எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஜன. 25- காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலக மான என்.ஆர்.சாமி.மாளிகை யில் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ச.அரங் கசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட கழக  செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா அனைவரையும் வரவே ற்றும் கூட்டத்தின் நோக்கம் குறித்தும் உரையாற்றினார்.

வரும் பிப். 4ஆம் நாளன்று மதுரையில் நடைபெறவுள்ள கழக பொதுக்குழு   கூட்டத்திற் கும் அன்று  மாலை நடக்கும் கழக தலைவருக்கு  பிரச்சார வாகனம் வழங்கும் விழாவிற் கும் காரைக்குடி கழக மாவட் டத்தின் சார்பில் தனி வாகனம் மூலம் தோழர்கள் பெருந்திர ளாக கலந்து கொள்வது என்றும், அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத்தின் பங்களிப்பாக ரூ. 5000 வழங்குவது என்றும் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட கழக துணை செய லாளர்  இரா.பெரியார் குணா ஹாசன், மாவட்ட ப.க.துணை தலைவர் ந.தம்பிராசு, தேவ கோட்டை ஒன்றிய ப.க. அமைப்பாளர் அ.அரவரசன், மேனாள் மாவட்ட ப.க.தலை வர் ப.சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் வீர.சுப்பையா, காரைக்குடி நகர தலைவர் ந.செகதீசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கும.வைகறை, நகர அமைப்பாளர் செஞ்சை பழனிவேலு, பள்ளத்தூர் நகர தலைவர் பெ.பெரியசாமி, சாக் கோட்டை ஒன்றிய செயலாளர் கல்லூர் சி.செல்வமணி, விஞ்ஞானி முழுமதி, சாமி.திரா விடச் செல்வம் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner