எழுத்துரு அளவு Larger Font Smaller Font

-  அனுராதா நாகராஜ்

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தொழி லாளர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள செங்கற் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும், தொழிற்சாலை களிலும் கொத்தடிமை நிலையில் உழலும் மற்றவர்களை விடுவிக்க ஒன்று சேர்கின்றனர்.

அடிமைத்தனத்திற்கு எதிரான ஒரு குழுவான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனின் கூற்றுப்படி தமிழ்நாட்டிலுள்ள 11 தொழில்களில் சுமார் அய்ந்து லட்சம் தொழிலாளர்கள் கடனுக்காக கொத்தடிமை நிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர். முதலாளி களிடமும், வட்டிக்காரர்களிடமும் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர்கள் உழைக்க வேண்டியுள்ளது. ஆயத்த ஆடை உற்பத்தி உட்பட மற்றபல தொழில்களில் இத்தகைய அடிமை உழைப்பு பொதுவாக நிலவுகிறது என்ற போதிலும் இவர்களில் பெரும் பாலோர் செங்கற்சூளைகளில் வேலை செய்து வருகின்றனர் என 2017ஆம் ஆண்டில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அய்ஜேஎம் கூறியுள்ளது. 45 வயதான வரலட்சுமி கோபால் 2004ஆம் ஆண்டில் அவர் விடுவிக் கப்படுவதற்கு முன்பாக திருத்தணி நகருக்கு அருகே ஓர் அரிசி ஆலை யில் கொத்தடிமை தொழிலாளியாக ஏழு ஆண்டுகளைக் கழித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட கொத் தடிமைத் தொழிலாளர்கள் சங்கத்தில் (ஆர்பிஎல்ஏ) சேர்ந்ததில் இருந்து அவர் இத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து மற்றவர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

"பெரும்பாலான நேரங்களில் வேலை தேடிச் செல்பவராக நான் இந்த ஆலைகளில் நுழைவதுண்டு. அல்லது சில நேரங்களில் எனது ஆலையிலிருந்து தப்பித்துச் சென்ற தொழிலாளர்களை தேடும் செங்கற் சூளை அதிபராகவும் நான் வேடம் புனைவதுண்டு."

"இது அபாயகரமான ஒன்றுதான் என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படுகிறது."

இவ்வாறு கொத்தடிமைகள் இருப்பதற்கான ஆதா ரத்தைக் கண்டுபிடித்தவுடன் அவர் காவல்துறைக்கு தகவல் சொல்லிவிடுவார். குறைந்தபட்சம் இதுவரையில் இத்தகைய பத்து மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்று இருப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய நான்கு ஆர்பிஎல்ஏக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறிப்பாக பருவமழை துவங்குவதற்கு முன்பாக ஏப்ரல், மே மாதங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கும் செங்கற் சூளைகள், அரிசி ஆலைகள் ஆகியவற்றில் வேலை செய்து வரும்  கொத்தடிமைகளை கண்டுபிடிப்பதற்காக மாநிலம் முழுவதிலும் பரவியுள் ளனர் என ஆர்.பி.எல்.ஏ.வின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்

முதல் ஆர்பிஎல்ஏ 2014ஆம் ஆண்டில் துவங்கப் பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதிலும் இதுவரை மேலும் மூன்று சங்கங்கள் இணைந்துள்ளன.

கடந்த ஆண்டில் இதன் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது கொத்தடிமை முறைக்கு முடிவு கட்டுவதற்கான இயக்கம் வலுவாகி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என வரலட்சுமி கூறினார்.

1976ஆம் ஆண்டில் இந்த கொத்தடிமை முறை தடை செய்யப்பட்டு விட்ட போதிலும் தொடர்ந்து இது பரவலாக நீடித்து வருகிறது. இத்தகைய நிலைமையானது 2030ஆம் ஆண்டிற்குள்  ஒரு கோடியே 80 லட்சத் திற்கும் மேற்பட்டவர்களை மீட்பதற்கான திட்டங் களுடன் இதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற் சிகளை மேலும் தீவிரப்படுத்த அரசை தூண்டியுள்ளது. "இதற்கான சட்டத்தை அமல்படுத்துவதில் இடை வெளிகளும் சவால்களும் நிலவுகின்றன" என இந்த ஆர்.பி.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அய்ஜேஎம் அமைப்பைச் சேர்ந்த குறளமுதன் தாண்ட வராயன் கூறினார்.

எனினும் கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த, இதிலிருந்து மீண்டவர்களின் குரலை அதிகாரி களால் புறக்கணித்துவிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். "இந்த சங்கங்களை உருவாக்கியதானது இதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மேடையை அவர்களுக்கு வழங்கியுள்ளது."

ஆர்.பி.எல்.ஏவின் மற்றொரு உறுப் பினரான அருள் ஏகம்பவன் என்பவர் கூறுகையில் தனக்கு எட்டு வயதாக இருக்கும்போது தனது தாத்தா வீட்டிலிருந்து ஒரு கல் குவாரியில் வேலை செய்வதற்காக தன்னை எடுத்துக் கொண்டு சென்றார்கள் என்றார். அவரது தந்தை வாங்கியிருந்த ரூ. 10,000 கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மீட்கப்படும் வரை அந்தக் கல்குவாரி யிலேயே அவர் வேலை செய்ய வேண்டி யிருந்தது.

என்னை அந்த இடத்திலிருந்து மீட்ட போது, வெளியுலகத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என தாம்ஸன் ராய்ட் டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ஏகம்பவன் தெரிவித்தார்.

"அரசின் நிதியுதவிக்கு மனு செய்வதிலிருந்து வேறு எங்கே வேலை தேடலாம் என்பது வரை எல்லாவற் றிற்குமே எனக்கு முன்பு விடுவிக்கப்பட்டவர்களிடம் தான் நான் உதவி கேட்டுச் செல்ல வேண்டி யிருந்தது. இப்போது அந்த உதவியைத்தான் நான் மற்றவர் களுக்குச் செய்ய விரும்புகிறேன்" என அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner