எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மஞ்சை வசந்தன்

(ஜூலை - 6, 2018 "பிரண்ட் லைன்" ஏட்டில் ஜியா உஷ் சலாம் எழுதிய செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை)

"இதிகாச, புராண காலத்திலேயே இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது!"

"குளோனிங் முறையில் குழந்தைகள் பெறப்பட் டுள்ளன!"

"சோதனைக் குழாய் குழந்தை முறை அப்போதே இருந்துள்ளது!"

"இணையதள வசதிகள் அந்தக் காலத்திலேயே இருந்தன!"

"வானத்தில் பறக்கும் விமானங்கள் அன்றைக்கே இருந்தன. நேரலைத் தொலைக்காட்சியில் அப்போதே பார்க்கப்பட்டது" என்று பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஆள்கள், அதுவும் பொறுப்பான மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் என்று முதன்மைப் பதவியில் இருக்கக் கூடியவர்களே கூறிவருகிறார்கள்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, விநாயகருக்கு யானைத் தலைப் பொறுத் தப்பட்டதையும், குளோனிங் முறைக்கு, நூறு கவுரவர்கள் கலயங்களில் பிறந் ததையும், சோதனைக் குழாய் குழந்தைக்கு சீதை பிறப்பையும், புஷ்பக விமானம், தொலைக்காட்சிக்கு புராணங்களில் வரும் கற்பனைக் கதைகளையும் ஆதாரமாகக் காட்டு கின்றனர். குருஷேத்திர யுத்தத்தை கண் பார்வையில்லா திருதராஷ்ட்டிரருக்கு நேரலையாக சன்ஜய் தெரிவித் ததைக் கூறுகின்றனர்.

இதுபோன்ற அபத்தமான உண்மைக்கு மாறான கற்பனையான செய்திகளைக் கூறும் ஒரு தொடக்கத்தை, 2014இல் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான். அவரைத் தொடர்ந்து சிலர் அடிக்கடி கூறி வருகின்றனர்.

இதிகாச கால புராண காலத்திலிருந்த யாகம், ஜபம், மந்திரம் எல்லாம் இன்றளவும் தொடரும்போது; அந்தக் காலத்து வேதமும், புராணமும், இதிகாசங்களும், சாஸ் திரங்களும் தலைமுறை தலைமுறையாய் பாதுகாக்கப் பட்டு இன்றைக்கும் நடைமுறைப்படுத் தப்படுகின்றபோது; அக்காலத்தில் உண் மையில் குளோனிங் முறை, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறை, சோதனைக் குழாய் குழந்தை முறை, தொலைக்காட்சி, விமானம், ராக்கெட், இருந்திருந்தால் அவையும் தலைமுறை தலைமுறையாய் நடைமுறையில் பயன்பாட்டில் தொடர்ந்து வந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் இல்லை? சிந்திக்க வேண்டாமா?

புராணங்கள் என்பதே கற்பனையாக புனையப் பட்டவை; சூரியனும் குந்தியும் சேர்ந்து குழந்தை பெற்றதாய் மகாபாரதம் கூறுகிறது. சூரியனோடு சேர்ந்து குழந்தை பெற முடியுமா?

புராண புளுகுக்கெல்லாம் அறிவியல் சாயம் பூசுவது அறிவுக்கு பொருத்தமானதா?

பின் ஏன், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்த அண்டப் புளுகையும், ஆகாசப் புளுகையும் அவ்வப்போது அவிழ்த்து விடுகிறார்கள்?

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி நதீம் ரேசாவி என்ற வரலாற்று ஆய்வாளர்,

“கற்பனைக் கதைகளை நம்பவைத்திடும் வல்லமை படைத்தவர்களாக இந்துத்துவாவாதிகள் உருவாகி வருகிறார்கள். அவர்களிடம் நிலவிடும் கடுமையான தாழ்வு மனப்பான்மையினால், அனுபவித்து வரும் இன்னல்களின் விளைவே இத்தகைய போக்கிற்கான காரணம். உளவியல் அடிப்படையில் ஒருவர் தன்னிடம் காட்டுவதற்கு எதுவும் இல்லாதநிலையில், அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தோல்விகள் தட்டிக் கொண்டிருக்கும் சூழலில், இல்லாத பொருளைக் கடுமையாக சிந்தித்து கட்டுக்கதைகளை புனைகின்றனர். தங்களைச் சுற்றி ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி, அதன்மூலம் படிப்பறிவில்லாத பாமர மக்கள் அவர்களது வலையில் விழுந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றனர்” என்கிறார்.

“வரலாற்றாளர்கள் பயன்படுத்திடும் ஆய்வுக் கூறுகள் எதுவுமில்லாமல் இந்துத்துவாவாதிகள் புராணக் கட்டுக் கதைகளை வரலாறாக மாற்றிக் கொண்டு வருகின்றனர்” என சிறீமலி என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

இதுகுறித்து "பிரண்ட்லைன்" - ஜூலை 6, 2018 இதழில் ஜியா உஷ் சலாம் என்பவர் கூறுகையில்,

“பா.ஜ.க. தலைவர்களின் இத்தகைய புராணக் கட்டுக்கதை அடிப்படையிலான பேச்சுகள் அறிவியல் உலகத்தை நோக்கி விடுக்கப்பட்டதல்ல. அடிப்படைக் கோட்பாடுகள் எதுவும் சார்ந்து இல்லாத இத்தகைய கூற்றுகளை விஞ்ஞானிகள் ஏளனம் செய்து விடுவார்கள் என்பது புராணக் கூற்றாளர்களுக்குத் தெரியும். வரலாற்றாளர்களை நோக்கித்தான் அத்தகைய கூற்றுகளை வெளிப்படுத்தி யுள்ளனர். இந்த நிலப்பகுதியின் மீது முஸ்லீம் படையெடுப்பாளர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அனைத்தும் (அறிவியல் வளர்ச்சி, அறிவியல் கருவிகள் எல்லாம்) சரியாக இருந்தன; அத்தகைய அந்நியப் படையெடுப்பின் மூலமாகத்தான் பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப் பட்டன; அதற்கு முன்பு நிலவிய பொற்காலத்தின் எச்சங்களும் நாசம் செய்யப்பட்டன என்பதான கூற்றை மெய்படுத்துவதற்கு இந்துத்துவா வாதிகள் அமைத்துள்ள வியூகம்தான் இத்தகைய கூற்றை வெளிப்படுத்தும் போக்குகளாகும்” என்கிறார்.

டில்லி பல்கலைக் கழகத்தில் பணி ஆற்றி நிறைவு பெற்ற பேராசிரியர் கே.எம். சிறீமலி என்பவர் : “முஸ்லீம்கள் இந்த நிலப்பகுதிக்கு வந்து பெரும்பாலானவற்றை அழித்ததற்கு முன்பு இந்தியாவின் கடந்த காலம் அனைத்து வகையிலும் சிறப்பாக ஒளிர்வு மிக்கதாய் இருந்ததாக இவர்கள் (பா.ஜ.க. தலைவர்கள்) கருதுகின்றனர். இவ்வாறாக கருதுவதற்கு எந்தவித காரண அடிப்படையும் கிடையாது. இப்படிப்பட்ட விசயங்களை நம்புகிறார்கள்; அந்தக் கட்டுக்கதைகள் மீது பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே அத்தகைய விசயங்களை விவாத வட்டத்திற்குள் அவர்கள் கொண்டுவருவதில்லை. புராணக் கட்டுக்கதைகளை வரலாறு என நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இந்த இரண்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளதை கவனிக்க மறுக்கின்றனர். இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் நமது இதிகாசங்களை வரலாறு எனக் கூறி, அவைகளை அப்படியே நம்ப வேண்டும் என அபத்தமாகக் கூறுகிறார்” என்கிறார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அலி நதீம் ரேசவியும் இதையே கூறுவதோடு, “நம்மை காலனி ஆதிக்கத்திற்கு ஆட்படுத்தி, அடிமைப் படுத்தியவர்களின் வாரிசுகளே இந்துத்துவா சக்திகள். காலனி ஆதிக்க முறையில் கடந்தகாலம் தொன்மை சார்ந்த போற்றுதலுக்குரியது; அந்தக் காலக் கட்டத்தை அடுத்து இருண்டகாலம், இடைக்காலம் கடந்து நவீன காலம் தொடங்குகிறது. இத்தகைய காலக் கட்டத்தில் இடைக் காலத்தில் நடந்த எதுவுமே சரியானவை அல்ல. இத்தகைய கருதுகோள் இந்துத்துவாவாதிகளுக்கு உகந்ததாக உள்ளது. இந்துத்துவாவாதிகள் இடைக்காலம் என குறிப்பிடுவது முஸ்லீம் ஆண்ட காலத்தைக் குறிக்கும் என்பதால் அதை இருண்ட காலம் என கூறி வருகின்றனர். இந்த வகை காலப்பகுப்பு அனைத்துமே முஸ்லீம் எதிர்ப்பினை உள்வாங்கியே உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறார்.

ஜமீயா மில்லியா இஸ்லாமியா அமைப்பின் வரலாற் றாசிரியர் ரிஸ்வான் கொய்சர்,  “இத்தகைய கட்டுக்கதைகள் அறிவிற்கு எதிரானவை, விவாதத்திற்கு புறம்பானவை, இருதரப்பினர் உரையாடும் போக்கிலிருந்து விலகிநிற்பவை. இந்துத்து வாவாதிகளின் குறுகிய தொன்மையான இந்தியா வானது ஒரு கற்பனை உலகமே; இடைக்காலம் முழுவதும் காட்டுமிராண்டித் தனமானது; தொன்மைக் காலத்திலேயே நல்ல நடப்புகள் அனைத்தும் நின்றுவிட்டன என்று இந்துத் துவாவாதிகள் கூறுவதில் உண்மை எதுவும் இல்லை” என்கிறார்.

பேராசிரியர் சிறீமலி அவர்கள், “இந்துத்துவாவாதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள, தொன்மைக்கால இந்தியாவின்  அறிவியல் முன்னேற்றம் என்ற பிரச்சாரத்தில் மறைந் திருப்பது முஸ்லீம் எதிர்ப்புத் திட்டமே. எந்தவொரு பா.ஜ.க. தலைவரும் முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் நடைபெற்ற அறிவியல் முன்னேற்றம் பற்றி பேசுவது கிடையாது.

மன்னர் அக்பர் பதேபூர் சிக்ரி நகருக்கு அருகில் ஒரு அணையினை நிர்மாணித்தார். அந்த அணையிலிருந்து பாரசீக நீர்சக்கரங்கள் மூலம் இறைக்கப்படும் தண்ணீர் பதேபூர் சிக்ரிநகரின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்தது. அதே அணையில் மன்னர் ஷாஜகான், கால்வாய்கள் அமைத்து பாசன முறையினை நடை முறைக்குக் கொண்டுவந்தார். டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் சந்தையில் நீர் செல்லும் வாய்க்கால் இருந்ததாம். ஜாய்கர் கோட்டையில் பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலை யினை மன்னர் ஷாஜகான் உருவாக்கினார்.

முகலாய அரசவையில் அங்கம் வகித்த வானவியல் வல்லுநர் பைருதீன் முனாஜம் தமது படைப்பான “ஜு ஷா ஜெகானி” என்பதில் வான்வெளியில் கோளங்களின் நகர்வினை கணிப்பது பற்றிய கால அட்டவணையினைப் பதிவு செய்திட்டவர். அவுரங்கசீப் தனது  ஆட்சிகாலத்தில் படைக்கருவிப் பாசறையில் உலகிலேயே சிறந்த பீரங்கி யினை வைத்திருந்தார். ஆயுத பீரங்கியினை உருவாக்கிட தேனிரும்பும் வெண்கலமும் சேர்ந்த கலவை தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக ஜாபர்பாக்ஷ் கூறுகிறார். அக்பர் காலத்தில் போர்க்காலங்களில் பயன்பாட்டு நிலையிலிருந்த உலோக உருளை விண்கலம் (ஸிஷீநீளீமீt) மறக்கமுடியாதது. மேலும் சான்று கூறும் வகையில், மொகலாய மன்னர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட படைக் கருவிகள் அய்ரோப்பிய நாடுகளில் அந்தக் காலக் கட்டத்தில் புழக்கத்தில் இருந்த கருவிகளை விட மேம்பட்டவையாக இருந்தன” என்கிறார்.

திப்புசுல்தான் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, இஸ்லாமியர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி மேம்பட்டே இருந்தது. ஆனால், புராண காலத்திலிருந்த அறிவியல் வளர்ச்சியை இஸ்லாமியர்கள் அழித்துவிட்டனர் என்பது அபாண்டமான பொய் என்பதோடு பித்தலாட்டப் பிரச்சாரமும் ஆகும்.

பேராசிரியர் சிறீமலி மேலும் கூறுகையில், அறிவியல் சாதனைகளுக்கு உரிமை கோரும் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. வித்யாமந்திர் கல்விக் கூடத்தில் அனைத்து வகையான திசைதிருப்பல் களும் பாடங்களாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சரஸ்வதி ஆறு உருவானது பற்றிய கட்டுக் கதையினை ஆதரித்து ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது” என்று ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் சதித் திட்டத்தை அம்பலப்படுத் துகிறார்.

ரேஸாவி அவர்கள், “வரலாற்றை சரியான நிலைப்பாட்டில் எழுதி வைப்பதே ஒவ்வொரு வரலாற்றாளரின் கடமையாகும். பொய்யை எதிர்க்கும் போக்கு வேண்டும். கடந்த காலத்தின் உண்மை நிலையினை புரிய வைக்கவேண்டும். ஒவ்வொரு கடந்த காலத்திலும் அழகில்லாதது இருக்கும்; அழகானதும் இருக்கும். கடந்த காலம் என்பது பலவகை நிழல் படிந்தது; பல்வேறு வகை சார்ந்தது. கடந்தகாலம் தவறானதாக இருந்தாலும் அது நம்முடையது. கடந்தகால அழ கின்மையிலிருந்து அழகான சரியான நிகழ்காலத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதே பெருமை கொள்ளத்தக்க உண்மையாகும். நமக்கான எதிர்காலத்தை பெற்றிட கடந்தகாலம் நமக்கு வழிகாட்டட்டும். உண்மை யான, நம்பிக்கை மிகுந்த வரலாற்றாளர்களை விட சிறப்பாக நம்மை யார் வழிநடத்திட முடியும்? புராணக் கட்டுக்கதைகள் நமக்கு ஒரு போலியான பெருமையினை வழங்கி, நம்மை தன்னமைதி (சிஷீனீஜீறீணீநீமீஸீநீஹ்) கொள்ளச் செய்துவிடும்.

நமது அறிவியலாளர்களும் வரலாற்றாளர்களும், பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, அறி வியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிமை கோருபவர்களை கருத்தரங்கங்களில் மட்டுமல்லாமல், கல்விக் கூடங்களில் மட்டுமல்லாமல், பொதுவெளியிலும் எதிர்த்து வினை ஆற்றிட வேண்டும்.

முஸ்லீம்கள் இந்த நிலப்பகுதிக்கு வருவதற்கு முன்பே இந்தியா பெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டதாகக் கூறுவது உண்மை அல்ல. அறிவியல் முன்னேற்றத்திற்கும் - அது இல்லாமைக்கும், முஸ்லீம் மன்னர்கள் வருகைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. விநாயகன், சீதை பற்றிய கற்பனாவாத கருத்துக்கள் ஆதாரம் ஏதுமில்லாதவை; உள்ளீடு அற்றவை. பெரியதொரு இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே அவைகள்" என்று ஆணித் தரமாகக் கூறியுள்ளார்.

எனவே, இதிகாச, புராணக் கற்பனைகளையெல்லாம் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளோடு தொடர்பு படுத்தி பெருமை சேர்க்க முயலும் அற்பத்தனத்திற்குள், இஸ்லாமியருக்கு எதிராகப் பழிபோடும் சதித் திட்டமும் அடங்கியுள்ளது என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner