எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோயங்கா வீட்டின் மாஜி கணக்குப் பிள்ளை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அங்கீகரிக்கப்படாத தலை கொழுத்த பூணூல் தம்பிரான் கு.மூர்த்தி அய்யர்வாளே!

கேரளத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் - நிலச்சரிவு காரணமாக சுமார் 400-க்கும் மேற்பட்ட மக்களின் இறப்பு, பல பேர் இன்னமும் வீடிழந்து, சொந்த மாநிலத்திலேயே திடீர் அகதிகளாகி' விட்டதைப் போன்று, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, மூச்சும், உணவும் பெறும் வேதனை மிகுந்த நிலை தொடருகிறது.

மழையோ மேலும் நீடிக்கும் என்று வானிலை அறிவிப்புகள் மக்களின் வயிற்றில் புளியைக் கரைக் கிறது.

உலகெங்கும் உள்ள மனிதநேயர்கள் கட்சி, ஜாதி, மதம், மாநிலம் என்ற வேற்றுமைகளைப் புறந்தள்ளி, மனிதாபிமானம் என்ற அறுபடாத பாசக் கயிற்றால் இணைக்கப்பட்டு, நேச உணர்வைக் கொட்டிக் கொண் டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் சூழப்பட்டவர்களை அதே முறையில் காப்பதைப்போல அன்பு வெள்ளம், மனித நேய மழை மடமடவென்று இடையறாது பெய்து, அம்மழையே பாதிக்கப்பட்ட கேரள சகோதர - சகோதரிகளின் ஆறுதலுக்கான மாமருந்தாய் மாறி, காத்து நிற்கும் கடமையைச் செய்கின்றது!

உலகம் உயர்ந்தோர் மாட்டு' என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது!

இந்த நேரத்தில் ஒரு ஈனக்குரல், கடமையின் வெளிப் பாடாக அல்லாது, கயமையின் ஈனக்குரலாக, டிவிட்டரில் வருவது, உங்களையும், உங்களவர்களையும் சரியாக அடையாளம் காட்டி புரிந்துகொள்ளப் பெரிதும் துணை செய்கிறது.

எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற பார்ப்பனப் பேராசைக்கு முளை கிளம்பி உலா வருகிறது! (பேராசைக்காரனடா - பார்ப்பான்' என்று பார்ப்பன பாரதியே சரியாகத்தான் சொன்னார் போலும்!)

கேரளாவில் ஏன் இப்படி ஒரு இயற்கைச் சீற்றம்? அடாது பெய்யும் பெருமழை, விடாது பாயும் பெருவெள்ளம், தொடரும் நிலச் சரிவு ஏன் என்பதை இன்றைய நவீன ஜோதிட திலகம் கு.மூர்த்தி அய்யர் வாள் மட்டும் கண்டறிந்து குரு உபதேசம் செய்யப் புறப்பட்டு விட்டார்.

1. சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்ததுதானாம்!

2. சுவாமியே சரணம் அய்யப்பாவுக்குக் கடும் கோபம் வந்து, இப்படி ஒரு மழை, வெள்ளம், நிலச்சரிவை ஏவிவிட்டு விட்டாராம்!

அம்மக்களைத் தண்டிக்கிறார் என்ற பொருளில் இப்படி ஒரு பக்திக் கரடியை' துக்ளக்' பத்திரிகையின் சர்க்குலேஷன் வாரந்தோறும் குறைத்து இறுதியில் மூடுவிழாவை நடத்தலாமா என்ற நிலையில், அதனைத் தூக்கி நிறுத்திட முனைப்புடன் செயல்படும் இந்த முக்காட்டு மனிதர் - கைகோர்த்து வைத்து கட்சிகளை சுவாகா' செய்த பாச்சா பலிக்காத இந்த பூணூல் திருமேனி கூறுகிறார்:

உள்ளம் இருக்கவேண்டிய உடலில் சில மனிதர் களுக்குப் பள்ளம் இருக்கும்; அதோடு கள்ளமும் இணைந்து கொள்ளும்!

அதே டிவிட்டரில், அவ்வாதத்தின் முகத்தில் அறைந்து, முதுகெலும்பை உடைப்பதுபோல, பதில்கள் ஓங்கி ஒலித்துக் கேட்கத் தொடங்கிவிட்டன!

இப்படி எழுதியதன்மூலம், கடவுள் தேசம் கேரளா' என்று அழைக்கப்படுவது தவறு. கடவுள் ஒருபோதும் கருணையே வடிவான கருணாமூர்த்தி அல்ல என்பது விளங்கிடவில்லையா?

திருவள்ளுவர் பண்புக்கு  முரணான மூன்றாம் தரப் பேர்வழியைக் கீழானவர்'' என்று கூறுகிறார்.

இன்னா செய்தாரைக் கூட ஒறுத்தல் - தண்டித்தல் கூடாது என்று மனிதர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கடவுளோ - அய்யப்பனோ - கயமைத்தனத்தோடு தண்டிக்கிறார் என்று கூறியுள்ள கு.மூர்த்தியார், சபரிமலை அய்யப்பனை சாய்க்கிறாரா? பெருமைப் படுத்துகிறாரா?

3. சுப்ரீம் கோர்ட் இன்னும் தீர்ப்பை அவ்வழக்கில் வழங்கவே இல்லை. பின் ஏன் தண்டனை? நீதிபதிகளின் கனவில் தோன்றி தீர்ப்பு சாதகமாக எழுதச் சொல்ல லாமே! அப்பாவி கேரள பக்தர்களையா தண்டிப்பது?

கோணல் புத்தி அல்லவா அது - அது உண்மையாக இருப்பின்?

4. சுப்ரீம் கோர்ட் உள்ள டில்லியில் மழை, வெள்ளம், இடி, புயல் வீசி உச்சநீதிமன்றத்தை அல்லவா தாக்கியிருக்கவேண்டும்?

வேதங்களில் குருமூர்த்தி அய்யர்வாளின் முன் னோர் பரம்பரை வேண்டிக் கொண்டபடி (எதிரிகளுக்கு ஜூரத்தைக் கொடு, கோட்டைகளை இடி- மின்னலால் தாக்கு - என்ற சுலோகங்களைப் போல்) நடந்திருக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு மறைமுக அச்சுறுத்தலையும் இதன்மூலம் தெரிவிப்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆதிகால காட்டுமிராண்டிகால பயமும், அனுமான மும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதர்கள் செவ்வாய்க் கிரகத்தில் குடியேற ஆயத்தமாகும் - சூரியனைப்பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய ஆயத்தமாகும் காலத்திலா எடுபடும்?

காகத்தையும் படைத்து, கல்நெஞ்சப் பார்ப் பானையும் ஏன் படைத்தாய் கச்சி ஏகாம்பரனே'' என்ற பக்தர்கள் பாடும் பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது.

கு.மூர்த்திகளுக்கு இனி நோபல் பரிசுக்குச் சிபாரிசு செய்யலாமே!

- கருஞ்சட்டை

குறிப்பு: 1952 இல் இதே அய்யப்பன் கோவில் தீ விபத்துக்கு ஆளாகி 60 பேர் பலியாகவில்லையா? மதுரை பி.டி.ராஜனும், நவாப் ராஜமாணிக்கமும் இணைந்து புனருத்தாரணம் செய்து வெடித்துச் சிதறிய அய்யப்பன் கடவுளுக்குப் பதிலாக புதிய அய்யப்பன் சிலையை வைத்தனரே!

1999 ஆம் ஆண்டில் நெரிசலில் சிக்கி 52 பக்தர்கள் பலியாகவில்லையா?

2011 ஜனவரி 14 அன்று நடைபெற்ற விபத்தில் 102 அய்யப்ப பக்தர்கள் பலியாகவில்லையா?

அய்யப்பன் சக்தி என்பதெல்லாம் சுத்தப் புரூடா என்று ஒப்புக்கொள்ள அறிவு நாணயம் இல்லாமல், அய்யப்பன் கோபம் என்று கூறி, கடவுளைக் காப்பாற்றப் போகிறதா குருமூர்த்திக் கும்பல்!? ஆம் மனிதன்தான் கடவுளைக் காப்பாற்றுகிறான் - ஏன் சுரண்டல் தொழில் ஜாம்ஜாமென்று நடக்க வேண்டுமே!