எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பழனி, பிப். 5- பழனி கழக மாவட்டம், பழனி, பழனி யப்பா நாச்சம்மாள் திருமண மண்டபத்தில் 29.1.2017 அன்று மாலை 5.30 மணிக்கு பகுத்தறி வாளர் கழகம் சார்பில் 'கல்வி மறுக்கும் புதிய கல்விக் கொள்கை' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

பழனி மாவட்ட பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலை வர் ச.திராவிடச் செல்வன் தலை மையேற்கவும் பகுத்தறிவு ஆசிரி யர் அணி தலைவர் தமிழ்மணி வரவேற்புரையாற்றினார். தமி ழக தமிழாசிரியர் கழக மாவட் டத் தலைவர் ஆ.நந்திவர்மன், தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசி ரியர் கழக (மாயவன் அணி) மாவட்டத் துணைத்தலைவர் சு.நல்லதம்பி, தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுகலை பட்ட தாரி ஆசிரியர் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தே.ராஜா ராம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.காளிமுத்து, தமிழக ஆசிரி யர் கூட்டணி மாவட்டச் செய லாளர் ப.தெய்வசிகாமணி, தமிழ் நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல் லூரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரபாகரன், அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்டச் செயலாளர் சி.பிச்சைமுத்து, தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில செயற்குழு உறுப் பினர் ஜா.ஜோசப் எட்வர்டு ஜான் அவர்களும் கருத்துரை வழங்கி சிறப்பித்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்க மாவட்ட செயலாளர் சை.பகத்சிங், தமிழ்நாடு ஆசிரி யர் பயிற்றுநர் சங்க மேற்கு மண்டலச் செயலாளர் மு.நாக ராசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாவட்டச் செயலாளர் சோ.முத்துமாணிக்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் த.சாய் லதாராஜ், கோவை தலைமை உஸ்தாத், இமாம் இ.நூருல் ஹசன் சிராஜ், மருத்துவர் மணி மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கி சிறப்பித்தனர்.

திராவிடர் கழக மாணவ ரணி செயலாளர் செ.மெ.மதி வதனி உரையாற்றினார். பகுத் தறிவாளர் கழக மாநில செய லாளர் மா.அழகர்சாமி அவர்க ளும், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி.ரமேசு அவர்களும், புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய விழிப் புணர்வை உண்டாக்கும் உரையை நிகழ்த்தினர். சிறப்புரையாக திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்கள் சிறப் பானதொரு உரை நிகழ்த்தினார். வேதகாலம் முதல் இன்று வரை பார்ப்பன சக்திகளால் கல்வி மறுக்கப்பட்டு வருவதை யும் பெரியார் அவர்களின் உழைப்பையும் தனக்கே உரிய முறையில் எடுத்துக்கூறினார். தமிழர் தலைவரின் உழைப்பு, மண்டல் கமிஷன் வரலாறு, புதிய கல்விக்கொள்கை உரு வாக்கப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பங்கு ஆகியவை குறித்து விளக்கி உரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் திண்டுக் கல் மண்டலத் திராவிடர் கழ கத் தலைவர் வீரபாண்டியன், பழனி மாவட்டச் செயலாளர் பெ.இரணியன், மாவட்ட அமைப்பாளர் சு.அழகர்சாமி, மண்டல மாணவரணி செயலா ளர் பொன்.அருண்குமார், நக ரத் தலைவர் ஜே.ஜோசப், மாவட்ட இளைஞரணி பி.கொடியரசு, நா.நல்லதம்பி. பழனி முத்துக்குமார், நகரச் செயலாளர் சி.இராதாகிருட்டி ணன், ஒன்றிய செயலாளர் தோ. சுரேசு, மாவட்ட மாணவரணி சே.மெ.காவ்யா, அமலிகுமரி, பகுத்தறிவு ஆசிரியரணி மு.தமிழ்ச்செல்வன், திராவிடர் தொழிற்சங்கம் செல்வம், திண் டுக்கல் நகரச் செயலாளர் மாணிக் கம், மாணவரணி பரமசிவம், பெரியார் பத்மநாபன், தஞ்சா வூர் உலகநாதன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் இரா.மங்கள பாண்டியன் மற் றும் பல ஆசிரியர் பெருமக்க ளும் பல்வேறு சங்கத்தினரும் கலந்து கொண்டனர். சங்கப் பிரதிநிதிகளுக்கு பயனாடை அளித்து பொதுச் செயலாளர் சிறப்பு செய்தார். இறுதியாக பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர் த.அருந்தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner