எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், பிப். 2- வேலூர் மாவட் டம் குடியாத்தம் புவனேசுவரி பேட்டை ஓவிஸ் அழகு நிலையத் தில் குடியாத்தம் விடுதலை வாச கர் வட்டம் மற்றும் மனிதநேய அறக்கட்டளை இணைந்து நடத் திய “என் மதம் திராவிடர் மதம்“ என்று கூறிய வள்ளல்  எம்ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா 29.1.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் படத்திறப்பு மற் றும் கருத் தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்சியில் வேலூர் மண் டல தலைவர் வி.சடகோபன் தலைமை தாங்கினார், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். விடு தலை வாசகர் வட்ட தலைவர் அ. நடராஜன் தொடக்கவுரை ஆற்றி னார். மக்கள் திலகம் எம்ஜி.ஆர் அவர்கள் படத்தினை வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக் குமார் திறந்துவைத்து உரையாற் றினார்.

மக்கள் திலகம் எம்ஜி.ஆர். அவர்கள் புகழ் நிலைத்து நிற்க பெரிதும் காரணம் ஆட்சி செய்த விதமே” என்ற தலைப்பில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர் க.அருள் மொழி கருத்துரை வழங்கினார் தன் உரையில்  அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் எழுத்து சீர்திருத்தத்தை சட்ட வடிவமாக் கினார். பெரியார் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் மிகப் பெரிய விழாவாக நடத்தினார், 31 சதவீதமாக இருந்த இடஒதுக் கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். போன்ற கருத்துக்களை எடுத்து ரைத்தார்.

“மனிதநேயமே” என்ற தலைப் பில் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் தி.அனிதா ராணி உரையாற்றினார். தன் உரையில் தன்னைக் காணவரும் அனைவரை யும் உணவுகளை வழங்கி மகிழ் வார். பொதுவுடமைவாதி தோழர் ஜீவா அவர்களுக்கு உருவச்சிலையை தன்செலவிலேயே நிறுவி நிகழ்ச் சிக்கு உண்டான ஏற்பாடுகளை யும் செய்தார் போன்ற கருத்துக் களை கூறினார். “தன்னைத்தானே செதுக்கிய விதமே” என்ற தலைப் பில் வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் இர.அன் பரசன் உரையாற்றினார். அவர் தன் உரையில் மக்கள் திலகம் எம்ஜி.ஆர். அவர்கள் சிறுவயதில் அவர்பட்ட துன்பங்களையும், தன் நடிப்பால் உயர்ந்து தான் நடித்த படங்களிலும் மக்களுக்கு தத்துவ மான கருத்துக்களையும் முற் போக்கு சிந்தனைகளையும் தன் நடிப்பின் மூலம் தன்னை தமிழ் நாட்டு மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படி உருவாக் கினார். பேரறிஞர் அண்ணா அவர் களை தன் ஆசானாக கருதி தி.மு.க முன்னேற பாடுபட்டார் போன்ற கருத்துக்களை பாடல் மூலம் எடுத்துரைத்தார்.

இந்நிகச்ழ்சியில் மாவட்ட மக ளிர் பாசறை தலைவர் ந.தேன் மொழி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ச.இரம்யா, மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் ஆசிரி யர் கோபிநாத், நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா, இளைஞரணி சரேவதி, தே.அ.புவியரசு, அய்.சந் தீப், மணியம்மையார் சிந்தனை களம் இர.உஷா, ராமு, மற்றும் அப்பகுதி மக்கள் பெருந்திரலாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகளும், தேனிரும் வழங் கப்பட்டன. இறுதியில் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக்குமார் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner