எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை, ஜன. 27- மயிலா டுதுறை கழக மாவட்டம் செம் பனார்கோவில் ஒன்றிய கழகத் தலைவர் துரைராஜன் அவர் களது படத்திறப்பு நிகழ்ச்சி மாவட்ட கழகத் தலைவர் சா.மு. ஜெகதீசன் தலைமை யில், மாவட்டச் செயலாளர் கி. தளபதிராஜ், துணைச்செயலாளர் கட்பீஸ் மா.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. பெரியார் தொண்டர் மா.க.கிருட்டிணமூர்த்தி துரை ராஜன் படத்தினை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அரசு உதவி நடுநிலைப்பள்ளியில் நினைவேந்தல் நிகழ்ச்சி கல்விக் கழகத் தலைவர் ஆ.ப.கல்யா ணம் தலைமையில் நடைபெற் றது. கல்விக் கழக பொறுப்பா ளர்கள், ஆசிரியர்கள் உரை யைத்தொடர்ந்து மாவட்ட கழகத் தலைவர் சா.மு. ஜெக தீசன், பெரியார் தொண்டர் மா.க.கிருட்டிணமூர்த்தி ஆகி யோர் உரையாற்றினர்.

பூம்புகார் தொகுதி சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் ரெங்கநாதன், குத்தாலம் ஒன் றிய தலைவர் சா.முருகையன், துணைத்தலைவர் ம.பாலசுந் தரம், கடவாசல் ஒன்றிய தலை வர் ஆ.ச குணசேகரன், மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner