எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, புதுக்கோட்டை மண்டல கலந்துரையாடலில் தீர்மானம்தஞ்சை, பிப்.23 தஞ்சாவூர், புதுக் கோட்டை மண்டல திரா விடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 18.2.2017 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள பெரியார் இல் லத்தில் நடைபெற்றது. கூட்டத் திற்கு மாநில மகளிரணி செய லாளர் அ.கலைச்செல்வி தலை மையேற்றார். மகளிரணி தோழர் முல்லை கடவுள் மறுப்பு கூறி னார். குடந்தை மாவட்ட மகளி ரணி செயலாளர் இரா.கலைச் செல்வி, தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ச.அஞ்சுகம், குடந்தை மாவட்ட மகளி ரணி தலைவர் ஜெயமணிகுமார், பொதுக்குழு உறுப்பினர் இ.அல் லிராணி, புதுக்கோட்டை மண் டல செயலாளர் தேன்மொழி சுப் பையா, அறந்தாங்கி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஞானம் பாள் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள். தொடர்ந்து மகளிரணி தோழர்கள் குடந்தை திரிபுரசுந்தரி, அம்பிகா, தஞ்சை ஜெயலட்சுமி, மல்லிகா, இந்துமதி, லதா ரவிகுமார், தேவி நீலகண்டன் ஆகியோர் உரையாற்றினார்கள். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்ட தலைவர் இளங்கோவன், புதுக்கோட்டை மண்டல தலைவர் இராவணன், புதுக் கோட்டை மாவட்ட தலைவர் அறி வொளி, மாவட்ட செயலாளர் வீரப்பன், தஞ்சை மாவட்ட செயலாளர் அருண கிரி, தஞ்சை மண்டல செய லாளர் அய்யனார், பொதுச்செய லாளர் இரா.ஜெயக் குமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, சென்னை மண்டல மகளிர் பாசறை செயலாளர் செ.உமா, மாநில மகளிர் பாசறை செய லாளர் கோ.செந்தமிழ்செல்வி, பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினார் கள். இறுதியாக கழகப் பொரு ளாளர் மருத்துவர் சு.பிறை நுதல்செல்வி சிறப்புரையாற் றினார். மகளிரணி தோழர் மு.செல்வ மணி நன்றி கூறினார். கூட்டத்தில் தஞ்சை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஏ.பாக்கியம், புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் சுப் பையா, தஞ்சை மாவட்ட துணை செயலாளர் சந்துரு, பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், மாநகர அமைப் பாளர் ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிக்குமார், ஒன்றிய இளை ஞரணி தலைவர் விஜயகுமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இர.தர்மசீலன், பூவை முருகேசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற் றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம்:1 மக்கள் பல்கலைக் கழகமாம் பெரியார் மணியம்மை பல்கலை கழகத் தின் இணை வேந்தர் வள்ளல் வி.கே.என்.கண்ணப்பன், தஞ்சை மாநகர திராவிடர் கழக அமைப்பாளர் வெ.ரவிக்குமார் அவர்களின் தாயார் சரோஜினி அம்மையார், கும்பகோணம் சரக பழனி ஆகியோரின் மறை விற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங் கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: 4.2.2017 அன்று மதுரை யில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3: திருவாரூரில் நடை பெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பு படியும், மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானத்தின்படியும் அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதி பெண்களை இழிவுபடுத்தும் மனு தர்மத்தை எரிக்கும் போராட்டத்தை, பெண்களே முன்னின்று வெற்றி கரமாக நடத்திடும் வகையில் பெருவாரியான பெண்கள் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை அமைப்புகளின் சார்பில் மகளிர் கருத்தரங்கம், தெரு முனை கூட்டங்கள், கலை நிகழ்ச் சிகள், மகளிர் பயிற்சி வகுப் புகள், குடும்ப விழாக்களை அனைத்து மாவட்டங்களிலும் மகளிரே முன்னின்று நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தல்படி, கழக நிகழ்ச் சிகளில் கழகக் குடும்பத்தில் உள்ள அனைத்து மகளிரும் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: எந்த ஒரு கொள் கையும் முழு வெற்றி பெற வேண்டும் என்றால் அது பெண்களிடம் சென்றால் தான் சாத்தியம். மனிதநேயக் கொள்கை யான தந்தை பெரியாரின் கொள்கைகளை பெண்களிடம் கொண்டு செல்லும் வகையில் திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை அமைப்பு களுக்கு வலுசேர்க்கும் வகையில் புதிய உறுப்பினர்களை பெருமளவில் சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 7: திராவிடர் கழக மகளி ரணி, திராவிடர் மகளிர் பாசறை சார் பாக நடைபெறும் நிகழ்வுகளின் அழைப் பிதழில் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை கருத்துக்களை யும், வாசகங்களையும் அச்சிடு வது என முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள் பட்டுக்கோட்டை மாவட்டம்

மாவட்ட மகளிரணி தலை வர்: மாலதி வீரையன் (அத்தி வெட்டி), மாவட்ட மகளிரணி செயலாளர்: நீ.தேவி (பேரா வூரணி), மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை அமைப்பாளர்: அ.ஜோதி (நீடாமங்கலம்)

அறந்தாங்கி மாவட்டம்

மாவட்ட மகளிரணி அமைப் பாளர்: சவு. ஞானாம்பாள், மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை அமைப்பாளர்: மா.கீதா

புதுக்கோட்டை மாவட்டம்

மாவட்ட மகளிரணி தலை வர்: த.ஜெயலட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர்: சி.இராசி, மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை அமைப்பாளர்: இ.இள வரசி.

தஞ்சாவூர் மாவட்டம்

மாவட்ட மகளிரணி தலை வர்: மு.செல்வமணி, மாவட்ட மகளிரணி செயலாளர்: ஏ.பாக்கியம், மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை அமைப் பாளர்: ச.அஞ்சுகம், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய அமைப்பாளர்: லதா ரவிக்குமார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner