எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உசிலம்பட்டி, ஜன. 21- உசிலம் பட்டியில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.12.2016 அன்று மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர்மன் னன் தலைமை வகித்தார். மாவட்ட ப.க. செயலாளர் ஜெ. சுப்பிரமணியன், அனைவரை யும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரோ.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் அழ.சிங்கராசன், மதுரை மண் டல செயலாளர் மா.பவுன்ராசா ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

மாநில ப.க.பொதுச் செய லாளர் மா.அழகிரிசாமி பகுத்த றிவாளர் கழக செயல்பாடுகள் குறித்து விளக்கவுரையாற்றி னார். தொடர்ந்து ப.க.பொறுப் பாளர்கள் த.மாயி, பெரி.காளி யப்பன், ச.பால்ராசு, பேராசிரி யர் மயில் வடிவு, சே.முனிய சாமி, க.நல்லதம்பி (மாநில ப.க. துணைத் தலைவர்), கே.டி.சி.எஸ்.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்), கு.பா. நடராசன் (பணி நிறைவு பெற் நீதிபதி, மாநில வழக் குரைஞர் அணி செயலாளர்) உரைக்குப் பின் மாநில ப.க. தலைவர் வா.நேரு ஆக்கப்பணி கள் குறித்து கருத்துரையாற்றி னார்.

கூட்டத்தில் பங்கேற்றவர் கள் பொ.தனராசு, ச.ஜெயபிர காஷ், எஸ்.சுந்தரராசன், கவி ஞர் வேல்முருகன், ஆசிரியர் ராதாகிருஷ்ணன், து.சந்திரன், குமார், சி.பிரபாகரன், அ.பவுன் ராசு, அ.காசிமாயன் உள்ளிட்ட வர்கள்.

தீர்மானங்கள்

1) புதிய கல்வி கொள்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு கருத்தரங் கத்தை ஜனவரி மாதம் ‘அரங்கக் கூட்டமாக‘ நடத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.

2) உசிலம்பட்டி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்களாக மாவட்ட அமைப்பாளர் ச. ஜெயபிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் கவிஞர் பி.வேல் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் த.மாயி ஆகியோர் நியமிக்கப்படுகிறார் கள்.

3) புதிதாக பகுத்தறிவு ஆசிரியரணி துவங்கப்படுகிறது எனவும், புதிய மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளராக சி.ஏ.தனுஷ் கோடி அவர்களை நியமிக்க தீர் மானிக்கப்படுகிறது.

சி.ஏ. தனுஷ்கோடி (அமைப் பாளர் , பகுத்தறிவாளர் கழகம்) நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடு களை மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் சிறப்பாக செய்திருந்தது. கூட்டத்தில் அய்ம்பதுக்கும் மேற் பட்ட ப.க. தோழர்கள் பங் கேற்றார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner