எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூவூர், பிப். 20- கரூவூர் கர்ணல் எழுதிய ஆறு புதினங்கள் நூல் எழுத்தாளர் பொன்னீலன் வெளி யிட கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.குமாரசாமி பெற்றுக் கொண்டார்.

கரூர் தமிழ்ச்சங்கம் கரூர் திருக்குறள் பேரவை, குளித்தலை தமிழ் பேரவை ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சி யில் பி.டி.கோச் தங்கராஜ் தலைமை வகித்தார். கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் வரவேற்றுப் பேசினார். செல்லப்பன், குமார சாமி, அறிவுக்கண்ணன், சண் முக சிதம்பரம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். “காணாமல் போன கவிதை” நூலை பேராசி ரியர் சூசையும், “மழை” நூலை பேராசிரியர் தஞ்சை திலகவதி யும் “இரவு நதிக்கரை ஓரம்“ நூலை தஞ்சை பேராசிரியர் காம ராசுவும், “இரு வேறு உலகம்“ நூலை நாகப்பட்டினம் பாலை யனும், “ஓர் ஊரின் கதை” நூலை கடவூர் மணிமாறனும் ஆய்வு செய்து பேசினர்.

எழுத்தாளர் பொன்னீலன் பேசும்போது கரூவூர் கர்ணல் அவர்கள் சிறந்த பகுத்தறிவா தியாக திகழ்வதால்தான் சிறந்த நூல்களை உருவாக்க முடிகி றது. காலத்திற்கு ஏற்ப மக்க ளின் ரசனை மாறி வருகிறது அந்த ரசனைக்கு ஏற்ப நாவல் களை படைப்பது கடமையாகி றது. இன்று சமூகத்தைத் தூண்டி விடுகின்ற நாவல்கள் வருகின் றன. ஒரு சமூகத்தையே விழிப் படைய வைத்தது “ஜேடி குரூஸ்” எழுதிய நாவலாகும். அது அந்த நாவலுக்கு கிடைத்த வெற்றியாகும் காலத்தை திரட்டி நேற்றைய நிகழ்வுகள் இன்றும், இன்றைய நிகழ்வுகள் நாளையும் பதிவு செய்ய கூடி யதாக நாவல்கள் விளங்கிட வேண்டும். மனித மாண்புகளை, மனித நேயத்தை எடுத்துக் காட்டுவதாக நாவல் இருக்க வேண்டும் என்றார்.

கரூர் கர்னல் ஏற்புரையாற்றி னார் புலவர் அழகரசர் நன்றி யுரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கவி ஞர் பர.இராமசாமி, சே.அன்பு, மாநில சட்டத்துறை துணை செயலாளர் மு.க.இராஜசேகரன், நகர தலைவர் சதாசிவம், இளை ஞர் அணி அலெக்ஸ்.செகநாதன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner