எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லை, மார்ச் 11- திருநெல் வேலி, பொறியாளர் இல்லத் தில் கடந்த 10.02.2017 வெள் ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, டாக்டர் கி. வீரமணி -- மோகனா சமூகநீதி அறக் கட்டளை சார்பாக தென்தமிழ கத்தின் முதல் உடற் கொடை யாளர் கா.சண்முகவடிவு அவர்கள் நினைவாக பெரியாரும், சமூக நீதியும், என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு நடு வர்களாக நெல்லை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் மா.பால்ராசேந்திரம், திராவிடர் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சு. காசி, பொதுக்குழு உறுப்பினர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான், பேராசிரியர் பி.நடராஜன், பகுத்தறிவாளர் கழக நெல்லை மாவட்டத் தலைவர் இரா.வேல்முருகன், நெல்லை மாநகரத்தலைவர் பி. இரத்தினசாமி ஆகியோர் சிறப் பாக பணிபுரிந்தனர்.

பேச்சுப் போட்டி தேர்வுக் குப் பின் திருநெல்வேலி மாவட் டத்  கழகத் தலைவர் இரா. காசி தலைமையில் பரிசளிப்பு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டச்செயலாளர் ச. இரா சேந்திரன் வரவேற்புரை ஆற் றினார். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த போட் டியில் முதல் இடத்தைப் பெற்ற கா.அன்புமணிக்கு சுழற்கோப்பை கேடயம், சான் றிதழ் மற்றும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த போட்டியில் முதல் இடத்தை பெற்ற எஸ்.இராசிகா அவர்க ளுக்கு சுழல் தங்க சுழற்கோப் பை-யும், கேடயம், சான்றிதழ் ஆகியவை கா.சண்முகவடிவு அவர்கள் நினைவாக பரிசளிக் கப்பட்டன.

கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த பேச்சுப் போட்டியில் முதல் இடத்தை பெற்ற ம. பவுசி அவர்களுக்கு பேராசிரியர் கு. சங்கரன் நினை வாக சுழல்கோப்பை, கேடயம், சான்றிதழ் ஆகியவை பரிசளிக் கப்பட்டன.

மற்றும் அனைத்து பிரிவி லும், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர் களுக்கு கேடயம், சான்றிதழும், பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதகளும் வழங் கப்பட்டன.

அனைவருக்கும் மதிய உணவு, தேநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத் துணைச்செயலாளர் ப. அரியமுத்து, பேராசிரியர் நீலகிருஷ்ண பாபு, இரா. பானு மதி, இரா. கார்த்திக், த. சித்ரா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கதிர் தொலைக்காட்சியின் பார்வதி முத்தமிழ், மற்றும் கதிர் தொலைக்காட்சியை சார்ந்த அலு வலர்களும், எல்லா ஏற்பாடுக ளையும் சிறப்பாக செய்திருந் தனர். பெரியார் பெருந்தொண் டர் சி.வேலாயுதம் நன்றி கூறி னார். இந்த நிகழ்ச்சிகள் அனைத் தையும், கதிர் -தொலைக்காட்சி யின் இயக்கு நரும், லிபர்ட்டி கிரியேசன்ஸ் உரிமையாளரும் நகைச்சுவை நாவலர் ச.முத் தமிழ் அவர்கள் ஒருங்கிணைத்து எல்லோருடைய பாராட்டுக்க ளையும் பெற்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner