எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த 3.8.2018 அன்று மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள், இந்து அற நிலையத்துறையை ஒழித்துக்கட்டி, மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சியில், குற்றவாளிகளான பார்ப்பனர்களை விட்டுவிட்டு, பார்ப்பனரல்லாத அதிகாரிகளை பழிவாங்கும் முயற்சி நடைபெறுவதையும், அதற்கு காவல்துறை அதிகாரி பயன்பட்டு வருவதையும், சுட்டிக்காட்டி விரிவான அறிக்கையை வெளியிட்டார்கள். பல அரசியல் கட்சிகளும், தமிழக அரசு, வழக்கை சி.பி.அய்.க்கு மாற்றியதை கண்டித்து அறிக்கை தரும் நிலையில், பொதுவான மக்களும், அதை ஆமோதிக்கும் மன நிலையில் இருந்த நிலையில், ஆசிரியரின், சி.பி.அய்,க்கு வழக்கு மாற்றிதை வரவேற்று விடுத்த அறிக்கை, வியப்பை அளித்தது.

தற்போது, ஆசிரியரின் அறிக்கையில் சுட்டிக்காட்டிய அதே காரணங்களை, இந்து அற நிலையத்துறையின் அதிகாரிகள் அமைப்பும் சுட்டிக்காட்டி, அதன் நிர்வாகி, சிறீதர் தொலைக் காட்சியில் பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், துணை ஆணையர் கவிதா, மிகவும் நேர்மையான அதிகாரி என்றும், அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். குற்றம் புரியும் அதிகாரிகளை, எந்த விசாரணையும் செய்ய வில்லை என்பதையும், கோவில் நிலங்களை ஆக்கிரமிப் போரை  காலி செய்யச் சொல்லும் அதிகாரிகள் மிரட்டப்படு கின்றனர் என்றும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். சி.பி.அய்.க்கு வழக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது; நேர்மையான அதி காரிகள் தண்டிக்கப்படக் கூடாது. தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் சிறீதர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

ஆசிரியர் அவர்கள் 3.8.2018 அன்று அறிக்கை வெளியிட்டார். இன்று, 7.8.2018இல்  இந்து அற நிலையத்துறையின் அதிகாரிகள் கூட்டமைப்பும் ஆசிரியர் சொன்ன அதே  கருத்தை வலியுறுத் துகிறது.

ஆசிரியர் அறிக்கையின் இறுதியில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதையில் இருந்து சொன்னது போல், 'உண்மை ஒரு நாள் வெளியாகும்  அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்'.

- குடந்தை கருணா