எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுக்குழுவில்...

4.2.2017 காலை நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவிற்கு செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் கடவுள் மறுப்பு கூறினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராஜா வரவேற் புரையாற்றினார். இரங்கல் தீர்மானத்தை  துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முன்மொ ழிந்தார். தொடக்கவுரையை திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆற்றினார். தீர்மானங்களை கழக பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் முன்மொழிந்தார்.

பலத்த கரவொலிக் களுக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழக பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் காசி ராஜன், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பலாதன் ஆகியோர் உரையை தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரை யாற்றினார்.

அமைப்புச் செயலாளர் வே.செல்வம் நன்றி கூறினார். பிற்பகல் 2 மணியளவில் பொதுக்குழு நிறைவுற்றது. அனைவருக்கும் புலால் உணவு சிறப்புடன் அளிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner