவது மாணவர்களின் அறிவு எல்லையை விரிவுபடுத்துவது.  இவ்வாறு பெறப்படும் அனைத்து அறிவு, அத்தகைய அறிவை நிலைநாட்டும் அதிகாரக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் பகுத்தறிவுடன் கூடிய ஒரு அணுகுமுறையை மேற்கொள்வது என்பதையே இது குறிக்கும். பல்கலைக் கழகத்தின் முதலாவது கடமையுடன் மிக நெருங்கிய தொடர்புடைய இரண்டாவது கடமை சிந்திக்க இயன்ற பொறுப்பு மிகுந்த குடிமக்களை உருவாக்குவது என்பதுதான். பழைமை வாய்ந்த நடைமுறைகளையும், ஆதிக்கம் செலுத்தும் அனைத்து வடிவங்களிலான  அமைப்புகளையும் நுணுக்கமான கேள்விகளைக் கேட்பதற்கு மாணவர்களைப் பயிற்று விப்பது என்பதே இதன் பொருள். பல்கலைக் கழகங் களின் முதன்மையான பிரதிநிதிகளாக இருப்பவர்கள் பொதுமக்களே தவிர, அரசு அல்ல. அரசும், அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகளும் ஆதிக்கக் கோட்பாடுகளை வெளிப்படுத்துவதைப் பொருத்த வரை, அரசின் அனைத்து செயல்பாடுகளையும் மிகநுணுக்கமாக மதிப்பீடு செய்வது ஒரு பொது பல்கலைக் கழகத்தின் கடமையாகும். அதனால் ஒரு பல்கலைக் கழகம் என்பது மக்களாட்சி செயல்முறைக்கு ஒரு அடித்தளமாக அமைந்திருப்பது என்பதுடன், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருவதுமாகும். இவ்வாறு, தற்போதைய அரசு எதனை தேச விரோதம் என்று முத்திரை குத்துகிறதோ, அது போன்ற செயல்களை மேற்கொள்வதுதான் உண்மையிலேயே  அனைத்து பொது பல்கலைக் கழகங்களின் கடமை யாகும். அரசைக் கேள்வி கேட்பதே தேசவிரோதம் என்றால்,  தேசிய மதிப்பீடு மற்றும் தரப் பாகுபாடு செய்யும் அமைப்புகள் வழங்கும் உயர்ந்த மதிப்பீட்டு எண்களை விட தனித்த புகழ் அளிப்பதாக விளங்கும் மரியாதைக்காக வழங்கப்பட்ட அடையாளச் சின்ன மாக அரசு வழங்கும் இந்த பட்டத்தை பல்கலைக் கழ கங்கள் ஏற்று அணிந்து கொள்ள வேண்டும். ஒரு மக்களாட்சி நாட்டில் பல்கலைக் கழகங்களும், அரசும் ஒன்றின் மீது ஒன்று அக்கறை காட்ட வேண்டிய ஓர் உறவு முறையைக் கொண்டவையாகும். பல்கலைக் கழகங்களுக்கு தன்னாட்சி உரிமையை  அளிப்பதன் மூலம் அரசு எந்த சலுகையும் காட்டுவது இல்லை. அது அரசு செய்ய வேண்டிய கடமையும்,  மக்களாட் சியைப் பாதுகாக்க வேண்டிய அதன்  பொறுப்பின் ஒரு பகுதியுமாகும். தன்னாட்சியை மேம்படுத்துவது என்பது அரசின் மேற்பார்வையைக் குறிப்பதாகும். ஆனால், அது பாடதிட்டம் மற்றும் ஆய்வு செயல்திட்ட வடிவங்களை பல்கலைக் கழகங்களின் மீது திணிப்பது என்பதாகாது. நிச்சயமாக அது பல்கலைக் கழகங்களின் முக்கியமான பதவிகளில் ஆளுங்கட்சிகளின் கைக்கூலிகளை நியமிப்பது, சட்டம், ஒழுங்கு இயந்திரம் மூலம் பல் கலைக் கழக வாழ்வை ஒழுங்குபடுத்துவது என்பதா காது. அந்தந்தத் துறைகளின்  தகுதி பெற்ற தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்களால் மதிக்கப்படும் மூத் தோருக்கு இத்தகைய அமைப்புகளை நடத்துவதில் மிகப் பெரிய பங்கு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதே அரசின் முறையான பங்களிப்பாகும். ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஆதரிப்பதற்காக போதுமான நிதி உத வியை பொதுநிதியில் இருந்து அளிக்கப்படுவதையும், அவர்களை சந்தை சக்திகளின் அடிமைகளாக ஆக்கி விடாமல் பாதுகாப்பதையும் அரசு உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அத்துடன்,  ஆதிக்க சக்தி வர்க்கத் தினரின் நலன்களைப் பாதுகாக்கும் வெறும் கருவி களாக பல்கலைக் கழகங்கள் ஆகிவிடாமல் இருப்பதற் காக, பல்கலைக் கழக சமூகத்தின் அனைத்து நிலைக ளிலும் குடிமக்களின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த மக்களின் பிரதிநிதித்துவம் போதுமான அள வில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள் வதன் மூலம் சமூக நீதியைக் காப்பாற்றும் வகையிலும்,  அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றும் வகையிலும் அரசு இருக்க வேண்டும்.  பொது பல்கலைக் கழகங்களுடனான அரசின் உறவு எத்தகையதாக இருக்க வேண்டுமோ அதற்கு முற்றிலும் எதிர்மறையிலான உறவு கொண்டிருப் பதையே, தன்னாட்சி உரிமை வழங்குவது  என்று  கிளிப்பிள்ளையைப் போல இன்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அது குடி மக்களுக்கு அரசு ஆற்ற வேண்டிய அனைத்துக் கடமைகளையும் செய்யாமல் தவிர்ப்பதே ஆகும்.  பல்கலைக் கழகங்களுக்கு தர வரிசைப்படிப்படியான தன்னாட்சி உரிமை அளிக்கப் படும்  நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று அண்மையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது, உயர்கல்வித் துறைக்கு வழங்கப்படும் பொது நிதியைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு மோசடி திட்டமே ஆகும். அளிக் கப்படும் நிதி உதவியில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டிய பல்கலைக் கழகத் துறைகள்,  சந்தை தேவைகளின் கருணைக்கு தங்களை உட் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது பொது பல்கலைக் கழகங்களின் மீதான ஒரு தாக்குதல் மட்டுமல்லாமல், மக்களாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு  தனது நியாயத் தன்மையைப் பெறும் சமூக ஒப்பந்தத்தை மீறுவதுமாகும்.

நாளந்தா பல்கலைக் கழகம் முழுவதும் எரிந்து போவதற்கு மூன்று மாத காலம் பிடித்தது என்று அந்த பழங்கதை கூறுகிறது. இன்றைய இந்தியாவில் உள்ள பொது பல்கலைக் கழகங்கள் ஒரே நாளில் அழிக் கப்பட்டுவிட முடியாது. ஆசிரியர்களும், மாணவர் களும் சோர்வில்லாமல் அத்தகைய முயற்சிகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். என்றாலும், அரசின் நோக்கங்கள் பற்றி இனி எந்த சந்தேகமும் இருக்க முடியாது. வாக்காளர்களை முட்டாள்களாக ஆக்கி விடத் தங்களால் முடியும் என்று அரசு நினைத்துக் கொண்டிருந்த போதிலும், வரலாற்றுப் பழியில் இருந்து அது எப்போதுமே தப்பித்துக் கொள்ள முடியாது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும், நீதிமன்ற தீர்ப்பும்

ஜாதி என்பது உண்மையிலேயே இருப்பதாகும். ஜாதி கொடுமைகளுக்கு எதிரான ஒரு பலமான சட்டத் தேவையை, அது தவறாகப் பயன்படுத்தப்பட இயலும் என்ற வாதத்தால் மறுத்துவிட முடியாது.

1989 ஆம் ஆண்டின் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்னும் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம்  பற்றி அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஜாதி அடிப்படையிலான கொடுமைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடியான பாதுகாப்பு அளிக்கும் இச்சட்டத்தின் பயன்பாட்டினை ஒரு படி குறைத்து விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்குவதைத் தடை செய்யும் விதிகளை நீர்த்து போகச் செய்ததுடன், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தத் தீர்ப்பு கூறி இருக்கிறது. நீதி கேட்டு நீதித் துறையை அணுகும் தலித் மற்றும் ஆதிவாசிகளின் நம்பிக்கையை இது போன்றதொரு முன் நிபந்தனை தகர்த்துவிட்டது.

தீங்கிழைக்கும், அச்சுறுத்தும் சமூக அதிகாரம் பெற்ற ஜாதியின் பெயரால் தங்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளை எதிர்கொள்வதற்கு தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு இந்த சட்டத்தின் அசல் வடிவத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. நீதி வழங்கும் நடைமுறையில் தவிர்க்க இயலாத மனிதர் களின் தவறுகளுக்கு எதிரான பாதுகாப்பை இந்தச் சட்டம் அளிக்கிறது. அப்படியிருந்தும் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட விகிதம் சோர்வளிக்கும் வகையில் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. 2016 இல் பல்வேறுபட்ட நீதிமன்றங்களில் தாழ்த்தப் பட்ட மக்களின் வழக்குகள் 89.7 விழுக்காடு அளவில் நிலுவையில் இருந்தன. அதே ஆண்டில் பழங்குடி மக்களின் வழக்குகள்  87.1 விழுக்காடு அளவில் இருந் தன. வழக்குகளை விரைவில் முடிப்பதற்கான நிர்ண யிக்கப்பட்டுள்ள விதிகள் வேண்டுமென்றே காற்றில் பறக்கவிடப்படுவதே இந்த அளவுக்கு வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதற்கான காரண மாகும். இத்தகைய முன் விசாரணை ஜாதி பாகுபாடு இன்றி மேற்கொள்ளப் படுவதற்கு உச்சநீதிமன்றம் ஏதேனும் உத்தரவாதம் அளித்துள்ளதா? இந்த சட்டத் தைத் தவறாகப் பயன் படுத்துவதற்கான ஒழுக்க நெறித் துணிவும் ஆற்றலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருக் கிறது என்ற ஊகம் ஒரு முன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற வற்புறுத்தலுக்குப் பின்னணியில் உள்ளதா?

முன் விசாரணை நடத்தப்படுவதை பரிந்துரைத்த தன் மூலம் உச்ச நீதிமன்றம் தாழ்த்தப்பட்டவர் மற்றும் ஆதிவாசிகளிடம் நிலவும் ஒழுக்கக் குறைபாட்டுக்கு ஒரு சட்டத் தீர்வினை அளிப்பதாகவே தோன்றுகிறது. இந்தத் தீர்ப்பினை முற்றிலும் பிரச்சினைக்குரியதாக ஒருவரால் பார்க்க முடியாவிட்டாலும், இந்திய சமூக உறுப்பினர்களிடையே பெரும் அளவில் ஒழுக்கச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்பதை உச்ச நீதிமன்றம்  எதிரொலிக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். குஜ ராத் மாநிலம் உனாவில் தலித் மக்கள் மீது இழைக்கப் பட்ட மாபெரும் கொடுமைகளில் இருந்து, ஜாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது தாழ்த்தப் பட்டவர் அல்லாத மக்கள் காட்டும்  அலட்சிய மனோ பாவத்தை எதிரொலிக்கும்  இந்த ஒழுக்கக் குறைபாடு நன்றாகவே தெரிகிறது. நீதிபரிபாலன நடைமுறை, குறிப்பாக தாராளமான கட்டமைப்பில், அலட்சிய மனோபாவம் தண்டிக்கத் தகுந்த ஒரு செயலாகக் கருதப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன் படுத்தும் ஒரு ஒழுக்கக் குற்றம் அல்லது ஒரு சமூகக் குற்றத்துக்கு ஒரு தனிப்பட்ட நபர்தான் பொறுப் பாக்கப்படுகிறாரே அன்றி அமைதியான ஒரு சமூகம் பொறுப்பாக்கப்படுவதில்லை. இவ்வாறு,  ஒரு முன் விசாரணை நடத்துவதற்கான நியாயம்,  ஒரு குறிப்பிட்ட சட்டம் தவறாகப் பயன்படுத் தப்படுவதில் இருந்து தனிப்பட்ட ஒருவரைப் பாது காக்கும் தேவை என்பதிலேயே அடங்கி இருக்கிறது. ஒரு சட்டப் பொருளாக ஒரு தனிப்பட்டவரைத் தனியே பிரித்துக் காணும் இந்தக் கண்ணோட்டம் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு நியாயமானதாகத் தோன்றினாலும் கூட,  அது இரண்டு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. முதலில், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் அதன் முயற்சியில்,  மற்ற அனைத்து உண்மையான கொடுமைகளையும் சந்தேகம் என்ற எல்லைப் பகுதிக்குள் அது தள்ளி விடுவதால்,  அவை அனைத்தும் ஒரு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உண்மையில் கொடுமைகள் இழைக்கப் பட்டது பற்றிய பலமான ஆதாரங்களையும் கூட  அது சந்தேகத்திற்கு இடமானவையாக செய்துவிடுகிறது.  உண்மையில் சமூகத்தில் நிலவும் கட்டுப்பாடற்ற சமூகக் கொடுமை களும், இவ்வாறு  ஆதாரமற்றதன்மையில் முடிவ டைந்து விடுகின்றன.

இரண்டாவதாக, இந்தத் தீர்ப்பின்படி, குற்றம் சாட்டப்படுபவரும், குற்றம் சாட்டுபவரும், சம்பந்தப் பட்ட நீதிமன்றத்தின் சட்டப் பார்வைக்கு வெளியேயும், சட்டப் புத்தகங்களுக்கு வெளியேயும் இருக்கும் சக்தி களின் மேலோட்டமான வெளிப்பாடாக இருப்பவர் களே ஆகும். உள்ளூர் குழுப் பிரிவுகளில் வலிமை மிகுந்தவர் களாக இருக்கும் தேவை கொண்ட உள்ளூர்களில் ஆதிக்கம் பெற்று இருக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத ஜாதிகளால் இந்த சக்திகளை அடையாளம் காண இயலும். சில நேரங்களில் இவர்கள் இந்த சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும் தவறாகப் பயன்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தாழ்த்தப்பட்டோரை நிர்ப்பந்திக்கின்றனர்.

"தங்கள் முதுகுகளின் மீது தாங்கள் சுமந்தே தீர வேண்டிய ஆமை ஓட்டைப் போன்றது இந்த சட்டம்" என்ற தாழ்த்தப்பட்டவர்களின் கண்ணோட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் தேவை இருக்கிறது. வேறு சொற்களில் கூறுவதானால், இந்த சட்டம் ஓர் ஒழுக்க நெறி உணர்வில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே மகிழ்ச் சியற்றது போன்ற ஓர் உணர்வினை உருவாக்குகிறது. எனவே, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் அவர்கள் என்று நாம் ஊகித்து விடக்கூடாது.

இந்த சட்டத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலை களை யார் உருவாக்கினார்கள்  என்ற கேள்வியையும் நாம் கேட்கவேண்டும். உயர்ஜாதி மக்கள் ஆதிக்க வாதிகளாக இருக்க வேண்டிய அன்றாட சமூகத் தேவை காரணமாகவே கொடுமைகள் விளைவிக்கப் படுகின்றன என்பதால்,  இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துதற்கான வாய்ப்பை நீக்குவதற்கு தாழ்த்தப் பட்டவர் அல்லாத ஜாதி மக்களே வழிகாட்டவேண்டும். வேறு மாதிரியாகக் கூறுவதானால், ஜாதி பாகுபாடு என்பது  உண்மையில் இருப்பதல்ல என்பதும், அது ஒரு வதந்தியே என்பதும் உண்மையாக இருக்குமா னால்,  வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்றதொரு சட்டம் எவர் ஒருவருக்கும் தேவையே இல்லை. எந்த ஒரு சமூகமும் தன்னை நாகரிகமானது என்று காட்டிக் கொள்வதில்லை என்பதாலும்,  ஜாதி பழக்க வழக்கங் கள் பெரும்பாலான இந்திய மக்களுக்கு பழகிப் போன தாலும், இந்த சட்டத்தை அதன் கடுமையான பிரிவுக ளுடன் பயன் படுத்திக் கொள்ளும் வழியை பின்பற்று வது தவிர்க்க இயலாதது என்றே கருதப்படுகிறது.

இவ்வாறு, சட்டப் பொருளைச் சுற்றி அளிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள்,  பொதுவான மனிதக் கவலைகளை கூடுதலான அளவில் தீர்க்க விரும்பும் ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த ஒன்றுபட்ட ஒழுக்க வெளிப்பாடுகளாக இறுதியில் ஆகிவிட வேண்டும். இந்திய நீதி நடைமுறை இந்தத் தேவை பற்றி உணர்ந்து இருக்கவில்லை என்பதல்ல இதன் பொருள். மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்ப்புகளின் சூழ்நிலைகள் வாயிலாக மேற்கொள் ளப்படும் நீதித்துறை செயல்பாட்டு முன்னேற்றங்கள் சமூகத்தின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக ஆகிவிட வேண்டும். தனிப்பட்டவர்களின் வழக்குகளை நியாய மாகத் தீர்க்கும் குறுகிய கால கண்ணோட்டம், நீர்த்துப் போகச் செய்யப்பட்ட இந்த  சட்டத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள எந்த வித சிறிய அளவிலான பாதுகாப்பும் பறித்துக் கொள்ளப்படும்.  ஒரு சட்டம் ஒரு சமூகத்தின் வெளிப்பாடாக ஆவ தற்குத் தேவையான ஒட்டு மொத்த ஒழுக்க உணர்வின் முன்னேற்றத்தை        இந்த குறுகிய கால கண்ணோட்டம் தடை செய்து விடும்.

நன்றி:  'எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி'  31-03-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner