எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரம்பலூர், மார்ச் 12- குண கோமதி மருத்துவ மனையில் 5.3.2017 அன்று மாலை 5 மணிக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமை யில் விடுதலை வாசகர் வட்டம் 2ஆவது கூட்டம் கூடியது.

ஆ.பொன்மலர் ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். சிறப்புரையாளர் டாக்டர் கு. குணகோமதி அம்மா அவர்கள் “பெண்ணின் சுயமரியாதை” என்ற தலைப்பில் குடும்பத்தில் பெண் குழந்தை வளர்ப்பு முறை, கல்வி பெறும் வாய்ப்பு, திரும ணம் செய்யும் முறை, குழந்தை பெறும் உரிமை. திருமணத்திற் குப் பின் பெண்ணின் குடும்பத் தில் அவருக்கு உள்ள உரிமை போன்ற செய்திகளைக்ய கூறி னார்.

பெண்கள் சுயமரியாதை பெற தந்தை பெரியார் ஆற்றிய பணி பெண் உரிமை பாதுகாப்பு சட்டங்கள் ஆகியவற்றை கூறி னார். விழாவில் ஏராளமான கல்லூரி மாணவிகளும், திரா விடர் கழக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் விடுதலை வாசகர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக த.சூரியகலா நன்றி கூறினார். தேசிய மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டா டப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner