எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தஞ்சை, ஜன. 21- தஞ்சை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் 8.1.2017 அன்று தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா திராவிடர் திருநாளாக கோலா கல கொண்டாட்டத்துடன் தஞ்சை மாதாக் கோட்டை சாலையில் அமைந்துள்ள பெரியார் படிப்பகத்தில் மாலை 4 மணிக்கு மிகச்சிறப்புடன் தொடங்கியது.

கரும்பு, வாழையுடன்

கண்ணைக் கவர்ந்த தோரண வாயில்

விழாவினை முன்னிட்டு மா, தென்னை, பனை, வாழையால் ஆன எழில்மிகு தோரணங்களுடன் படிப்பக நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. கரும்பும், வாழைக் குலையும் கட்டித் தொங்கவிடப்பட்ட அழகு காண்போர் கண்களைக் கவர்ந்தது. ஆங்காங்கே இளநீர் குலைகளும் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன.

நகரைக் கலக்கிய பகுத்தறிவு

கோலாட்ட நிகழ்ச்சி

மாலை 5 மணிக்கு சடையார் கோயில் கழகத் தோழர் வெ.நாராயணசாமி அவர்க ளின் இயக்கத்தில் பெரியாரின் கொள்கை பரப்பும் சிறுவர், சிறுமியரின் பகுத்தறிவு கோலாட்ட கலை நிகழ்ச்சி தொடங்கியது. விழா நடைபெறும் இடத்திலிருந்து தஞ்சை,புதுக்கோட்டை முதன்மை சாலை சந்திப்பு வரை இசை நிகழ்ச்சி ஊர்வலமாக நடைபெற்று விழா மேடையை வந்தடைந் தது. இக்கோலாட்ட நிகழ்ச்சியை நூற்றுக் கணக்கில் பொது மக்களும், தோழர்களும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

மாலை சரியாக 6.30 மணிக்கு 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் விழா' சிறப்புக் கருத்தரங்கம் தஞ்சை ஒன்றிய கழகத் தலைவர் இரா.சேகர் தலைமையில் தொடங்கியது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றி னர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குனர், தலைமைக் கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன் பழகன் தொடக்க உரையாற்றினார். பெரியார் பிஞ்சு இரா.அ.கவிநிலவு நன்றி கூறி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

சிறப்பு அழைப்பாளர் முனைவர் உரு.இராசேந்திரன் ஆய்வுரை

“தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” எனும் தலைப்பில் பூண்டி புட்பம் கல்லூரியின் மேனாள் முதல்வர், சிறந்த பொருளாதார ஆய்வாளர் முனைவர் உரு.இராசேந்திரன் அவர்களின் சிறப்பான ஆய்வுரையில், உலகில் பிற நாட்டினர், இனத்தினர், மதத்தினர் கொண்டாடும் புத்தாண்டுகள் அவர்கள் தோன்றிய வரலாறு பற்றியும், தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் தான் என்பதற்குரிய தமிழர்களின் இலக்கியம். சமுதாயப் பண்பாட்டுத்தளம் மற்றும் இயற்கையோடு இசைந்த காரணங்களை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். “தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” என முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் சட்டம் இயற்றி யதை நினைவு கூர்ந்தார்.

தந்தை பெரியாரின் உழைப்பால் தமிழினம் மேம் பட்டதையும் இன்னும் மேம் பட்டிட தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர், டாக்டர் கலைஞர் அவர்களும் பாடுபடுவதை தமிழினம் நன்றி உணர்வோடு எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளதை எடுத்துரைத்து ஒவ் வொரு ஆண்டும் நாடெங்கும் தமிழ்ப்புத்தாண்டு எழுச்சி யுடன் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோபு.பழனிவேல் தொகுத்து வழங்கினார்.

தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழாக் கொண்டாட் டத்தின் மகிழ்வாக வருகை தந்த அனைவருக்கும் சுவை மிக்க இனிப்புப் பொங்கல், வாழைப்பழம், கரும்பு வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தங்க.வெற்றிவேந்தன், செயலாளர் மீ.அழகர்சாமி, அமைப்பாளர் மா. இளஞ்செழியன் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக் குமார் விழா வெற்றிக்குப் பெரும் பணியாற்றினார். மாவட்டப் ப.க. செயலாளர், கோபு.பழனிவேல், முனை வர் அதிரடி க.அன்பழகன், பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோரின் ஊக்கமும், முயற்சியும் விழா வெற்றி பெற காரணங்களாக அமைந்தன.

நன்றிக்குரிய வள்ளல்கள்

இவ்விழா சிறக்க பல வகைகளிலும் அன்பளிப்புகளை வழங்கி சிறப்பித்த நன்றிக்குரியவர்கள்: அள்ளூர் பாலு (பூதலூர் ஒன்றிய தலைவர்), வளக்குப்படி பால சுப்ரமணியன் (திருவையாறு ஒன்றிய தலைவர்), மு.தேவா (சிவகாமி நகர் இளைஞரணி தலைவர்), அ.தனபால் (மாவட்ட இளைஞரணி தலைவர்), வி.கே.என்.அரிசி மண்டி கர்ணன் (தஞ்சை), முனைவர் குமார், தெற்கு நத்தம் சித்தார்த்தன், ப.சா.யாழினி, ப.சா.யாழிசை, இரா.சேகர் (ஒன்றிய தலைவர்), ஆட்டோ செ.ஏகாம் பரம் (ஒன்றிய செயலாளர்), அண்ணா மாதவன், பாலகிருஷ்ணன், பொன்னாப்பூர் திருநாவுக்கரசு, சரவணன், வெங்கடேசன் (ஒன்றிய இளைஞரணி தலைவர்), மு.செல்வமணி, அ.சாந்தி, செ. பாக்கியம், ச.ஹேமலதா,  யோகா மல்லிகா, செழியன் தங்கமாளிகை (தஞ்சை).

ப.க.பொதுச் செயலாளர் மா.அழகிரி சாமி, கழகப் பேச்சாளர் பூவை புலிகேசி, ப.தேசிங்கு, பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா.சரவணகுமார், மாநகர தலைவர் வ.ஸ்டாலின், செயலாளர் சு.முருகேசன், இணைச் செயலாளர் ப.நரேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ச.சந்துரு, மாவட்ட பகளிர் பாசறை அமைப்பாளர் ச.அஞ்சுகம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஏ.பாக்கியம், திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்அஞ்சுகம் பூபதி, மாவட்ட ப.க.துணைத் தலைவர் முனைவர் பி.வி.ஆர்.வீரமணி, மாவட்ட ப.க.அமைப்பாளர் ச.அழகிரி, மாநகர ப.க.செயலாளர் மா.இலக்குமண சாமி, ஒன்றிய ப.க.செயலாளர் மு.அறிவுச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர், தண்டாயுதபாணி, அம்மாப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் காத்தையன், ஒன்றிய ப.க. செயலாளர் பெரியார் கண்ணன், திருவோணம் ஒன்றிய ப.க.தலைவர் நாக நாதன், ஒரத்தநாடு ஒன்றிய கழக தலைவர் ஆ.இலக்குமணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரவி.தர்மசீலன், மாவட்ட மாணவரணி தலைவர் வே.தமிழ் செல்வன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மருங்குளம் ரமேசு, மாநில கலைத் துறை செயலாளர் தெற்குநத்தம் சித்தார்த்தன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை.ராமசாமி, ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் விஜயகுமார், சடையார் கோயில் குழந்தை வேலு மற்றும் பெரியார் பிஞ்சுகள், ச.சிந்தனைச்செல்வன், செ.முல்லை, செ.விடுதலையரசி, ஜெ.ஜெ.கவின், ஜெ.ஜெ.காவியா, ச.வே.இனியா, அ.இனியா, அ.இனிய வன், இ.மஞ்சரி, இ.சம்யுக்தா, இ.வைஷ்ணவி, தி.ஆர்த்தி, ரா.வம்சிகா, இலெ.மதி மாரியப்பன், இலெ.சரண், இரா.பேகன், இரா.கபிலன், நா.பரணிதரன், நா.பாரினி, வி.இளமாறன் மற்றும் மகளிரணி தோழி யர்கள் முனைவர் மணிமேகலை இ.நல்லபொண்ணு, ஆசிரியை லை.மகேஸ்வரி, ஆசிரியை விமலா புலிகேசி, ஆசிரியை மலர்கொடி, சூரிய காந்தி நாகநாதன், பொறி யாளர் பி.வி.ஆர். வீ.அருள்அன்பு, வி.சுசிலா, ரேவதி மற் றும் ஏராளமான பொதுமக்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner