எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.25  குழந்தை தத்தெடுப்பு தொடர்பான ஏராள மான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பது தொடர் பாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், குழந்தை தத்தெடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் நீதித்துறை வேகம் காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் தத்தெடுத்தல் தொடர்பான சட்டத்துக்கு அப் பாற்பட்டு நீதிமன்றங்கள் தீர்ப் பளிப்பதால், குழந்தைகளுக்கும், அவர்களை தத்தெடுக்கும் பெற் றோருக்கும் அது நன்மை பயக் காது என்று கவலை தெரிவித்துள் ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், குழந்தையை தத்தெடுக்க விரும் பிய பெற்றோர் அரசு பள்ளிக்கு நன்கொடையாக  1 லட்சம் அளிக்க வேண்டுமென உத்தர விட்டது. இதுபோன்று தத்தெடுத் தல் வழக்கில் நீதிமன்றங்கள் வழங்கிய பல்வேறு சர்ச்சைக்குரிய உத்தரவுகளையும் மேனகா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும், தத்தெடுத்தல் தொடர்பான 800 வழக்குகள் நிலுவையில் உள் ளன. இதில், 150 வழக்குகள் ஓராண்டுக்கும் மேலாக தேங்கி உள்ளன. குழந்தை தத்தெடுத்தல் சட்டப்படி, இவ்வழக்குகளை 2 மாதத்தில் விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner