எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் பெண்களுக்கு அழைப்பு!

கோவை,பிப். 21- -மனுதர்மம் ஒழிகின்ற வரை எரித்துக் கொண்டேயிருப்போம் வாரீர் என திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் கழக மகளிரணிக்கு அழைப்பு விடுத்தார்

மகளிரணி கலந்தாய்வுக்கூட்டம்

அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான வருகின்ற மார்ச் 10 ஆம் நாளன்று  திராவிடர்கழக மகளிரணி சார்பில் நடைபெறவிருக்கும் “மனு தர்ம எரிப்புப்போராட்டம்“ குறித்த திராவிடர்கழகத்தின் மேற்கு மண்டல மகளிரணி-, மகளிர்பாசறை கலந்துரை யாடல் கூட்டம், கோவை- சுந்தராபுரம், ம.சந்திரசேகர் இல்லத்தில் 19.02.2017 ஞாயிறு இரவு 7 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கோவை மண்டல கழக மகளிரணிச் செயலாளர் ப.கலைச்செல்வி தலைமை தாங்கினார். கழக மகளிரணியைச்சார்ந்த செ.முத்துமணி அனைவரையும் வரவேற்றார். கழக மகளிரணியைச் சார்ந்த செ.ஜோதி மணி, பு.சுமதி, கு.தேவிகா, சங்கீதா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

நிகழ்வில் பங்கேற்றுச்சிறப்பித்த மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி மற்றும் சென்னை மண்டல மகளிரணி செயலாளர் செ.உமா, வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் ச.இ.இன்பக்கனி ஆகியோர்  மத்திய பிஜேபி அரசானது  இந்திய அரசியல் சட்டத்திற்கு பதிலாக  ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று சொல்லக் கூடியதும், பெண்களை சொல்லொண்ணாத அளவுக்கு இழிவுபடுத்துவதுமான மனுதர்மம் என்னும் மனித அதர்மத்தை  அரியணையில் ஏற்றுவோம் எனக் கூறிவரும் இன்றைய சூழ்நிலையில் கழகம் அறிவித்துள்ள மனுதர்ம எரிப்புப்போராட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், மகளிரை அதிக அளவில் பங்கேற்கச் செய்து இப்போராட்டத்தினை வெற்றி பெறச்செய்யவும், மகளிரணியை பலப்படுத்திடவும் கழகப்பொறுப்பாளர்கள் களப்பணி  ஆற்றிட வேண்டுமென்று சுருக்கமாக உரை யாற்றினார்கள்.

மகளிர் பாசறை மாநில செயலாளர் உரை

நிகழ்வில் பங்கேற்று போராட்டக்களம் குறித்து விரி வாக உரை நிகழ்த்திய திராவிடர் மகளிர்பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி அவர்கள் குறிப்பிட்ட தாவது: எதையும் எதிர்பார்க்காமல் சமுதாயத்திற்கு பாடு படுகின்ற ஒரு கூட்டம் இருக்கிறதென்றால் அது நம்மு டைய இயக்கம் தான்! திருவாரூரில் நடைபெற்ற கழக மகளிரணி மாநாடு இதை நிரூபித்தது! அம்மாநாட்டிலேயே அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 அன்று கழக மகளிரணி சார்பில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மத்தியில் உள்ள அரசு தன்னுடைய அனைத்து செயல் பாடுகளையும் மனுதர்மத்தின் அடிப்படையிலேயே இயக்கிக் கொண்டிருக்கிறது. மனுதர்மத்திலுள்ள மனித அதர்மம் குறித்த செய்திகளை நாம் கல்லூரி மாணவர் களிடையே தெரிவித்து அவர்களிடத்தில் பெரியார் கொள்கை குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். பெண்களை ஒழுக்கங்கெட்டவர்களாகவும், இழிவானவர் களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பெண்கள் விடு தலை என்பது பெண்களே போராடினால் தான் கிட்டும்.ஆகவே மனுதர்மம் ஒழிகின்ற வரை எரித்துக்கொண்டேயிருப்போம்! வாரீர்!

கழக மகளிரணியினர் அல்லாத பெண்களிடமும் இப் போராட்டத்தின் அவசியத்தை எடுத்துச்சொல்லி அவர் களையும் இப்போராட்டத்தில் பெருமளவு பங்கேற்கச் செய்யவேண்டும், கழக மகளிரணிக்கு மாவட்டந்தோறும் கூட்டம், பயிற்சி வகுப்பு, இரத்ததான முகாம், அறிவியல் அரங்கம் ஆகிய திட்டங்கள் கழகத்தலைவரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

தமிழர்தலைவரின் ஆயுளை நீட்டிக்க போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வீறு கொண்டு களப்பணியாற்று வோம்! கழக மகளிரணியினர் மிகச்சிறப்பாக போராட் டத்தை நடத்தி சனாதனத்திற்கு எதிர்ப்பைக்காட்ட வேண் டும் என்று குறிப்பிட்டார்.

போராட்ட வீரர்கள் பட்டியல்

நிகழ்வில் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட  நீலகிரி, மேட்டுப்பாளையம் (கழகமாவட்டம்), கோவை, தாரா புரம் (கழக மாவட்டம்), திருப்பூர், கோபி (கழக மாவட் டம்), ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து 32 போராட்ட வீரர்களின் பட்டியல் மாநில மகளிரணி பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட பட்டியலும் விரைவில் வழங்கப்படவுள்ளது.

விடுதலைச்சந்தா, பயனாடை

அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தற்போது  கோவை தொண்டாமுத்தூரில் வசித்து வரும் கழக குடும்பத்தைச்சார்ந்த மருத்துவர்.கிருஷ்ண கோபால் அவர்கள் கழக மகளிரணிப்பொறுப்பாளர்களிடம் பத்து ஆண்டு விடுதலைச்சந்தா ரூ.18,000/= வழங்கினார். இச் சந்தா தருவதற்கான அறிவிப்பை கடந்த 11 ஆம் தேதி குனியமுத்தூரில் தமிழர்தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் இவர் அறிவித்தார் என்பதும், தன் குடும்பத்தினரின் கடந்த கால இயக்க செயல்பாடுகளையும்,தன்னுடைய கடந்த கால இயக்க பங்களிப்பையும் தமிழர்தலைவரிடம் நினைவுபடுத்தி தன்னை அறிமுகம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இனி தாம் தொடர்ந்து கழ கப் பணிகளில் ஈடுபடப்போவதாகவும் மருத்துவர் அவர் கள் தமது உரையில் தெரிவித்தார்.

திராவிடர் மகளிர்பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாளை யொட்டி (18.02.2017) அவருக்கு கோவை மண்டல மகளிரணிச் செயலாளர் ப.கலைச்செல்வி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கருத்துரை வழங்கியோர்

கழக மகளிரணியைச் சார்ந்த கோவை ராஜேஸ்வரி, ஈரோடு ராஜேஸ்வரி, கோவை மண்டல செயலாளர் ம.சந்திரசேகர்,கோவை மாவட்ட தலைவர் ச.சிற்றரசு, கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண் டன், நாமக்கல் மாவட்ட தலைவர் நடராசன், துணைச் செயலாளர் பொன்னுசாமி, மருத்துவர் கிருஷ்ண கோபால் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

பங்கேற்றோர்

கழக தலைமை நிலையச் சொற்பொழிவாளர் புலிய குளம் க.வீரமணி, ஈரோடு மாவட்ட இளைஞரணியைச் சார்ந்த தமிழ்ச்செல்வம், கோவை தெற்கு பகுதி செயலா ளர் தெ.புண்ணியமூர்த்தி, சுந்தராபுரம். சா.சிவக்குமார், இலைகடை செல்வம், வெற்றிச்செல்வன் (இளைஞரணி), ம.சக்தி (மாணவரணி), கு.விஜயன் (மாணவரணி), த.க. கவுதமன் (மாணவரணி), செம்மொழி சுரேசு (இளை ஞரணி), கணபதி இரா.காமராஜ்பெரியார் பிஞ்சுகள் தி.ச.கார்முகிலி (கடவுள் மறுப்பு கூறினார்), பு.பூங்குழலி உள்ளிட்ட திக, பக தோழர்கள் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்:

மக்கள் பல்கலைகழகமாம் பெரியார் மணியம்மை பல்கலைகழக இணைவேந்தர் வள்ளல் வீகேயென் கண் ணப்பன், மருத்துவர் துரை.நாச்சியப்பன், பெரியார் பெருந்தொண்டர் கணபதி இராமசாமி, காளவாய் ஞான சேகர், பொள்ளாச்சி ஆசிரியர் நட்ராஜ் ஆகியோரது மறைவுக்கு கூட்டத்தில் இரங்கலும், வீரவணக்கமும்  தெரிவிக்கப்பட்டது

2) 04.02.2017 அன்று மதுரையில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுச் செயல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

3) திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் அறிவிப்பு படியும், மதுரையில் நடைபெற்ற கழகப்பொதுக்குழு தீர்மானத்தின் படியும் அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான வருகிற மார்ச் 10ஆம் நாளன்று, பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தினை பெண்களே முன்னின்று நடத்தும் வகையில் பெருவாரியான பெண்கள் பங்கேற்ப தற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கழகப் பொறுப் பாளர்கள் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

4) திராவிடர்கழக மகளிரணி, திராவிடர் மகளிர்பாசறை அமைப்புகளின் சார்பில் மகளிர் கருத்தரங்கம், தெரு முனைக் கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், மகளிர் பயிற்சி வகுப்புகள், குடும்ப விழாக்கள் ஆகிய நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் மகளிரே முன்னின்று நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

5) மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக் குழு கூட்டத்தில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தல் படி, கழக நிகழ்ச்சியில் கழக குடும்பத்தில் உள்ள அனைத்து மகளிரும் கட்டாயம் பங்கேற்க வேண் டுமென கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

6) எந்தவொரு கொள்கையும் முழு வீச்சில் வெற்றி பெற வேண்டுமானால் அது பெண்களிடம் சென்றால் தான் சாத்தியம், மனித நேய கொள்கையான தந்தை பெரியார் கொள்கைகளை பெண்களிடம் கொண்டு செல் லும் நோக்கில் திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர்பாசறை அமைப்புகளை வலுப்படுத்தும் வகை யில் புதிய உறுப்பினர்களை பெருமளவில் சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டது.

7) திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் அழைப் பிதழ்கள் மற்றும் துண்டறிக்கைகளில் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமைக்கருத்துகளையும், வாசகங் களையும் அச்சிடுவதென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக கழக பொதுக்குழு உறுப்பினர் ச.திலகமணி நன்றி நவின்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner