எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

செயங்கொண்டம், பிப். 3 அரியலூர் மாவட்டம் செயங் கொண்டத்தில் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்... நூல் அறிமுக விழா 26.12.2016 அன்று மாலை 6 மணியளவில் செயங் கொண்டத்தில் சிறப்பாக நடை பெற்றது.

அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நூலை வெளியிட்டார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க மாவட்ட செயலாளர் க.சிந்த னைச்செல்வன் வரவேற்புரை யாற்றினார். திமுக நகர செய லாளர் வெ.கொ.கருணாநிதி, தா.பழுர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் க.சொ.க. கண் ணன், மண்டல தலைவர்

சி.காமராஜ் ஆகியோரின் உரைக் குப்பின்னர் நூலை வெளியிட்ட எஸ்.எஸ்.சிவசங்கர் உரையாற்றினார். அவர் தமது உரையில்: திராவிடர் கழக நிகழ்ச்சியில் பங்கேற்பது போர்க் கருவிகளை கூர்தீட்டுவது போன்றது என்றும், சமஸ் கிருதத் திணிப்பு, நுழைவுத் தேர்வு என்று அனைத்து நிலை களிலும் பார்ப்பன ஆதிக்கத்தை நிறுவ இந்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. சமூகநீதியை அழிக்க முயற்சி செய்கிறது. ‘ஏன்' என்று கேள்வியை எழுப்பச் சொன்ன தந்தை பெரியாரோடு பணியாற்றி அவர் கொள்கைகளைப் பரப் பிவரும் ஆசிரியர் அவர்களின் நூல் உண்மையிலேயே ஒரு சமூகநீதி வரலாறு என குறிப் பிட்டு உரையாற்றினார்.

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தமது உரையில்: மனித நேசிப் பிற்கு நூல் வாசிப்பு அவசியம் தேவை. உலகநாடுகளில் வாசிக் கும் பழக்கம் அதிகம் உள்ளது. நாமும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் நிலையை அறிய, வரலாற்றை அறிய வாசிக்க வேண்டும். உலகை மாற்றிய புரட்சிகரமான நூல்கள் ஏரா ளம் உள்ளன. அந்த வகையிலே தமிழர் தலைவரின் வரலாறு நூல் தன் வரலாறு அல்ல - அது திராவிடர் கழக வரலாறு - இடஒதுக்கீட்டை அதிகரித்த வரலாறு, பாதுகாத்த வரலாறு என்று கூறி சிறப் புரையாற்றினார். ஆசிரியர் கலைவாணன் நன்றி கூறினார். திமுக மாவட்ட இ.அ.து. அமைப்பாளர் லூயி கதிரவன், செயங்கொண்டம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மணி மாறன், ஆண்டிமடம் ஒன்றிய வடக்கு பொறுப்பாளர்கள் ரெங்க முருகன், பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழக மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் இரத்தின.இராமச்சந்திரன், தங்க.சிவமூர்த்தி, சு.மணி வண்ணன், இரா.திலீபன், மா.கருணாநிதி, கார்த்திக், இரா.தமிழரசன், மா.சங்கர், சொ.மகாலிங்கம், பி.வெங் கடாசலம், சி.தமிழ்சேகரன், கா.பெரியார்செல்வன், பெ.கோ. கோபால், கே.பி.கலியமூர்த்தி, லெ.அர்ச்சுணன், மு.கோபால கிருட்டிணன், சோ.க.சேகர், சிந்தாமணி இராமச்சந்திரன், ரவி, ந.சுந்தரம், த.கு.பன்னீர் செல்வம், சுந்தரபாண்டியன், வை.செல்வராஜ் உள்ளிட்ட தி.க., திமுக தோழர்கள் சிறப் பாக பங்கேற்றனர்.