எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பழனி, ஜன. 25- பழனி அருகே உள்ள நெய்க்காரப் பட்டியில் 26.12.2016 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் திராவிடர் கழ கத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் 84ஆவது பிறந்த நாள் விழா, அய்யாவின் அடிச்சுவட் டில் பாகம் 5 (இயக்க வரலா றான தன் வரலாறு) நூல் அறி முக விழா, தந்தை பெரியார் அவர்களின் 43ஆவது நினைவு நாள் பொதுக் கூட்டம் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நெய்க்காரப் பட்டி தோழர் நா.நல்லதம்பி தலைமை தாங்கினார். வழக் குரைஞர் க.செல்லத்துரை, பழனி முத்துக்குமார், மா.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். நூலை வெளியிட்டு உரை யாற்றிய பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில் குமார் அவர்கள் எத்தனையோ புத்தகங்கள் நாம் படித்து இருந் தாலும் திராவிடக் கொள்கை நூல்களைப் படித்தால் தான் நாம் மேலும் மேலும் பக்குவம் அடைய முடியும்.

குறிப்பாக தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம் தான் நம்மை மனிதனாக்க முடியும். அதற்கு தன்னை பெரியார் கொள் கைக்கு அர்ப்பணித்துக் கொண்டு உலகம் முழுக்க பெரியார் கொள் கையை எடுத்துச் செல்லக்கூடிய நம்முடைய ஆசிரியர் அவர்க ளுக்கும், ஆசிரியர் எழுதிய இந்த நூலை வெளியிடுவதற்கு என்னை அழைத்து பெருமை படுத்திய திராவிடர் கழகத்திற் கும் (தாய் கழகத்திற்கும்) கட மைபட்டவனாகிறேன்.

இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது தான் பெருமையாகவும் இருக்கிறது என உணர்வோடு பேசி அமர்ந் தார். நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றிய பழனி நகர்மன்ற முன்னாள் தலைவர் தோழர் வழக்குரைஞர் வ.இராஜமாணிக் கம் அவர்கள் நான் பொதுவு டைமை சித்தாந்தத்தில் களப் பணி செய்தாலும், தந்தை பெரி யார் இல்லை என்றால் நான் மட்டுமல்ல நாமெல்லாம் மனி தனாகவே இருக்க முடியாது என்றும், ஆசிரியர் எழுதிய நூலை நான் முழுக்க படித்தேன். ஆசிரியர் உழைத்த உழைப்பு, பட்ட கஷ்டங்கள் மலைக்க வைத்தது என்று விரிவாக பேசி அமர்ந்தார்.

எழுச்சியுரையாற்றிய தலைமை கழக சொற்பொழிவா ளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் பேசுகையில், தமிழர் தலைவர் அவர்களுடைய உழைப் பால் இந்த இயக்கத்திற்கு கிடைத்த மரியாதை, பாது காப்பு அரண், சுயமரியாதை தேடல், மற்றும் இதுபோன்ற நூல்களை வாசிக்கும்போது நாம் பெறுகிற இனவுணர்வு இவற்றிற்கெல்லாம் எதிராக இருக்கிற பாசிச கொள்கைக ளையும், பாதுகாப்பாக இருக் கிற மத்திய பி.ஜே.பி.யின் மோடி அரசின் பார்ப்பனீய குறுக்கு புத்தியையும் குறிப்பாக புதிய கல்விக் கொள்கையால் பார்ப் பனர்களுக்கு எப்படி லாபம், பார்ப்பனர் அல்லாத நம் திரா விட இனத்திற்கு வரும் சூழ்ச் சியை பற்றி மிகவும் இன உணர்ச்சியோடு அனைவரும் புரியக்கூடிய வகையில் சிறப் பாக பேசி முடித்தார். இறுதி யில் மாவட்ட அமைப்பாளர் சு.அழகர் சாமி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெய்க்கார பட்டி பெரியார் உணர்வாளர் மதுரை இராசா அவருடைய வாழ்விணையர் சுரேகா (இவர் கள் இருவரும் யோகா பயிற்று னர்கள்) ஆகியோர் அனைவ ருக்கும் உணவு ஏற்பாடு செய் தார்கள்.

பங்கேற்றோர்

மண்டல தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் பெ.இரணியன், மாவட்ட அமைப்பாளர் சு.அழகர்சாமி, மாவட்ட துணைத் தலைவர் ச.அங்கப்பன், பழனி நகர தலைவர் ஜே.ஜோசப், பழனி நகர செயலாளர் சி. இராதாகிருஷ்ணன், மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வன், மாவட்ட ப.க. செயலாளர் சே.மெர்சி ஆஞ்சலா மேரி, மண்டல மாணவ ரணி செயலாளர் பொன்.அருண்குமார், தொ.ஒன்றிய தலைவர் மானூர் இராமலிங் கம், தொ. ஒன்றிய செயலாளர் ச.பாலசுப்பிரமணி, பழனி ஒன் றிய செயலாளர் தே.பெரியார் சுரேசு, மாவட்ட மாணவரணி செயலாளர் சே.மெ.மதிவதனி, மாவட்ட இளைஞரணி செய லாளர் க.முத்துகிருஷ்ணன், இளைஞரணி ப.மாரிமுத்து, பெ.பழனிவேல், சின்னப்பன், இல.சித்திரசேனன் மற்றும் தோழியர்கள் ந.திலகவதி, அம லிசுந்தரி, மு.செல்வி, பழனி முத்துக்குமாருடைய இரண்டு மகள்கள், முத்தமிழ் பயிலக முதல்வர் தோழர் ஜெகதீஸ்வ ரன், மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டி உள்பட திமுக தோழர்கள் மற் றும் பொதுமக்கள் ஏராளமா னோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.