எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நன்னிலம், ஜன. 29- திராவிடர் கழகம் மற்றும் பெரியார் படிப் பகம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பட ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நன்னிலத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர தலைவர் தன.சஞ்வீவி தலைமை வகித் தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கரிகாலன் வர வேற்புரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர் பூவை.புலிகேசி சிறப்புரையாற் றினார். ஒன்றிய செயலாளர் பொய்யாமொழி நன்றியுரை யாற்றினார்.

நிகழ்ச்சிக்கு திருவாரூர் மண்டலத்தலைவர் இராயபுரம் கோபால், மாநில விவசாய அணி செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் இராஜ.மணி கண்டன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரெத்தினசாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா. சிவக்குமார் ஆகியோர் முன்னிலையேற்று சிறப்பித்தனர்.

சன்னாநல்லூர் ஓவியர் சங் கர், வடகுடி இராஜ.மோகன், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா, திருமருகல் பொன்முடி, ராஜ் மோகன், கோவி.பெரியார் முரசு, ராஜ.முருகையன், திருவாஞ்சியம் கலியபெருமாள், முடிகொண் டான் ஜகநாதன், சாரங்கபாணி, நன்னிலம் சாமி.முரளி, தன் ராஜ், சரவணன், மணிவண்ணன், முருகன், ஒன்றிய பகுத்தறிவா ளர் கழக தலைவர் சந்திரசேக ரன், பொருளாளர் ராஜா உள் ளிட்ட ஏராளமான கழக தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.  தந்தை பெரியார் படம் வண்ண விளக் குகளால் அலங்கரிக்கப்பட்டு சடையார்கோயில் நாராயண சாமி குழுவினர்  மற்றும் பெரியார் பிஞ் சுகளின் கோலாட்டத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக நன்னி லம் பெரியார் சிலையை வந்து அடைந்தது. பெரியார் பட ஊர்வலத்திற்கு மாவட்ட தலை வர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் அழகிரி சாமி ஊர்வலத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.