எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, பிப். 15- தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் 12.2.2017 அன்று காலை 10.15 மணிக்கு அறிவழகன்--அமிர்தசுபா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு குண சேகரன் அறிமுக உரையாற்றினார். திராவிடர் கழக கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன் வரவேற்புரையாற்றினார். மணமக்களை வாழ்த்தி பார்த்தசாரதி (யூனியன் வங்கி), தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோரது வாழ்த்துரைக்குப் பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி - சுகுணா ஆகியோரது மகன் க.அறிவழகனுக்கும், ச.சித்தார்த்தன்- - க.தமிழ்ச்செல்வி ஆகியோர் மகன் சி.அமிர்த சுபாவிற்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தார்.

மணமக்களின் பெற்றோர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிறைவாக மணமக்கள் அறிவழகன் -- அமிர்தசுபா ஆகியோர் நன்றி கூறினர்.

தமிழர் தலைவர் தமதுரையில், கலைத்துறை செயலா ளர் சித்தார்த்தன் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு கிரா மப்புற பகுதிகளில் வீதி நாடகங்கள் மூலம் தந்தை பெரி யார் கொள்கைகளை, பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதைப்போலவே வட மாநிலங்களிலும், அமெரிக்கா போன்ற நாட்டிலும் மண மகனின் தந்தையார் கோ.கருணாநிதி அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், சமூக நீதிச் சிந்தனை களையும் எடுத்துச் சென்று பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். என்னுடன் அவர்  வடமாநிலங்களுக்கு வரும் போது அங்கே பல்வேறு அமைப்புகளை என்னிடத்தில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல அவர்கள் எந்த அளவுக்கு சமூக நீதி சிந்தனையில் தெளிவு பெற்றுள்ளனர் என்பதை அறியும்போது இவருடைய பணி சிறப்பான ஒன்றாகும் என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மோகனா அம்மையார், சகுந்தலா கோவிந்தராசுலு, தமிழ்செல்வன், சரோஜா,  பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல்.இராமச் சந்திரன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அருணகிரி, மண்டல தலைவர் நெய்வேலி ஜெயராமன், மண்டல செயலாளர் மு.அய்யனார், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், செயலாளர் அத்திவெட்டி வீரை யன், கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், அமைப் புச் செயலாளர் நெய்வேலி ஞானசேகரன், திருவாரூர் மோகன், முகிலன், பெரியார் பால்டெக்னிக் கல்லூரி முதல்வர் மல்லிகா, துணை முதல்வர் பர்வீன், பெரியார் நேசன் பொய்யாமொழி, சேலம் ராஜு, சிதம்பரம் சித்தார்த்தன், வை.சிதம்பரம், இளவரசி, நீடாமங்கலம் சுப்ரமணியம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று சிறப் பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner