எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உலக மகளிர் நாள், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் தமிழர் தலைவர் போர்முரசு!

 

சென்னை, மார்ச்.10 உலக மகளிர் நாள், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக் கக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மனுதர்மத்தை எரிக்கிறோம் என்றால், ஜாதியை ஒழிக்கிறோம் என்று பொருள் என்று போர்முரசமாக  மனு தர்மத்தை எரித்திட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (9.3.2017) மாலை உலக மகளிர் நாள், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி தலைமையில் நடைபெற்றது.

வடசென்னை மாவட்ட மகளிரணி செய லாளர் ச.இ.இன்பக்கனி வரவேற்புரையாற் றினார். சென்னை மண்டல மாணவரணி செய லாளர் பா.மணியம்மை அறிமுக உரையாற் றினார். கும்மிடிப்பூண்டி செல்வி இணைப்புரை வழங்கினார்.

உலக மகளிர் நாள், அன்னை மணியம் மையார் பிறந்த நாள் மற்றும் மனுதர்ம எரிப் புப்போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை திமுக மேனாள் உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  நற்சோனை, தமிழக முற் போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணை செயலாளர் பேராசிரியர் சுந்தரவல்லி ஆகியோர் உரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.

கூட்ட முடிவில் செ.உமா நன்றி கூறினார்.

நூல்கள் வெளியீடு

பெண்ணுரிமை சார்ந்த இயக்க வெளியீடு களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட திமுக மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்திஸ்டான்லி பெற்றுக்கொண் டார். ரூ.245  மதிப்புள்ள நூல்கள் கழிவு விலை யில் ரூ.200க்கு வழங்கப்பட்டன.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் உரிய தொகை கொடுத்து ஏராளமானவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், வெள்ளையாம்பட்டு சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் நற்சோனை, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பேராசிரியர் சுந்தரவல்லி, தங்க.தனலட்சுமி, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் ந.விவேகானந்தன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், சி.வெற்றிசெல்வி, பெரியார் செல்வி, கொரட்டூர் பார்த்திபன் உள்பட ஏராள மானவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களுக்குப் பாராட்டு

சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலை வர் அசல் மனுதர்மம் நூலை வழங்கினார். திமுக மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் வசந்திஸ்டான்லி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க துணை செயலாளர் பேராசிரியர் சுந்தரவல்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சிப்பொறுப்பாளர் நற்சோனை, ச.இ.இன்பக்கனி, பா.மணி யம்மை ஆகியயோருக்கு தமிழர் தலைவர் நூல்களை வழங்கி சிறப்பு செய்தார்.

 

கலந்துகொண்டவர்கள்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சமூக நீதிப்பேரவை பேராயர் எஸ்றா சற்குணம், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் நம்.சீனுவாசன்,  வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,  பெரியார் களம் இறைவி, வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்,  தொழிலாளரணி செயலாளர் பெ.செல்வராசு,  பேராசிரியர் திருக்குறள் பாஸ்கரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், ஆவடி மாவட் டச் செயலாளர் சிவக்குமார், அமைப்பாளர் உடுமலை வடிவேல், செங்குட்டுவன், கோ.வீ. ராகவன், சா.தாமோதரன், நா. பார்த்திபன், தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன், கண் ணப்பன், பண்பொளி, நாகவல்லி முத்தய்யன், சுமதி, த. மரகதமணி, பூங்குழலி, வளர்மதி, ரமணி பாஸ்கர், மோகனப்பிரியா, வெண்ணிலா கதிரவன், சீர்த்தி, கலைமதி, நிர்மலா பால முரளி, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், புலவர் வெற்றியழகன், கு.சோமசுந்தரம், பார்த்திபன், அருணாசலம், முத்துக்கிருஷ்ணன், கொடுங்கை யூர் தங்கமணி, பெரியார் மாணாக்கன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நட ராசன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க.சரவணன், செஞ்சி ந.கதி ரவன், இசையின்பன், கெடார் மும்மூர்த்தி, இராமலிங்கம், பெரியார் திடல் சுரேஷ், சக்தி வேல், சிவக்குமார், சுதன், சிறீராம், தமிழ்க் குடிமகன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner