எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜன. 23 பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா 19.1.2017 இல் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது.

முதல் நிகழ்வாக பலத்த கரவொலிக்கு இடையே தங்கம் இராமச்சந்திரா கழகக் கொடியை உயர்த்தி வைத்தார். தந்தை பெரியார் உருவப் படத்தினை பொதுக் குழு உறுப்பினர் சென்னை, நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் திறந்து வைத்தார்.

பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற, செயற்குழு உறுப்பினர் ஒளிப்படக கலை ஞர் ஆனந்த வேலனின் மகன் ஆதித்யனுக்கு, தங்கம் இராமச் சந்திரா கல்வி அறக்கட்டளை சார்பில் அய்நூறு ரூபாய் வழங் கினார். கருநாடக மாநில திரா விடர் கழகத்தின் பயனாடையை மு.ஜானகிராமனும், ஆர்.டி.வீர பத்திரனும் பெரியார்  பிஞ்சினைப் பாராட்டி மகிழ்வித்தனர்.

கழகத் தோழர்களை வர வேற்றும் இணைப்புரையும் மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் மு.சானகி ராமன் விழாவிற்கு தலைமை யேற்று, தமிழர் திருநாளைப் பற்றியும், பொங்கல் பெருவிழா வினை தமிழர்கள் உலகம் முழுவதும் கொண்டாடுவது பற்றியும் உரை நிகழ்த்தினார்.

மாநில துணைத் தலைவர் தங்கம் இராமச்சந்திரா வெளி வரவிருக்கும் "நாணயத்தின் இரு பக்கம்" எனும் தலைப்பு கொண்ட தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஆகி யோர்கள் பொன்மொழி அடங் கிய தமிழ், கன்னடம் ஆங்கிலம் கொண்ட நூலினைப் பற்றி விளக்கி பேசினார்.

மாநில துணைத் தலைவர் வீ.மு.வேலு, தமிழ் திங்கள் தை திங்களே முதல் மாதம், பார்ப் பனர்களின் போலித்தனமும், முட்டாள் தனமும் கொண்ட - நாரதருக்கும்  கிருட்டிணருக்கும் பிறந்த 60 பிள்ளைகளின் பெயர் களை கொண்ட சமஸ்கிருத ஆண்டினை தமிழர் கொண் டாடக் கூடாதென நகைச்சுவை யுடன் பேசினார்.

வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஜெ.அருண், விழாவின் மேன்மை குறித்தும், தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காத பா.ஜ.கவின் கபட நாடகத்தினை விளக்கியும் உரை நிகழ்த்தினார். பின்னி மில் தலைவர் ஆட்டோ இரா.பாஸ்கர், கழக செயல்பாடுகள் குறித்து பேசினார். கழக வழக் குரைஞர் பிரிவு தலைவர் கவி ஞர் சே.குணவேந்தன் பொங்கல் விழாவினைக் கொண்டாடுவது குறித்தும், ஜல்லிக்கட்டு குறித்து கழக மேற்கொள்ளும் தொடர் நிகழ்வுகள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

இறுதியாக கழக பொதுக் குழு உறுப்பினர் சென்னை நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், அறிவாசான் தந்தை பெரியார் தமிழனுக்கு பொங்கல் விழா வினை அறிமுகம் செய்து வைத் ததையும், தமிழர் தலைவர் ஆசிரியருக்கு மதுரையில் வழங்கவிருக்கும் வேன் அளிப்பு குறித்தும் கழகத்தோழர்கள் கலந்து கொள்வது குறித்தும் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வினை நிறைவு செய்து பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம் பொங்கல் விழா விற்கு வருகை தந்த அனை வருக்கும் நன்றி கூறினார்.

அடையாறு ஆனந்த பவன் மேலாளர் செயற்குழு உறுப் பினர் ந.சிவசங்கரன் வெண் பொங்கலும், சர்க்கரைப் பொங் கலும் வழங்கினார். கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண் டனர்.

தந்தை பெரியார் படத்தை கரும்பினை இரு பக்கமும் வைத்து அலங்கரித்து சிறப்பித்தனர்.