எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தழுதாளி த.சா.சண்முகம் படத்திறப்பு

பேருந்து நிறுத்தத்தில் நினைவுக் கல்வெட்டு அமைப்பு

கழக துணைத் தலைவர் பங்கேற்று திறந்து வைத்தார்

தழுதாளி, பிப். 7- 26.1.2017 அன்று காலை 11 மணி அள வில் திண்டிவனம் கழக மாவட் டத்தில் உள்ள தழுதாளி கிரா மத்தில் சுயமரியாதைச் சுட ரொளி, பெரியார் பெருந்தொண் டர் தழுதாளி த.சா.சண்முகம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச் சிக்குத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் வருகை தந்தனர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தழுதாளி பேருந்து நிறுத்தத்தில் தழுதாளி சண் முகம் அவர்களின் நினைவுக் கல்வெட்டை, துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

படத்திறப்பு நிகழ்ச்சிக்கு திண்டிவனம் மாவட்டத் தலை வர் மு.கந்தசாமி தலைமை ஏற்று உரையாற்றினார். தழு தாளி சண்முகம் மகனும், மயிலம் ஒன்றிய செயலாளரு மான த.ச.அன்புக்கரசன் அனை வரையும் வரவேற்று உரை யாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் க.மு.தாஸ், புதுவை மாநிலத் தலைவர் சி.வீர மணி, புதுச்சேரி மாநில மண் டலத் தலைவர் இராசு, திண் டிவனம் மாவட்டச் செயலா ளர் நவா.ஏழுமலை, விழுப் புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்ப ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையின் போது: பெரியாரோடு சண்முகம் எப்படியெல்லாம் இயக்கத்தை நடத்தினார்; ஊர் பொது மக்களோடு எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார்; தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் சொன்ன வார்த்தை 'நீ எப்போதும் கருப்புச் சட் டையோடு இருந்தாலே அதுவே ஒரு பிரச்சாரம்' என்பதை ஏற்று, மூச்சு அடங்கும் வரை கருப்பு சட்டை தவிர வேறு சட்டை அணிந்தது கிடையாது. இப் போது உள்ள இளைஞர்கள் என்ன கிடைக்கும் என்று கருதி கட்சிகளில் சேருகிறார் கள். ஆனால் எந்தவித எதிர்ப் பார்ப்பும் இல்லாமல் பெரி யார் கொள்கையை ஏற்று தன் 89ஆம் ஆண்டு வரை ஒரே கொள்கையோடு வாழ்ந்தவர் தழுதாளி சண்முகம் என்று உரையாற்றினார்.

மண்டலத் தலைவர் க.மு. தாஸ், புதுச்சேரி மாநில தலை வர் சிவ.வீரமணி, மாவட்ட திமுக துணைச் செயலாளர் மலர்மன்னன், மயிலம் திமுக ஒன்றிய செயலாளர் வழக்கு ரைஞர் இரா.சேதுநாதன் ஆகி யோர் உரைக்கு பின்னர், மயிலம் சட்டமன்ற உறுப்பி னர் மருத்துவர் இரா.மாசிலா மணி பேசியபோது திராவிடர் கழகம் நமக்கு தாய்க் கழகம், அது வலுவாகவும், எல்லா கிராமங்களிலும் இருக்க வேண் டும் என்றும், திராவிடர் கழகம் கொண்டு வந்த சமூக நீதிக் கொள்கையால் தான் அவர் இன்று மருத்துவராக வரமுடிந் தது என்றும் உரை யாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் சிறப்பு ரையாற்றினார். அவர் தனது உரையில்: தழுதாளி சண் முகம் அவர்கள் தனி மனித ராக இந்தக் கிராமத்தில் இயக் கத்தை வளர்த்தார்.  தமிழர் தலைவர் சண்முகத்தை பார்க கும்போது எல்லாம் 'தழுதாளி வாங்க' என்று தமிழர் தலை வர் செல்லமாக அழைத்து மகிழ்வார் என்றும், இன்றைய காலகட்டத்தில் பிஜேபி மத் திய அரசு எந்த எந்த வடிவங் களில் எல்லாம் தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது என்பதை எல்லாம் விளக்கிப் பேசினார். அவர் உரைக்குப் பின்னர் புதுச்சேரி லோ.பழனி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner