எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வேலூர், பிப். 18- வேலூர் புன் னகை மருத்துவமனை சுயமரி யாதைச் சுடரொளி பழனியப் பன் நினைவரங்கத்தில் திரா விடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்கவுரை கலந்துறையாடல் கூட்டம் 11.2.2017 காலை 10 மணிக்கு மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி தலை மையில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் தா.நாகம்மாள், மாவட்ட மகளி ரணி செயலாளர் ச.கலைமணி பழனியப்பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந. தேன்மொழி வரவேற்புரையாற் றினார். மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, சென்னை மண்டல மகளிரணி செயலாளர் செ.உமா, வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் இ.ச.இன்பக்கனி ஆகியோர் போராட்டம் பற்றி விளக்கி உரையாற்றினார்கள்.

பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மனுதர்ம எரிப்புப் போராட்டம் பற்றியும் பொதுக்குழு தீர்மா னம் பற்றியும் விளக்கி உரை யாற்றினார்.

மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, மனுதர்மத்தில் பெண் கள் இழிவுபடுத்தும் நிலை, கழகப் பணியில் பெண்கள் பங்கு, போராட்டத்திலும் பெண் கள் பெரும் அளவில் பங்கேற் கச் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.

குடியாத்தம் மகளிர் பாசறை தலைவர் சி.லதா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் ச.கி. செல்வநாதன், சத்துவாச்சாரி நகரத் தலைவர் ச.கி.தாண்டவ மூர்த்தி ஆகியோர் 1981இல் நடைபெற்ற மனுதர்ம எரிப்புப் போராட்டம் பற்றியும் கழகத் தோழர்கள் இப்போராட்டத் திற்கு ஆதரவளிப்போம் என வும் கூறினார்கள்.

பெரியார் மருத்துவர் அணி பொதுச்செயலாளர் மரு. பழ. ஜெகன்பாபு, செய்யாறு மாவட் டத் தலைவர் அ.இளங்கோவன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ப.அண்ணாதாசன், வேலூர் மாவட்ட துணைத் தலைவர் உ.ச.குருநாதன், ஆற் காடு ஒன்றிய தலைவர் கோ.விநாயகம், மாநகர ப.க. செய லாளர் அ.மொ.வீரமணி, காட் பாடி பொ.தயாளன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச.கலைவாணி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ச.ரம்யா, மாவட்ட மகளிர் பாசறை துணைத் தலைவர் மரு. தி.அனிதா, செய்யாறு மாவட்ட மகளிரணி வை.தமிழ்மொழி, வீ.பொன்மொழி, மோ.தமிழ்ச் செல்வி, க.அறிவுச்சுடர், அஸ் வினி அறிவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனை வருக்கும் பழம், பிஸ்கட், தேனீர் ஆகியவை புன்னகை மருத்துவமனையினர் வழங்கி னர்.

கலந்துரையாடல் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்.

தீர்மானம் 1: 4.2.2017 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 2: திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின் படியும், மதுரை யில் நடைபெற்ற கழகப் பொதுக் குழு தீர்மானத்தின் படியும் அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதி பெண்களை இழிவு படுத்தும் மனுதர்மத்தை எரிக் கும் போராட்டத்தை, பெண் களே முன்னின்று வெற்றிகர மாக நடத்திடும் வகையில் பெருவாரியான பெண்கள் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3: திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்புகளின் சார்பில் மக ளிர் கருத்தரங்கம் தெருமுனை கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகள், மகளிர் பயிற்சி வகுப்புகள், குடும்ப விழாக்களை அனைத்து மாவட்டங்களிலும் மகளிரே முன்னின்று நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக் குழு கூட்டத்தில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் அறி வுறுத்தலின்படி கழக நிகழ்ச்சி களில் கழகக் குடும்பத்தில் உள்ள அனைத்து மகளிரும் கட் டாயம் பங்குகொள்ள வேண் டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5: எந்த ஒரு கொள்கையும் முழுவெற்றி பெற வேண்டும் என்றால் அது பெண்களிடம் சென்றால்தான் சாத்தியம்.

மனிதநேய கொள்கை தந்தை பெரியார் கொள்கை களை பெண்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் திராவி டர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, அமைப்புகளை வலுப் படுத்தும் வகையில் புதிய உறுப்பினர்களை பெருமளவில் சேர்ப்பது என முடிவு செய்யப் படுகிறது.

இரங்கல் தீர்மானம்: மாவட்ட மகளிரணி அமைப் பாளர் ச.கலைவாணியின் கண வரும் - குடியாத்தம் நகர கழக செயலாளர் க.சு.சந்திரன் அவர் கள் 12.12.2016 அன்று காலை அகால மரணமடைந்தார். அன் னாரது மறைவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner